search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 226978"

    • மாவட்ட கலெக்டர் அரவிந்த் தகவல்
    • கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ள தாவது:-

    தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மை யினராக அறிவிக்கப் பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர் புத்த மதத்தினார். பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனி கல்வி நிலையங்களில் 2022-23 கல்வியாண்டில் ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும், 11-ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை வாழ்க்கை தொழிற்கல்வி, பாலிடெக்னிக் செவிலியர், ஆசிரியர் பட்டயப்படிப்பு இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் www.acholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    தகுதியான மாணவ மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 30.09.2022 வரையிலும், பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கு 31.10.2022 வரையிலும் மேற்படி இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    இந்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள கல்வி நிலையங்கள், தங்களின் கல்வி நிலை யத்திற்கான ஒருங்கிணைப்பு அலுவலரின் ஆதார் விவரங்களை இணைத்த பின்னரே விண்ணப் பங்களை இணையத்தில் சரிபார்க்க இயலும். புதிதாக விண்ணப்பிக்கும் மாணவ மாணவிகல் இணையதளத்தில் எளி தாக விண்ணப்பிக்கும் வகையில் அனைத்து கல்வி நிலையங்களும் தங்களுடைய UDISE/AISHE/NCVT குறியீட்டு எண்ணை மாணவியர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

    இத்திட்டம் தொடர் பான இந்திய அரசால் வெளி யிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http:www.minorityaffairs gov.in/schemes/ என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர் பான கூடுதல் விவரங் களுக்கு மாவட்ட பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • பள்ளி கட்டிடங்களில் விரிசல் காணப்படுகிறது. பள்ளி கட்டிடங்களின் மேற்கூரை பழுதடைந்து உள்ளதால் தார்ப்பாய் விரித்து பாடம் படிக்கும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
    • கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழவந்தி புளியங்கடை பகுதி பள்ளியை பார்வையிட்டார். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக ஊர் மக்களிடம் உறுதியளித்துள்ளார்.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 9 பஞ்சா–யத்துக்கள், 70 கிராமங்கள் உள்ளன. மலைவாழ் மக்களின் வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய காப்பி தோட்டத்தில் கூலி வேலை செய்பவர்களே அதிகம். மலைவாழ் மக்கள் பெரும்பாலானோர் அவர்களது குழந்தைகளின் கல்விக்கு அரசு பள்ளி–களையே நம்பி உள்ளனர்.

    இதனால் பெரும்பாலான கூலி தொழிலாளர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளுக்கே அனுப்பி வைக்கின்றனர். ஆனால் மலை கிராமங்களில் உள்ள சில பள்ளி கட்டிடங்களின் தரம் கேள்விக்குறியாக உள்ளது.

    குறிப்பாக, வாழவந்தி புளியங்கடை பகுதியில் உள்ள பள்ளியின் நிலை மிகவும் மோசமாக காணப்படுகிறது. இங்குள்ள பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கின்றனர். இங்குள்ள பள்ளிக்கட்டிடங்களில் மழைக்காலங்களில் மழை நீர் உள்ளே புகும் அவலம் உள்ளது.

    பள்ளி கட்டிடங்களில் விரிசல் காணப்படுகிறது. பள்ளி கட்டிடங்களின் மேற்கூரை பழுதடைந்து உள்ளதால் தார்ப்பாய் விரித்து பாடம் படிக்கும் நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இடிந்து விழும் தருவாயில் இருக்கும் பள்ளியை சீரமைக்க கோரி பலமுறை அதிகாரியிடம் வலியுறுத்தியும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாக பெற்றோர் வேதனை தெரிவித்தனர்.

    இதே நிலைமை நீடித்தால் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று பெற்றோர்கள் ஆதங்கத்து–டன் தெரிவித்தனர். மேலும் பள்ளியின் மேல் கூரையில் தார்பாய் கட்டும் பணியை பள்ளி ஆசிரியரே சரி செய்யும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

    இனிவரும் காலம் மழைக்காலம் என்பதால் போர்கால அடிப்படையில் பள்ளியை சீர்படுத்தி கொடுக்க வேண்டும் என்று மாலை மலரில் செய்தி வெளியிடப்பட்டது.

