என் மலர்
நீங்கள் தேடியது "படகு சவாரி"
- பழுதடைந்துள்ள பள்ளி கட்டிடங்கள், சாலைகள் ஆகியவற்றை சீரமைத்து தரவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
- அனைத்து கோரிக்கை–களையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி தருவோம் என ஒன்றியகுழு தலைவர், ஆணையர் ஆகியோர் உறுதி அளித்தனர்.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த பூக்கொல்லையில் உள்ள சேதுபாவாசத்திரம் ஒன்றிய குழு கூட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் தலைமை வகித்தார்.வட்டாரவளர்ச்சி அலுவலர் வெ.கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் ஒன்றியகுழு துணை தலைவர் முத்துலட்சுமி காளிமுத்து முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வழக்கறிஞர் அருள்நம்பி, சாகுல்ஹமீது, செய்யது முகமது, சுதாகர், பாமா, அமுதா, அருந்ததி, ராஜலட்சுமி ஆகியோரும், அதிமுகவை சேர்ந்த சிவ.மதிவாணன் (ஓபிஎஸ்அணி), மீனவராஜன், கருப்பையன், கவிதா, உமா (அதிமுக எடப்பாடி அணியை சார்ந்தவர்கள்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
தங்கள் பகுதியில் உள்ள பழுதடைந்துள்ள பள்ளி கட்டிடங்கள், சாலைகள் ஆகியவற்றை சீரமைத்து தரவேண்டும் என கேட்டுக்கொண்டனர். அனைத்து கோரிக்கை–களையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி தருவோம் என ஒன்றியகுழு தலைவர், ஆணையர் ஆகியோர் உறுதி அளித்தனர்.
மனோரா சுற்றுலா தலத்தில் கூடுதலாக ஒரு படகு இயக்கப்படும் எனவும், மேலும் ஒரு கழிப்பறை கட்டப்படும் எனவும் தெரிவித்தனர். கூட்டத்தில் 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் சு.சடையப்பன் (கி.ஊ) நன்றி கூறினார்.
- சுற்றுலாத்துறை அமைச்சர் ஆய்வு செய்தார்.
- மார்ச் மாதத்துக்குள்முடிக்க இலக்கு நிர்ணயிக்க ப்பட்டுள்ளது.
கோவை
கோவை குறிச்சி குளத்தில்படகு சவாரி இயக் குவதற்கான வசதிகள் உள்ளதா என தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார்.
கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், செல்வ சிந்தாமணி, குமாரசாமி, செல்வம்பதி, கிருஷ்ணாம்பதி மற்றும் குறிச்சி குளங்களில், 'ஸ்மார்ட் சிட்டி' நிதியில் மேம் பாட்டு பணிகள் நடந்து வருகின்றன,
குறிச்சி குளத்தில் சைக்கிள் டிராக், 20 அடி உயர திருவள்ளுவர் சிலை, அலுமினியத்தால் ஆன ஜல்லிக்கட்டு சிலை, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, ஒயிலாட்டம் சிலை, குளத்தை சுற்றிலும் நடைபாதை அமைக்கப்படுகின்றன. இந்த பணிகளை, 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள்முடிக்க இலக்கு நிர்ணயிக்க ப்பட்டுள்ளது.
வருவாய் ஈட்டும் வகையில், வாலாங்குளம் மற்றும் உக்கடம் பெரிய களத் தில் இயக்குவதுபோல், குறிச்சி குளத்திலும் படகு சவாரி இயக்குவது குறித்து ஆலோசிக்கப்பட் டுள்ளது.
இந்தநிலையில் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன், சுற்று லாத்துறை மேலாண் இயக்குனர் சந்திப் நந்துாரி ஆகியோர் குறிச்சி குளத்ததில் ஆய்வு செய்தனர். அப்போது குறிச்சி குளத்தின் வரைபடத்தை மாநகராட்சி கமிஷனர் பிதாப் காண்பித்து என்னென்ன பணிகள் செய்யப்படுகின்றன என்பது குறித்து விளக்கினார். அப்போது, படகு சவாரி இயக்குவதற் கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வது குறித்து, சுற்றுலா துறையினருக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.
