search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 227127"

    • கலெக்டர் அரவிந்த் இன்று தொடங்கி வைத்தார்
    • வாட்டர் டேங்க் சாலையில் ஒரு மைய சமையல் கூடம் அமைக்கப்பட்டு உள்ளது

    நாகர்கோவில்:

    அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். தனது கனவுத் திட்டம் என இதனை அறிவித்த அவர், மதுரையில் நேற்று இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் இன்று செயல்படுத்தப்பட்டது.

    குமரி மாவட்டத்தில் இன்று 19 தொடக்கப் பள்ளிகளில் 973 மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது. நாகர்கோவில் செட்டிகுளம் அரசு தொடக்கப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி தலைமை தாங்கினார். மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். கலெக்டர் அரவிந்த் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து, மாணவ-மாணவிகளுக்கு உணவு வழங்கினார்.

    நாகர்கோவில் பகுதியில் காலை உணவு திட்டத்துக்காக வாட்டர் டேங்க் சாலையில் ஒரு மைய சமையல் கூடம் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் அங்கு தயாராகும் உணவினை 2 மூடியுடன் கூடிய வாகனத்தில் தினசரி (திங்கள் முதல் வெள்ளி வரை) பள்ளி வேலை நாட்களில் காலை 8.15 மணிக்குள் கொண்டு சென்று சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அரவிந்த் தெரிவித்தார்.

    விழாவில் மாநகராட்சி ஆணையாளர் ஆனந்தமோகன், தி.மு.க. மாநகர் செயலாளர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சேதமடைந்து காணப்படும் பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
    • மாநகராட்சி ஆணையாளர், உதவி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுப்பார்களா? என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    அவனியாபுரம்

    மதுரை அவனியாபுரம் முக்கியமான பகுதியாகும். இந்த பகுதியில் 2 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். பெருங்குடி, திருமங்கலம், காரியாபட்டி, வலையங்குளம், மண்டேலாநகர், பர்மா காலனி, மீனாட்சிபுரம், அவனியாபுரம் வழியாக திருப்பரங்குன்றம் செல்லும் பஸ்கள் என 5 நிமிடத்திற்கு ஒரு பஸ் அவனியாபுரம் வந்து செல்கிறது.

    அவனியாபுரத்தில் இருந்து பெரியார் பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம், மாட்டுத்தாவணி பஸ் நிலையம், ஆரப்பாளையம் பஸ் நிலையம் என இந்த பகுதியில் இருந்து அதிக பஸ்கள் செல்கின்றன. இவைகளில் நாள் ஒன்றுக்கு 30 ஆயிர–த்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ய அவனியாபுரம் பஸ் நிலையம் வந்து செல்கின்றனர்.

    இவர்கள் பயன்பெறும் வகையில் 2 நிழற்குடைகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிழற்குடைகள் சேதமடைந்து பயணிகள் உயிரை காவு வாங்கும் நிலையில் உள்ளது. ஒரு நிழற்குடை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு மாநகராட்சி அதிகாரிகள் அந்த நிழற்குடையை சீரமைக்காமல் கம்பு வைத்தும், கயிறுகளாலும் தடுத்துள்ளனர்.

    மற்றொரு நிழற்குடை இலைக்கடை ஆக்கிரமிப்பில் உள்ளது. இங்கு பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் அமர இடமில்லாமல் தவிக்கின்றனர். இந்த பஸ் நிலையத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு தினமும் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர்.

    குறிப்பாக முதியோர்கள் மாதாந்திர மாத்திரை வாங்க வருவதுண்டு. அவ்வாறு வரும் முதியோர்கள் அதிக தூரம் நடக்க முடியாமல் இந்த நிழற்குடையில் அமர்ந்து செல்வதுண்டு. ஆபத்தான நிலையில் பஸ் பயணிகளுக்கான நிழற்குடை இருப்பது முதியோர்களை அச்சப்பட வைக்கிறது.

    விரைவில் நிழற்குடைகளை சீரமைக்க வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர், உதவி ஆணையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுப்பார்களா? என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • மாநகராட்சி முழுவதும் தெருநாய் தொல்லை அதிகமாக உள்ளது.
    • தற்போது மழைக்காலமாக உள்ளதால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து விடுகிறது.

    கோவை

    கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில் மாநகராட்சி முழுவதும் தெருநாய் தொல்லை அதிகமாக உள்ளது.

    எனவே இதனை கட்டுப்படுத்த உக்கடம் ஒண்டிப்புதூரில் செயல்பட்டு வரும் கருத்தடை மையத்தை துரிதப் படுத்த வேண்டும். தூய்மை பணியாளர்கள் 134 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களுக்கு பதிலாக புதிய தூய்மை பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும் மாநகர பகுதிகளில் குடிநீர் திட்டத்திற்காக தோண்டப்பட்டு மூடப்படாமல் உள்ள குழிகளால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது.

    இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் தற்போது மழைக்காலமாக உள்ளதால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து விடுகிறது.

    எனவே வார்டு, வீதி வாரியாக கால்வாய்கள் தூர் வாரும் பணியை மேற்கொள்ள வேண்டும். புதிதாக கட்டிடம் கட்டுபவர்களுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கைகளை வைத்தனர்.

    அதற்கு மாநகராட்சி கமிஷனர் பிரதாப் பதில் அளித்து பேசுகையில் உரிய அனுமதியில்லாமல் குடிநீர் திட்ட பணிகளுக்காக குழிகளை தோண்டி மூடாமல் இருந்தால் அபராதம் விதிக்கப்படும்.

    கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் மேம்பாட்டுக்காக ரூ.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 50 மாநகராட்சி பள்ளிகளில் நாப்கின் வழங்கும் எந்திரம் மற்றும் நாப்கினை அழிக்கும் எந்திரம் வழங்கப்பட உள்ளது.தெரு நாய் தொல்லைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 176 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கும் நிகழ்ச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்றது. ஆணையாளர் கிராந்திகுமார் பாடி தலைமை தாங்கினார். துணை மேயர் பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.

    இதில் மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:- திருப்பூர் மாநகராட்சியை திறன்மிகு மாநகராட்சியாக மாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தினமும் 600 முதல் 700 டன் குப்பைகளை அகற்றி வருகிறோம். திடக்கழிவு மேலாண்மை 100 சதவீதம் செயல்படுத்த, பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வழங்கும் குப்பையை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து வழங்க வேண்டும். அடுத்த 2 ஆண்டுகளில் குப்பை இல்லாத மாநகராட்சியாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை நோக்கி பணியாற்ற வேண்டும். தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் நன்றியும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் , சிக்கண்ணா அரசு கல்லூரியை சேர்ந்த நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் என மொத்தம் 176 பேருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக அனைவரும் தூய்மை உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் இல.பத்மநாபன், கோவிந்தராஜ், கோவிந்தசாமி, மாநகர பொறியாளர் முகமது சபியுல்லா, மாநகர் நல அதிகாரி (பொறுப்பு) கார்த்திக், கவுன்சிலர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.  

    • மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து பேசினார்.
    • கொசுபுழுக்களை ஒழிக்க ரூ.27 லட்சத்தில் மருந்து கொள்முதல் செய்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியின் கூட்டம் மாநகர கூட்டரங்கில் மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில இன்று காலை நடைபெற்றது.

    ஆணையாளர் சாருஸ்ரீ, துணை மேயர்ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும் மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து பேசினார்.

    தொடர்ந்து, மாநகராட்சியில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுதல், கழிவு நீரில் வரும் கொசுபுழுக்களை ஒழிக்க ரூ.27 லட்சத்தில் மருந்து கொள்முதல் செய்தல், மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் பகுதி வாரியாக வடிகால் அமைக்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டு அனுமதி வழங்குதல், மாநகராட்சி பகுதியில் அவ்வப்போது ஏற்பட்டுவரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற புதிய ஜே.சி.பி. எந்திரம் வாங்குதல், மேற்கு மண்டலம் வி.வி.டி.சிக்னல் பகுதியில் சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் ரவுண்டானா பகுதியில் நீரூற்று அமைத்து பசுமை புல்தரைகளுடன் அழகுபடுத்தும் பணி, தேசிய தூய காற்று திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தூத்துக்குடி மாநகராட்சிக்கு 2021-22-ம் ஆண்டு மானிய தொகை ரூ.3.06 கோடி ஒதுக்கீடு செய்து வரப்பெற்றுள்ளது.

    இதனை பயன்படுத்தி தூத்துக்குடி நகரின் காற்றின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுதல், மாநகர பகுதியில் விபத்து ஏற்படும் பகுதியில் சுற்றித் திரியும் மாடுகளை பிடித்து இரண்டு மடங்கு அபராதம் விதித்தல்,

    மாநகராட்சி 60 வார்டுபகுதிகளில் உள்ள இரண்டு பேருந்து நிலையங்கள், 21 அலுவலக கட்டிடங்கள், 30 நீரேற்று நிலையங்கள், 60 பூங்காக்கள், 20 மாநகராட்சி பள்ளிகள், 8 அம்மா உணவகங்கள் உட்பட கட்டிடங்களில் மின் பழுது மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுதல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டது.

    கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், பாலகுருசாமி, அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன், பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன், சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார், கல்விக் குழுத் தலைவர் அதிர்ஷ்டமணி, கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, ரெங்கச்சாமி, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், முத்துவேல், ராஜதுரை, சந்திரபோஸ், வெற்றிச்செல்வன், விஜயலட்சுமி சுடலைமணி, மந்திரமூர்த்தி, உட்பட அனைத்து கவுன்சிலர்களும், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, அதிகாரிகள் ரூபன் சுரேஷ், பொன்னையா, சரவணன், காந்திமதி, பிரின்ஸ், சேகர், ராமச்சந்திரன் உட்பட அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.
    • கட்சிக்கொடிக்கம்பங்கள் அனைத்தும் கோர்ட்டு உத்தரவுப்படி அகற்றப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தினேஷ்குமார் தலைமையில், ஆணையாளர் கிராந்திகுமார் பாடி முன்னிலையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.திருப்பூர் மாநகர பகுதியில் கட்சிக்கொடிக்கம்பங்கள் அனைத்தும் கோர்ட்டு உத்தரவுப்படி அகற்றப்பட்டது.

    ஆனால் மீண்டும் நடுவதாக புகார் எழுந்துள்ளது. கொடிக்கம்பங்களை கட்சியினர் அகற்றாவிட்டால் மாநகராட்சி சார்பில் அவை அகற்றப்படும். சாலையின் மையத்தடுப்பில் கட்சிக்கொடிகள் கட்டக்கூடாது. ரவுண்டானா பகுதியில் விளம்பர பதாகைகளை வைக்கக்கூடாது. போக்குவரத்துக்கு இடையூறாக பதாகைகள் வைக்கக்கூடாது. வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண் இணைக்கும் பணிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அனைத்துக்கட்சியினரிடம் வலியுறுத்தப்பட்டது.

    • மதுரை மாநகராட்சியின் மேற்கு மண்டலத்தில் குறை தீர்க்கும் முகாம் வருகிற 23-ந் தேதி நடக்கிறது.
    • காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

    மதுரை

    திருப்பரங்குன்றம் நகர்ப்புற சுகாதார நிலையம் அருகில் உள்ள மதுரை மாநகராட்சியின் மேற்கு மண்டல (எண்5) அலுவலகத்தில் வருகிற 23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

    மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன் ஜித்சிங் காலோன் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். இதில் மேற்கு மண்ட லத்திற்குட்பட்ட மாடக்குளம், முத்துராமலிங்கபுரம், முத்துப்பட்டி அழகப்பன் நகர் மெயின் ரோடு, பழங்காநத்தம், கோவலன் நகர், டி.வி.எஸ்.நகர் மெயின் ரோடு, தென்னகரம், ஜெய்ஹிந்துபுரம் மெயின் ரோடு, வீரகாளியம்மன் கோவில் தெரு, ஜெய்ஹிந்துபுரம், சோலையழகுபுரம், எம்.கே.புரம், வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, மீனாட்சி நகர் அவனியாபுரம், பாம்பன் சுவாமி நகர், பசுமலை, திருநகர், சவுபாக்யாநகர், ஹார்விப்பட்டி, திருப்பரங்குன்றம், சன்னதி தெரு, திருப்பரங்குன்றம், பாலாஜி நகர், அவனியாபுரம் அருப்புக்கோட்டை மெயின் ரோடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம்.

    • 49-வது வார்டு பகுதியில் பொதுமக்களை நேரடியாக சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
    • பொதுமக்களின் கோரிக்கையை உடனே சரி செய்து கொடுக்க உத்தரவிட்டார்.

     திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் மக்களுடன் மேயர் திட்டத்தை மேயர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார். மேலும் அதனை செயல்படுத்தும் வகையில் 49-வது வார்டு பகுதியில் பொதுமக்களை நேரடியாக சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது அந்த பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி மற்றும் மின் விளக்கு, பூங்கா அமைத்து தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை பொதுமக்கள் முன் வைத்தனர். கோரிக்கைகளை கேட்டறிந்த மேயர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பொதுமக்களின் கோரிக்கையை உடனே சரி செய்து கொடுக்க உத்தரவிட்டார்.

    அதனைத்தொடர்ந்து 22 வது வார்டுக்கு உட்பட்ட குமாரநாமபுரம், கந்தசாமி லேஅவுட், ஓடக்காடு பகுதிகளில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் மேயர் ஆய்வு செய்தார் .அப்போது வகுப்பறை, கழிவறை வசதிகள் தேவை குறித்து தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார். பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்து பகுதிகளையும் நேரடியாக சென்று பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மக்களுடன் மேயர் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். அதேபோல் மாநகராட்சி பள்ளிகளில் கழிவறைகள், வகுப்பறைகள் போன்ற அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில் ஒவ்வொரு பள்ளிகளாக தேர்ந்தெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பள்ளிகளுக்கு குடிநீர் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    ஆய்வின் போது துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டல தலைவர்கள் உமா மகேஸ்வரி, கோவிந்தராஜ், கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

    • ஏற்கனவே கலைவாணர் கலையரங்கம் இருந்த இடத்தில் புதிய கட்டிடத்திற்கான கட்டுமான பணி நடந்து வருகிறது.
    • 95 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டுமான பணி ஏற்கனவே கலைவாணர் கலையரங்கம் இருந்த இடத்தில் நடைபெற்று வருகிறது. ரூ.11 கோடி செலவில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.சுமார் 95 சதவீத பணிகள் நிறைவடைந்து உள்ளது.

