என் மலர்
நீங்கள் தேடியது "ரேசன் கடை"
- 46-வது வார்டில் நடைபெற்ற பகுதி குழு கூட்டத்தில் தீர்மானம்
- 46-வது வார்டுக்குட்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட 46-வது வார்டில் பகுதி குழு கூட்டம் கீழவண்ணான்விளை வேங்கை நற்பணி மன்ற வளாகத்தில் நடைபெற்றது. நாகர்கோவில் மாநகராட்சி 46-வது வார்டு மாமன்ற உறுப்பினர் வீரசூரபெருமாள் தலைமை தாங்கினார். கூட்டத்தில் 46-வது வார்டுக்குட்பட்ட மிகவும் மோசமான அனைத்து சாலைகளையும் உடனடியாக செப்பனிடுவது, குடிநீர் பிரச்சினையை தீர்ப்பது, தெரு விளக்குகளை பராமரிப்பது, கீழவண்ணான்விளையில் பகுதி நேர ரேசன் கடை அமைத்து தருவது, என்.ஜி.ஓ. காலனியில் வசிக்கும் மக்களுக்கு கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வது, வடக்குசூரங்குடி சின்னகுளத்திற்கு செல்லும் கழிவுநீரை தடுப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் சுகாதார ஆய்வாளர் ராஜா, பகுதி குழு உறுப்பினர்கள் நாகேந்திரன், சந்திரசேகர், ஸ்ரீராம், முருகன், கீழவண்ணான்விளை ஊர் தலைவர் சுந்தரேசன், வேங்கை நற்பணி மன்ற தலைவர் ராஜாஜி மற்றும் 46-வது வார்டுக்குட்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- பொது விநியோக திட்டத்தை முழுமையாக செயல்படுத்த அனைத்து ஆதரவும் வழங்கப்படும்.
- ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் மாநிலங்களின் முயற்சி பாராட்டத்தக்கது.
மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை சார்பில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த உணவுத்துறை செயலாளர்கள் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டன. அப்போது பேசிய மத்திய உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் சோப்ரா கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் ரேசன் கடைகள் மூலம் பொது விநியோக நடைமுறை சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் ரேசன் கடைகள் ஐஎஸ்ஓ தரச்சான்றிதழ் பெற்றுள்ளது பாராட்டுக்குரியது. மத்திய உணவு மற்றும் பொது விநியோக துறையின் திட்டங்களை மாநிலங்கள் முழுமையாக செயல்படுத்துவதற்கு சாத்தியமான அனைத்து ஆதரவும் வழங்கப்படும்.
2023-24 ஆம் ஆண்டிற்குள் அனைத்து அரசு திட்டங்களிலும் செறிவூட்டப்பட்ட அரிசியை முழுமையாக வழங்குவதை இந்திய அரசு இலக்காகக் கொண்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட கால அவகாசத்தில் செறிவூட்டப்பட்ட அரிசி கொள்முதல், விநியோகம் ஆகியவற்றை உறுதி செய்ய மாநிலங்கள் முழுமையாக தயாராக இருக்க வேண்டும்.
நியாய விலைக் கடைகளின் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்த கூடுதல் வருவாய் வழிகளை மாநிலங்கள் ஆராய வேண்டும். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் புலம்பெயர்ந்தோருக்கு உணவு தானியங்களை உறுதி செய்வதில் மாநிலங்கள் எடுத்துள்ள முயற்சிகள் பாராட்டத்தக்கது. இத்திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 91 கோடிக்கும் அதிகமானோர் பயன் அடைந்துள்ளனர்.
- காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி தலைமை தாங்கி ரேசன் கடையை திறந்து வைத்தார்.
- ஊராட்சி மன்ற உறுப்பினர் சீனிவாசன் நன்றி கூறினார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் இலுப்பக்குடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பொன்நகரில் ரேசன் கடை தொடங்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் நீண்டநாளாக கோரிக்கை விடுத்தனர்.
சாக்கோட்டை யூனியன் தலைவர் சரண்யா செந்தில்நாதன், இலுப்பக்குடி ஊராட்சி மன்ற தலைவர் வைரமுத்து அன்பரசன் ஆகியோரின் முயற்சியால் பொன்நகரில் பகுதிநேர ரேசன் கடை திறக்கப்பட்டது. காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி தலைமை தாங்கி ரேசன் கடையை திறந்து வைத்தார்.
