என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் எதிர்ப்பு"

    • ஊத்துக்குளி மேற்கு வீதியில் குமரன் நகா், காவலா் குடியிருப்பு மற்றும் டவுன் பகுதியில் 1,500க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.
    • குடியிருப்புப் பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதை தடை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஊத்துக்குளி:

    ஊத்துக்குளி அருகே குடியிருப்பு பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் சாா்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. ஊத்துக்குளி பொதுமக்கள் சாா்பில் என்.மாணிக்கராஜ், சிவகுமாா் ஆகியோா் மின்னஞ்சல் மூலமாக அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது: -

    ஊத்துக்குளி மேற்கு வீதியில் குமரன் நகா், காவலா் குடியிருப்பு மற்றும் டவுன் பகுதியில் 1,500க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.இந்தப் பகுதியில் காவல் நிலையம், இ.எஸ்.ஐ.மருத்துவமனை, அரசு மேல்நிலைப் பள்ளி, பத்திரப் பதிவு அலுவலகம், அரசு நூலகம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.இந்த பகுதியில் தனிநபா் ஒருவா் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறாா். இப்பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டால் பள்ளி மாணவா்களுக்கும், குடியிருப்பு வாசிகளுக்கும் பாதிப்பு ஏற்படும்.இந்த பகுதியை சுற்றிலும் ஏற்கெனவே 3 செல்போன் கோபுரங்கள் உள்ளன. ஆகவே, குடியிருப்புப் பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதை தடை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அந்த இடத்தை சுற்றியிருந்த 11 குடும்பத்தினர், எங்கள் இடத்தை ஏன் அளக்கிறீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • மேலும், இவ்விடத்தை விட்டால் எங்களிடம் வேறு இடம் இல்லை.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா எலவனாசூர்கோட்டை அருகே உள்ள புகைப்பட்டி கிராமத்தில் பழம்பெருமை வாய்ந்த பெருமாள் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு சொந்தமாக சர்வே எண்.351-ல் 10.5 சென்ட் இடம் உள்ளது. அந்த இடத்தை அளப்பதற்காக இந்து அறநிலைத்துறையிலிருந்து வருவாய் துறை அதிகாரிகள் வந்தனர். அந்த இடத்தை சுற்றியிருந்த 11 குடும்பத்தினர், எங்கள் இடத்தை ஏன் அளக்கிறீர்கள் என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கோவிலுக்கு சொந்தமான இடத்தை அளக்கிறோம். இது தொடர்பாக உங்களிடம் ஏதாவது ஆவணம் இருக்கிறதா என்று வருவாய்த் துறை அதிகாரிகள் அங்கிருந்த மக்களிடம் கேட்டனர். அதற்கு அங்குள்ள 11 குடும்பத்தினர் எங்களிடம் வருவாய் துறை மூலம் வழங்கப்பட்ட பட்டா இருக்கிறது என்று கூறினர். அதைப் பொருட்படுத்தாத இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் போலீசாரின் உதவியுடன் அளந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், மேலும், இவ்விடத்தை விட்டால் எங்களிடம் வேறு இடம் இல்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு எங்களுக்கு இவ்விடத்தை வழங்க ஆவண செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோவிலுக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தி வேளாண்மை பொறியியல் துறை கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
    • 12 கிராம மக்களின் கருத்துக்களை கேட்காமல் கோவில் நிலத்தை கையகப்படுத்தி அரசு கட்டிடம் கட்டுவதை ஏற்க முடியாது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த சின்னக் காவனத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சோலையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தி வேளாண்மை பொறியியல் துறை கட்டிடம் கட்ட அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சின்னக் காவனம், பெரிய காவனம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட 12 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் காலம் காலமாக கோவிலுக்கு சொந்தமான இந்த இடத்தில் தான் தங்களது வீட்டு சுப நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். கோவில் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வரும் பக்தர்கள் கூடாரம் அமைத்து தங்குவதற்கு இந்த இடத்தை பயன்படுத்துகின்றனர்.

    இந்த நிலையில் 12 கிராம மக்களின் கருத்துக்களை கேட்காமல் கோவில் நிலத்தை கையகப்படுத்தி அரசு கட்டிடம் கட்டுவதை ஏற்க முடியாது என்று தெரிவித்தனர். மேலும் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் வேளாண்மை பொறியியல் துறை கட்டிடம் கட்டும் முடிவை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி 12 கிராம மக்கள் சார்பில் பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். தங்களது கோரிக்கையை அரசு ஏற்காவிட்டால் 12 கிராம மக்கள் சார்பில் சாலை மறியல் உள்ளிட்ட தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் பொதுமக்கள் எச்சரித்துள்ளனர்.

