search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுக்கடை"

    • பிரகாஷ் தனது நண்பர்கள் 4 பேருடன் வந்து ரபீக்கிடம் தகராறில் ஈடுபட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பிரகாஷ் உள்பட 5 பேரை தேடி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு பி.பி. அக்ரஹாரம் வன்னியர் வீதியை சேர்ந்தவர் ரபீக் ராஜா (50). ஈரோடு ரெயில் நிலையம் முன் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரபீக் வேலை பார்க்கும் பாரில் மது குடிக்க வந்த ஒருவரின் செல்போன் திருட்டு போனது.

    இது குறித்து ரபீக் மதுபாரில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் அடிக்கடி அந்த மதுபாருக்கு வந்து செல்லும் ஈரோடு ஈ.வி.என்.சாலை பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் போனை எடுத்துச் சென்றது பதிவாகி இருந்தது.

    இதையடுத்து ரபீக் பிரகாசிடம் இருந்து அந்த மொபைல் போனை பெற்று உரிமையாளரிடம் ஒப்படைத்தார். இதனால் ரபீக் மீது பிரகாஷ் ஆத்திரத்தில் இருந்து உள்ளார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு ரபீக் வேலையை முடித்து கொண்டு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது பிரகாஷ் தனது நண்பர்கள் 4 பேருடன் வந்து ரபீக்கிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் மரக்கட்டையால் ரபீக்கை தாக்கி அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டது.

    இது குறித்து ரபீக் ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பிரகாஷ் உள்பட 5 பேரை தேடி வருகின்றனர்.

    • குடிச்சிட்டு வாகனம் ஓட்டறது தப்புன்னா பாரிலே எதுக்கு பார்க்கிங்.
    • போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

    போடிப்பட்டி :

    உடுமலை தளி ரோட்டில் இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது இருசக்கர வாகனத்தில் லேசான தள்ளாட்டத்துடன் வந்த நபரை தடுத்து நிறுத்தினர்.மேலும் குடித்திருக்கிறாரா என்று சோதனை செய்வதற்காக 'வாயை ஊது' என்று சொன்னபோது அவர் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    மேலும் அவருடைய மனைவிக்கு போன் செய்து வரவழைத்தார்.அங்கு வந்த அவருடைய மனைவி போலீசாரிடம் ஆக்ரோஷமாக வாக்குவாதம் செய்தார். மதுக்கடைகள் திறக்கிறது தப்பில்லேன்னா குடிக்கிறது எப்படி தப்பாகும். அவர் என்ன சாராயம் காய்ச்சியா குடித்தார். அரசாங்கம் விற்கும் மதுவைத் தானே வாங்கிக் குடித்தார். இதோ அருகிலேயே டாஸ்மாக் மதுக்கடையும் அங்கேயே பாரும் செயல்படுகிறது.

    குடிச்சிட்டு வாகனம் ஓட்டறது தப்புன்னா பாரிலே எதுக்கு பார்க்கிங். அங்கே குடிச்சிட்டு ரோட்டிலே படுக்க முடியுமா? வீட்டுக்கு போய்தானே ஆகணும். அப்போ நீங்க எப்படி பிடிக்கலாம்'என்று போலீசாரிடம் எகிறினார். போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு ஏராளமானவர்கள் வேடிக்கை பார்க்கத் தொடங்கினர்.

    அந்த நபருக்கு குடி பரிசோதனை செய்வதற்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துப் போக போலீசார் முயன்றனர். ஆனால் குடிச்சதை நாங்களே ஒத்துக்கும் போது எதுக்கு டெஸ்ட் பண்ணனும். எங்கேயும் வர முடியாது என்று அடம் பிடித்தார். இதனையடுத்து போதை ஆசாமியின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார் போலீஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.

    அந்த அம்மா நியாயமா தானே கேக்கறாங்க என்று ஒரு தரப்பினரும், போலீசாரின் கையை கட்டிப் போட்டா இது மாதிரி தப்பு பண்ணினவங்களெல்லாம் எகிறத் தான் செய்வாங்க என்று இன்னொரு தரப்பினரும் விமர்சனத்தை முன் வைத்தனர்.