சாக்கோட்டை யூனியன் தலைவர் சரண்யா செந்தில்நாதன், இலுப்பக்குடி ஊராட்சி மன்ற தலைவர் வைரமுத்து அன்பரசன் முன்னிலை வகித்தனர்.
சாக்கோட்டை ஒன்றிய முன்னாள் தலைவர் முத்துராமலிங்கம், சாக்கோட்டை அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், இலுப்பக்குடி ஊராட்சி முன்னாள் தலைவர் அன்பரசன், ஊராட்சி துணை தலைவர் திருநெல்லை ரகுபதி, குடிமைப்பொருள் தாசில்தார் ஜெயநிர்மலா, பொன்.துரைசிங்கம், செல்வகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஊராட்சி மன்ற உறுப்பினர் சீனிவாசன் நன்றி கூறினார்.
- கடை மற்றும் சொந்த விடுமுறை குறித்த தகவல், வழங்கப்படாத பொருட்கள் குறித்த தகவல் போன்றவற்றை நாள்தோறும் பதிவிட்டு வருகிறார்.
- பொதுமக்களுக்கு எளிதில் தகவல் கிடைத்து விடுவதால் ரேஷன் கடைக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வர வேண்டிய நிலை இல்லை.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட குருவப்பநாயக்கனூர் ரேஷன் கடையின் விற்பனையாளராக மாற்றுத்திறனாளி சரவணன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் ரேஷன் கடையில் வழங்கப்பட உள்ள பொருட்கள் குறித்த தகவலை பொதுமக்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் குருவப்ப நாயக்கனூர் ரேஷன் என்ற பெயரில் வாட்ஸ்-அப் குரூப்பை நிறுவி உள்ளார்.
இதன் மூலமாக வார்டு வாரியாக பொருட்கள் வழங்கும் தகவல், என்னென்ன பொருட்கள் போடப்படுகிறது. கடை மற்றும் சொந்த விடுமுறை குறித்த தகவல், வழங்கப்படாத பொருட்கள் குறித்த தகவல் போன்றவற்றை நாள்தோறும் பதிவிட்டு வருகிறார். இதனால் பொதுமக்களுக்கு எளிதில் தகவல் கிடைத்து விடுவதால் ரேஷன் கடைக்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வர வேண்டிய நிலை இல்லை.
இதன் காரணமாக முழுக்க முழுக்க விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கூலித்தொழிலாளர்களுக்கு வருமான இழப்பு, காலநேர விரயம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதுடன் சரவணனுக்கு பாராட்டும் தெரிவித்துள்ளனர். இதே போன்று உடுமலை பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பணியாற்றும் பணியாளர்கள் வாட்ஸ்-அப் குருப்பை உருவாக்கி தகவல்களை பரிமாற்றம் செய்து கொண்டால் பொதுமக்களுக்கும் ஏதுவாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
- அமலுவிஜயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கள்ளூர் கிராமத்தில் குடியாத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் ரேசன் கடை செயல்பட்டு வந்தது இந்த ரேசன் கடையில் 2 ஆயிரத்து 120 ரேசன் அட்டைகள் உள்ளன.
இந்த ரேசன் கடையில் சித்தூர் கேட் முனாபாடிப்போ, லட்சுமணாபுரம், காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் இங்கு வந்து பொருட்களை வாங்கி சென்று வந்தனர் அதிகமான ரேசன் அட்டைகள் உள்ளதால் ரேஷனில் பொருட்கள் போடும்போது இங்கு திருவிழா போல் இருந்தது அதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.
கள்ளூர் ரேசன் கடை பெரிதாக உள்ளதால் அதனை பிரித்து அந்தந்த பகுதியில் ரேசன் கடையில் அமைத்துதருமாறு அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் லட்சுமணாபுரம் கிராமத்தில் தனியாக ரேசன் கடை அமைக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர் இதைத்தொடர்ந்து லட்சுமணாபுரத்தில் புதிதாக ரேசன் கடை அமைக்கப்பட்டது இந்த ரேசன் கடையில் 640 குடும்ப அட்டைகள் உள்ளன.