    • சோழவந்தான் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • தொடர்ந்து நெடுஞ்சாலை துறைக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டது.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் வாடிப்பட்டி உட்கோட்ட நெடுஞ்சாலைதுறை பராமரிப்பில் உள்ள மேலக்கால் -பேரணை சாலையில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் நெடுஞ்சாலைதுறையினர் 120 ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினர். இதையெடுத்து ஆலேசானை கூட்டம் நடைபெற்றது. இதில் மேலக்கால்-பேரணை சாலையை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    முள்ளிப்பள்ளம் கிராமத்தில் பல ஆண்டுகளாக சாலையோர பகுதியில் குடியிருந்து வருகிறோம். மேலும் இருக்கும் இடத்திற்கு பட்டா, , சொத்து வரி, மின் கட்டணம் கட்டி வருகிறோம் இப்போது காலி செய்ய சொன்னால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து நெடுஞ்சாலை துறைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்யப்பட்டது.

    • குடியிருப்புக்கு மத்தியில் உள்ள இந்த மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அங்குள்ள குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    • அடுத்தடுத்து நடந்த கொலை மற்றும் குற்றச்செயல்கள் அதிகரித்ததை தொடர்ந்து மதுக்கடை மூடப்பட்டது.

    செங்கல்பட்டு:

    கல்பாக்கம் நெடுஞ்சாலையில் புதிதாக அரசு மதுக்கடை புதிதாக திறக்கப்பட்டு உள்ளது. குடியிருப்புக்கு அருகில் இந்த மதுக்கடை திறக்க ஏற்கனவே பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். எனினும் மதுக்கடை திறக்கப்பட்டது.

    இதனால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள், பெண்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    'குடியிருப்புக்கு மத்தியில் உள்ள இந்த மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அங்குள்ள குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளை சந்தித்தும் மனு அளிக்க திட்டமிட்டு உள்ளனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ஏற்கனவே வல்லம் பகுதியில் மதுக்கடை இருந்தது. பின்னர் அடுத்தடுத்து நடந்த கொலை மற்றும் குற்றச்செயல்கள் அதிகரித்ததை தொடர்ந்து மதுக்கடை மூடப்பட்டது.

    தற்போது மீண்டும் இங்கு மதுக்கடை திறந்து உள்ளனர். இதனை வேறு இடத்துக்கு உடனடியாக மாற்ற வேண்டும்' என்றார்.

    • இருதரப்பினரை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர்.
    • சமரசத்தை பொதுமக்கள் ஏற்க மறுத்ததால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் பி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு சலவை தொழிலாளி. இவரது மனைவி சின்னகுழந்தை. சில நாட்கள் முன்பு நோய் வாய்பட்டு இன்று அதிகாலை சின்னகுழந்தை இறந்தார்.

    அவரது உடலை அடக்கம் செய்ய சேவூர் ஊராட்சிக்குபட்ட வேலூர்-ஆரணி சாலையில் நெடுஞ்சாலை ஓரத்தில் புறம்போக்கு இடத்தில் பள்ளம் தோண்டியதாக கூறப்படுகிறது.

    இதற்கு சேவூர் கிராமத்தில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    அங்கு இருதரப்பினரை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர். இருதரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றியது.

    ஆரணி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருதரப்பினரையும் சமரசம் செய்ய முயன்றனர்.

    ஆனால் சமரசத்தை பொதுமக்கள் ஏற்க மறுத்தனர். இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

    இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பழுதடைந்து அதிக அளவு பள்ளங்களாக மாறிய சாலையை மண் உள்ளிட்டவற்றை கொட்டி மண் சாலையாக மாற்றி வருகின்றனர்.
    • இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

    தொப்பூர், 

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், கம்ம ம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மலையூர்காடு, மூலக்காடு, மணியக்காரனூர் உள்ளிட்ட 5 கிராமப் பகுதியில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

    இங்கிருந்து தினமும் பணிக்கு செல்வோர் மற்றும் கூலி வேலைக்கு செல்வோர் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் தருமபுரி மாவட்டத்தில் இருந்து நேரடி போக்குவரத்து வசதி இல்லாததால் சேலம் மாவட்டத்தில் இருந்து வரும் பேருந்து வசதிகளையும் நம்பி இருந்தனர்.