- 200-க்கும் மேற்பட்ட ஜீப்புகள் இயங்கி வரும் நிலையில் அந்த தொழிலும் கொரோனா காலத்திற்கு பின்பு முற்றிலுமாக முடங்கி உள்ளது.
- சுற்றுலா பயனாளி களுக்கான படகு சவாரியை ஏற்படுத்த வேண்டும்
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மசினகுடி ஊராட்சி மன்ற பகுதியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர்
காலம் காலமாக வாழ்ந்து வரும் இந்த மக்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களை மேற்கொண்டு வந்த நிலையில் அவற்றில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக மாற்று தொழிலாக சுற்றுலா தொழிலை செய்து வருகின்றனர்.
குறிப்பாக மசினகுடி மாவ னல்லா, வாழைத்தோட்டம், மாயார், தெப்பக்காடு உள்ளிட்ட கிராமங்களை சார்ந்த ஏராளமானோர் ஜீப்புகளில் சுற்றுலா பயணிகளை அழைத்து சென்று அதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.
தற்போது 200-க்கும் மேற்பட்ட ஜீப்புகள் இயங்கி வரும் நிலையில் அந்த தொழிலும் கொரோனா காலத்திற்கு பின்பு முற்றிலுமாக முடங்கி உள்ளது. இதனால் ஜீப் ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலா வழி காட்டிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
இதனால் உள்ளூர் வியாபாரிகளின் வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மசினகுடி பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும், அவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் விதமாகவும் சுற்றுலா திட்டங்களை ஏற்படுத்த வேண்டும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
குறிப்பாக மசினகுடி மரவுக்கண்டி அணையில் படகு குளம் அமைத்து சுற்றுலா பயனாளி களுக்கான படகு சவாரியை ஏற்படுத்த வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா அமைச்சர் ராமச்சந்திரனிடம் நேற்று மனு அளித்தார். அதில் தமிழக வளர்ச்சி கழகம் முலம் படகு சவாரி தொடங்கி மசினகுடி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி உள்ளனர்.
- பவுர்ணமியையொட்டி நேற்று முதல் கன்னியாகுமரியில் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது.
- படகுத்துறை நுழைவு வாயிலில் 2 மணி நேரம் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி கடல் உள்வாங்குவது, நீர்மட்டம் தாழ்வது, நீர்மட்டம் உயர்வது, சீற்றம், கொந்தளிப்பு, ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது, அலையே இல்லாமல் கடல் அமைதியாக குளம்போல் காட்சியளிப்பது, கடல் நிறம் மாறுவது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.
குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் பவுர்ணமியையொட்டி நேற்று முதல் கன்னியாகுமரியில் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது. இன்று காலை கடல் நீர்மட்டம் "திடீர்" என்று தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது.
இதனால் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்ககடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது.
இதனால் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு செல்லும் படகுகள் படகு துறையில் மணலில் தரை தட்டி நின்றது. அதேவேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகமாகவும் காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து குறிப்பிட்ட நேரத்தில் தொடங்கப்படவில்லை. இதனால் இன்று காலை விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறை நுழைவு வாயிலில் 2 மணி நேரம் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதற்கிடையில் காலை 10 மணிக்கு கடல் சகஜநிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு 2 மணி நேரம் காத்திருந்த சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர். முக்கடல் சங்கமத்தில் சுற்றுலா பயணிகள் கடல் சீற்றம் காரணமாக கடலில் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர்.
மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின.
- ஏற்காட்டிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகளின் வந்த வண்ணம் உள்ளனர்.
- படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், நீண்ட வரிசையில் காத்திருந்து குடும்பத்துடன் படகு சவாரி செய்தனர்.

