search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெட்வதேவ்"

    • 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் டேனில் மெத்வதேவ், அலெக்சி போபிரின்னை எதிர்கொண்டார்.
    • இந்த ஆட்டத்தில் இதில் அலேக்சி போபிரின் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    பாரீஸ்:

    பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று (ரவுண்ட் ஆப் 32) ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான ரஷியாவின் டேனில் மெத்வதேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்சி போபிரின்னை எதிர்கொண்டார்.

    பரபரப்பான இந்த ஆட்டத்தில் இதில் அலேக்சி போபிரின் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் 6-4, 2-6 , 7 (7), 6 (4 ) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார் . இதனால் மெத்வதேவ் தொடரில் இருந்து வெளியேறினார்

    • அரைஇறுதியில் அல்காரஸ்-மெட்வதேவ் இன்று பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.
    • இதுவரை இருவரும் 7 முறை நேருக்கு நேர் மோதியதில் அல்காரஸ் 5-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறார்.

    பீஜிங்:

    சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் விம்பிள்டன் சாம்பியனும், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) 7-5, 6-2 என்ற நேர்செட்டில் 27-ம் நிலை வீரரான கரன் கச்சனோவை (ரஷியா) தோற்கடித்து தொடர்ந்து 2-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 36 நிமிடம் தேவைப்பட்டது.

    மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் டேனில் மெட்விடேவ் (ரஷியா) 6-2, 6-4 என்ற நேர்செட்டில் 32-ம் நிலை வீரரான இத்தாலியின் பிளாவியோ கோபோலியை விரட்டியடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தார். அரைஇறுதியில் அல்காரஸ்-மெட்வதேவ் பலப்பரீட்சை நடத்துகிறார்கள். இதுவரை இருவரும் 7 முறை நேருக்கு நேர் மோதியதில் அல்காரஸ் 5-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பெண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-3, 6-2 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 60-வது இடத்தில் உள்ள காடி வாலினெட்சை (அமெரிக்கா) துவம்சம் செய்து 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். அவர் அடுத்த சுற்றில் கோகோ காப்பை (அமெரிக்கா) சந்திக்கிறார்.

    மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவரும், அமெரிக்க ஓபன் சாம்பியனுமான அரினா சபலென்கா (பெலாரஸ்) 6-2, 6-2 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஆஷ்லின் குருஜெரை ஊதித்தள்ளி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். சர்வதேச போட்டியில் அவர் தொடர்ச்சியாக பெற்ற 14-வது வெற்றி இதுவாகும்.

    • சின்னர் அரை இறுதிக்கு முதல் முறையாக தகுதி பெற்றார்.
    • சின்னர் அரை இறுதியில் டிராப்பருடன் மோதுகிறார்.

    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் முதல் நிலை வீரரான ஜானிக் சின்னர் (இத்தாலி) கால் இறுதி ஆட்டத்தில் 5-வது வரிசையில் இருக்கும் மெட்வதேவை (ரஷியா) எதிர்கொண்டார்.

    இதில் சின்னர் 6-2, 1-6, 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முதல் முறையாக தகுதி பெற்றார். இந்த வெற்றியை பெற அவருக்கு 2 மணி 39 நிமிட நேரம் தேவைப்பட்டது.

    சின்னர் அரை இறுதியில் டிராப்பருடன் மோதுகிறார். 25-ம் நிலை வீரரான ஜேக் டிராப்பர் (இங்கிலாந்து) 6-3, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் 10- வது வரிசையில் உள்ள அலெக்ஸ் டி மினாரை (ஆஸ்திரேலியா) வீழ்த்தினார். 22 வயதான டிராப்பர் முதல் முறையாக கிராண்ட்சிலாம் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார்.

    • ஜோகோவிச் (செர்பியா) 4-வது சுற்றில் அர்ஜென்டினாவை சேர்ந்த பிரான்சிஸ்கோ செருன்டோலோவை எதிர்கொண்டார்.
    • பெண்கள் பிரிவில் கால் இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது.

    பாரிஸ்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நடைபெற்று வருகிறது.

    உலகின் முதல் நிலை வீரரும், 24 கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்ற சாதனையாளருமான ஜோகோவிச் (செர்பியா) 4-வது சுற்றில் அர்ஜென்டினாவை சேர்ந்த பிரான்சிஸ்கோ செருன்டோலோவை எதிர்கொண்டார்.

    இதில் ஜோகோவிச் 6-1, 5-7, 3-6 7-5 , 6-3 என்ற செட் கணக்கில் போராடி வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.

    மற்ற ஆட்டங்களில் 4-வது வரிசையில் உள்ள அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி), 7-ம் நிலை வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே) ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.

    5-ம் நிலை வீரரான மெட்வதேவ் (ரஷியா) 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். பெண்கள் பிரிவில் கால் இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது.