    இந்த கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக சுமார் 8 கிலோமீட்டர் நீளம் கொண்ட சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டது. 5 ஆண்டுகளாகவே உடைந்து சேதமாகி தரமற்ற சாலையாக மாறிவிட்டது.

    இந்நிலையில் கடந்த 4 மாதங்களாக சாலை மிகவும் மோசமாக இருப்பதால் பேருந்துகள் செல்ல முடியாத தகுதியற்ற சாலையாக மாறிவிட்டதாக கூறி சேலம் மாவட்டத்தில் இருந்து இயக்கபட்ட அரசு பேருந்துகள் மலையூர் காடு பகுதிக்கு வராமல் சோழியானூர் பகுதியோடு திரும்பி சென்று விடுகிறது.

    காலை மாலை நேரங்களில் மட்டும் பள்ளி மாணவர்க ளுக்காக ஒரே ஒரு பேருந்து மட்டும் வந்து செல்வதாகவும் மற்ற நேரங்களில் பேருந்து வசதி முற்றிலும் இல்லாமல் போய்விட்டது என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    இது குறித்து பலமுறை அரசு அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரிடமும் முறையிட்டும் இது நாள் வரை எந்த ஒரு தீர்வும் ஏற்படவில்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் பழுதடைந்து அதிக அளவு பள்ளங்களாக மாறிய சாலையை மண் உள்ளிட்டவற்றை கொட்டி மண் சாலையாக மாற்றி வருகின்றனர்.

    தார் சாலையை சீரமைப்பதை கண்டுகொள்ளாமல் மண் சாலையாக மாற்றி வரும் அவலம் நடைபெற்று வருகிறது. இதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

    இதனால் கிராம மக்கள் அனைவரும் வேறு வழியின்றி நடந்தே செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இல்லையெனில் இருசக்கர வாகனங்கள் சரக்கு வாகன ங்களில் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர்.

    அடிப்படை வசதிகள் தான் தங்கள் கிராமத்திற்கு கிடைக்காமல் தவித்து கொண்டிருந்த நிலையில் தற்பொழுது பேருந்து வசதிகளும் கிடைக்காததால் மிகவும் சிரமப்படுவதாக அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தில் பலமுறை மனு அளித்தும் அனைவரும் பாராமுகம் காட்டி வருவதாக பொதுமக்களும் கம்பம்பட்டி ஊராட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர்களும் கூறுகின்றனர்.

    ஆகையால் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து தங்கள் பகுதியில் மண் சாலையாக மாற்றி வருவதை தார்சாலையாக மாற்றி சீரமைத்து கொடுத்து மீண்டும் பேருந்து போக்குவரத்தை இயக்க வேண்டும் என கோரிக்கை விடுகின்றனர். 

    • பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கு எந்த வித இடையூறும் இல்லை.
    • பொம்மிடி போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம் பொம்மிடி பேருந்து நிலைய நுழைவு வாயில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் ஒதுக்குப்புறமாக பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் 40 ஆண்டுகளுக்கு மேலாக மின்வாரியத்தின் டிரா ன்ஸ்பாரம் அமைந்துள்ளது.

    இதனால் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கு எந்த வித இடையூறும் இல்லை.

    இந்த நிலையில் இந்த ட்ரான்ஸ்பாரம் அமைந்துள்ள நிலத்தை ஒட்டிய தனி நபருக்கு ஆதரவாக பொம்மிடி மின் பகிர்மான கழகத்தினர் தனது ஊழியர்களுடன் வந்து டிரான்ஸ்பராத்தை இடம் மாற்றுவதாகவும், அருகில் உள்ள வாடகை கார் டிராவஸ் ஓட்டும் ஸ்டேண்டு அருகில் கம்பம், உதரி பாகங்களை கொண்டு வந்து இறக்கி நட முயற்ச்சித்தனர்.

    இதற்கு 30-க்கு மேற்பட்ட வாடகை வாகன கார், ட்ராவல்ஸ் ஓட்டுனர்கள் வாகன நிறுத்தம் தீ விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. பொது மக்களுக்கும் எங்களுக்கும் இடையூறு தற்போது டிரான்ஸ்பா ரத்தால் எந்த இடையூறு யாருக்கும் இல்லை ஏன் இடமாற்றம் என கூறி எதிப்ப்பு தெரிவித்தனர்.

