என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 226656"
- இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'.
- இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது.
நாட்டு நாட்டு பாடல் (ஆர்.ஆர்.ஆர்.)
'நாட்டு நாட்டு' பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்ததற்கு அதன் நடனமும் ஒரு காரணமாகும். ஜூனியர் என்.டி.ஆரும் ராம் சரணும் போட்டி போட்டு ஆடிய இந்த பாடலுக்கு அதே ஸ்டெப்புகளை போட்டு ரீல்ஸ்களை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் பகிர்ந்தனர். 'நாட்டு நாட்டு' பாடலுக்கு தென்கொரியாவிலும் அதிக வரவேற்பு கிடைத்தது.
நாட்டு நாட்டு பாடல் (ஆர்.ஆர்.ஆர்.)
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டில் கலந்துகொண்ட இந்தியாவிற்கான தென் கொரிய தூதர் ஜாங் ஜே போக், ஆர்.ஆர்.ஆர். படத்தின் கதாநாயகன் ராம் சரணுடன் மேடையில் 'நாட்டு நாட்டு' பாடலுக்கு நடனமாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
#WATCH | J&K: Actor Ram Charan dances to the tunes of 'Naatu Naatu' song from RRR movie, in Srinagar. pic.twitter.com/9oZ8c9sYBY
— ANI (@ANI) May 22, 2023
- ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடிப்பில் தெலுங்கில் தயாராகி தமிழ், இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியானது.
- ஜப்பானில் 44 நகரங்களில் 209 தியேட்டர்களிலும், 31 ஐமேக்ஸ் தியேட்டர்களிலும் ஆர்.ஆர்.ஆர் படம் திரையிடப்பட்டது.
ஜப்பான் ரசிகர்கள் இந்திய படங்களை பார்க்க ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களை ஜப்பான் மொழியில் டப்பிங் செய்து வெளியிட்டு வருகிறார்கள். ரஜினிகாந்தின் முத்து படத்தை பார்த்த பிறகு அவருக்கு ஜப்பானில் ரசிகர் மன்றத்தையே தொடங்கி உள்ளனர். சமீப காலங்களில் திரைக்கு வந்த அனைத்து ரஜினி படங்களும் ஜப்பானிலும் திரையிடப்பட்டன.
சமீபத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடிப்பில் தெலுங்கில் தயாராகி தமிழ், இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியிடப்பட்டு வசூல் சாதனை நிகழ்த்திய ஆர்.ஆர்.ஆர் படத்தையும் ஜப்பானில் வெளியிட்டனர். இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கார் விருதை வென்றதும் ஜப்பானியர்கள் ஆர்வமாக படத்தை பார்த்தனர்.
ஜப்பானில் 44 நகரங்களில் 209 தியேட்டர்களிலும், 31 ஐமேக்ஸ் தியேட்டர்களிலும் ஆர்.ஆர்.ஆர் படம் திரையிடப்பட்டது. இந்நிலையில் ஜப்பானில் ஆர் ஆர் ஆர் படம் 200 நாட்கள் ஓடி ரூ.119 கோடி வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. இதன் மூலம் ஜப்பானில் அதிக வசூல் செய்த இந்திய படம் என்ற பெருமையை ஆர்.ஆர்.ஆர் பெற்றுள்ளது. ஆர்.ஆர்.ஆர் படம் உலகம் முழுவதும் ரூ.1,235 கோடி வசூலித்து உள்ளது.
- இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் திரைப்படம் 'கேம் சேஞ்ஜர்'.
- இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிப்பில் 'கேம் சேஞ்ஜர்' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். 'கேம் சேஞ்ஜர்' படத்தில் நடிகர் ராம் சரண் 80 வினாடிகளுக்கு தொடர்ந்து நடனமாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேம் சேஞ்ஜர் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து ராம்சரண் பிறந்தநாளானா இன்று 'கேம் சேஞ்ஜர்' படத்தின் டைட்டில் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில், தற்போது இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'கேம் சேஞ்ஜர்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Here's the first look of #GameChanger
— Sri Venkateswara Creations (@SVC_official) March 27, 2023
Happy Birthday Megapower Star @AlwaysRamCharan?@shankarshanmugh @advani_kiara @yoursanjali @DOP_Tirru @MusicThaman @artkolla @SVC_official #SVC50 #RC15 #HBDGlobalStarRamCharan pic.twitter.com/JpGohGhaeh
- இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் திரைப்படம் 'ஆர்சி15'.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். ஆர்.சி.15 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் உள்ள சார்மினாரில் நடைபெற்று வருகிறது. ஆர்சி15 படத்தில் நடிகர் ராம் சரண் 80 வினாடிகளுக்கு தொடர்ந்து நடனமாடவுள்ளதாக பேசப்பட்டது.
இந்நிலையில் ஆர்சி15 படத்தின் தலைப்பு குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இப்படத்திற்கு சிஇஒ (CEO - Chief Electoral Officer) என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ராம்சரணின் பிறந்தநாளை முன்னிட்டு வருகிற மார்ச் 27ம் தேதி வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் திரைப்படம் ‘ஆர்சி15’.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். ஆர்.சி.15 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார்.