ஏற்காடு:
கோடை விடுமுறை இன்றுடன் நிறைவடை யும் நிலையில், ஏற்காட்டில் ஏராள மான சுற்றுலா பயணி
கள் தங்கள் குடும்பங்களுடன் குவிந்ததால் களைகட்டியது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வரும் நிலையில், ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் மாலை நேரங்களில் நல்ல மழை பெய்து வருவதால், சீதோ ஷண நிலை குளுமையாக மாறியுள்ளது.
இதை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளின் ஏற்காட்டிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், பள்ளி களுக்கு விடப்பட்ட கோடை விடுமுறை இன்றுடன் நிறைவடைகிறது. இதனால் விடுமுறையின் இறுதி ஞாயிற்று கிழமையான இன்று வழக்கத்தை விட ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
இவர்கள் இங்குள்ள முக்கிய சுற்றுலா இடங்களான அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், ஐந்திணை பூங்கா, ஏரிபூங்கா, பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் குகை கோவில், பொட்டானிக்கல் கார்டன், லேடிசீட், போன்ற இவர்களில் குடும்பத்துடன் பொழுதை களித்தனர்.
மேலும் இங்குள்ள படகு இல்லத்தில், குவிந்த சுற்றுலா பயணிகள், நீண்ட வரிசையில் காத்திருந்து குடும்பத்துடன் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகளவில் ஏற்காடு வந்ததால் மலை பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

- வார விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் வருகையும் கணிசமாக இருந்தது.
- நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல், பியர்சோழா ஆகிய அருவிகளை கண்டு ரசித்து அருகில் நிற்பதுபோல் செல்பி எடுத்துக் கொண்டனர். வார விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் வருகையும் கணிசமாக இருந்தது.
குறிப்பாக கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்து அதிக அளவு கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் வந்திருந்தனர். பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, செட்டியார்பூங்கா, கோக்கர்ஸ்வாக், மன்னவனூர், சுழல் சுற்றுலா மையம், பேரிஜம் ஏரி, பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, பைன்பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களில் இதமான சீதோசனம் காணப்பட்டதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர்.
மேலும் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏரிச்சாலையில் குதிரை மற்றும் சைக்கிள் சவாரி செய்து மகிழ்ச்சி அடைந்தனர். வாரவிடுமுறை நாளான இன்று சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக இருந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கோடை சீசன் முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதால் குறைவாக காணப்படும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் இனி வரும் காலங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பல்வேறு இடங்களிலிருந்து சுற்றுலா வரும் பயணிகள், ஏரியில் படகு சவாரி செய்யாமல் செல்வதில்லை.
- தேன் நிலவு கொண்டாண்டத்திற்காக வரும் புதுமணத்தம்பதிகள், காதல் ஜோடிகள், இருவர் மட்டும் வசதியாக அமர்ந்து செல்லக்கூடிய வகையில் இந்த மிதிபடகு வடிவமைக்கப்பட்டு உள்ளது.
ஏற்காடு:
சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான ஏற்காட்டிற்குள் நுழைந்ததும், சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக பிரமாண்ட ஏரி அமைந்துள்ளது.
பல்வேறு இடங்களிலிருந்து சுற்றுலா வரும் பயணிகள், ஏரியில் படகு சவாரி செய்யாமல் செல்வதில்லை. குடும்பத்தோடும், ஜோடியாகவும் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர். அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, படகு இல்லத்தில் பல்வேறு ரகங்களில் படகுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
10 பேர் அமர்ந்து செல்லக்கூடிய மோட்டார் பொருத்திய விசைப்படகுகள், முழுக்க முழுக்க மனித சக்தியால் இயக்கப்படும் துடுப்பு படகுகள், தாங்களே இயக்கக்கூடிய மிதிபடகுகள், குழந்தைகளை கவரும் விதமாக மிக்கிமவுஸ், அன்னப்பறவை உருவங்களை கொண்ட மிதிபடகு போன்றவற்றில் சுற்றுலா பயணிகள் உல்லாச சவாரி செய்வது வழக்கம்.
