search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 226712"

    • பஸ்கள் ஊத்துக்குளிக்குள் வராமல் நால் ரோடு கவுண்டம்பாளையம் வழியாக திருப்பூருக்கு சென்று விடுகிறது.
    • தனியார் மற்றும் அரசு பஸ்சுகளை வழிமறித்து ஊத்துக்குளிக்குள் வர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

    பெருமாநல்லூர் :

    திருப்பூர் செங்கப்பள்ளியில் இருந்து ஊத்துக்குளி ஆர். எஸ் வழியாக திருப்பூருக்கு பஸ் சென்று வந்தது. இந்நிலையில் சில மாதங்களாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஊத்துக்குளிக்குள் வராமல் நால் ரோடு கவுண்டம்பாளையம் வழியாக திருப்பூருக்கு சென்று விடுகிறது.

    இதனால் ஊத்துக்குளி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனையடுத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்தவர்கள் தனியார் மற்றும் அரசு பஸ்சுகளை வழிமறித்து ஊத்துக்குளிக்குள் வர வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனையடுத்து சில பஸ்கள் ஊத்துக்குளிக்குள் சென்றன. இந்த சம்பவம் மேலும் தொடருமானால் புகார் அளித்து போராட்டம் நடத்தப்படும் என தனியார் பஸ் டிரைவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    • அரசு பஸ்சின் சக்கரத்தில் சிக்கி பலியானார்.
    • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் ஓட்டுபுற தெருவை சேர்ந்தவர் சுதர்சன் (வயது 51), பெயிண்டர்.

    இவர் நேற்று வடசேரி பஸ் நிலையத்திற்கு சென்றபோது, அங்கு வந்த அரசு பஸ்சின் சக்கரத்தில் சிக்கி பலியானார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் நாகர்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு குமார், வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    இதில், சுதர்சன், மதுபோதையில் பஸ் நிலையத்தில் சுற்றியதாகவும், அப்போது அங்கு வந்த கன்னியாகுமரியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபருடன் பணம் கொடுக்கல்-வாங்கல் தொடர்பாக தகராறில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அதன்பிறகு அவர், பஸ் நிலையத்தில் நிலைதடுமாறி விழுந்தபோது அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி பலியாகி உள்ளார்.

    இதனை தொடர்ந்து விபத்து தொடர்பாக அருமனையை சேர்ந்த பஸ் டிரைவர் ஸ்ரீரெங்கநாதன் (50) மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரிடம் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    • 12 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்பட்டு வந்தது.
    • திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் நிறுவனங்கள் மற்றும் காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களில் தென் மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவும், அங்கிருந்து வருவதற்கும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் தென் மாவட்டங்களுக்கு இரவு நேரங்களில் போதிய பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் தவித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் திருப்பூரில் இருந்து நல்லூர், படியூர், காங்கயம், ஊதியூர், தாராபுரம், தொப்பம்பட்டி, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், மதுரை வழியாக திருச்செந்தூருக்கு அரசு விரைவு பஸ் இயக்கப்பட்டு வந்தது. 12 ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்பட்டு வந்த இந்த பஸ் மூலம் காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தென் மாவட்ட தொழிலாளர்கள், வியாபாரிகள் பயன்பெற்று வந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக இந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால் திருச்செந்தூர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், வியாபாரிகள், தொழிலாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

    எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. எனவே பொதுமக்கள், தொழிலாளர்கள் நலன் கருதி மீண்டும் காங்கயம் வழி திருப்பூர்-திருச்செந்தூர் பஸ்சை இயக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பஸ்களில் பெயர் பலகை பழைய பஸ் நிலையம் என்றே உள்ளது.
    • வார்டு ஒன்றுக்கு ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    திருப்பூர் : 

    திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் 4-வது மண்டல தலைவர் இல. பத்மநாபன் பேசியதாவது:- திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் முத்தமிழ் டாக்டர் கலைஞர் பெயரை வைத்துள்ளோம். ஆனால் பஸ்களில் பெயர் பலகை பழைய பஸ் நிலையம் என்றே உள்ளது. அதனைமாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் மண்டல தலைவர் நிதி தற்போது வழங்குவது போதுமானதாக இல்லை. எனவே வார்டு ஒன்றுக்கு ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஆதிதிராவிடர் காலனியில் உள்ள கான்கிரீட் சாலை பழுதடைந்து உள்ளது .அதனை போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும்.

    அதேபோல் நான்காவது மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் 11,459 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது .எனவே அந்த வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வழிவகை செய்ய வேண்டும். நான்காவது மண்டலத்துக்கு உட்பட்ட 38, 39, 41, 51, 53 ஆகிய வார்டுகளில் பாதாள சாக்கடை பணிகள் செயல்படுத்தப்படாமல் உள்ளது .எனவே விடுபட்டுள்ள அந்த பகுதிகளிலும் உடனடியாக பாதாள சாக்கடை பணியை தொடங்க வேண்டும் என்றார்.

