search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பலி"

    • கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து சிறப்பு கூட்டு திருப்பலியில் கலந்து கொண்டனர்.
    • கேக் வெட்டி முகத்தில் பூசியப்படி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் நகரத்திற்குட்பட்ட வடக்கு வீதியில் அமைந்துள்ள புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்ட சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது.ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு புனித பாத்திமா அன்னை ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தது.

    ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இந்த புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்து சிறப்பு கூட்டுத் திருப்பலியில் கலந்து கொண்டனர். முன்னதாக சிலுவை ஆலயத்திற்குள் எடுத்துவரப்பட்டு தூபம் காண்பிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் கூடியிருந்த கிறிஸ்தவர்களுக்கு அருட்தந்தை ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் ஆலயத்திற்கு வெளியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூரையில் அமர்ந்து பலர் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.

    மேலும் சரியாக 12 மணிக்கு ஆங்கில புத்தாண்டு பிறந்ததை அறிவிக்கும் வகையில் ஆலயமணி ஒலித்தது.அதனைத் தொடர்ந்து திருப்பலி பிரார்த்தனை நடைபெற்றது.

    இந்த ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு காவல்துறையினர் திருவாரூர் நகரத்தின் முக்கிய வீதிகளான தெற்கு வீதி வடக்கு வீதி கீழ வீதி உள்ளிட்ட இடங்களில் தடுப்புகளை வைத்து இருசக்கர வாகனங்களை அனுமதிக்காமல் தடை செய்தனர்.

    சிலர் வீட்டு வாசலில் வைத்து கேக் வெட்டி முகத்தில் பூசியப்படி ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தங்களுக்குள் தெரிவித்துக் கொண்டனர். திருவாரூர் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ங்களை சோதனைக்கு பிறகே நகரத்திற்குள் அனுமதித்தனர்.

    • கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
    • 2023 புத்தாண்டு சிறப்பு திருப்பலி, ஆராதனைகளும் நடந்தன.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி தேவாலயங்களில் நள்ளிரவு திருப்பலி, ஆராதனை நடந்தது. புதூர் புனித லூர்தன்னை ஆலயத்தில் மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி புத்தாண்டு சிறப்பு திருப்பலி நிறைவேற்றினார்.

    ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலயம், கூடல்நகர் தூய திரித்துவ ஆலயம், இடைவிடா சகாய அன்னை ஆலயம், அண்ணாநகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம், பாஸ்டின்நகர் தூய பவுல் ஆலயம், விளாங்குடி செங்கோல் நகர் கிறிஸ்து அரசர் ஆலயம், டவுன்ஹால் ரோடு தூய ஜெபமாலை அன்னை ஆலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் பங்குத்தந்தையர்கள் புத்தாண்டு சிறப்பு திருப்பலி நிறைவேற்றினர். சி.எஸ்.ஐ. லுத்ரன் திருச்சபை, அசெம்பிளி ஆப் காட் திருச்சபை, எச்.எம்.எஸ். காலனி புதிய ஜீவிய சபை, பைபாஸ் ரோட்டில் உள்ள ஏசு அழைக்கிறார். ஜெபகோபுரம் உள்ளிட்ட அனைத்து சபைகளிலும் இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 2022-ம் ஆண்டின் நன்மைகளுக்காக நன்றி வழிபாடும், அதன் பிறகு 2023 புத்தாண்டு சிறப்பு திருப்பலி, ஆராதனைகளும் நடந்தன.

    இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ஒருவருக்கொ ருவர் வாழ்த்து கூறி மகிழ்வை பகிர்ந்து கொண்டனர். மதுரை கோரிப்பாளையம், நெல்பேட்டை உள்பட அனைத்து பள்ளிவாசல் களிலும் இஸ்லாமியர்கள் புத்தாண்டு சிறப்பாக இருக்க வேண்டி சிறப்பு தொழுகை நடத்தினர்.

    • பாதுகாப்பு பணியில் 1500 போலீசார்
    • ஓட்டல்களில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு புத்தாண்டு கொண்டாட்டங்களை கொண்டாட வேண்டும்

    நாகர்கோவில்:

    கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது.