    இதன் எதிரொலியாக இன்று ஏற்காட்டில் பள்ளி விழாவில் கலந்துகொள்ள வந்த கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழவந்தி புளியங்கடை பகுதி பள்ளியை பார்வையிட்டார்.

    ஏற்காடு புளியங்கடை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பழுதடைந்துள்ளதாக செய்தி வந்தது. உடனே பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டேன். பள்ளியை பார்வையிட்டு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக ஊர் மக்களிடம் உறுதியளித்துள்ளேன் .

    ஏற்காடு தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ. சித்ராவை தொடர்புகொண்டு பள்ளி சீரமைப்பு பற்றி விவாதித்து, மாவட்ட கலெக்டரிடமும் 'புதிய கட்டிடம் அமைப்பதற்கு தேவையான நடவடிக்கையை உடனே செய்யுமாறும், துறை ரீதியான உதவிகளை செய்வதற்கு காத்திருப்பதாகவும்' உறுதியளித்தேன்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழியில் ஆரோக்கியமான விமர்ச–னங்களுக்கும், நியாயமான கோரிக்கைகளுக்கும் எப்போதும் முன்னுரிமை கொடுப்போம். அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல.பெருமையின் அடையாளம் என்பதை நிரூபிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்வுகளை எழுதுபவர்கள், தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணிக்கே வந்தனர்.
    • தேர்வு மையங்களில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் ஆய்வு மேற்கொண்டார்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு இன்று நடந்தது. தேர்வுக்காக ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 885 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

    இதற்கென சேலம் மாவட்டத்தில் உள்ள 14 வட்டங்களுக்குட்பட்ட 291 தேர்வு மையங்களில் 394 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை தேர்வு நடைபெற்றது. இதில் 96,207 பேர் தேர்வு எழுதினர்.

    தேர்வுகளை எழுதுபவர்கள், தேர்வு மையத்திற்கு காலை 8.30 மணிக்கே வந்தனர். முதலில் தேர்வர்களின் புகைப்படம், பெயர், பதிவு எண் உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 9 மணிக்கு தேர்வு மைய கதவுகள் பூட்டப்பட்டன. அதற்கு முன் வந்த தேர்வர்கள் மட்டுமே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    சேலம் சாரதா மகளிர் கல்லூரியில் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி எழுதுபவர் உதவியுடன் தேர்வு எழுதுவதை  மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டார்.

    சேலம் சாரதா மகளிர் கல்லூரியில் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி எழுதுபவர் உதவியுடன் தேர்வு எழுதுவதை மாவட்ட கலெக்டர் கார்மேகம் பார்வையிட்டார்.

    தமதமாக வந்தவர்கள் அனுமதிக்கப்படவில்லை. தேர்வினை கண்காணிப்பதற்காக 394 தேர்வு கூட கண்காணிப்பாளர்கள், 24 பறக்கும் படைகளும், 96 கண்காணிப்பு குழுக்களும் நியமிக்கப்பட்டது. மேலும் இதனை கண்காணித்திடவும், தேர்விற்கான அனைத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளும் பொருட்டும் பல்வேறு நிலையிலான அலுவலர்கள் மற்றும் தலைமை கண்காணிப்பாளர் ஆகியோர் ஈடுபடுத்தப்பட்டனர்.

    அவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் விதிமுறைக்கேற்ப வினாத்தாள் வழங்குதல், விடைத்தாள் வழங்குதல், விடைத்தாள்களை சேகரித்தல், தேர்வு எழுதும் நேரம் மற்றும் தேர்வு எழுதுபவர்களின் நுழைவு சீட்டு ஆகியவற்றை சரிபார்த்தல் போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டனர்.

