search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 226978"

    • கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் அரசு பஸ் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்ட தனியார் பஸ் கண்டக்டரை விசாரணை நடத்தி கண்டித்து அனுப்பி வைத்தார்.
    • இந்த சம்பவத்தால் சுமார் 20 நிமிடங்கள் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    கொடுமுடி:

    வேலூரில் இருந்து ஈரோடு செல்லும் தனியார் பஸ் கொடுமுடி பஸ் நிலையத்துக்கு காலை 9.30 மணிக்கு வந்து 9.40-க்கு செல்ல வேண்டும்.

    இந்நிலையில் இன்று 9.25 மணிக்கு கொடுமுடி பஸ் நிலையம் வந்த தனியார் பஸ்சின் கண்டக்டர் பஸ் நிலையத்தில் ஈரோட்டுக்கு பயணிகளை ஏற்றி கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு இருந்த அரசு பஸ் நேரக்காப்பாளர் 9.30-க்கு அரசு பேருந்து உள்ளது. பயணிகளை ஏற்ற வேண்டாம் என்று கூறியதற்கு அப்படித்தான் ஏற்றுவேன் என்று தகராறில் ஈடுபட்டார்.

    அப்போது அங்கு வந்த கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் அரசு பஸ் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்ட தனியார் பஸ் கண்டக்டரை விசாரணை நடத்தி கண்டித்து அனுப்பி வைத்தார்.

    மேலும் தனியார் பஸ் கண்டக்டர் சென்னையில் உள்ள கல்லூரியில் எம்.பி.ஏ பட்ட படித்து வருபவர் என்றும், கல்லூரி விடுமுறை என்பதால் இன்று ஒரு நாள் கண்டக்டராக பணிக்கு வந்தவர் என்றும் தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் சுமார் 20 நிமிடங்கள் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் குமாரபாளையம் அரசு கல்லூரி மாணவர் முதலிடம் பிடித்தார்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு குறித்த பேச்சுப்போட்டி நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

    இதில் தகுதி பெற்ற 25 மாணவ, மாணவியர் பங்கேற்று பேசினார்கள். இதில் குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை இளங்கலை 2-ம் ஆண்டு படிக்கும் மோகன்ராஜ் முதலிடம் பிடித்து, மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங்கிடம் சான்றிதழ் மற்றும் 5 ஆயிரத்திற்கான காசோலை பெற்று சாதனை படைத்தார்.

    இவரை கல்லூரியின் முதல்வர் ரேணுகா மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

    • அரசுதுறை உயர் அதிகாரிகள் இந்த ஆய்வு பணியை மேற்கொண்டனர்.
    • கடந்த காலங்களில் நடந்த தவறுகள் குறித்து சில நடவடிக்கைகள் எடுக்குமாறு மத்திய பொதுக்கணக்கு குழுவினர் கூறியுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூரில் இன்று தமிழ்நாடு சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவினர் அரசு திட்டப்பணிகளை ஆய்வு செய்தனர். பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ.,தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் மாதவரம் தொகுதி சுதர்சனம் ,திருத்துறைப்பூண்டி மாரிமுத்து , வீரபாண்டி ராஜமுத்து ஆகியோருடன் திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., செல்வராஜ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், கலெக்டர் வினீத் மற்றும் அரசுதுறை உயர் அதிகாரிகள் இந்த ஆய்வு பணியை மேற்கொண்டனர்.

    திருப்பூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் கழிவுநீர் வடிகால் , பேருந்து நிலைய கட்டிட பணிகள் , புதிய மருத்துவகல்லூரி பணிகள் உட்பட பல்வேறு பணிகளை ஆய்வு செய்தனர்.பின்னர் செல்வபெருந்தகை எம்.எல்.ஏ.,நிருபர்களிடம் கூறுகையில், மத்திய பொது கணக்கு குழு தணிக்கை செய்து கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் துறை வாரியாக ஆய்வு செய்கிறோம் .

    மேலும் கடந்த காலங்களில் நடந்த தவறுகள் குறித்து சில நடவடிக்கைகள் எடுக்குமாறு மத்திய பொதுக்கணக்கு குழுவினர் கூறியுள்ளதாகவும் , அதன் அடிப்படையில் ஆய்வு நடைபெறுவதாகவும் கூறினார். என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் , பொதுக்கணக்கு குழு என்ன பரிந்துரை செய்தார்கள் என்பதையும் மதியம் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு முழுமையாக தெரி விக்கப்படும் என்றார்.

    ×