    கடந்த 2 ஆண்டு களாக புத்தாண்டு கொண்டாட் டங்கள் எளிய முறை யில் நடந்தது. இந்த ஆண்டு புத் தாண்டு கொண்டாட் டத்தை வெகு விமர்சை யாக கொண்டாட பொது மக்கள் தயாராகி வரு கிறார்கள். குமரி மாவட் டத்தில் புத்தாண்டு கொண் டாட்டத்தையடுத்து கோவில் களில் சிறப்பு பூஜை கள் நடந்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

    கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு பிரார்த்தனை நடக்கிறது. நாகர்கோவில் கோட்டாறு சவேரியார் ஆலயத்தில் நடைபெறும் நள்ளிரவு பிரார்த்தனையில் கோட்டாறு மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை கலந்து கொண்டு புத்தாண்டு வாழ்த்து செய்தி வழங்கு கிறார்.

    இதே போல் அனைத்து கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு திருப்பலிநடக்கிறது. சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆல யங்களிலும் புத்தாண்டு யொட்டி சிறப்பு பிரார்த்த னைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டை வரவேற்கும் வகையில் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களும் மின்விளக்கு அலங்காரத் தில் ஜொலிக்கிறது.

    கன்னியாகுமரியில் ஓட்டல்களில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய் யப்பட்டு வருகின்றன. இதையடுத்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளி மாவட் டங்களில் இருந்தும் புத்தாண்டை கொண்டாட குமரி மாவட்டத்திற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தையடுத்து மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தலைமையில் 1500 போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கன்னியா குமரி யில் புத்தாண்டையொட்டி கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கடற்கரை பகுதி களில் போலீஸ் பாதுகாப்பு போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2 ஷிப்டுகளாக மாவட்ட முழு வதும் போலீசார் ரோந்து சுற்றி வருவ தற்கும் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

    முக்கிய சந்திப்புகள் மற்றும் முக்கிய பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளப்பட உள்ளனர். குடிபோதையில் வாகனம் ஓட்டினால் அவர் கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் எச்சரித்துள்ளார். மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களை நள்ளிரவு ஒரு மணிக்கு பிறகு கொண்டாடக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்களில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு புத்தாண்டு கொண்டாட்டங்களை கொண்டாட வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோனிசாமி அடிகளார் மரியாள் எளிமையின் எடுத்துக்காட்டு என்ற பொருளில் திருப்பலி நிறைவேற்றுகிறார்.
    • தேர் பவனியை பிஷப் அந்தோனிசாமி புனிதம் செய்து தொடங்கி வைக்கிறார்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே காவிரி கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் மாதா பிறப்பு பெருவிழா கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியே ற்றத்தினை தொடர்ந்து நவ நாட்கள் என அழைக்கப்படும் விழா நாட்களில் தினமும் மாலை சிறு சப்பர‌பவனியும் திருப்பலியும் நடைபெற்றது.

    மாதா பிறப்பு பெருவிழா வின் 9ம் நாளான இன்று (புதன் கிழமை) மாலை மறைவட்ட‌முதன்மை குரு இன்னசென்ட் மரியாள் -தியாகத்தின் சிகரம் என்ற‌ பொருளில் திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    விழாவின்‌10 ம்நாள் மற்றும் மாதாவின் பிறப்பு நாள் ஆன‌நாளை (வியாழன்) மாலை கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோனிசாமி அடிகளார் மரியாள்-எளிமையின் எடுத்துக்காட்டு என்ற பொருளில் திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    திருப்பலி முடிந்ததும் இரவு 9.30 மணிக்கு மாதாவின் பிறப்பு பெருவிழா தேர் பவனி நடைபெறுகிறது.வண்ண‌மின் விளக்கு அலங்காரத்திலும், மல்லிகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில்அன்னையின் சுருபம் வைக்கப்பட்டு தேர் பவனியை பிஷப் அந்தோனிசாமி புனிதம் செய்து தொடங்கி வைக்கிறார்.

    தேர்பவனியின் போது நாடெங்கும் இருந்து திரண்டு வந்த பக்தர்கள் மரியே வாழ்க என்று வாழ்த்துஒலி முழக்கங்களை எழுப்பி வணங்குவர்.

    தேர்பவனி முடிந்ததும் நாளை மறுநாள் (வெள்ளி கிழமை) காலை 6மணிக்கு திருவிழா திருப்பலி மரியாள் தாய்மையின்‌ தலைப்பேறு என்ற தலைப்பில் கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி அடிகளார் நிறைவேற்றுவது டன் கொடி இறக்கப்பட்டு பூண்டி மாதா பேராலயத்தில் மாதா பிறப்பு பெருவிழா நிறைவு பெறும்.

    மாதா பிறப்பு பெருவிழா ஏற்பாடுகளை பேராலய அதிபர் சாம்சன், உதவி அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட், உதவி பங்கு தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தையர்கள் அருளானந்தம், ஜோசப் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.மாதாவின் பிறப்பு பெருவிழாவை முன்னிட்டு பேராலய‌ வளாகம்‌ வண்ண மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.

