search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீர்வரிசை"

    • இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 3 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தனர்.
    • ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 28 சீர்வரி சைகளுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    பரமக்குடி

    பரமக்குடியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திரவுபதி அம்மன் கோவி லில் 3 ஜோடிகளுக்கு கட்டில், பீரோ, குத்து விளக்கு என ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 28 சீர்வரி சைகளுடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, இந்து சமய அறநிலைத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன், ஆய்வாளர் சுந்தேஷ்வரி உள்படல பலர் கலந்து கொண்டனர்.

    • 4 கோவில்களில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடந்தது.
    • ரூ.1 லட்சத்து 50ஆயிரம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதில் விட்டனேரி கொல்லங்குடி வெட்டுடையார் காளி யம்மன் கோவிலில் 3 ஜோடிகளுக்கு இந்து சமய சிவகங்கை மண்டல இணை ஆணையர் பழனிகுமார் தலைமையில் திருமணம் நடைபெற்றது.

    மணமக்களுக்கு ரூ.1 லட்சத்து 50ஆயிரம் மதிப்பில் குத்துவிளக்கு பீரோ, தலையணை, சமையல்பாத்திரங்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினரும், பொதுக்குழு உறுப்பினருமான ஏஆர்.ஜெயமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் ஆர்.எம். கென்னடி, யோக கிருஷ்ண குமார், ஆரோக்கியசாமி, கொல்லங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் மெய்ஞான மூர்த்தி, மாணவர் அணி கார்த்தி, பால்பாண்டி, குட்டி, தமிழ்ச்செல்வன், சுசீந்திரன், வழக்கறிஞர் சதீஷ், செல்லப்பாண்டி, பாலமுருகன், அசோக், முருகன், அல்லூர் ரவி, காளை மணி, அம்பலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் கோவில் செயல் அலுவலர் நாராயணி நன்றி கூறினார். தாயமங்கலம் முத்துமாரி அம்மன்கோவிலில்ஒரு ஜோடிக்கும், அரியக்குடி திருவேங்கடம் உடையார் கோவிலில் 3 ஜோடி களுக்கும், பரமக்குடியில் திரவுபதி அம்மன் கோவிலில் 3 ஜோடிகளுக்கும் மொத்தம் 10 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    அரியக்குடி திருவேங்கடமுடையார் கோவிலில் நடைபெற்ற திருமணத்தில் மாங்குடி எம்.எல்.ஏ., காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துதுரை, துணைத் தலைவர் குணசேகரன், கண்ணன், காரை சுரேஷ் அறங்காவலர் குழு உறுப்பினர் வெள்ளையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 7 மாட்டு வண்டியில் தாய்மாமன் சீர்வரிசை கொண்டு வந்து அசத்திய நிகழ்வு நடைபெற்றது.
    • ஒரு குழந்தைக்கு காதணி விழா நடந்தது.

    மதுரை :

    தமிழகத்தின் பழமை மாறாமல் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற காதணி விழாவில் 7 மாட்டு வண்டியில் தாய்மாமன் சீர்வரிசை கொண்டு வந்து அசத்திய நிகழ்வு நடைபெற்றது.

    இந்த வகையில் உசிலம்பட்டி அருகே ரெயில்வே பீடர் ரோடு பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கு காதணி விழா நடத்தினர். இந்த விழாவிற்கு கருமாத்தூரிலிருந்து வந்திருந்த அவரது தாய்மாமன் தலைமையில் ஊர்வலமாக வந்த பொதுமக்கள் பாரம்பரிய முறைப்படி 7 மாட்டு வண்டிகளில் வெற்றிலை, பாக்கு, பழம், கரும்பு, இனிப்புகள் மற்றும் சீர்வரிசை பொருட்களை ஏற்றி வந்தனர்.

    மேலும் கரகாட்டம், ஒயிலாட்டம், மாதிரி யானை ஊர்வலம், கேரள செண்டை மேளங்கள் முழங்க கதகளி நடனம் என சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு தாய்மாமன் ஊர்வலமாக வந்தது உசிலம்பட்டி பகுதியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    • திருமண நிச்சயதார்த்தவிழா அனைவரையும் திரும்பி பார்க்கும் வகையில் இருந்தன.
    • விழாவில் 3000-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா அருமுளை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கும் இவரது உறவுக்கார பெண்ணான மலேசியாவை சேர்ந்த தினோஷாலிக்கும் சமீபத்தில் ஒரத்தநாடு அருகே தெலுங்கன்குடிக்காட்டில் உள்ள திருமண மண்டபத்தில் பெற்றோர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்த விழா நடந்தது.