தற்போது, புதிய வரவாக நவீன படகு ஒன்று வரவழைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து படகு குழாம் அதிகாரிகள் கூறுகையில், முழுக்க முழுக்க மனித சக்தியால் இயங்கக்கூடிய மிதிவண்டி வடிவிலான படகு புதிய வரவாக வந்துள்ளது. தேன் நிலவு கொண்டாண்டத்திற்காக வரும் புதுமணத்தம்பதிகள் மற்றும் காதல் ஜோடிகள், இருவர் மட்டும் வசதியாக அமர்ந்து செல்லக்கூடிய வகையில் இந்த மிதிபடகு வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த படகு வந்த முதல் நாளிலேயே, ஏராளமானோர் சவாரி செய்ய மிகுந்த ஆர்வம் காட்டினர். முழங்கால் வலி ஏற்படாத வகையில், இந்த படகு வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பம்சமாகும். வயதானவர்கள் கூட சுலபமாக இயக்க முடியும். சுற்றுலா பயணிகளிடையே வரவேற்பினை பொறுத்து, கூடுதல் படகுகள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.
- பழமையான 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட செல்லிக்குறிச்சி ஏரி உள்ளது.
- தற்போது இந்த ஏரி சரியாக தூர்வாரப்படாத நிலையில் உள்ளது.
அதிராம்பட்டினம்:
அதிராம்பட்டினம்- பட்டுக்கோட்டை சாலையில் மிகவும் பழமையான 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட செல்லிக்குறிச்சி ஏரி உள்ளது. இந்த ஏரியால் அதிராம்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் மிகவும் பயனடைகின்றன.
இந்நிலையில், தற்போது இந்த ஏரி சரியாக தூர்வாரப்படாத நிலையில் உள்ளது.
இதனால் ஏரியில் உள்ள தண்ணீர் குறுகிய நாட்களில் வற்றி போகிறது. எனவே, இந்த ஏரியை உடனடியாக தூர்வார வேண்டும். மேலும், அதிராம்பட்டினத்தை சுற்றியுள்ள மக்களும், சுற்றுலா பயணிகளும் இங்கு வந்து நேரத்தை செலவிடும் வகையில் ஏரியில் படகு சவாரி ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர் அப்துல் பாசித் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
- நகர் பகுதி மற்றும் பல்வேறு இடங்களில் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.
- சீதோஷ்ணம் நிலவியதால் நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசி யான கொடை க்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வெயிலின் தாக்கம் குறைந்து குளுமையான சீதோசனம் நிலவி வருவதால் மலை ஸ்தலங்களுக்கு பொதுமக்கள் படையெடுக்க தொடங்கி உள்ளனர்.
இன்று கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தது. நகர் பகுதி மற்றும் பல்வேறு இடங்களில் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.
இன்று வாரவிடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தந்தனர்.
இதனால் முக்கிய சுற்றுலா இடங்களான பைன் பாரஸ்ட், தூண்பாறை, குணா குகை, பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், செட்டியார் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அதிகரித்து காண ப்பட்டது. மேலும் இதமான சீதோஷ்ணம் நிலவியதால் நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் உள்பட சுற்றுலா தொழிலை நம்பியுள்ளவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
- பகல், இரவு நேரங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது.
- தற்போது தீபாவளி தொடர் விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து விட்டது.
ஏற்காடு:
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் நிலவும் குளுகுளு சீசனை அனுபவிக்க ஆண்டுதோறுமே ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் இங்குள்ள காட்சி முனைகளை ரசித்து பார்த்து படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்வார்கள்.
குறிப்பாக சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகையால் ஏற்காடு நகரமே களை கட்டும்.
கடந்த சில நாட்களாக ஏற்காட்டில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைப்பாதையில் உள்ள பல்வேறு அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது. ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அந்த அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து செல்கிறார்கள். மேலும் தொடர் மழையின் காரணமாக குளிர்ந்த காற்றும் வீசி வருகிறது.