    • 4-வது சுற்று ஆட்டத்தில் அலெக்ஸ் டி மினார் மற்றும் டேனியல் மெட்வதேவ் மோதினர்.
    • முதல் செட்டை வென்ற மெட்வதேவ் அடுத்த 3 செட்டை எளிதாக கோட்டைவிட்டார்.

    பாரீஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் களிமண் தரை மைதானங்களில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான 4-வது சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் மற்றும் டேனியல் மெட்வதேவ் மோதினர்.

    முதல் செட்டை வென்ற மெட்வதேவ் அடுத்த 3 செட்டை எளிதாக கோட்டைவிட்டார். இதனால் 4-6, 6-2, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் அலெக்ஸ் டி மினாரிடம் மெட்வதேவ் தோல்வியைத் தழுவினார்.

    • ஆண்களுக்கான ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஹோல்கர் ரூனே, டேனியல் மெட்வெடேவ் ஆகியோர் மோதினர்.
    • பெண்களுக்கான இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் மெர்டென்ஸ் - ஸ்ட்ரோம் சாண்டர்ஸ் இணை சாம்பியன் பட்டம் வென்றது.

    ரோம்:

    இத்தாலியன் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் எலீனா ரைபகினா சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். இதையடுத்து ஆண்களுக்கான ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஹோல்கர் ரூனே, டேனியல் மெட்வெடேவ் ஆகியோர் மோதினர்.

    இந்த ஆட்டத்தில் டேனியல் மெட்வெடேவ் 7-5, 7-5 என்ற செட் கணக்கில் ஹோல்கர் ரூனேவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். மேலும், ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் போடிக்வாண்டே-ராபின் ஹாஸ் இணை ஹ்யூகோ நிஸ் - ஜான் சிலின்ஸ்கி இணையை எதிர் கொண்டது.

    இந்த ஆட்டத்தில் ஹ்யூகோ நிஸ் - ஜான் சிலின்ஸ்கி இணை 7-5, 6-1 என்ற செட் கணக்கில் போடிக்வாண்டே-ராபின் ஹாஸ் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

     

    மேலும், பெண்களுக்கான இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஜெசிகா பெகுலா - கோகோ காப் இணை எலிஸ் மெர்டென்ஸ் - ஸ்ட்ரோம் சாண்டர்ஸ் இணையை எதிர்கொண்டது. இதில் எலிஸ் மெர்டென்ஸ் - ஸ்ட்ரோம் சாண்டர்ஸ் இணை 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஜெசிகா பெகுலா - கோகோ காப் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றனர்.

    • கச்சனோவ் 4-வது சுற்றில் 4-6, 6-3, 6-1, 4-6, 6-3 என்ற கணக்கில் ஸ்பெயின் வீரர் பஸ்டாவை வீழ்த்தினார்.
    • ஆஸ்திரேலியாவை நிக் கிர்கியோஸ் 7-6 (13-11), 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் மெட்வதேவை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    நியூயார்க்:

    கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 12-ம் நிலை வீராங்கனையான கோகோ கவூப் (அமெரிக்கா) 4-வது சுற்றில் சீனாவை சேர்ந்த ஷாங்சூயை எதிர்கொண்டார். இதில் கவூப் 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு முன்னேறினார்.

    கோகோ கவூப் கால் இறுதி ஆட்டத்தில் 17-வது வரிசையில் உள்ள கரோலின் கார்சியாவை (பிரான்ஸ்) சந்திக்கிறார். கார்சியா 4-வது சுற்றில் 6-4 , 6-1 என்ற நேர் செட் கணக்கில் அலிசன் ரிஸ்கை (அமெரிக்கா) வீழ்த்தினார்.

    மற்றொரு ஆட்டத்தில் அஜ்லா டோமலிஜலோவிச் (ஆஸ்திரேலியா) 7-6 (10-8), 6-1 என்ற கணக்கில் லுட்மிலா சம்சோனாவை (ரஷிய) வீழ்த்தினார்.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும், தர வரிசையில் முதல் இடத்தில் இருப்பவருமான டேனில் மெட்வதேவ் (ரஷியா) 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.

    ஆஸ்திரேலியாவை நிக் கிர்கியோஸ் 7-6 (13-11), 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் மெட்வதேவை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார். 23-வது வரிசையில் உள்ள அவர் கால் இறுதியில் ரஷியாவை சேர்ந்த கரென் கச்சனோவை எதிர்கொள்கிறார்.

    கச்சனோவ் 4-வது சுற்றில் 4-6, 6-3, 6-1, 4-6, 6-3 என்ற கணக்கில் ஸ்பெயின் வீரர் பஸ்டாவை வீழ்த்தினார்.

    5-ம் நிலை வீரரான கேஸ்பர் ரூட் (நார்வே) 6-1, 6-2, 6-7 (4-7), 6-2 என்ற கணக்கில் மவுட்டெட்டை (பிரான்ஸ்) தோற்கடித்து கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

    ×