    • திருக்கொடியை புனிதம் செய்து ஏற்றி வைத்து பூண்டி புதுமை மாதாவின் பிறப்பு பெருவிழாவை தொடங்கி வைக்கிறார்.
    • நவநாட்கள் எனப்படும் விழா நாட்களில் தினமும் மாலையில் சிறுதேர்பவனியும் சிறப்பு திருப்பலியும் நடைபெறும்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி -கல்லணை சாலையில் அமைந்துள்ளது பூலோகம் போற்றும் பூண்டி புதுமை மாதா பேராலயம்.

    பூண்டி புதுமை மாதா பேராலயத்தில் மாதா பிறப்பு பெருவிழா நாளை (செவ்வாய்) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கு கிறது.

    நாளை மாலை பூண்டி மாதாவின் உருவம் வரையப்பட்ட திருக்கொடியை பக்தர்கள் ஏந்தி வர பூண்டி மாதா பேராலயத்தின் முன்புறமுள்ள கொடி மரத்தில் கும்பகோணம் மறை மாவட்ட பிஷப் அந்தோணிசாமி அடிகளார் திருக் கொடியை புனிதம் செய்து ஏற்றி வைத்து பூண்டி புதுமை மாதாவின் பிறப்பு பெரு விழாவை தொடங்கி வைக்கிறார்.

    கொடியேற்றத்தினை தொடர்ந்து மரியாள்-புதுமைகளின் அன்னை என்ற தலைப்பில் கும்பகோணம் பிஷப் அந்தோனிசாமி அடிகளார் தலைமையில் திருப்பலி நிறைவேற்றப்படும்.

    நவநாட்கள் எனப்படும் விழா நாட்களில்தினமும் மாலையில் சிறுதேர்ப வனியும் சிறப்பு திருப்பலி அருட்தந்தையர்கள் பீட்டர் பிரான்சிஸ், ஜான்சன், சேவியர் டெரன்ஸ், அடைக்கலம், ஆல்பர்ட், அகிலன் சர்பிரசாதம், பெர்க்மான்ஸ் அருள்தாஸ், சூசை மாணிக்கம், இன்ன சென்ட் ஆகியோரால் நிறைவேற்றப்படும்.

    பூண்டி புதுமை மாதாவின் பிறப்பு நாளாக கருதப்படும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ம் தேதி மாலை மரியாள் -எளிமையின் எடுத்துக்காட்டு இன்று மையக்கருத்தை வைத்து சிறப்பு திருப்பலியை கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி அடிகளார் நிறைவேற்றுவார்.

    அதனை தொடர்ந்து இரவு 9.30 மணி அளவில் மல்லிகை மலர்களாலும் சிறப்பு மின் விளக்கு அலங்காரத்திலும் பூண்டி அன்னை யின் சொரூபம் வைக்க ப்படும்.

    அலங்காரத் தேர்ப வனியை பிஷப் அந்தோ ணிசாமி புனிதம் செய்து தொடங்கி வைப்பார்.

    தேர்பவனி நிறைவடைந்த உடன் (செப்டம்பர்) 9-ம்தேதி காலை மரியாள் -தாய்மையின் தலைப்பேறு என்ற பொருளில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்படும்.

    அதன் பின்னர் கொடி இறக்கப்பட்டு பூண்டி மாதா திருத்தல பேராலயத்தில்பூண்டி புதுவை மாதாவின் பிறப்பு பெருவிழா நிறைவு பெறும்.

    விழா ஏற்பாடுகளை அதிபர் சாம்சன், உதவி அதிபர் ரூபன் அந்தோணி ராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட், உதவி பங்கு தந்தையர்கள் தாமஸ், அன்புராஜ், ஆன்மீக தந்தையர்அருளானந்தம், ஜோசப் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.

    பூண்டி மாதாவின் பிறப்பு பெரு விழாவை ஒட்டி கோயில் வளாகத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை பூண்டி பேராலய அதிபர் சாம்சன் தலைமையிலான குழுவினர் செய்து வருகின்றனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூர் திருஇருதய ஆண்டவர் ஆலய பெருவிழா நடந்தது.
    • தினமும் மாலையில் நவநாள் திருப்பலி நடந்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் திருஇருதய ஆண்டவர் ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அனைத்து பணிக்குழுக்களின் இயக்குநர் பெனடிக்ட் பர்னபாஸ் தலைமையில் மறைவட்ட அதிபர் சந்தன சகாயம், உதவிப் பங்குத் தந்தை ஜேம்ஸ் ஆகியோர் இணைந்து நிறைவேற்றிய கூட்டுத் திருப்பலியுடன் விழா தொடங்கியது.