    இந்த திருமண நிச்சயதார்த்தவிழா அனைவரையும் திரும்பி பார்க்கும் வகையில் இருந்தன. நிச்சயாதார்த்த விழாவிற்கு மாப்பிள்ளை வீட்டார்கள் அருமுளை கிராமத்தில் இருந்து 15 டிராக்டர்களில் 500 வகையான சீர்வரிசை தட்டுகளுடன் வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக சென்று திருமண நிச்சயதார்த்தத்தை நடத்தினர்.

    இந்த விழாவில் 3000-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அறுசுவை உணவு பரிமாறப்பட்டது. பிரமாண்ட முறையில் நடந்த விழா அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

    • சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மணமேடைக்கு எழுந்தருளினர்.
    • சீர்வரிசை பொருட்களை எடுத்து கொண்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருவெண்ணீற்று மையம்மை உடனாகிய சிவலோக தியாகராஜசாமி கோவில் உள்ளது.

    இக்கோவிலில் தனி சன்னதியில் திருமண கோலத்தில் திருஞானசம்பந்த பெருமான்-தோத்திர பூரணாம்பிகையுடன் அருள்பாலிக்கிறார்.

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாத மூல நட்சத்திரத்தில் திருஞா னசம்பந்தர் திருக்கல்யாண விழா சிறப்பாக நடைபெறும்.

    அதன்படி, இந்த ஆண்டுக்கான திருக்கல்யாண விழா நடைபெற்றது.

    முன்னதாக, திருஞான–சம்பந்தபெருமான்- தோத்திரபூரணாம்பி–கைக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று.

    சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மணமேடைக்கு எழுந்தருளினர்.

    விழாவை யொட்டி ஏராளமான பக்தர்கள் திருமண சீர்வரிசை பொருட்களை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்து திருமண சடங்குகள் தொடங்கியது.

    வேத விற்பன்னர்கள் திருமந்திரம் ஓத சிறப்பு ஹோமம் நடைபெற்று தோத்திர பூரணாம்பிக்கைக்கு சிவாச்சாரியார்கள் மங்களநாண் அணிவித்து திருக்கல்யாணம் நடைபெற்றது.

    தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • முதல் நிகழ்வாக சோமசுந்தரர் புறப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.
    • திரளான பெண்கள் கலந்து கொண்டு சீர்வரிசை எடுத்து வந்தனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே உள்ள திருநல்லூர் அருள்மிகு கிரிசுந்தரி உடனாய கல்யாண சுந்தரேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக பெருவிழா நிகழ்ச்சி கடந்த 2-ந்தேதி தொடங்கப்பட்டு, முதல் நிகழ்வாக சோம சுந்தரர் சுவாமி புறப்பாடு நடைபெற்று

    தீர்த்தவாரி நடைபெற்றது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக சுவாமி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. சுவாமி அம்பாளுக்கு திரளான பெண்கள் கலந்து கொண்டு சீர்வரிசை எடுத்து வந்தனர்.

    அதன் பின்பு மந்திரங்கள் முழங்க மேளதாளங்கள் வாசிக்க பக்தர்கள் முன்னிலையில் சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிவாச்சாரியார்கள், திருக்கோவில் பணியாள ர்கள் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • காமராஜர் அறநிலையம் சார்பில் மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
    • நாடார் உறவின்முறை உறுப்பினர் மக்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது.

    மதுரை

    பாரதப்பெருந்தலைவர் காமராஜர் அறநிலையத்தின் சார்பில் மதுரை நாடார் உறவின்முறை உறுப்பினர் மக்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. இந்த திருமண திட்டத்தின் கீழ் உறவின் முறை உறுப்பினர் எம்.நாகராஜன்- பஞ்சவர்ணம் மகள் என்.கார்த்திகா ராணிக்கும், மதுரை ஆர்.தர்மராஜ்- முத்துமாரி ஆகியோரது மகன் டி.ஜீவானந்தனுக்கும் திருமணம் மதுரை நாடார் உறவின் முறை என்.சுப்புராஜ நாடார் கிருஷ்ணம்மாள் மன்றத்தில் நடந்தது. பாரதப்பெருந்தலைவர் காமராஜர் அறநிலைய பொதுச்செயலாளர் கே.பி.எம்.எம்.காசிமணி வரவேற்றார். அறநிலைய தலைவர் ஜெமினி எஸ்.பால் பாண்டியன் தலைமை தாங்கினார். அறநிலைய பொதுச்செயலாளர் டி.பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

    மதுரை நாடார் உறவின் முறை பொதுச்செயலாளர் எஸ்.கே.மோகன் திரும ணத்தை நடத்தி வைத்தார்.

