search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    108 ஆம்புலன்ஸ் இடமாற்றம் செய்ததற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
    X

    108 ஆம்புலன்ஸ் இடமாற்றம் செய்ததற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

    • மேலூர் அருகே 108 ஆம்புலன்ஸ் இடமாற்றம் செய்ததற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • இந்த பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது.

    மேலூர்

    மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி இடையே அமைந்துள்ளது கருங்காலக்குடி. இங்கு 24 மணிநேர அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. இந்த பகுதிகளில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் உயிர்களை காப்பாற்றுவதற்கு 108 அவசர சிகிச்சை ஊர்தி சேவை தொடக்க காலத்தில் இருந்தே, கருங்காலக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மையமாக வைத்து இயங்கி வருகிறது. மேலும் கருங்காலக்குடியில் இருந்து அவசர மற்றும் விபத்து காய சிகிச்சைகளுக்கு மதுரைக்கு சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதற்கு இந்த 108 வாகனம் மிகுந்த உதவியாக விபத்தில் சிக்கிய மக்களின் உயிர் காக்கும் பயனுள்ள வாகனமாக செயல்பட்டு வந்தது.

    மேலும் கருங்காலக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை விபத்து காய சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு மருத்துவ மனையாக தரம் உயர்த்த வேண்டுமென ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் அதிகாரிகளிடம் ஏற்கனவே முறையிட்டுள்ளனர். தற்போது இருக்கும் வசதியையும் குறைக்கும் வகையில் இங்கு இயங்கி வந்த 108 அவசர சிகிச்சை வாகனத்தை அவசர கதியில் தும்பைப்பட்டிக்கு இடமாற்றம் செய்து அதிகாரிகள் உத்திரவிட்டனர். இதையடுத்து 108 ஆம்புலன்சு வாகனம் தும்பைப்பட்டிக்கு சென்றுவிட்டது. ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்டத் தலைவர் பக்ருதீன் அலி அகமத் அதிகாரிகளிடம் இங்கிருந்து மாற்றம் செய்யப்பட்ட 108 ஆம்புலன்ஸ் மீண்டும் கருங்காலக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவர்களும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி உள்ளனர்.

    Next Story
    ×