ஆர்.சி.15
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் உள்ள சார்மினாரில் நடைபெற்று வருகிறது. இதனை இயக்குனர் ஷங்கர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்த படத்தின் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ஆர்சி15 படத்தில் நடிகர் ராம் சரண் 80 வினாடிகளுக்கு தொடர்ந்து நடனமாடவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்திற்கு சமீபத்தில் கோல்டன் குளோப் விருது கிடைத்தது.
- இந்த நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 25-ஆம் தேதி வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. சமீபத்தில் ஒரிஜினல் பாடல் பிரிவில் இப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது.
ராம்சரண்
இந்த நிகழ்ச்சியானது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நட்சத்திரங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. இதில் நட்சத்திர நடிகர்களும் நடிகைகளும் கலைஞர்களும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடைகளுடன் கலந்து கொள்வார்கள்.
ராம்சரண்
இந்த விழாவில் கலந்து கொண்ட தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம்சரண் சிறந்த ஆடை அணிந்து விழாக்களில் கலந்து கொள்ளும் நட்சத்திர நடிகர்களின் பட்டியலில் முதல் பத்து இடத்தில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இத்தகைய பட்டியலில் இடம் பிடித்திருக்கும் முதல் இந்திய நடிகர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ராம்சரண்
ராம் சரண் தன்னுடைய நடிப்பில் மட்டுமல்லாமல், கலந்து கொள்ளும் ஒவ்வொரு நிகழ்விலும் பிரத்யேகமான ஸ்டைலுடன் கூடிய ஆடையை அணிவதில் அலாதி விருப்பம் கொண்டவர். கோல்டன் குளோப் விருது வழங்கும் விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பில் கலந்து கொள்வதற்காக உலக அளவில் புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளரான தருண் தஹிலியானி மற்றும் அவரது குழுமத்தின் தயாரிப்பில் உருவான ரீகல் மினிமலிஸ்ட் ஃபேஷன் பாணியில் வடிவமைக்கப்பட்ட ஆடைகளை அணிந்திருந்தார். அத்துடன் பேஷன் ஆடைகளை அணிவதில் தனித்துவமான அடையாளமாகவும் இவர் திகழ்கிறார்.
- இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி வசூலை குவித்த திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’.
- இப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது.
ஆர்.ஆர்.ஆர்
இப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பீம் கதாபாத்திரத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் ராம ராஜு கதாபாத்திரத்தில் ராம் சரணும் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது.
ஆர்.ஆர்.ஆர்
சமீபத்தில் ஒரிஜினல் பாடல் பிரிவில் இப்படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றது. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த 'கிரிட்டிக்ஸ் சாய்ஸ் அவார்டு' விழாவில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம், சிறந்த பாடல் ஆகிய பிரிவுகளில் 2 சர்வதேச விருதுகளை இப்படம் வென்றுள்ளது.
ஆர்.ஆர்.ஆர்
மேலும், 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் தொடர்ந்து சர்வதேச விருதுகளை வென்று வரும் நிலையில் ஆஸ்கார் போட்டியில் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
- ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் கோல்டன் குளோப் விருது நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
- இவருக்கு பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது.
ராஜமவுலி
மேலும், 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் கோல்டன் குளோப் விருது நாமினேஷன் பட்டியலில் இரண்டுப் பிரிவுகளில் இடம்பிடித்துள்ளது. இதனைத்தொடர்ந்து பலரும் ராஜமவுலிக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் ராஜமவுலி பாலிவுட்டின் தொடர் தோல்விக்கான காரணம் குறித்து பேசியுள்ளார்.
ராஜமவுலி
அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, "பாலிவுட் சினிமாவில் கார்ப்பரேட் நிறுவனங்கள் வர ஆரம்பித்து நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் அதிக சம்பளம் தருவதினால் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிட்டது. இந்த ஆண்டு பாலிவுட்டில் ஒரு சில படங்கள் மட்டுமே பாக்ஸ் ஆபிஸ் வெற்றிபெற்றன.
பார்வையாளர்கள் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு இயக்குவதே வெற்றிக்கான ஒரே மந்திரம். தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை இந்த ஆண்டு நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. இதேபோன்ற சூழல் பாலிவுட் திரையுலகுக்கு வேண்டும் என்றால் அவர்கள் சற்று அதிகமாக நீந்த வேண்டும். இல்லையெனில் மூழ்கிவிடுவார்கள்" என்று பேசியுள்ளார்.
- இயக்குனர் ஷங்கர் ஒரே நேரத்தில் நடிகர் கமல்ஹாசன், ராம்சரண் படத்தை இயக்கி வருகிறார்.