    மதுரை நாடார் உறவின் முறை தலைவர் அனிதா ஆர்.சிவானந்தன், துணைத்தலைவர் ஆர்.முத்தரசு, பொதுச் செயலாளர் வி.பி.மணி, காமராஜர் அறநிலைய துணைத்தலைவர் எம்.எஸ்.சோமசுந்தரம், ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி தலைவர் பி.தர்மராஜ், துணை செயலாளர் சி.பாஸ்கரன், துணைத் தலைவர் செந்தில்குமார், விடுதிக்குழு செயலாளர் பி.குமார், ஜெயராஜ் அன்ன பாக்கியம் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி தலை வர் ஆர்.கணேசன், துணைத் தலைவர் எஸ்.பழனிக்குமார், செயலாளர் கே.ஆனந்த், இணைச் செயலாளர் ஒய்.சூசை அந்தோணி ஆகியோர் பேசினர். மணமக்களுக்கு சேலை, மாலை, கட்டில், பீரோ உள்பட சீர்வரிசைகள் காமராஜர் அறநிலையத்தில் இருந்து இலவசமாக வழங்கப்பட்டன.

    • பள்ளிக்கு தேவையான பொருட்களை கிராம மக்கள் சார்பில் வழங்கபடுவது வழக்கம்.
    • தலைமையாசிரியர் சாந்தியிடம் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    திருக்கண்ணங்குடி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பெற்றோர் மற்றும் கிராம மக்கள் சார்பில் 1 லட்சம் மதிப்பிலான பள்ளிக்கு தேவையான பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே திருக்கண்ணங்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அமைந்துள்ளது.

    ஒவ்வொரு ஆண்டும் இப்பள்ளிக்கு தேவையான பொருள்களை கிராம மக்கள் சார்பாக வழங்கபடுவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டுக்கான பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இப்பள்ளிக்கு தேவையான பொருள்கள் அனைத்தையும் மாணவர்கள், பெற்றோர்கள், கிராம மக்கள் சார்பில் வாங்கப்பட்டு இன்று பள்ளிக்கு வழங்கப்பட்டது,

    பள்ளியில் இருந்து மேளதாளங்கள் முழங்க சீர்வரிசை பொருட்கள் ஊர்வலமாக பள்ளிக்கு எடுத்து வரப்பட்டது, இதில் பள்ளிக்கு தேவையான இருக்கைகள், எல்.இ.டி. டிவி, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கும் ஆர்வோ வாட்டர் மெசின், பீரோ, குடம், பாய்கள், மின் விசிறிகள், இருக்கைகள், சாக்பீஸ், உள்ளிட்ட 1லட்சம் மதிப்பீலான பொருள்களை தலைமையாசிரியர் சாந்தியிடம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாணவ,மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது

    இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள், கிராம மக்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

    • சிறப்பு அலங்காரத்தில் அமிர்தகடேஸ்வரரும், அபிராமி அம்மனும் மண்டபத்தில் எழுந்தருளினர்.
    • சீர்வரிசை எடுத்து வந்து வேதமந்திரம் முழங்க திருக்கல்யாண வைபவம் நடந்தது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 25- ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து நேற்று இரவு கோயில் வளாகத்தில் 100 கால் மண்டபம் எதிரில் தர்மபுரம் ஆதீனம் மாசிலாமணி சுவாமிகள் முன்னிலையில் திருக்கல்யாணம் நடந்தது.

    முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்மனும் மண்டபத்தில் எழுந்தருளினர்.

    பின்னர் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றது. கோவில் குருக்கள் சீர்வரிசை எடுத்து வந்து மந்திரம் முழங்க திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதனை கோவில் குருக்கள் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். இரவு பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் கோயில் காசாளர் கலியராஜ், கணேச குருக்கள், மாவட்ட கவுன்சிலர் துளசி ரேகா, ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலதி சிவராஜ், உள்ளிட்ட ஏராளமான பக்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • அழிஞ்சமங்கலம் அரசு ஆரம்பப்பள்ளி 100 ஆண்டுகளை கடந்தும் சிறப்பாக கல்வி சேவை ஆற்றி வருகிறது.
    • ஒரு தாம்பூலத்தில் வைத்து அதனை சீர்வரிசையாக சிறுவர்களிடம் வழங்கினர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி நாகை அருகே அழிஞ்சமங்கலம் அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சீர் வரிசைகளுடன் வீடு வீடாக சென்று மாணவர் சேர்த்து நடத்தினர். தொடர்ந்து சிறுவர்களுக்கு பொன்னாடை போர்த்தி, ஆரத்தி எடுத்து தங்களது அரசு பள்ளியில் உள்ள சிறப்பம்சங்களை எடுத்துக் கூறினர்.

