search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாயாசம்"

    • கேரட் கீர் செய்ய 15 நிமிடங்களே போதுமானது.
    • வீட்டிற்கு திடீரென விருந்தினர் வந்தால் இந்த கீர் செய்து அசத்தலாம்.

    தேவையான பொருட்கள்

    கேரட் - 3

    பாதாம் பவுடர் - 1 1/2 மேசைக்கரண்டி

    பால் - அரை கப்

    பாதாம் பருப்பு - 10

    சர்க்கரை - கால் கப் + 2 மேசைக்கரண்டி

    உப்பு - ஒரு சிட்டிகை

    செய்முறை

    கேரட்டை துருவி எடுத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் ஊற்றி துருவிய கேரட்டை போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.

    வெந்ததும் எடுத்து தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் போட்டு ஒரு முறை அரைத்துக் கொள்ளவும்.

    அதை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு சர்க்கரை, பாதாம் பவுடர், பாதாம் பருப்பு, உப்பு, பால் ஆகியவற்றை சேர்த்து கலந்து அடுப்பில் வைத்து மிதமான தீயில் சிறிது நேரம் கொதிக்க விடவும்.

    கீர் திக்கான பதம் வந்தவுடன் அதை இறக்கி சூடாகவோ, பிரிட்ஜில் வைத்து நன்கு குளிர்ச்சியாகவோ குடிக்கலாம்.

    இப்போது சூப்பரான கேரட் கீர் ரெடி.

    • வீட்டில் குழந்தைகளுக்கு பாயாசம், கீர் செய்து கொடுத்து இருப்பீங்க.
    • இன்று வித்தியாசமாக ஆப்பிள் ரபடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    ஆப்பிள் - 2,

    பால் - அரை லிட்டர்,

    சர்க்கரை - ஒரு கப்,

    பாதாம் - 10 (துருவிக் கொள்ளவும்),

    ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்,

    முந்திரிப் பொடி - 2 டீஸ்பூன்.

    செய்முறை:

    பாலை நன்கு காய்ச்சி வைக்கவும்.

    ஆப்பிளை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.

    துருவிய ஆப்பிளை வெறும் கடாயில் சூடுபட கிளறவும்… சர்க்கரை, பால் சேர்த்து, குறைவான தீயில் கொதிக்கவிடவும்.

    திக்கான பதம் வந்ததும், பாதாம் துருவல், முந்திரிப் பொடி, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலக்கி இறக்கவும்.

    இதை சூடாகவோ… குளிர வைத்தோ பரிமாறலாம்.

    இப்போது சூப்பரான ஆப்பிள் ரபடி ரெடி.

    ×