    • மதுக்கடை ஊழியரிடம் குளிர்ந்த பீர் பாட்டில் தருமாறு கேட்டதற்கு அவர் குளிர்ந்த பீர் பாட்டில் இல்லை என கூறினார்.
    • ஆத்திரம் அடைந்த இருவரும் சரவணக்குமாரை அடித்து உதைத்து மது பாட்டில்களை சூறையாடினர்.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே உள்ள திருமண்டங்குடி ஊராட்சியில் இயங்கி வரும் அரசு மதுபான கடையில் பணியாற்றுபவர் சரவணகுமார் (வயது 42). சம்பவத்தன்று கூனஞ்சேரி மணி, திருவைகாவூர் சத்தியமூர்த்தி ஆகிய இருவரும் மதுக்கடையில் வந்து பீர் பாட்டில் கேட்டுள்ளனர். பீர் பாட்டில் தந்த மதுக்கடை ஊழியர் சரவணகுமாரிடம் குளிர்ந்த பீர் பாட்டில் தருமாறு கேட்டதற்கு அவர் குளிர்ந்த பீர் பாட்டில் இல்லை என கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் சரவணக்குமாரை அடித்து உதைத்து மது பாட்டில்களை சூறையாடினர்.

    இது குறித்து சரவ ணகுமார் கொடுத்த புகாரி ன்பேரில் கபிஸ்தலம் போலீஸ் இன் சப்-இன்ஸ்பெ க்டர் முருகே சன், சிறப்பு சப்- இன்ஸ்பெ க்டர் அன்ப ழகன், தலை மை காவலர் கார்த்திகேயன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து மணி, சத்தியமூர்த்தி ஆகியோரை வலை வீசி தேடி வருகி ன்றனர்.

    • அம்மாசி கவுண்டன் காட்டுவளவு பகுதியில் மதுக்கடையை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
    • 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு சமரச பேச்சு நடத்தினர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அடுத்த பண்ணப்பட்டி அம்மாசி கவுண்டன் காட்டுவளவு பகுதியில் மதுக்கடையை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் பா.ம.க. மாவட்ட தலைவர் டாக்டர் மாணிக்கம் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். ஓமலூர் டி.எஸ்.பி. சங்கீதா தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு சமரச பேச்சு நடத்தினர்.

    • மதுக்கடையை மூட எதிர்ப்பு தெரிவித்து குடிமகன்கள் மனு கொடுக்க வந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது
    • எங்களால் இதுவரை எந்த ஒரு பிரச்சினையும் இந்த பகுதியில் ஏற்பட்டதில்லை.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர் காலனி ஜெயகோபால் வீதியைச் சேர்ந்த மது பிரியர்கள் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    நாங்கள் பல வருடமாக ஜெயகோபால் வீதியில் வசித்து வருகிறோம். இங்கு மது கடை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரம் குடும்பங்கள் வசிக்கிறோம். நாங்கள் பெரும்பாலும் கூலி தொழிலாளிகள் தான். நாங்கள் இங்கு உள்ள மதுக்கடையில் தான் மது அருந்து வருகிறோம்.

    எங்களால் இதுவரை எந்த ஒரு பிரச்சினையும் இந்த பகுதியில் ஏற்பட்டதில்லை. இந்நிலையில் ஒரு சிலர் இந்த மதுக்கடையை அகற்ற முயற்சி செய்து வருகிறார்கள். அவ்வாறு இங்கு இருக்கும் மது கடையை அகற்றினால் நாங்கள் மது குடிக்க பல கிலோ மீட்டர் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

    இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் எங்கள் நிலையை கருத்தில் கொண்டு தொடர்ந்து இங்கேயே மதுக்கடை இயங்க அனுமதி அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    மதுக்கடையை மூட எதிர்ப்பு தெரிவித்து குடிமகன்கள் மனு கொடுக்க வந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

    • மூன்று டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக அப்புறப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ஒரே சாலையில் தொடர்ந்து 3 மதுக்கடைகள் இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் அதனால் பல்வேறு குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக கூறினர்.