    மேலும் நோட்டு, பேனா, பென்சில், சிலேடு, சாக்பீஸ், பெல்ட், டிபன் பாக்ஸ், குடிநீர் பாட்டில் உள்ளிட்ட பள்ளி படிப்பிற்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஒரு தாம்பூலத்தில் வைத்து அதனை சீர்வரிசையாக சிறுவர்களிடம் வழங்கினர். இது அந்த பகுதியில் உள்ள பெற்றோரையும், பொது மக்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

    இதுகுறித்து பள்ளி தலைமையாசிரியர் சித்ரா கூறும்போது:-

    அழிஞ்சமங்கலம் அரசு ஆரம்பப்பள்ளி 100 ஆண்டுகள் நிறைவடைந்தும் சிறப்பாக கல்வி சேவை ஆற்றி வருகிறது. 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் காற்றோட்டமான தனித்தனி வகுப்பறைகள் உள்ளன. ஸ்மார்ட் கிளாஸ் வசதியுடன் செயல்பட்டு வருகிறது.

    சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சுகாதாரமான கழிவறை வசதி, சத்துள்ள மதிய உணவு உள்ளிட்ட சிறப்பம்சங்கள் உள்ளன. மேலும் மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டு வர பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மாவட்ட அளவில் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்குகிறோம். மேலும் ஆண்டுதோறும் 100 சதவீத தேர்ச்சி பெரும் பள்ளியாக உள்ளது.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்ரீஹரிகோட்டாவில் நடந்த கொரோனா விழிப்புணர்வு போட்டியில் மாநில அளவில் எங்களுடைய பள்ளி மாணவி 2-ம் இடம் பிடித்துள்ளார். அனைத்து வகையான அடிப்படை வசதிகளும் அரசு பள்ளியில் இருக்கும் பொழுது நாம் ஏன் தனியார் பள்ளிகளை நாடி செல்ல வேண்டும் என்றார். மேலும் அரசு பள்ளியின் சிறப்பம்சங்கள் குறித்து பதாகைகளை ஏந்தியபடி ஆசிரியர்களும், மாணவர்களும் ஊர்வலமாக சென்றனர். நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராஜ திலகம், இல்லம் தேடி கல்வி அலுவலர்கள் நிவேதா, வைஷ்ணவி, மதிமொழி, ஆனந்தராஜ், அன்புசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மேளதாளம் முழங்க திருமண சீர்வரிசைகள் எடுத்து வரப்பட்டது.
    • ராமனுக்கு அபிஷேகம் செய்து புத்தாடை அணிவித்தனர்.

    மதுக்கூர்:

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூர் பஜனைமடத்தெ ருவில் அமைந்துள்ள வேண்டும் வரம் தரும் ஸ்ரீகோதண்டராமர் கோவிலில் ஸ்ரீநாமநவமி விழா நடைபெற்றது.

    ஆர்ய வைஸ்ய சமூகம் பிள்ளைமார் சமூகம் இணைந்து இதன் அறங்காவலர் பிரகாசம், சின்ன துரை ஆகியோர் தலைமையில் ஸ்ரீராமநவமி விழாவை நடத்தினர்.

    மேளதாளம் முழங்க திருமண சீர்வரிசைகள் எடுத்து வந்தார்கள்.

    ஸ்ரீராமபி ரானுக்கு அபிஷேகம் செய்து புத்தாடை அணிவித்து ஹோமம் நடைபெற திருமண கைங்கர்யம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • திருமண வரம் அருளும் உத்வாகநாதர் கோவிலில் இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
    • திருமாங்கல்யம், ஆடைகள், மாலைகள் ஆகியவற்றை சீதனமாக அறநிலையத்துறை அதிகாரிகள் வழங்கினர்.

    குத்தாலம்:

    இந்து சமய அறநிலை யத்துறை சார்பில் இந்து சமயத்தை சேர்ந்த ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் கோவில்களில் இலவசமாக திருமணம் நடத்தும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்தவகையில், மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா திருமணஞ்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற திருமண வரம் அருளும் உத்வாகநாதர் சுவாமி கோவிலில் 4 ஜோடிகளுக்கு நேற்று இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

    ஒவ்வொரு ஜோடிக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள திருமாங்கல்யம், ஆடைகள், முகூர்த்த மாலைகள், சீர்வரிசையை சீதனமாக அறநிலையத்துறை அதிகாரிகள் வழங்கினர்.

    இதில், மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் இந்துசமய அறநிலையத்துறை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுவாமிநாதன், குத்தாலம் ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், கோவில் செயல் அலுவலர் நிர்மலாதேவி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள், காங்கிரஸ் மாவட்ட துணை செயலாளர் ஜம்புகென்னடி, மாநில செயற்குழு உறுப்பினர் நவாஸ், ஒன்றியக்குழு உறுப்பினர் வடவீரபாண்டியன் மற்றும் திமுக, காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×