search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காணிக்கை"

    • பக்தா்கள் நோ்த்திக் கடனாகவும், பிற காரணங்களுக்காகவும் காணிக்கையாக செலுத்திய நகைகளை உருக்கக்கூடாது
    • தங்க நகைகளை உருக்கிய செய்தி பக்தா்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பூர் :

    ஆலயங்களில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தும் தங்கத்தை உருக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    திருவள்ளூா் மாவட்டம், பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய தங்க நகைகளை உருக்கி வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாகவும், அதன் பத்திரத்தை தமிழக முதல்வரிடம் கொடுத்துள்ளதாகவும் தெரியவருகிறது. பக்தா்கள் நோ்த்திக் கடனாகவும், பிற காரணங்களுக்காகவும் காணிக்கையாக செலுத்திய நகைகளை உருக்கக்கூடாது என்று இந்து முன்னணி சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. இதனிடையே, தங்க நகைகளை உருக்கிய செய்தி பக்தா்களுக்கு அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவில்களில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை நீதிமன்றமே வரையறுத்த பின்னரும் கூட அறங்காவலா்களை நியமிக்காமலும், கோவில் நிலங்கள் எவ்வளவு உள்ளது, குத்தகைதாரா்கள் வாடகையாக செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை குறித்து இந்து சமய அறநிலையத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    கோவில்களில் சிறப்பு தரிசன கட்டணம், அபிஷேக கட்டணம், வாகன நிறுத்தக் கட்டணம் என்று அனைத்துக்கும் கட்டணம் வாங்கிய பிறகும் கோவில்களை நிா்வகிக்க முடியாதா? கோவில்களுக்கு பக்தா்கள் நோ்த்திக்கடனாக வழங்கிய நகைகளைக் கொண்டு சிரமப்பட்டு கோவில்களை நிா்வகிக்க வேண்டாம். இந்த நகை உருக்கும் திட்டம் மாபெரும் ஊழலுக்கு வழிவகுக்கும் என்பதால் இந்தத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற வேண்டி வளையல்களை காணிக்கையாக வழங்கினர்.
    • 10 ஆயிரத்து 8 வளையல்கள் மாலையாக கோர்க்கப்பட்டு காளியம்மனுக்கு அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்துள்ள வடக்கு பொய்கைநல்லூர் எல்லை ரோடு பகுதியில் நந்தவன காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆடி மாதம் தொடங்கியதில் இருந்தே தினமும் அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வந்தது.

    இந்நிலையில் ஆடி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏராளமான பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற வேண்டி வளையல்களை காணிக்கையாக வழங்கினர்.

    இதில் 10 ஆயிரத்து 8 வளையல்கள் மாலையாக கோர்க்கப்பட்டு காளியம்மனுக்கு அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பஞ்சமுக மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக 11 வகையான திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டுதரிசனம் செய்தனர்.

    • ஆனி கொடைவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அளித்த உண்டியல் காணிக்கையை தென்திருப்பேரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் மற்றும் பெண்கள் உண்டியல் காசுகளை எண்ணினார்கள்.
    • ரூ.17,62,252 பணமும், 16.800 மில்லி கிராம் தங்கமும், 75.300 மில்லி கிராம் வெள்ளியும் உண்டியலில் இருந்தது.

    தென்திருப்பேரை:

    குரங்கணி முத்துமாலை அம்மன் ஆனி கொடைவிழாவை முன்னிட்டு கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. நடைபெற்ற ஆனி கொடைவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அளித்த உண்டியல் காணிக்கையை இந்து அறநிலையத்துறை தூத்துக்குடி மாவட்ட உதவி ஆணையர் சங்கர் முன்னிலையில் தென்திருப்பேரை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் மற்றும் பெண்கள் உண்டியல் காசுகளை எண்ணினார்கள். இதில் உண்டியலிலிருந்து ரூ.17,62,252 பணமும், 16.800 மில்லி கிராம் தங்கமும், 75.300 மில்லி கிராம் வெள்ளியும் இருந்தது. உண்டியல் எண்ணும் நிகழ்ச்சியில் இந்து அறநிலையத்துறை ஏரல் ஆய்வாளர் சிவலோகநாயகி, கோவில் செயல் அலுவலர் இசக்கியப்பன், அலுவலக பணியாளர் பாலகிருஷ்ணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உண்டியல் எண்ணும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • திருப்பணி உண்டியல்நேற்று திறந்து எண்ணப்பட்டது.
    • காணிக்கையாக ரூ.27ஆயிரத்து 275 வசூல் ஆகி இருந்தது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்ஆகும்.

    இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம். இந்த கோவிலில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்த திருப்பணிக்காக பக்தர்களிடம் இருந்து காணிக்கை வசூல் செய்வதற்காக கோவிலின் பிரதான நுழைவாயிலில்உள்ள மண்டபத்தில் தனியாக உண்டியல் வைக்கப்பட்டு உள்ளது.

    இந்தஉண்டியல் மூலம் கிடைக்கும் வருமானம் மூலம் இந்த கோவிலில் பல்வேறு திருப்பணிகள் செயயப்பட்டு வருகின்றன. இந்த திருப்பணிஉண்டியல் அடிக்கடி திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதேபோல இந்த திருப்பணி உண்டியல்நேற்று திறந்து எண்ணப்பட்டது.

    நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளர் சிவகுமார், நாகர்கோவில் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஆய்வாளர் சரஸ்வதி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் இந்த உண்டியல் திறந்து எண்ணப்பட்டது.

    இந்த உண்டியல் எண்ணும் பணியில் திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் வெளியூர்களைச் சேர்ந்த பெண் பக்தர்கள் ஈடுபட்டனர். இதில் காணிக்கையாக ரூ.27ஆயிரத்து 275 வசூல் ஆகி இருந்தது. அதேசமயம் இந்த கோவிலில் பக்தர் கள் காணிக்கை செலுத்து வதற்காக கோவில் வளா கத்தில் வைக்கப்பட்டுள்ள 17 நிரந்தர உண்டி யல்களும் அன்ன தான உண்டியலும் இந்த மாதம் திறந்து எண்ணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    ×