புதிய ரேசன் கடை திறப்பு விழாவிற்கு குடியாத்தம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் டி.சிவா தலைமை தாங்கினார்.குடியாத்தம் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் கள்ளூர்ரவி, ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.உமாபதி, துணைத் தலைவர் டி.அஜீஸ், ஒன்றிய குழு உறுப்பினர்கள் அமுதாலிங்கம், தீபிகா பரத் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க இயக்குனர்கள் முன்னிலை வகித்தனர்.கூட்டுறவு சங்க சார்பதிவாளர் ஜி. பாலசுப்பிரமணியம் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் கலந்து கொண்டு புதிய ரேசன் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் முடிவில் கூட்டுறவு சங்க செயலாளர் வி.ரவி நன்றி கூறினார்.
- விற்பனையாளர் பதவிக்கு கல்வி தகுதி 12-ம் வகுப்பு ஆகும். கட்டுநருக்கு கல்வி தகுதி 10-ம் வகுப்பு ஆகும். 134 பதவிகளுக்கு 11,000 க்கு மேற்பட்டவர்கள் ஆன்லைனில் விண்ணப் பித்திருந்தனர்
- விற்பனையாளர் பதவிக்கான கல்வி தகுதி 12-ம் வகுப்பு ஆகும். ஆனால் பட்டதாரிகள், என்ஜினீயரிங் பட்டதாரிகள் பலரும் நேர்காணலுக்கு வந்திருந்தனர்
நாகர்கோவில் :
கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்ப டும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள பணியி டங்களை நிரப்ப அரசு நட வடிக்கை மேற்கொண்டுள் ளது.
குமரி மாவட்டத்தில் 117 விற்பனையாளர் பதவிக்கும் 17 கட்டுனர்கள் பதவிக்கும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. விற்பனையாளர் பதவிக்கு கல்வி தகுதி 12-ம் வகுப்பு ஆகும். கட்டுநருக்கு கல்வி தகுதி 10-ம் வகுப்பு ஆகும். 134 பதவிகளுக்கு 11,000 க்கு மேற்பட்டவர்கள் ஆன்லைனில் விண்ணப் பித்திருந்தனர். விண்ணப் பித்தவர்களுக்கான நேர்காணல் அழைப்பிதழ் அனுப்பப் பட்டு இருந்தது. இன்று அதற்கான நேர்கா ணல் தொடங்கியது.
நாகர்கோவில் டதி பள்ளியில் விற்பனையாளர் கட்டுநர்களுக்கான நேர்காணல் நடந்தது.நேர்காணலில் பங்கேற்க காலையில் 500 பேருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.
நேர்காணலில் பங்கேற்பதற்கு இன்று காலையிலேயே வாலிபர்கள், பெண்கள் பலரும் வந்திருந்தனர்.நேர்காணலுக்கு வந்த பெண்களை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அழைத்து வந்திருந்தனர். இதைத் தொடர்ந்து விற்பனையாளர் கட்டுனருக்கான நேர்காணல் தொடங்கியது. விண்ணப்பித்தவர்களின் சான்றிதழ் களை அதிகாரி கள் சரிபார்த்தனர்.
விற்பனையாளர் பதவிக்கான கல்வி தகுதி 12-ம் வகுப்பு ஆகும். ஆனால் பட்டதாரிகள், என்ஜினீயரிங் பட்டதாரிகள் பலரும் நேர்காணலுக்கு வந்திருந்தனர். இதே போல் கட்டுநருக்கான நேர்கா ணலுக்கும் பட்டதாரி பெண்கள் வந்திருந்தனர். நேர்காணலுக்கு வந்த வர்களின் ஒரிஜினல் சான்றிதழை அதிகாரிகள் சரி பார்த்தனர்.
இதே போல் மாலையில் 500 பேருக்கு நேர்காணலில் பங்கேற்க அழைப்பானை அனுப்பப்பட்டிருந்தது. அவர்களும் மதியமே நேர்காணல் மையத்திற்கு வந்திருந்தனர். அவர்களது சான்றிதழ்களையும் அதிகாரிகள் சரிபார்த்தனர்.
இன்று தொடங்கிய இந்த நேர்காணல் வருகிற 29-ந்தேதி வரை நடக்கிறது. வருகிற
18, 24, 25-ந்தேதிகள் மட்டும் விடுமுறை தினங்களாகும். மற்ற நாட்களில் தினமும் காலை 500 பேருக்கும் மாலை 500 பேருக்கும் நேர்காணல் நடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வங்கிக்கணக்கு, ஆதார் எண் விபரங்களை ரேசன் கடைகளில் வழங்க வேண்டும்.
