search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்கள்"

    • திருச்சி-மானாமதுரை பயணிகள் ரெயில் இரு மார்க்கங்கங்களிலும் வருகிற 17-ந்தேதி முதல் 22-ந்தேதிகள் வரை ஞாயிறு தவிர மற்ற நாட்களில் சிவகங்கை-மானாமதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
    • திண்டுக்கல்-அம்பாத்துரை இடையே பராமரிப்பு பணி காரணமாக நாளை முதல் வருகிற 30-ந்தேதி வரை கோவை-நாகர்கோவில் விரைவு ரெயில் செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் 90 நிமிடம் தாமதமாக இயக்கப்படும்.

    மதுரை:

    மானாமதுரை-மேல கொன்னகுளம், திண்டுக்கல்-அம்பாத்துரை ராஜபாளையம்-சங்கரன்கோவில், சூடியூர்-பரமக்குடி ஆகிய ரெயில் நிலையங்களுக்கு இடையே மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

    இதையொட்டி ராமேசுவரம்-மதுரை பயணிகள் ரெயில் நாளை (16-ந்தேதி) முதல் வருகிற 30-ந்தேதி வரை வியாழன் தவிர மற்ற நாட்களில் ராமேசுவரத்தில் இருந்து காலை 11 மணிக்கு பதிலாக, மதியம் 1.30 மணிக்கு புறப்படும். அதேபோல மதுரையில் இருந்து மதியம் 12.30 மணிக்கு பதில் மதியம் 1.10 மணிக்கு புறப்படும்.

    திருச்சி-மானாமதுரை பயணிகள் ரெயில் இரு மார்க்கங்கங்களிலும் வருகிற 17-ந்தேதி முதல் 22-ந்தேதிகள் வரை ஞாயிறு தவிர மற்ற நாட்களில் சிவகங்கை-மானாமதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

    திண்டுக்கல்-அம்பாத்துரை இடையே பராமரிப்பு பணி காரணமாக நாளை (16-ந்தேதி) முதல் வருகிற 30-ந்தேதி வரை கோவை-நாகர்கோவில் விரைவு ரெயில் செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் 90 நிமிடம் தாமதமாக இயக்கப்படும்.

    இதே போல சென்னை-குருவாயூர் விரைவு ரெயில் மதுரை கோட்டப் பகுதியில் செவ்வாய், சனிக்கிழமைகளில் 70 நிமிடம் தாமதமாகவும், வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடம் தாமதமாகவும் இயக்கப்படும். இதனால் அந்த 3 நாட்களும் குருவாயூர் விரைவு ரெயிலுக்கு, வாஞ்சி மணியாச்சி-தூத்துக்குடி பாசஞ்சர், இணைப்பு ரெயிலாக செயல்படாது.

    ராஜபாளையம்-சங்கரன் கோவில் பிரிவில் ரெயில் பாதை பலப்படுத்தும் பணி நடக்கிறது. மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்படும் செங்கோட்டை ரெயில் மற்றும் செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும் மதுரை பயணிகள் ரெயில் ஆகியவை நாளை (16-ந் தேதி) முதல் வருகிற 30-ந் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    கோவில்பட்டியில் வருகிற 21, 22-ந் தேதிகளில் பராமரிப்பு பணி காரணமாக பாலக்காடு-திருச்செந்தூர் விரைவு ரெயில் இரு மார்க்கங்களிலும் சாத்தூர்-திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    குமாரபுரம் பராமரிப்பு பணிகளுக்காக வருகிற 28, 29-ம் தேதிகளில் பாலக்காடு-திருச்செந்தூர் ரெயில் இரு மார்க்கங்களிலும் கோவில்பட்டி-திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதுவும் தவிர இந்த ரெயில்கள் வருகிற 30-ம் தேதி மதுரை-திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதனால் பாலக்காடு செல்லும் ரெயில், மதுரையில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்படும்.