    தேர்வு மையங்களில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் ஆய்வு மேற்கொண்டார். தேர்வு மையங்களுக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

    • அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அனைத்து பள்ளி மாணவா்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற்றன.
    • முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-ம்ப பரிசாக ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளதாக தமிழ் வளா்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

    நாமக்கல்:

    தமிழ்நாடு தினத்தை யொட்டிமாவட்ட அளவில் அனைத்து பள்ளி மாணவா்களுக்கான கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றன. 2 போட்டிகளிலும் மொத்தம் 53 போ் கலந்து கொண்டனா்.

    தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் வே.ஜோதி தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியா் இரா.பெரியண்ணன், உதவி தலைமை ஆசிரியா் இல. ஜெகதீசன் முன்னிலை வகித்தனா். அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 6 ஆசிரியா்கள் நடு வா்களாகச் செயல்பட்டனர்.

    பேச்சுப் போட்டியில் நாமக்கல் அரசு மகளிா் பள்ளியின் 11-ம் வகுப்பு மாணவி கோபிகா முதலி டத்தையும், எா்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி 6-ம் வகுப்பு மாணவி மிது னாஸ்ரீநிதி 2-ம் இடத்தையும், பாண்டமங்கலம் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி வித்யாஸ்ரீ 3-ம் இடத்தையும் பிடித்தனர்.

    கட்டுரைப் போட்டியில், வெண்ணந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவா் சுனில்குமாா் முதலிடம், எலச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி 12-ஆம் வகுப்பு மாணவி பவித்ரா 2-ம் இடம், பீச்சாம்பா ளையம் விஐபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜனனி 3-ம்இடம் பிடித்தனர்.முதலிடம் பிடித்த மாணவா்கள் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனா்.

    மாவட்ட அளவில் இவா்களுக்கு விரைவில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-ம்ப பரிசாக ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளதாக தமிழ் வளா்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

    • அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை பிரிவுக்கு புதிய கட்டிடம் வேண்டி திருப்பூர் எம்.பி. சுப்பராயனிடம் அரசு மருத்துவமனை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அவசர சிகிச்சை பிரிவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

    அந்தியூர்:

    அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அவசர சிகிச்சை பிரிவுக்கு புதிய கட்டிடம் வேண்டி திருப்பூர் எம்.பி. சுப்பராயனிடம் அரசு மருத்துவமனை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதையடுத்து அவரது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.53 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவசர சிகிச்சை பிரிவுக்கான கட்டிட பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் சுப்பராயன் எம்.பி. முன்னிலையில் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அவசர சிகிச்சை பிரிவை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

    இதில் மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கோமதி, தலைமை டாக்டர் விஸ்வேஸ்வரன், டாக்டர்கள் செல்வம், சுரேந்திரன், விஜயா, கலைவாணி, ஆத்மாதன், ராம்குமார், தலைமை செவிலியர் மலர்விழி, அல்ட்ரா தொண்டு நிறுவன நிறுவனர் தண்டாயுதபாணி, முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் நாகராஜா, வட்டாரத் தலைவர் பழனிமுத்து, நகர தலைவர் ஜலாலுதீன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக டாக்டர் கவிதா அனைவரையும் வரவேற்றார்.

    • மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகையை அரசுக்கு ஆதிதிராவிடர் நல அலுவலகம் திருப்பி அனுப்பியது.
    • மாணவிகளுக்கு அரசின் சார்பில் ஆண்டுதோறும் ஊக்க தொகை வழங்கப்பட்டு வருகிறது.

    சிவகங்கை

    ஆதி திராவிடர் வகுப்பை சேர்ந்த மாணவிகளின் பள்ளி இடைநிற்றலை தவிர்ப்பதற்காக 3-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு அரசின் சார்பில் ஆண்டுதோறும் ஊக்க தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் 3,4-ம் வகுப்பு மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.500-ம், 5,6-ம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.1000-மும், 7,8 -ம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 1500-ம் வழங்கப்பட்டு வருகிறது.

    சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மாணவிகளின் எண்ணிக்கை, எத்தனை மாணவிகள் இந்த திட்டத்தில் பயன்பெறுகிறார்கள்?, இந்த ஆண்டில் எத்தனை மாணவிகளுக்கு ஊக்க தொகை வழங்கப்பட்டுள்ளது? என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணி இயக்க செயலாளர் வீரையா ஆதி திராவிடர் நலத்துறைக்கு கேள்வி எழுப்பியிருந்தார்.