- ராமநாதபுரம் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் குடும்ப அட்டை தாரர்களில் வங்கி கணக்கு வைத்து ஆதார் எண் இணைக்கப் பெறாமையாலும் கணக்கு எண் ஒரு வேளை இல்லாமலும் இன்னும் 21704 குடும்ப அட்டை தாரர்கள் உள்ளதாக விவரங்கள் கண்டறியப்பட்டு உள்ளன.
இத்தகைய குடும்ப அட்டை தாரர்கள் விபரம் தற்போது சம்மந்தப்பட்ட நியாய விலைக்கடை வாரியாக பிரித்தெடுக்கப்பட்டு அவர்களிடமிருந்து வங்கி கணக்கு எண்ணில் ஆதார் எண்ணை தொடர்புப்படுத்தி இயக்கத்திற்கு கொண்டு வரவேண்டும் என அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அதற்கான நடவடிக்கையாக கணக்கு எண் உள்ள வங்கியில் படிவம் எண் 2-ஐ பெற்று விவரங்களைப்பூர்த்தி செய்து உடன் அளிக்கும் படியும் இது வரை வங்கிக்கணக்கு எண் இல்லாதவர்கள் கூடுமானவரை அருகில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வங்கி அல்லது கூட்டுறவு வங்கிகளில் புதியதாக வங்கிக்கணக்கு எண், ஆதார் எண் விவரத்தினை இணைத்து உடன் தொடங்கிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- பொருள்களின் தரம் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்
- தண்ணீர் இணைப்பு கொடுக்க உத்தரவிட்டார்
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
வாலாஜா நகராட்சி கச்சால் நாயக்கர் தெருவில் உள்ள கற்பகம் கூட்டுறவு சிறப்பங்காடி நியாய விலை கடையில் உணவுப் பொருள்களின் தரம் மற்றும் அரிசி இருப்பு ஆகியவற்றை பார்வையிட்டு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.
அப்பொழுது பொருள்கள் வழங்கப்பட்ட விவரங்கள், தற்பொழுது இருப்பு உள்ள அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவைகளை எடை போட்டு ஆய்வு செய்தார்.பொருட்கள் இருப்பு எடை அளவை ஆகியவற்றை கைபேசி செயலின் மூலம் பதிவேற்றம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து வாலாஜா ஊராட்சி ஒன்றியம் பூண்டி ஊராட்சியில் உள்ள நியாய விலை கடைகளிலும் அரிசி, பருப்பு ஆகியவற்றின் தரத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து இருப்பில் உள்ள பொருள்களில் எடை அளவை ஆய்வு செய்து பொருட்களின் எடை அளவு சரியாக இருக்கின்றது என தெரிவித்தார்.மேலும் பொதுமக்களிடம் பொருள்களின் தரம் குறித்து கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து பூண்டி ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் திடீரென ஆய்வு செய்து மையத்தில் உள்ள கழிப்பறைகள் சுகாதாரமற்ற இருந்ததை பார்வையிட்டு முறையாக குழந்தைகளுக்கு சுத்தம் செய்து பராமரிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் தண்ணீர் வசதிகள் இல்லை, இதனை உடனடியாக சரி செய்து தண்ணீர் இணைப்பு கொடுக்க உத்தரவிட்டார்.
குழந்தைகளுக்கு சுகாதாரமான சூழ்நிலையை மையத்தில் அமைத்து கொடுக்க வேண்டும் என அங்கன்வாடி மைய ஊழியருக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார், வட்டாட்சியர் நடராஜன், வட்ட வழங்கல் அலுவலர் கண்ணப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி மற்றும் வருவாய்த்துறை பணியாளர்கள் உடனிருந்தனர்.
- சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருகிறது.
- சுற்றுலா தலங்களில் முககவசம் அணியாமல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு முககவசம் வழங்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சுற்றுலா தலங்களில் முககவசம் அணியாமல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு முககவசம் வழங்கவும், கைகளை சுத்தப்படுத்த கிருமிநாசினி வழங்கவும், உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 27 பயனாளிகளுக்கு ரூ.5,42,541 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
- ரூ.1,02,600 மதிப்பீட்டில் 15 பயனாளிகளுக்கு தையல் எந்திரம் வழங்கினார்.
வெள்ளகோவில் :
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம் வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சி, சடையப்பா நகர் மற்றும் கொங்கு நகர் பகுதிகளில் புதிய பகுதிநேர நியாய விலைக்கடைகள் திறப்பு விழா நடைபெற்றது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் அ.லட்சுமணன் தலைமை தாங்கினார். தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு திறந்து வைத்து பொருட்களை வழங்கினார்.