    தென்காசி-செங்கோட்டை இடையே ரெயில் பாதை பராமரிப்பு பணிகள் நடப்பதால் வருகிற 20-ந் தேதி முதல் 30-ந் தேதி தேதிகள் வரை மதுரையில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்படும் செங்கோட்டை ரெயில் மற்றும் நெல்லையில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்படும் செங்கோட்டை ரெயில் தென்காசி-செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    இந்த தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    • ரெயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நாளை முதல் நடைபெற உள்ளது.
    • வண்டி எண் 06663 மற்றும் 06664 ஆகிய முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் 6 நாட்களுக்கு ரத்து செய்யப்படும்.

    தென்காசி:

    தென்னக ரெயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராஜபாளையம் - சங்கரன் கோவில் ரெயில்வே வழித்தடத்தில் ரெயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நாளை முதல் நடைபெற உள்ளதால் மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - செங்கோட்டை ரெயில் ( வண்டி எண் 06663 ) மற்றும் செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை - மதுரை (06664) ஆகிய முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் நாளை (5-ந்தேதி) முதல் வருகிற 10 வரை 6 நாட்களுக்கு ரத்து செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பயணிகளின் வசதிக்காக சில ரெயில்களின் முன்பதிவு பெட்டிகள் ‘டிரிசர்வ்டு’ (Dereserved) பெட்டிகளாக மாற்றம் செய்யப்படுகிறது.
    • ‘டிரிசர்வ்டு’ரெயில் பெட்டிகளில் பயணம் செய்ய புதிய சிறப்பு கட்டணம் செலுத்த வேண்டும்.

    செங்கோட்டை:

    ரெயிலில் முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு பயண சீட்டு வைத்திருக்கும் பயணிகள் மட்டுமே பயணிக்க முடியும். குறுகிய தூரம் பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காக சில ரெயில்களின் முன்பதிவு பெட்டிகள் 'டிரிசர்வ்டு' (Dereserved) பெட்டிகளாக மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி சென்னை எழும்பூர் - கொல்லம் அனந்தபுரி ரெயிலில் (16723) அக்டோபர் 19-ந் தேதி முதல் எஸ் 10 மற்றும் எஸ்11 ஆகிய முன்பதிவு பெட்டிகள் நெல்லை- கொல்லம் இடையேயும், கொல்லம் - சென்னை எழும்பூர் அனந்தபுரி ரெயிலில் (16724) அக்டோபர் 20-ந் தேதி முதல் எஸ்11 என்ற பெட்டி கொல்லம்-நெல்லை இடையேயும் 'டிரிசர்வ்டு' பெட்டிகளாக இயக்கப்படும்.

    மேலும் தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக இயக்கப்படும் சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் ரெயில்களில் (16851/16852) எஸ் 12, எஸ் 13 ஆகிய பெட்டிகள் அக்டோபர் 24-ந் தேதி முதல் மானாமதுரை - ராமேஸ்வரம் இடையேயும் அக்டோபர் 26 -ந் தேதி முதல் ராமேஸ்வரம் - மானாமதுரை இடையேயும் 'டிரிசர்வ்டு' பெட்டிகளாக இயக்கப்படும். அதேபோல தூத்துக்குடி - மைசூர் ரெயிலில் (16235) அக்டோபர் 28 -ந் தேதி முதல் எஸ் 10 மற்றும் எஸ் 11 ஆகிய முன்பதிவு பெட்டிகள் டிரிசர்வ்டு பெட்டிகளாக இயக்கப்படும்.

    இந்த 'டிரிசர்வ்டு'ரெயில் பெட்டிகளில் பயணம் செய்ய புதிய சிறப்பு கட்டணம் செலுத்த வேண்டும். உதாரணமாக தூத்துக்குடி - மதுரை இடையே ரெயிலில் பயணம் செய்ய முன்பதிவற்ற கட்டணம் ரூ.70, முன்பதிவு கட்டணம் ரூ.145, டிரிசர்வ்டு கட்டணம் ரூ.110 என வரையறுக்கப்பட்டுள்ளது.