    பேராவூரணி:

    பேராவூரணி தாசில்தார் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேராவூரணி ஒன்றிய செயலாளர் இந்துமதி தலைமையில் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பேராவூரணியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் மாவடுகுறிச்சி ஊராட்சி மாந்தோப்பு பகுதியில் அரசு கல்லூரி மாணவியர் விடுதி அருகில் அமைந்துள்ள கடை எண் 7874, 8096, 8068 ஆகிய மூன்று டாஸ்மாக் கடைகளையும் உடனடியாக அப்புறப்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி, மாவட்ட குழு வழக்கறிஞர் கருப்பையா, சேதுபாவாசத்திரம் ஒன்றிய குழு ஆர்.எஸ்.வேலுச்சாமி, சிபிஎம் பேராவூரணி நகர செயலாளர் வே.ரெங்கசாமி, மனிதநேய ஜனநாயக கட்சி மாநில துணைச் செயலாளர் அப்துல் சலாம், திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சிவா, நகர செயலாளர் மைதீன் மற்றும் தென்னங்குடி கீழக்காடு மாந்தோப்பு பகுதியை சேர்ந்த பெண்கள், பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள் தினந்தோறும் குடித்து விட்டு வீட்டில் சண்டை போடுவதால் பெண்கள் பாதிக்கப்படுவதாகவும், ஒரே சாலையில் தொடர்ந்து 3 மதுக்கடைகள் இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும் அதனால் பல்வேறு குடும்பங்கள் பாதிக்கப்படுவதாக கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த மூன்று டாஸ்மாக் கடைகளை அப்புறப்படுத்த படாவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கையாக மதுக்கடைகள் முன்பாக பூட்டு போடும் போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.

    • கடலூர் மாவட்டத்திலிருந்து தென் பெண்ணையாற்றில் நீந்தி இங்கு வந்து மதுபிரியர்கள் மது குடித்து விட்டு செல்கிறார்கள்.
    • பாகூர் அருகே உள்ள சோரியாங்குப்பம் கிராமத்தில் சுமார் ஆயிரம் வீடுகள் உள்ளது. இந்த கிராமத்தில் 11 மதுக்கடை மற்றும் சாராயக்கடைகள் இருந்து வருகிறது.

    புதுச்சேரியின் நெற்கள ஞ்சியமாக விளங்கும் பாகூர் பகுதி தற்போது மது பார்களின் களஞ்சியமாக மாறியுள்ளது. கடலூர் மாவட்டத்தை ஒட்டி பாகூர் பகுதி இருந்து வருவதால், கடலூர் பகுதி மது பிரியர்களுக்கு ஏதுவாக மதுக்கடைகள், சாராயக்கடை. கள்ளுக்கடைகள் ஏராளமாக இங்கு உள்ளன.

    கடலூர் மாவட்டத்திலிருந்து தென் பெண்ணையாற்றில் நீந்தி இங்கு வந்து மதுபிரியர்கள் மது குடித்து விட்டு செல்கிறார்கள்.

    இங்குள்ள மதுக்கடைகளை நகைக்கடை போல அலங்கரித்து, மது பிரியர்களை உற்சாகப்படுத்திய உள்ளனர்.

    மேலும் கவர்ச்சிகரமான இலவசத் திட்டங்களை அறிவித்து விருகின்றனர். குறிப்பாக பாகூர் அருகே உள்ள சோரியாங்குப்பம் கிராமத்தில் சுமார் ஆயிரம் வீடுகள் உள்ளது. இந்த கிராமத்தில் 11 மதுக்கடை மற்றும் சாராயக்கடைகள் இருந்து வருகிறது.

    எவ்வளவு கடைகள் வந்தாலும் மது விற்பனை ஜோராக நடந்து வருகிறது. இதனால் பல சிறு, சிறு திண்பண்டம் கடைகள் உருவாகி வருகிறது. தமிழகப் பகுதியான கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குறைந்த விலையில் புதுவை பகுதியில் மது கிடைப்பதாலும் பலவகையான மது கிடைப்பதாலும் கூட்டாளிகளுடன் மது வாங்கி விலை நிலத்திலும் காலிமனை பிரிவிலும் குடித்துவிட்டு அங்கேயே பாட்டிலை உடைத்து சேதப்படுத்தி வருகின்றனர்.

    இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் நன்கு விளைந்த நிலங்களை மனைக்காக விற்பது அல்லது விவசாயத்தை நிறுத்தி காலி நிலமாக வைத்துள்ளனர்.

    ×