search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பரிசுகள்"

    • லீ சாம்பியன் மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் இந்தியன் சிலம்பம் பள்ளி இணைந்து தென்மாவட்ட அளவிலான சிலம்பபோட்டியை நடத்தியது.
    • 4 வயது முதல் 22 வயது வரையிலான மாணவ-மாணவிகள் பங்கேற்று சிலம்பம் சுற்றினர்.

    திருமங்கலம்

    லீ சாம்பியன் மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் இந்தியன் சிலம்பம் பள்ளி இணைந்து தென்மாவட்ட அளவிலான சிலம்பபோட்டியை திருமங்கலத்தில் நடத்தியது.

    இதில் பல்வேறு பகுதிகளைசேர்ந்த 300 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்தியன் சிலம்ப பள்ளி தலைமை பயிற்சியாளர் மாமல்லன் மணி தொடங்கி வைத்தார். உலக சோடோகான் அமைப்பின் தலைவர் பாஸ்கரன், ஷோட்டோகான் பயிற்சியாளர் பால்பாண்டி முன்னிலை வகித்தனர்.

    ஒற்றைகம்பு, இரட்டை கம்பு, சுருள்வாள், தொடுப்பாடம் பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. 4 வயது முதல் 22 வயது வரையிலான மாணவ-மாணவிகள் பங்கேற்று சிலம்பம் சுற்றினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • வட்டார அளவிலான சதுரங்க போட்டிகள் ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது.
    • மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர், ஊட்டி, கோத்தகிரி மற்றும் குன்னூர் ஆகிய வட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கு கடந்த வாரம் வட்டார அளவிலான சதுரங்க போட்டிகள் ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்கள் ஊட்டியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர்.

    6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நடந்த போட்டியில் இறுதி சுற்றில் கூடலூர் முதல்மைல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவி டியானி தொடர்ந்து 4 சுற்றுகளிலும் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து சென்னையில் நடைபெறும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் தகுதியினை பெற்றார்.

    காந்திநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவன் கோகுல்தாசன் மாணவர்கள் பிரிவில் முதலிடம் பிடித்தார்.

    மாணவிகள் பிரிவில் சக்கத்த நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி பவிக்க்ஷாவும், பாட்டவயல் நடுநிலைப் பள்ளியின் மாணவி அனிதா செபஸ்டியன் ஆகியோர் முறையே 2,3-ம் இடங்களை பிடித்து செஸ்போட்டியை காண தகுதி பெற்றனர்.

    மாணவர்கள் பிரிவில் கொளப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாண வன் புகழேந்தி, கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சரவன்குமார் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்தனர்.

    போட்டிகளில் பங்கு பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை மாவட்ட உதவிதிட்ட அலுவலர் குமார் தலைமையில் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டி–களுக்கான ஏற்பாடுகளை மாவட்ட உடற்கல்வி இயக்குனர் ராஜேஷ் அவர்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.முதன்மை நடுவராக நீலகிரி மாவட்ட சதுரங்க அமைப்பின் துணை செயலாளர் ஜுனைஷ், உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயக்குமார், சுரேஷ் உள்ளிட்டோர் கல நடுவர்களாக பணி–யாற்றினார்.

    • விழாவில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி வளர்ச்சியில் காமராஜரின் பங்கு, சுதந்திரம் பெற்றதில் காமராஜரின் பங்களிப்பு குறித்து ஓவியங்களாக வரைந்தனர்.
    • சிறப்பாக ஓவியங்கள் வரைந்த 6 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது.

    விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) முரளிதரன் தலைமை வகித்தார். ரோட்டரி சங்க தலைவர் சங்கர், முன்னாள் தலைவர்கள் சுசீந்திரன், பாஸ்கரன், சோலை, சாமி.செழியன், செயலர் வசந்தகுமார் பட்டேல், கணேஷ், உதவி தலைமை ஆசிரியர்கள் வரதராஜன், துளசிரெங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் பங்கேற்று 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி வளர்ச்சியில் காமராஜரின் பங்கு, சுதந்திரம் பெற்றதில் காமராஜரின் பங்களிப்பு, முதலமைச்சராக காமராஜர் ஆற்றிய தொண்டுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் காமராஜரின் படங்களை ஓவியங்களாக வரைந்தனர்.

    சிறப்பாக ஓவியங்கள் வரைந்த 6 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல் காமராஜரின் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்புகளில் நடைபெற்ற பேச்சு போட்டியில் மாணவ மாணவிகள் ஆர்வமாக, சிறப்பாக பேசினர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு காமராஜரின் வாழ்க்கை வரலாறு குறித்த புத்தகம் வழங்கப்பட்டது.

    • ராமேசுவரத்தில் நடந்த விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • ‘என் குப்பை என் பொறுப்பு’ என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டிகள் நடந்தன.

    ராமேசுவரம்

    ராமேசுவரத்தில் தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டு 'என் குப்பை என் பொறுப்பு' என்ற பெயரில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    ராமேசுவரம் நகராட்சி முழுவதும் தூய்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி சுகாதாரத்தை மேம்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக ராமேசுவரம் நகராட்சியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 'என் குப்பை என் பொறுப்பு' என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டிகள் நடைபெற்றது.

    இந்த போட்டிகளில் ராமேசுவரம் பகுதியில் உள்ள அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

    இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு நகராட்சி நிர்வாக சார்பில் சான்றிதழும், நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் ராமேசுவரம் நகர் மன்ற தலைவர் நாசர்கான் மற்றும் நகர் மன்ற துணை தலைவர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாபெரும் 24 மணி நேர ரத்ததான முகாம்.
    • ரத்ததான முகாமில் பங்கேற்கும் குருதி கொடையாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவ ட்டம், நன்னிலம்வள்ள லார் குருகுலம் குருதி கொடையாளர் சங்க த்தின் செயற்குழுகூட்டம் நடைபெற்றது. இக்கூட்ட த்திற்கு தலைவர் உத்தமன் தலைமை தாங்கினார். செயலாளர் பரிமளா காந்தி வரவேற்றுப் பேசினார்.

    இக்கூட்டத்தில் வருகின்ற அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மாபெரும் 24 மணி நேர ரத்ததான முகாம் நடத்துவது, ரத்ததான முகாமில் பங்கேற்கும் குருதி கொடையாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசுகள் வழங்குவது, குருதிக் கொடை யாளர்கள் விவரங்கள் அடங்கிய புத்தகம் வெளி யிடுவது, அதிக குருதிக் கொடை வழங்கிய குருதிக் கொடையாளர்கள் கவுரவி ப்பது, மேலும் அன்றைய தினம் தமிழர்களின் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவ முகாம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.முடிவில் பொருளாளர் நந்தன் நன்றி கூறினார்.

    ×