பகல், இரவு நேரங்களில் கடுமையான குளிர் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் சுவட்டர், உல்லன் ஆடைகளை அணிந்து வந்து செல்கிறார்கள். மேலும் பஸ் நிலைய பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் டிரைவர்கள் தீ மூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.
மதியம் 3 மணிக்கு மேல் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. அது காலை 10 மணி வரை நீடிக்கிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் சாலைகள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிர விட்டபடி வந்து செல்கிறது. மேலும் சுற்றுலா பயணிகள் சிலர் உல்லன் ஆடைகளை அணிந்து கொண்டு பனிமூட்டத்தில் நடைபயிற்சி சென்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும் சிலர் பனிமூட்டத்தில் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
தற்போது தீபாவளி தொடர் விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதால் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து விட்டது. ஆனால் சேலம் மற்றும் ஏற்காடு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பேர் தினமும் வந்து செல்கிறார்கள். அவர்கள் ஏற்காட்டில் நிலவி வரும் ரம்மியமான சூழலை அனுபவித்து வருகிறார்கள்.
- குன்னூரில் தொடர்மழை எதிரொலி
- சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
அருவங்காடு,
குன்னூர் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து வருவதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
தொடர் மழை காரண மாக மலைப்பா தையில் அவ்வப்போது பாதிப்புகள் ஏற்பட்டு வருவதால் சுற்று லாப் பயணிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வருவதை தற்போது தவிர்க்க வேண்டு மென மாவட்ட நிர்வாகம் அறிவு றுத்தி உள்ளது.
இந்நிலையில் ஆந்திரா, கர்நாடகா,கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தற்போது கூடலூர் மார்க்க மாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்ப்பதற்காக வருகி றார்கள். இதில் குன்னூர் சிம்ஸ் பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கு ள்ள மினி படகு இல்லத்தில் படகு சவாரி செய்வதற்காக ஆர்வத்துடன் சென்றனர்.
ஆனால் மழை காரணமாக அங்குள்ள ஏரியில் தண்ணீர் நிரம்பி வழிந்து ஓடுவதால் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதேபோல் குன்னூர் பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களை பார்த்து ரசிக்க இயலாமல் திரும்பி சென்றனர்.
- ஒகேனக்கல் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
- பரிசல் சவாரி செய்து ஜகன்மோகினி குகை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று காவிரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.
பென்னாகரம்:
தருமபுரி மாவட்டம் ஒகேனக் கலில் காணும் பொங்கல் விழாவையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கடந்த 14ஆம் தேதி போகி பண்டிகையுடன் தொடங்கியது. 15ஆம் தேதி வாசல் பொங்கலும் 16ஆம் தேதி மாட்டுப் பொங்கல் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையின் இறுதி நாளான நேற்று காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிலையில் காணும் பொங்கல் விழாவையொட்டி ஒகேனக்கல் 25 ஆயிரத் துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.தொங்கு பாலம் நடைபாதை ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதியது. முதலைப் பண் ணை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடும்பம் குடும்பமாக அமர்ந்து உணவு சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் கடைகளில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற் றது. உணவகங்கள், மீன் வறுவல் கடை, மீன் மார்க் கெட் உள்ளிட்ட பகுதியில் விற்பனை படுஜோராக நடைபெற்றது. சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே பரிசல் சவாரி செய்து ஜகன்மோகினி குகை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குச் சென்று காவிரியின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

மேலும் சுற்றுலா பயணிகள் எண்ணெய் மசாஜ் செய்து மெயின் அருவி மற்றும் காவிரி ஆற்றில் குளித்து மகிழ்ந்தனர். கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கலில் குவிந்ததால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் மணல் திட்டு, ஆலம்பாடி, மெயின் அருவி, நடைபாதை, மசாஜ் செய்யும் இடம் பஸ் நிலை யம் உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் .
மேலும் தீயணைப்பு படையினர் பல்வேறு பகுதி களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.