    இதற்கு பதிலளித்த துறை நிர்வாகம் மொத்த ஆதி திராவிடர் மாணவிகளின் எண்ணிக்கை தங்களிடம் இல்லை என்றும், 2021-22-ம் ஆண்டில் 6,854 மாணவிகளுக்கு ரூ.65லட்சத்து29 ஆயிரம் அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

    மேலும் 361 மாணவிகளுக்கு சரியான வங்கி கணக்கு விபரங்கள் இல்லாததால் ரூ.7 லட்சத்து 99 ஆயிரத்தை அரசின் வங்கி கணக்கிற்கு திரும்ப அனுப்பபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிகளின் வங்கி கணக்கு சரியாக இல்லை என்றால் மீண்டும் சரிபார்த்து மாணவிகளுக்கு ஊக்க தொகைவழங்க நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகளின் அலட்சியத்தால் அரசிற்கே நிதி திரும்ப செலுத்தப்பட்டது தவறு. தவறு செய்த அதிகாரிகளிடம் இருந்து மாவட்ட நிர்வாகம் அந்த நிதியை சமன் செய்ய அவர்களது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து மீண்டும் மாணவிகளுக்கு ஊக்க தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அவ்வாறு செய்யாத பட்சத்தில் மாணவிகளின் பெற்றோர்களுடன் இனைந்து போராட்டம் நடத்தப்படும் என்று தீண்டா மை ஒழிப்பு முன்னனியினர் எச்சரிக்கைவிடுத்தனர்.

    மாணவிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை வங்கி விபரம் முறையாக இல்லை என கூறி அதிகாரிகள் அரசிற்கே திருப்பி அனுப்பிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • திருக்காட்டுப்பள்ளியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிதாக தொடங்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
    • எனவே, மாணவ-மாணவிகள் வருகிற ஜூலை 7-க்குள் இணைய வழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு முதல்வர் ராஜா வரதராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிதாக தொடங்குவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

    இதன்படி, புதிய கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை இணைய வழியில் தொடங்க ப்பட்டுள்ளது. தற்காலிகமாக பூதலூர் கூட்டுறவு காலனி பகுதியில் உள்ள பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கல்லூரி வகுப்புகள் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    புதிய கலை அறிவியல் கல்லூரியில் முதல்வராக தஞ்சை மன்னர் அரசு சரபோஜி கல்லூரியில் தமிழ் துறைதலைவராக பணியாற்றி வரும் பேராசிரியர் டாக்டர் ராஜாவரதராஜா நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொ ண்டார்.

    புதிதாக தொடங்க வுள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் நடப்பாண்டு பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.காம், பி.பி.ஏ, பி.எஸ்.சி கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் வகுப்புகள் தொடங்க உள்ளது. எனவே, மாணவ-மாணவிகள் வருகிற ஜூலை 7-க்குள் இணைய வழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு முதல்வர் ராஜா வரதராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

    • பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2022-2023-ம் கல்வியாண்டிற்கு நேரடி 2-ம் ஆண்டு மற்றும் முதலாமாண்டு முழு நேரம் பட்டயப்படிப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை பெருந்துறை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

    ஈரோடு:

    பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2022-2023-ம் கல்வியாண்டிற்கு நேரடி 2-ம் ஆண்டு மற்றும் முதலாமாண்டு முழு நேரம் பட்டயப்படிப்பில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். www.tnpoly.in என்ற இணையதளம் மூலம் வரும் அடுத்த மாதம் 8-ந் தேதி வரை விண்ணப்பித்து பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.

    இந்த கல்லூரியில் அமைப்பியல், எந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் மற்றும் கணிணி பொறி யியல் என 5 முழுநேரப் பாடப்பிரிவுகள் உள்ளன. ஒவ்வொரு பாடப்பிரிவிலும் 60 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.