    • மதுரை, விருதுநகர், சாத்தூர் வழியாக நெல்லை-ஈரோடு இடையே ரெயில்கள் அடுத்த மாதம் இயக்கப்படுகிறது.
    • இந்த தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    நெல்லை-ஈரோடு இடையே முன்பதிவு இல்லாத பயணிகள் ரெயில் மீண்டும் இயக்கப்படுகிறது.

    அதன்படி ஈரோட்டில் இருந்து வருகிற 11-ம் தேதி முதல் மதியம் 1.35 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில், இரவு 9.45 மணிக்கு நெல்லை செல்லும்.

    மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து வருகிற 13-ம் தேதி முதல் காலை 6.15 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில், மதியம் 2.30 மணிக்கு ஈரோடு செல்லும்.

    இந்த ரெயில்கள் கொடுமுடி, புகலூர், கரூர், வெள்ளியணை, எரியோடு, திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், துலுக்கப்பட்டி, சாத்தூர், கோவில்பட்டி, கடம்பூர், வாஞ்சி மணியாச்சி யில் நின்று செல்லும்.

    அதேபோல மயிலாடு துறை-திண்டுக்கல் இடையே முன்பதிவு இல்லாத பயணிகள் ரெயில் வருகிற 11-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது.

    அதன்படி மயிலாடுதுறையில் இருந்து காலை 11.25 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில், மாலை 4 மணிக்கு திண்டுக்கல் செல்லும். மறுமார்க்கத்தில் திண்டுக்கல்லில் இருந்து வருகிற 12-ம் தேதி முதல் காலை 11.30 மணிக்கு புறப்படும் பயணிகள் ரெயில், மாலை 4 மணிக்கு மயிலாடுதுறை செல்லும்.

    இந்த ரெயில்கள் குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர், மஞ்சத்திடல், திருச்சி, மணப்பாறை, வையம்பட்டி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    சேலம் வழியாக செல்லும் ரெயில்கள் பாலம் பராமரிப்பு பணி நடைபெறுவதால் நேரம் மாற்றப்பட்டது.

    சேலம்:

    சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கும் மேக்னசைட் ரெயில் நிலையத்திற்கும் இடையே உள்ள பகுதியில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பாலம் கட்டுமான பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி அன்று சேலம், ஈரோடு, கோவை வழியாக மற்றும் சேலம், கரூர், நாமக்கல் வழியாக செல்லும் ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    அதன்படி ஆலப்புழாவில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய ஆலப்புழா- தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (13352) 3 மணி நேரம் காலதாமதமாக ஆலப்புழாவில் இருந்து புறப்படும்,

    எர்ணாகுளம் ரயில் நிலையத்திலிருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட வேண்டிய எர்ணாகுளம்- பெங்களூர் எக்ஸ்பிரஸ் (12678) ரெயில் 3 மூன்று மணி நேரம் காலதாமதமாக புறப்படும். கோவையில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை- சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்(12244) ஒரு மணி நேரம் காலதாமதமாக புறப்படும்.

    கோவையில் இருந்து பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை- சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (12676) 1 மணி நேரம் காலதாமதமாக புறப்படும். நா கர்கோவில்-மும்பை சி.எஸ்.எம்.டி. எக்ஸ்பிரஸ் ரெயில் (16340) நாகர்கோவில் ரெயில் நிலையத்திலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில் 2 மணி நேரம் கால தாமதமாக புறப்படும்.

    ஜோலார்பேட்டையில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட வேண்டிய ஜோலார்பேட்டை-ஈரோடு முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் (06411) ரெயில் 1 மணி நேரம் காலதாமதமாக புறப்படும். மேலும் ராஜ்கோட்- கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (16613) 40 நிமிடம் காலதாமதமாக இரவு 9.30 கோவை ரயில் நிலையம் சென்றடையும்.

    இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். 

    ×