search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 227210"

    • புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு பாரம்பரியமிக்க மஞ்சுவிரட்டு நடந்தது.
    • சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முற்பட்டனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல்லல் ஒன்றியம் மேல பட்டமங்கலத்தில் மாணிக்க நாச்சி அம்மன் சித்தங்காத்த அய்யனார் கருப்பர் கோவில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு பாரம்பரியமிக்க மஞ்சுவிரட்டு நடந்தது.

    நம்பம்புடி அம்பலம், பன்னீர்செல்வம் அம்பலம், ஆறுமுகம் சேர்வை ஆகியோர் தலைமையில் இந்த மஞ்சுவிரட்டு நடந்தது. இதைெயாட்டி மேலபட்டமங்கலம், அப்பா குடிப்பட்டி, கொளுஞ்சி பட்டி, மின்னல்குடிப்பட்டி, பிள்ளையார்பட்டி ஆகிய 5 ஊர் கிராம மக்கள் இணைந்து புரவி எடுப்பு விழாவை நடத்தினர்.

    அதனைத்தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான காளைகள் கொண்டு வரப்பட்டு இலுப்பைக்குடி வயல்வெளி பகுதிகளில் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முற்பட்டனர்.

    மேலும் மஞ்சுவிரட்டு காண வந்த விருந்தினர்க ளுக்கு இப்பகுதி மக்களின் பாரம்பரிய விருந்தோம்பலை பின்பற்றும் வகையில் அனைத்து வீடுகளிலும் கறி விருந்துடன் கூடிய விருந்து நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து இம்மஞ்சு விரட்டைக்காண ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மேலும் மஞ்சு விரட்டுகான பாதுகாப்பு பணிக்கு திருக்கோஷ்டியூர் காவல் நிலைய காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • இறந்த ஜல்லிக்கட்டு காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
    • பல்வேறு மஞ்சுவிரட்டு போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பரிசுகளை வென்றுள்ளது.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ளது வஞ்சி நகரம். இங்குள்ள கருப்பணசாமி கோவிலுக்கு பட்டத்து கோவில் காளை உள்ளது.

    இந்த காளை அலங்காநல்லூர், அவனியா புரம், சிராவயல் உள்பட பல்வேறு மஞ்சுவிரட்டு போட்டிகளில் பங்கேற்று ஏராளமான பரிசுகளை வென்றுள்ளது. கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி இருந்த காளை இன்று காலை இறந்தது.

    இதையடுத்து அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் இறந்த காளைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அதனை அடக்கம் செய்தனர்.

    ×