    இணையதளம் வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யும் பொதுப்பிரிவினர் ரூ.150 பதிவுக்கட்டணமாக கிரிடிட் கார்டு, டேபிட் கார்டு,நெட் பேங்க் மூலம் செலுத்தலாம். பழங்குடி-பட்டியல் பிரிவினருக்கு விண்ணப்ப பதிவுக்கட்டணம் இல்லை.

    முதலாம் ஆண்டில் சேர விரும்பும் மாணவர்கள் 10-ம் வகுப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணை யான கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    நேரடி 2-ம் ஆண்டு சேர விரும்பும் மாணவர்கள் மேல்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இயற்பி யல், வேதியியல், கணிதம், உயிரியல் அல்லது தொழில் பிரிவில் கணிதம், இயற்பியல், வேதியியல் அல்லது அதற்கு சமமான படிப்பு படித்து இருக்க வேண்டும்.

    இந்த தகவலை பெருந்துறை அரசினர் பாலி டெக்னிக் கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.

    • கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவர் தினகரன் முறையாக விடுப்பு எடுக்காமல் உடன் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்களுடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அவருக்கு பதிலாக அவரது மகன் அஸ்வின் என்பவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.
    • இது குறித்து ஈரோடு சுகாதார துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு, ஜூன். 22-

    ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவராக தினகரன் (57) என்பவர் உள்ளார்.

    இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலைமை மருத்துவர் தினகரன் முறையாக விடுப்பு எடுக்காமல் உடன் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்களுடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

    அந்த சமயம் அவருக்கு பதிலாக அவரது மகன் அஸ்வின் என்பவர் கவுந்தப்பாடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார்.

    அப்போது கவுந்தபாடி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவர் சிகிச்சைக்கு வந்தார். மருத்துவர் எங்கே என்று கேட்டபோது தான் பவானி அரசு மருத்துவமனையின் மருத்துவர் என்று கூறி சிகிச்சை அளித்துள்ளார்.

    அதற்கு பின்னர் தான் சிகிச்சை அளித்த அஸ்வின் அரசு தலைமை மருத்துவர் தினகரன் மகன் என தெரியவந்தது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து தலைமை மருத்துவர் தினகரன், பணியில் இல்லாத பெண் மருத்துவர் சண்முகவடிவு ஆகியோரை சஸ்பெண்டு செய்து சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்தது.

    இந்நிலையில் கவுந்தப்பாடி சத்தி சாலையை சேர்ந்த கூலி தொழிலாளியான முருகேசன்(42) என்பவர் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளித்த புகார் மனு அளித்தார்.

    அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

    நான் வயிற்று வலி காரணமாக எனது நண்பர் உதவியுடன் கடந்த 19-ந் தேதி மாலை சுமார் 6.40 மணிக்கு கவுந்தப்பாடி அரசு மருத்துவ மனைக்கு சென்றேன். அங்கு தலைமை மருத்துவர் தினகரனுக்கு பதிலாக வேறொரு வாலிபர் இருந்தார்.

    அவரிடம் டாக்டர் எங்கே என கேட்டபோது, நான் தான் டாக்டர் எனவும், பவானி அரசு மருத்துவ மனை மருத்துவர் என கூறி எனக்கு வெளிநோயாளி சீட்டு பதிவு செய்யாமல் ஊசி செலுத்தி, சீட்டு ஏதும் இன்றி மாத்திரைகளை வழங்கினார்.

    இதையடுத்து அடுத்த நாள் எனக்கு மருத்துவம் பார்த்தது தலைமை மருத்துவர் தினகரனின் மகன் அஸ்வின் என்பதும், அவா் அரசு மருத்துவர் இல்லை என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தேன். இதுதொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி தலைமை மருத்துவர் தினகரன், பெண் மருத்துவர் சண்முகவடிவு ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    ஆனால், போலியாக அரசு மருத்துவமனையில், மருத்துவர் என நம்ப வைத்து சிகிச்சை அளித்த அஸ்வின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தந்தைக்கு பதிலாக மருத்துவம் பார்த்த தலைமை மருத்துவரின் மகன் அஸ்வின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

    இந்நிலையில் ஈரோடு சுகாதார துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் விசாரணையை முடித்து இதுகுறித்து நடவடிக்கை எடுக்க போலீசிடம் புகார் அளிப்பார்கள். அதன் அடிப்படையில் அஸ்வின் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என தெரியவருகிறது.

