search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டியல்"

    • இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து தற்போதைய தொடர் திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    • வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர், முகவரி இவற்றில் ஏதேனும் பிழை இருப்பின் படிவம் எண் 8 பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிரு ப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி தஞ்சை மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து அங்கீகரி க்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டரால் வெளியிடப்பட்டது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து தற்போதைய தொடர் திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    எனவே 1-1-2004 அன்றோ அல்லது அதற்கு முன்போ பிறந்த தகுதியுடைய மற்றும் வாக்காளர் பட்டியலில் இடம் பெறாமல் உள்ளவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட படிவம் எண் 6-ஐ அந்தந்த வட்ட அலுவலகங்களில் பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். அதனுடன் வயது மற்றும் இருப்பிடத்திற்கான ஆதார ஆவண நகல்களை இணைத்து தங்கள் பாஸ்போர்ட் சைஸ்புகைப்ப டத்தை படிவத்தில் ஒட்டி அந்தந்த தாசில்தார் அலுவ லகங்களில் வழங்கலாம்.

    வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர், முகவரி இவற்றில் ஏதேனும் பிழை இருப்பின் படிவம் எண் 8 பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம்.இறந்த மற்றும் வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் பெயர் இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் குறித்து படிவம் எண் 7 அளிக்கலாம்.

    ஒரே சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் குடி பெயர்ந்த வாக்காளர்கள் படிவம் எண் 8ஏ பெற்று பூர்த்தி செய்து முகவரி மாற்றம் செய்து கொள்ளலாம்.

    வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் புதிய வாக்காளர்களுக்கு அஞ்சல் துறை மூலம் விரைவு தபால் மூலமாக வாக்காளர் அடையாள அட்டை கட்டணம் இன்றி நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் www.nvsb.in என்ற இணையதளம் மற்றும் voters help line என்ற மொபைல் ஆப் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விவரங்கள் அறிய 1950 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    தொலைந்த , காணாமல் போன வாக்காளர் அட்டைக்கு மாற்று அட்டையினை படிவம் 1-ஐ பூர்த்தி செய்து தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தானியங்கி எந்திரத்தின் வாயிலாக கட்டணம் இன்றி பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னிமலை பகுதியிலும் கந்து வட்டி கொடுமை உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் சென்றது.
    • அதிக வட்டி வாங்கி வரும் கந்து வட்டி வசூலிக்கும் நபர்களின் பட்டியலை உளவு பிரிவு போலீசார் ரகசியமாக சேகரித்து வருகின்றனர்.

    சென்னிமலை: –

    சென்னிமலை பகுதியில் நிதி நிறுவனம், பைனான்ஸ், அடகு கடை என்ற பெயரில் தினசரி வசூல் விட்டு அதிக வட்டி வாங்கி வரும் கந்து வட்டி வசூலிக்கும் நபர்களின் பட்டியலை உளவு பிரிவு போலீஸார் சேகரித்து வருகின்றனர்.

    சென்னிமலை அருகே மணிமலைகரடு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றும் நபர் கடன் தொல்லையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதை தொடர்ந்து சென்னிமலை பகுதியிலும் கந்து வட்டி கொடுமை உள்ளதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் சென்றது.

    அதை தொடர்ந்து சென்னிமலை ஒன்றிய பகுதியில் தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் கடைக்காரர்களை குறிவைத்து நிதி நிறுவனம், பைனான்ஸ், அடகு கடை என்ற பெயரில் வெற்று பத்திரங்களில் கையெழுத்து பெற்று கடன் கொடுத்து தினசரி வசூல், மீட்டர் வட்டி, தின வட்டி என அதிக வட்டி வாங்கி வரும் கந்து வட்டி வசூலிக்கும் நபர்களின் பட்டியலை உளவு பிரிவு போலீசார் ரகசியமாக சேகரித்து வருகின்றனர்.

    இந்த ரகசிய தகவல் கசிய தொடங்கியதால் சென்னிமலை பகுதியில் கந்து வட்டி கும்பல் அலறிதுடித்து வருகின்றனர்.

    தற்போது பணம் பெற்ற நபர்களிடம் மிரட்டும் தோனியை விட்டு பம்பி பணிந்து கடன் தொகையினை வசூலித்து வருகின்றனர்.

    ×