    அதற்கு மின்வாரிய ஊழியர்கள் மேலிடத்து உத்தரவு நாங்கள் என்ன செய்ய என கூறி விட்டு சரி அருகில் ஏதாகிலும் இடத்தில் நடுகின்றன் என முயற்ச்சித்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் சந்தைக்கு சென்று வரக்கூடிய வழியில் இடையூறாகவும், 200 அடி தூரத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் உள்ளதாலும் இப்பகுதியில் டிரான்ஸ்பாரம் அமைக்க எதிர்ப்பு கிழம்பியது. இதை அறிந்து சம்பவ இடத்திற்கு பொம்மிடி போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    இதை அடுத்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக கூறி அங்கிருந்து மின் வாரியத்தினர் கலைந்து சென்றனர். தனிநபர் வருவாய் ஈட்டுவதற்காக பொதுமக்களுக்கு இடையூறாகவும், மிகவும் ஆபத்தான பகுதியில் டிரான்ஸ்பாரம் அமைத்தே தீருவோம் என மின்வாரியத்தின் அடாவடித்தனத்திற்கு என்ன காரணமாக இருக்கும் என பொதுமக்கள் கேள்வி எழப்பியுள்ளனர். இச்சம்பவத்தால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கழிவுகளை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

    சென்னிமலை:

    பெருந்துறை சிப்காட் பகுதியில் 100-க்கணக்கான தொழிற்சாலைகள் உள்ளது.

    இங்குள்ள சில தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளை அப்பகுதியில் உள்ள சில விவசாயிகளின் அனுமதியுடன் விவசாய நிலங்களில் கொட்டி வந்ததாக தெரிகிறது. இதற்கு மற்ற விவ சாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    அதேபோல் சிப்காட் பகுதியில் கம்புளியம்பட்டி கிராமத்துக்கு உட்பட்ட குட்டப்பாளையம் அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் கடந்த 2 வருடங்களாக சிலர் அனுமதி யின்றி தொழிற்சாலை கழிவுகளை கொட்டி வந்ததாக கூறப்படுகிறது.

    இத னால் அனுமதியின்றி கழிவுகளை கொட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    மேலும் தொழிற்சாலை கழிவுகள் கொட்டப்பட்ட இடத்துக்கு அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கடந்த 2 நாட்களாக அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் பெருந்து றை தாசில்தார் சிவசங்கர், நில வருவாய் அலுவலர் தங்க ராஜ், மாசு கட்டு ப்பாட்டு வாரிய அதிகாரி முத்துராஜ் ஆகியோர் சிப்காட் கழிவுகள் கொட்ட ப்பட்ட இடத்துக்கு வந்து விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார் கள்.

    அப்போது அவர்கள் விவசாய நிலங்களில் தொழிற்சாலை கழிவுகளை கொட்டுவதை தடுக்க வேண்டும் என அதிகாரி களிடம் கோரிக்கை விடுத்தனர்.

    இதனை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள் விவசாயி களிடம் கூறும் போது, இனி மேல் விவசாய நிலத்தில் சிப்காட் கழிவுகள் கொட்டா மல் இருப்பத ற்கான நட வடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

    • மேலூர் அருகே 108 ஆம்புலன்ஸ் இடமாற்றம் செய்ததற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • இந்த பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது.

    மேலூர்

    மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி இடையே அமைந்துள்ளது கருங்காலக்குடி. இங்கு 24 மணிநேர அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. இந்த பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்களை காப்பாற்றுவதற்கு 108 அவசர சிகிச்சை ஊர்தி சேவை தொடக்க காலத்தில் இருந்தே, கருங்காலக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மையமாக வைத்து இயங்கி வருகிறது. மேலும் கருங்காலக்குடியில் இருந்து அவசர மற்றும் விபத்து காய சிகிச்சைகளுக்கு மதுரைக்கு சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதற்கு இந்த 108 வாகனம் மிகுந்த உதவியாக விபத்தில் சிக்கிய மக்களின் உயிர் காக்கும் பயனுள்ள வாகனமாக செயல்பட்டு வந்தது.