    தாளவாடி, அந்தியூர் அரசு கலை கல்லூரியில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் விண்ணப்பின்னலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் அந்தியூர் பகுதியில் கலை கல்லூரி அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.

    இதையடுத்து மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அந்தியூர் ஏ.ஜி. வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. சட்டமன்ற கூட்டத்தொடரில் அந்தியூர் பகுதிக்கு அரசு கலை அறிவியல் கல்லூரி அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை அடுத்து இந்த கல்வி ஆண்டில்கல்லூரி தொடங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அந்தியூரில் அரசு கல்லூரி தொடங்கப்பட்டது.

    இதையடுத்து 2022-2023-ம் ஆண்டுக்கான சேர்க்கை இன்று தொடங்கியது. பி.ஏ. தமிழ் பி.ஏ. ஆங்கிலம். பி.எஸ்.சி.கணிதம். பி.எஸ்.சி. கணினி அறிவியல், .பி.காம். இந்த பாடப்பிரிவுகளில் ஒவ்வொரு பாடப் பிரிவிலும் 60 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளார்கள்.

    இதற்கான வகுப்பறைகள் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் செயல்பட உள்ளது.

    இதே போல் தாளவாடி பகுதியில் அரசு கலை கல்லூரி தொடங்கப்பட்டது. கல்லூரியில் 2022-23-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இனறு தொடங்கி நடந்து வருகிறது. விருப்பமுள்ள மாணவர்கள் கல்லூரியில் சேருவதற்கு விண்ணப்பின்னலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • அந்தியூர் அடுத்த பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலை ப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
    • தேசிய மாணவர் படை (என்சிசி)மாணவ-மாணவிகள் பள்ளியில் தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தலைமையில் யோகா சனம் செய்தனர்.

    அந்தியூர்:

    நாடு முழுவதும் யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பிரதமர் மோடி பெங்களூரில் நடக்கும் விழாவில் கலந்து கொண்டு யோகா செய்கிறார். இதையடுத்து பள்ளி மற்றும் பல்வேறு பகுதிகளிலும் யோகா நிகழ்ச்சி நடந்து வருகிறது.

    இதேபோல் ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலை ப்பள்ளியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி தேசிய மாணவர் படை (என்சிசி)மாணவ-மாணவிகள் பள்ளியில் தலைமை ஆசிரியர் பாலகிருஷ்ணன் தலைமையில் யோகா சனம் செய்தனர்.

    நிகழ்ச்சியை தேசிய மாணவர் படை அலுவலர் ராஜேஷ்குமார் ஒருங்கி ணைந்து வழி நடத்தினார். இதில் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    குமாரபாளையம் அரசு பள்ளியில் மேயும் கால்நடைகளால் மாணவர்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அப்பகுதி கால்நடைகள் வளர்ப்போர் தங்கள் கால்நடைகளை பள்ளி வளாகத்திற்கு அழைத்து வந்து மேய விடுகின்றனர். கால்நடைகளால் மாணவர்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது.

    விளையாட்டு பயிற்சி, என்.சி.சி. பயிற்சி பெறும் மாணவர்கள் செய்வதறியாது உள்ளனர். பள்ளி வளாகத்திற்குள் கால்நடைகளை மேய்க்க அனுமதிக்க கூடாது. கடும் வெப்பம் காரணமாக வகுப்பறை வெளியில் மரத்தடியில் கூட சில நேரம் வகுப்புகள் நடைபெறுகிறது.

    இவ்வாறு நடத்தப்படும் வகுப்புகளுக்கும் இடையூறாக இருப்பதால் கால்நடைகள் மேய்ச்சலுக்கு தடை விதிக்கவேண்டும் என கோரிக்கை விடப்பட்டு உள்ளது.

    ×