- இந்த படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
இந்தியன்
இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஆர்.சி.15
இதைத்தொடர்ந்து இயக்குனர் ஷங்கர் நடிகர் ராம் சரண் நடிக்கும் ஆர்.சி.15 படத்தையும் இயக்கி வருகிறார். இந்நிலையில், இந்த மாத இறுதியில் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பை தொடங்கும் ஷங்கர் அடுத்த மாத இறுதியில் படப்பிடிப்பை முடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர், ராம் சரண் படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கவுள்ளதாகவும் அந்த படத்தின் பாடல் காட்சிகள் நியூசிலாந்தில் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- இயக்குனர் கொரடாலா சிவா இயக்கத்தில் உருவான படம் ‘ஆச்சார்யா’.
- இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான கொரடாலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, தனது மகன் ராம்சரணுடன் இணைந்து நடித்த படம் 'ஆச்சார்யா'. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையே ராம்சரண் தயாரிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இந்த படம் படுதோல்வி அடைந்து வினியோகஸ்தர்கள் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டனர்.
ஆச்சார்யா
இந்நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றில் இது தொடர்பாக சிரஞ்சீவியிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், ''ஆச்சார்யா படம் தோல்வியடைந்ததற்கான முழுப் பொறுப்பையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். படம் நஷ்டமானதையடுத்து நானும், ராம்சரணும் 80 சதவீத பணத்தை தயாரிப்பாளர்களுக்கு கொடுத்துவிட்டோம். ஆச்சார்யா படம் குறித்த எந்த குற்றவுணர்வும் எனக்கில்லை'' என தெரிவித்துள்ளார்.
சிரஞ்சீவி
மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துள்ள 'காட்ஃபாதர்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- சிரஞ்சீவி தனது மகன் ராம்சரணுடன் இணைந்து நடித்த படம் ஆச்சார்யா.
- இப்படத்தின் தோல்வியால் இனி இருவரும் இணைந்து படம் நடிக்க மாட்டார்கள் என தகவல் வெளியானது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி, தனது மகன் ராம்சரணுடன் இணைந்து நடித்த படம் 'ஆச்சார்யா'. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இந்த படம் படுதோல்வி அடைந்து, வினியோகஸ்தர்கள் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டனர். அதன்பின்னர் சிரஞ்சீவி குடும்பத்திடம் நஷ்ட ஈடு கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த தோல்வி காரணமாக இனி தனது மகன் ராம்சரணுடன் இணைந்து நடிக்கப் போவதில்லை என்று சிரஞ்சீவி முடிவு எடுத்திருக்கிறார் என தகவல் வெளியானது. ஆனால் இதனை சிரஞ்சீவி மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, 'ஆச்சாரியா' படத்தின் தோல்வி என்னை பாதிக்கவில்லை, ராம் சரணையும் இது பாதிக்காது. ஏனெனில் இயக்குனர் சொன்னபடி படத்தில் நடித்து முடித்தோம். ஆனால் ரசிகர்கள் இந்த படத்தை அங்கீகரிக்கவில்லை. இதற்காக எதிர்காலத்தில் நாங்கள் இருவரும் இணைந்து நடிக்க மாட்டோம் என்று அர்த்தம் ஆகி விடாது. வாய்ப்பு வந்தால், காலம் கனிந்தால் மீண்டும் இணைந்து நடிப்போம். இவ்வாறு சிரஞ்சீவி விளக்கம் அளித்துள்ளார்.
- தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் ராம்சரண்.
- ரசிகர்கள் எழுப்பிய கேளிவிக்கு நடிகர் ராம்சரண் காட்டமாக பதிலளித்துள்ளார்.
தெலுங்கு ஹீரோ ராம் சரண் பற்றி காரசார விவாதம் தெலுங்கு சினிமாவில் நடந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் அவர் தனது 10வதுஆண்டு திருமண நாளை கொண்டாடினார். அப்போது சில ரசிகர்கள் மற்றும் வி.ஐ.பி.கள் ராம் சரண்-உபாசனா தம்பதிகள் திருமண்ம் செய்து கொண்டு 10 ஆண்டுகள் ஆன பிறகும் இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளாதது பற்றி கேள்வி எழுப்பி வந்தார்கள்.
இதற்கு பதிலளித்த ராம் சரண் கூறியதாவது, நான் மெஹா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன், அவரின் ரசிகர்களை திருப்திபடுத்த வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. மேலும் நான் சினிமாவிலும், எனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் நான் பயணிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. அதேபோல் எனது மனைவி உபாசனாவும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் அடைய வேண்டிய உயரங்கள் இன்னும் இருக்கிறது. அதற்கிடையில் குழந்தை பெற்றுக் கொள்வதைப் பற்றி நாங்கள் யோசிக்கப்போதில்லை. மாறாக குழந்தைகள் பெற்றுக் கொள்ள எங்களுக்கு இன்னும் ஆண்டுகள் பல ஆகும். எங்களின் தனிப்பட்ட வாழ்வைப் பற்றி எதற்காக கேள்வி எழுப்புகிறீர்கள் என காட்டமாக பதிலளித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்