    மேலும் கருங்காலக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை விபத்து காய சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு மருத்துவ மனையாக தரம் உயர்த்த வேண்டுமென ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் அதிகாரிகளிடம் ஏற்கனவே முறையிட்டுள்ளனர். தற்போது இருக்கும் வசதியையும் குறைக்கும் வகையில் இங்கு இயங்கி வந்த 108 அவசர சிகிச்சை வாகனத்தை அவசர கதியில் தும்பைப்பட்டிக்கு இடமாற்றம் செய்து அதிகாரிகள் உத்திரவிட்டனர். இதையடுத்து 108 ஆம்புலன்சு வாகனம் தும்பைப்பட்டிக்கு சென்றுவிட்டது. ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவர் பக்ருதீன் அலி அகமத் அதிகாரிகளிடம் இங்கிருந்து மாற்றம் செய்யப்பட்ட 108 ஆம்புலன்ஸ் மீண்டும் கருங்காலக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவர்களும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளனர்.

    • நீர்த்தேக்க தொட்டிடிய இடித்து அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன்அங்கு வந்தனர்.
    • எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அங்கு திரண்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தை மையமாக வைத்து இணைக்கும் சென்னை- கன்னியாகுமரிதொழில் தட திட்ட புதியசாலை அமைக்கும்பணி கடந்த 2021 -ம் ஆண்டு தொடங்கிவேகமாக நடந்து வருகிறது. இந்த புதிய சாலைபணிக்காக நிலம் கையகப்படுத்தும்பணி மற்றும் இழப்பீடு தொகைவழங்கும்பணிகள் முழுமையாக நடந்துமுடிந்தநிலையில் அண்ணாகிராமம் ஒன்றியம் கனிசபாக்கம் ஊராட்சியில் நிலம் கையகப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிடிய இடித்து அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன்அங்கு வந்தனர். புதிய போர் போடும் பணி தாமமமானதால் மேல்நிலை நீர்த்தேக்க.தொட்டியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அங்கு திரண்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றிதகவல்அ றிந்ததும்அங்கு விரைந்து வந்த அண்ணா கிராமம் தி.மு.க. ஒன்றியசெ யலாளர்வெங்கட்ராமன் கிருஷ்ணமூர்த்திகி ராமபொதுமக்கள் சார்பில் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்,என்ஜி னீயர்கள் சுந்தரி, ஜெயந்தி, ஏழிலரசி, நில எடுப்புதனி தாசில்தார் தமிழ்ச்செல்வி, புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார், அண்ணா கிராமம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்ரா, மீரா கோமதி, கணிசபாக்கம்பஞ்சாயத்து தலைவர்திருநாவுக்கரசு ஆகியோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஒரு மாத காலத்துக்குள் புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகள் நிறைவு பெற்றபிறகு புதிய சாலை அமைக்கும் பணிக்கான பழைய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இடித்து அகற்ற பொதுமக்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.இதனால் அங்கு ஏற்பட்ட பரபரப்பு முடிவுக்கு வந்தது.

    • போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளை இடிக்க பொக்லைன், ஜே.சி.பி. எந்திரத்தை இன்று காலை கொண்டு வந்தார்.
    • முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட சக்தி நகர் என்ற பகுதியில் 25 ஆண்டு காலமாக 13 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    கடந்த 2001-ம் ஆண்டு நத்தம் புறம்போக்கு நிலத்தில் 13 குடும்பத்தினருக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் பட்டா வழங்கினர். இதைத்தொடர்ந்து 13 குடும்பத்தினரும் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் 13 வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலம் தனக்கு சொந்தமானது என்று கூறி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பொதுமக்கள் தரப்பில் சரியாக ஆஜராகாத நிலையில் தனி நபருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.

    இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் வீடுகளை காலி செய்து கொள்ளுமாறு அந்த நபர் பேனர் வைத்தார். ஆனால் பொதுமக்கள் யாரும் வீட்டை காலி செய்யவில்லை.

    இதையடுத்து அந்த நபர் போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளை இடிக்க பொக்லைன், ஜே.சி.பி. எந்திரத்தை இன்று காலை கொண்டு வந்தார். காலை 6.40 மணி அளவில் வீடுகளை இடிக்க முடிவு செய்யப்பட்டு அதற்காக மின் இணைப்புகள் துண்டிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதுபற்றி தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்த 13 குடும்பத்தை சேர்ந்தவர்களும் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் ஏ.டி.எஸ்.பி. பாலமுருகன், தாசில்தார் உத்திரசாமி, இன்ஸ்பெக்டர் சண்முகவேல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    மேலும் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    ×