மேலும் வெள்ளகோவில் சுபஸ்ரீ திருமண மண்டபத்தில் கூட்டுறவு துறையின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற ரூ.20.33 கோடி கடனுக்கான தள்ளுபடி சான்றிதழ்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட மற்றும் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி வீல்சேர் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.3,18,000 மதிப்பீட்டில் பேட்டரி வீல்சேர்களையும், பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடையோருக்கான கைபேசி வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1,21,941 மதிப்பீட்டில் 9 பயனாளிகளுக்கு கைபேசிகளையும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1,02,600 மதிப்பீட்டில் 15 பயனாளிகளுக்கு தையல் எந்திரம் என மொத்தம் 27 பயனாளிகளுக்கு ரூ.5,42,541 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சொ.சீனிவாசன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் முருகேசன், வெள்ளகோவில் நகர்மன்றத்தலைவர் கனியரசி முத்துக்குமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
- பொதுமக்களுக்கு அன்னதானம்
செய்யாறு:
செய்யாறு டவுன், கொடநகர் 9-வது வார்டில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.14 லட்சத்தில் புதிய ரேசன் கடை கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர்ஆ. மோகனவேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் குல்ஷார், கவுன்சிலர் ஞானமணி சின்னதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக ஓ.ஜோதி எம்எல்ஏ கலந்துகொண்டு புதிய ரேசன் கடையை திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து கொடநகர் பகுதியில் தி.மு.க. கொடியை ஏற்றி பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
அப்பகுதியை சேர்ந்த பூப்பந்து விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், யூனியன் சேர்மன்கள் ராஜு, பாபு, நகர செயலாளர் கே.விஸ்வநாதன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் சம்பத், ஒன்றிய செயலாளர்கள் ஞானவேல், சங்கர், திராவிட முருகன், நகர மன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், அக்பர், சரஸ்வதி ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- தினமும் 200 பேருக்கு வழங்க ஏற்பாடு
- பொது மக்களுக்கு ரூ.1000 ரொக்கப் பணத்தை வழங்கவும் அதிகாரிகள் நடவடிக்கை
நாகர்கோவில்:
பொங்கல் பண்டிகையை யொட்டி அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சை அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு, ரூ.1000 ரொக்கம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதையடுத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது.குமரி மாவட்டத்தை பொருத்த மட்டில் 764 ரேசன் கடைகள் மூலமாக 5 லட்சத்து 74 ஆயிரத்து 764 ரேசன் கார்டு தாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணியில் ரேசன் கடை ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
அந்தந்த ரேஷன் கடை ஊழியர்கள் ரேசன் கார்டு தாரர்களுக்கு டோக்கன் வழங்கி உள்ளனர். தினமும் காலை 100 பேருக்கும் மாலையில் 100 பேருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்க டோக்கன் வழங்கப் பட்டுள்ளது. நாளை 9-ந் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்புகள் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.
இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் மேயர் மகேஷ், கலெக்டர் அரவிந்த் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இதை தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுதொகுப்பு பொது மக்களுக்கு வழங்கப் படுகிறது. இதற்கு தேவையான பொருட்கள் அந்தந்த ரேஷன் கடை களுக்கு அனுப்பி வைக்கப் பட்டு வருகிறது.
ஏற்கனவே அரிசி சீனி வகைகள் முழுமையாக அனைத்து ரேசன் கடை களுக்கும் அனுப்பி வைக்கப் பட்ட நிலையில் கரும்பு அனுப்பும் பணி தற்பொழுது நடைபெற்று வருகிறது.
நாளை ரேஷன் கடை ஊழியர்களிடம் பொது மக்களுக்கு வழங்க உள்ள ரூ.1000 ரொக்கப் பணத்தை வழங்கவும் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதைத் தொடர்ந்து ரேஷன் கடை மூலமாக பொங்கல் தொகுப்பு வழங்கப்படும்.
கூட்டத்தினை கட்டுப்ப டுத்தும் வகையில் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட டோக்கனின் அடிப்படையில் அந்தந்த ரேஷன் கடை களுக்கு சென்று பொங்கல் தொகுப்புகளை பெற்று செல்லுமாறு அதிகா ரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.