    • புதிய பஸ் சேவையை மாங்குடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • கிராம மக்கள் கும்பம் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    தேவகோட்டை

    தேவகோட்டை ஒன்றியம் பெரியகாரை ஊராட்சியில் கள்ளிக்குடி கிராமம் உள்ளது. மருத்துவர்கள், பேராசிரியர்கள், அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிவோர் முக்கிய அரசியல் பிரமு கர்கள் என பல்வேறு தரப்பினரை உருவாக்கிய இந்த கிராமத்தில் போக்குவரத்து வசதி இல்லாமல் இருந்தது.

    இதனால் அந்த கிராம மக்கள் தங்களின் கிரா மத்துக்கு பஸ் வசதி செய்து தரவேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி அங்கிந்து தேவகோட்டை நகருக்கு புதிய பேருந்து சேவையை ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன் முன்னி லையில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இந்த பேருந்தானது தேவகோட்டையில் இருந்து புலியடிதம்மம் செல்லும் போது எழுவன்கோட்டை, ஈகரை வழியாக கள்ளிக்குடி கிராமத்திற்கு வந்து புதுக்கோட்டை பெரிய காரை மற்றும் வேலாயுத பட்டினம் வழியாக புலியடி தம்மம் செல்கிறது.

    மேலும் இதே மார்க்கமாக தேவகோட்டைக்கு காலை மாலை ஆகிய இரு வேளைகளில் செல்கிறது. இந்நிகழ்ச்சியில் மருத்துவர் பூமிநாதன், போக்குவரத்து கழக காரைக்குடி மண்டல மேலாளர் சிங்காரவேல், வர்த்தக பிரிவு மேலாளர் நாகராஜன் கிளை மேலாளர் சொக்கலிங்கம், பொறி யாளர் பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    விழாவிற்கு வந்த அரசு அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோரை கிராம மக்கள் கும்பம் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

    • ஒருவர் படுகாயம்
    • இந்த விபத்தில் அரசு பஸ் ஓட்டுநரும், பயணிகளும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

    கன்னியாகுமரி:

    திருநெல்வேலி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன். லாரி டிரைவர். இவர் இன்று காலை திருவனந்தபுரத்தில் இருந்து திருநெல்வேலி நோக்கி லாரியில் சென்றுக்கொண்டிருந்தார்.

    களியக்காவிளை அருகே பி.பி.எம். சந்திப்பில் அவர் வந்தபோது அவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற அரசு பஸ்சின் மீது பயங்கரமாக மோதியது. இதில் அரசு பஸ்சின் முன் பக்க கண்ணாடி முற்றுலுமாக நொறுங்கியது.

    இந்த விபத்தில் அரசு பஸ் ஓட்டுநரும், பயணிகளும் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். லாரி டிரைவர் படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பஸ்நிலையம் எதிரில் உள்ள கடைக்கு செல்வதற்காக வெளியே வந்தார்.
    • திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவாரூர்:

    கரூர் மாவட்டம் பாப்பாபட்டி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 38). இவர், திருவாரூரில் தங்கி இருந்து கோவில் கட்டுமான பணி செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் இவர் திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். பின்னர் அங்கிருந்து பஸ்நிலையம் எதிரில் உள்ள கடைக்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக சக்திவேல் மீது மோதியது.

    இதில் தலையில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து திருவாரூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • விருதுநகர் அருகே பஸ் மோதி ஒருவர் பலியானார்.
    • இறந்து கிடந்த நபர் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    அருப்புக்கோட்டை மண்டபசாலை பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி(57). இவர் தாயில்பட்டி சாலையில் உள்ள சலூன் கடை அருகே நின்றிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக பொன்னுசாமி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை டாக்டர்கள் பரிசோதித்த போது ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் அரசு பஸ் டிரைவர் வடமலை குறிச்சியை சேர்ந்த ராஜசுபகுமார் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டம் வளையங்குளம் கண்மாயில் உள்ள கிணற்றின் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக மல்லாங்கிணறு கிராம நிர்வாக அதிகாரி ராம்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவர் மல்லாங்கிணறு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த நபர் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முன்னாள் எம்எல்ஏக்கள், முன்னாள் எம்எல்.சி.க்கள் கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்குமாறு நடத்துநர்களுக்கு ஏற்கெனவே உத்தரவிடப் பட்டிருந்தது.
    • சட்டசபை செயலகத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையுடன் வரும்போது, அவர்களை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் குளிர் சாதன பஸ்களில் கட்டண மில்லாமல் பயணிக்க ஓட்டுநர், நடத்துநர்கள் அனுமதிக்க வேண்டும்.

    சென்னை:

    சென்னையில் இயக்கப்படும் மாநகர போக்கு வரத்துக் கழகத்தின் குளிர் சாதன பஸ்களில் எம்பிக்கள் எம்எல்ஏக்கள், மற்றும் முன்னாள் எம்எல்ஏக்கள் முன்னாள் எம்எல்.சி.க்கள் கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்குமாறு நடத்துநர்களுக்கு ஏற்கெனவே உத்தரவிடப் பட்டிருந்தது.