    தினமும் மாலையில் நவநாள் திருப்பலி நடந்தது. இறுதிநாளில் மதுரை உயர்மறை மாவட்ட முதன்மை குரு ஜெரோம் எரோனிமுஸ் தலைமையில் மறைவட்ட அதிபர் சந்தன சகாயம், உதவிப்பங்குத் தந்தை ஜேம்ஸ் ஆகியோர் இணைந்து நிறைவேற்றிய ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது. அதனைத் தொடர்ந்து விழாவின் சிறப்பு நிகழ்வாக நற்கருணை பவனி ஆலய வளாகத்தில் இருந்து புறப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயம் வந்தடைந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்பு நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்று கொடியிறக்கம் செய்யப்பட்டு விழா நிறைவுபெற்றது.

    • மாதா ஆலய திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
    • சிறப்பு திருப்பலியில் பங்குத்தந்தை அருள் ஜீவா, அமலவை அருட் சகோதரிகள், பங்கு இறைமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே காரங்காடு கிராமத்தில் பழமை வாய்ந்த தூய செங்கோல் அன்னை ஆலயம் உள்ளது.

    இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது. புதிய கொடி மரம் புனிதப்படுத்துதலும் திரு விழா கொடியேற்றத்தையும் தமிழக ஆயர் பேரவை கென்னடி நிறைவேற்றினார்.

    கொடியேற்றம் மற்றும் சிறப்பு திருப்பலியில் பங்குத்தந்தை அருள் ஜீவா, அமலவை அருட் சகோதரிகள், பங்கு இறைமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராம பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.

    • நாகர்கோவில் மேலத்தெரு கரை புனித அந்தோணியார் மலங்கரை கத்தோலிக்க ஆலய திருவிழா நேற்று தொடங்கி 14-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • திருவிழா ஏற்பாடுகளை பங்குபேரவை பெருமக்கள் செய்து வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மேலத்தெரு கரை புனித அந்தோணியார் மலங்கரை கத்தோலிக்க ஆலயம் புகழ்பெற்ற ஆலயம் ஆகும். இக்கோவிலில் 791 ஆண்டுகளுக்கு முந்தைய புனித அந்தோணியாரின் அழியாத தோல் (திருப்பண்டம்) வைக்கப்பட்டுள்ளது.

    இக்கோவிலின் திருவிழா நேற்று 5 ஆம் தேதி தொடங்கியது. வருகிற   முதல் நாள் நிகழ்ச்சியாக மங்கல இசை இசைக்கப்பட்டு ஜெபமாலை நடத்தப்பட்டது. பிறகு பங்குத்தந்தை அருட்தந்தை மரிய ஜான் கொடியேற்ற விழாவை தொடங்கி வைத்தார் இரவில் அன்பின் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

    இன்று 2வது நாள் நிகழ்ச்சி நடக்கிறது மாலை 5 மணிக்கு புனித அந்தோனியார் நவநாள் நற்செய்திப் பெருவிழா நடைபெறுகிறது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு நிகழ்வுகள் நடைபெறுகின்றன. வருகிற 13-ஆம் தேதி 9வது நாள் முதல் திருவிருந்து வழங்குதல், நலத்திட்ட உதவி வழங்குதல் நடைபெறுகிறது.

    மாலை 5 மணிக்கு வாத்தியார்விளை சந்திப்பு போலீஸ் குடியிருப்பு டவுன் ரயில்வே நகர் மாதா குடியிருப்பு வழியாக தேர்பவனி நடைபெறுகிறது.

    அதன் பிறகு புனித அந்தோ னியார் நவநாள் திருப்பண்டம் முத்தம் செய்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கிறார்கள்.

    14ந் தேதி 10-ம் நாள் நிகழ்ச்சியாக நாகர்கோவில் மறைமாவட்ட குருக்கள் பங்குபெறும் திருப்பலி நடைபெறுகிறது பிறகு திருக்கொடி இறக்கும் நிகழ்ச்சி தொடர்ந்து அன்பின் விருந்து வழங்கப்படுகிறது.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை மரிய ஜாண் செயலாளர் சேவியர் பொருளாளர் தாசன் செய்தித்தொடர்பாளர் அருள் குமரேசன் மற்றும் பங்கு அருட்கன்னியர்கள் பங்குபேரவை பெருமக்கள் செய்து வருகிறார்கள்.

    ×