    இந்த நிலையில் புதிய கட்டிட பணிகளை மேயர் மகேஷ் அவ்வப்போது நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.நேற்றும் புதிய கட்டிட கட்டுமான பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு அந்த பணிகளை துரிதமாக முடிக்க அறிவுறுத்தினார்.

    ஆய்வின் போது பொறியாளர் பால சுப்பிரமணியம், மண்டலத் தலைவர் அகஸ்டினா கோகிலாவாணி, ஒன்றிய செயலாளர் மதியழகன், தி.மு.க. மாணவரணி அமைப்பாளர் சதாசிவம் மற்றும் வேல்முருகன், சுரேஷ் உட்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • கட்டணம் இல்லா தொலைபேசி சேவை எண் 155304 திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • புகார் தெரிவித்ததும் அது தொடர்பான குறுஞ்செய்தி அவர்களின் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியில் 'ஒரு குரல் புரட்சி' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதனை இன்று நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

    மாநகராட்சியில் உள்ள மக்களின் அடிப்படை தேவைகள் குறித்த 300-க்கும் மேற்பட்ட பிரிவு புகார்களை தெரிவித்து உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையில் கட்டணம் இல்லா தொலைபேசி சேவை எண் 155304 திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார். பல்துறைகள் இதில் இணைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் புகார் தெரிவித்ததும் அது தொடர்பான குறுஞ்செய்தி அவர்களின் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும். குறிப்பிட்ட கால அளவுக்கு அந்த குறைகள் நிவர்த்தி செய்து அது தொடர்பாகவும் குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும். குறிப்பிட்ட கால அளவுக்கு மேல் அந்தப் புகார் நிவர்த்தி செய்யாத பட்சத்தில் மேயர் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வை வரை அந்த புகார் சென்று விரைந்து நடவடிக்கை எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் கீழ் இந்த சேவை தொடங்கி உள்ளது.

    இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், க.செல்வராஜ் எம்.எல்.ஏ., கலெக்டர் வினீத், மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் பங்கேற்றனர்.

    இதைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகம், நகர் பகுதி மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக பணி ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கே.என். நேரு பங்கேற்று ஆய்வு செய்தார்.திருப்பூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்ட பணிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    • பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
    • அனைத்து கோரிக்கைகளும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் தினமும் ஒவ்வொரு வார்டாக சென்று ஆய்வு நடத்தி பொதுமக்களிடம் குறைகளை கேட்டு வருகிறார்.

    அந்த வகையில் இன்று காலை தஞ்சை மாநகராட்சி 42-வது வார்டுக்கு உட்பட்ட கண்ணன் நகர், டி. பி. எஸ். நகர், திரிபுர சுந்தரி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தார். பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பூங்காவை ஆய்வு செய்து அதில் அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அப்போது அவர் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    இன்று 42-வது வார்டுக்கு உட்பட்ட இடங்களில் ஆய்வு செய்தேன். புதிதாக சாலை அமைத்தல், பாதாள சாக்கடை இணைப்பு கொடுத்தல், மின்விளக்கு அமைக்க வேண்டும், பூங்கா அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை கூறியுள்ளனர்.

    அனைத்து கோரிக்கைகளும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும். மகரிஷி பள்ளி செல்லும் சாலையானது 80 அடி அகலத்துக்கு இரு வழி சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    டி.பி.எஸ். நகர் 3-வது தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் ஆய்வின் போது கண்டறியப்பட்டுள்ளது. அந்த இடத்தில் புதிதாக மாநகராட்சி ஆணையர் குடியிருப்பு உள்ளிட்ட சில கட்டிடங்கள் கட்ட ஆணையருடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது 42-வது வார்டு கவுன்சிலர் கலைவாணி சிவகுமார், இன்ஜினியர் ரமேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    • இந்த கோவில் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர்.
    • இதேபோல் கோவில் அருகே இருந்த கடைகளையும் இடித்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கடைகள், வணிக வளாகங்கள் இடித்து அகற்றப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் தஞ்சை எம்.கே. மூப்பனார் சாலை மற்றும் வி .எம். பெருமாள் கோவில் தெரு ஆகியவற்றை இணைக்கும் ஒரு தனியார் பள்ளி அருகே விநாயகர் கோவில் உள்ளது.

    இந்த கோவில் ஆக்கிரமிப்பு இடத்தில் கட்டப்பட்டதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். இதேபோல் கோவில் அருகே இருந்த கடைகளையும் இடித்தனர்.

    ×