    ஆனாலும் இதில் பல்வேறு புகார்கள் வந்ததால் அதை சரிப்படுத்தும் வகையில் நடத்துனர்களுக்கு மீண்டும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினர்கள், பேரவை முன்னாள் உறுப்பினர்கள், முன்னாள் மேலவை உறுப்பினர்கள், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோர் தனியாகவோ, மனைவி, கணவர் அல்லது உதவியாளருடன் சட்டசபை செயலகத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையுடன் வரும்போது, அவர்களை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் குளிர் சாதன பஸ்களில் கட்டண மில்லாமல் பயணிக்க ஓட்டுநர், நடத்துநர்கள் அனுமதிக்க வேண்டும்.

    குறிப்பாக அண்ணாநகர், மத்திய பணிமனை, பெரும்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய பணிமனைகளின் கிளை மேலாளர்கள், மேற்கூறிய உறுப்பினர்கள் மாநகர போக்குவரத்துக் கழக குளிர்சாதன பஸ்களில் பயணம் மேற்கொள்ள வரும்போது, அவர்களை கட்டணமில்லாமல் பயணிக்க அனுமதிக்க வேண்டும். அவர்களிடம் மரியாதையுடனும், கனிவுடனும் நடந்து கொள்வதுடன் எவ்வித புகாரும் எழா வண்ணம் பணியாற்றுமாறு அறிவுறுத்த வேண்டும் என அனைத்து கிளை மேலாளர்கள் உள்ளிட்டோருக்கு மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை மூலம் வலியுறுத்தியுள்ளார்.

    • தனியார் பஸ், மோட்டார் சைக்கிளில் சென்றவர்களுக்கு வழிவிடவில்லை.
    • போலீசார் வழக்குபதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே நாச்சியார் கோவில் அடுத்த கூகூரை சேர்ந்த தமிழழகன், (வயது 27) அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (28) பாண்டியன் (29) மகேஷ் பாபு, (38) பவித்ரன் (27) ஆகிய 5 பேர் 2 மோட்டார் சைக்கிளில் குடவாசல் மணக்காலுக்கு சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது திருவிடைச்சேரியிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ், மோட்டார் சைக்கிளில் சென்றவர்களுக்கு வழி விடவில்லை என்று கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த 5 பேரும் ஆலத்தூர் ரோடு பேருந்து நிறுத்தம் அருகே பஸ்சை மறித்து நிறுத்தினர்.

    பின்னர் பஸ்சின் பக்கவாட்டில் உள்ள கண்ணாடியை உடைத்து பஸ் கண்டக்டர் அருண்குமாரை தாக்கினர்.

    இதில் காயம் அடைந்த அருண்குமார் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து அருண்குமார் நாச்சியார் கோவில் போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர்.

    இது குறித்து நாச்சியார் கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோயம்புத்தூரில் இருந்து திருச்சியை நோக்கி அரசு பேருந்து சனிக்கிழமை இரவு வந்து கொண்டிருந்தது.
    • பஸ்சை சண்முகநாதன் என்பவர் ஓட்டி வந்தார்.

    வெள்ளகோவில் :

    கோயம்புத்தூரில் இருந்து திருச்சியை நோக்கி அரசு பேருந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை சண்முகநாதன் என்பவர் ஓட்டி வந்தார். பஸ் வெள்ளகோவில் நகராட்சி அலுவலகம் அருகே வரும்போது வெள்ளகோவில் எம்.பழனிசாமி நகர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார்(வயது 45) என்பவர் குடிபோதையில் பஸ் கண்ணாடியை கல்லால் அடித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் பஸ் கண்ணாடி உடைந்து விட்டது. பஸ்சில் பயணம் செய்த பயணிகள் காயம் இன்றி தப்பினர்.இது குறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து
    • கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்தார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கோவளம் மேற்கு தெருவை சேர்ந்தவர் லிகோரி. இவருடைய மகன் டெனி லிகோரி (வயது 23). இவர் வெளிநாட்டில் கப்பல் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு திரும்பி னார். நேற்று இரவு 10 மணி அளவில் டெனிலிகோரி தனது இருசக்கர வாகனத்தில் கன்னியாகுமரி மெயின் ரோட்டில் பெரியார் நகர் சந்திப்பில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி நோக்கி மின்னல் வேகத்தில் வந்த கேரளா சுற்றுலா பஸ் பெரியார் நகருக்கு செல்வதற்காக திரும்பியது.

    அப்போது டெனிலிகோரி சென்ற இரு சக்கரவாகனம் மீது அந்த சுற்றுலா பஸ் பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட டெனிலிகோரி சம்பவ இடத்திலேயே துடி துடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கேரளா சுற்றுலா பஸ்சை ஓட்டி வந்த பத்தனம் திட்டா, முடியூர் கோணம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் பினுகுமார் (46) என்பவரை கைது செய்தனர்.

    ×