search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 227871"

    • 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
    • ஜூன் 1-ந் தேதி காலை 8-30மணிக்கு மேல் 9 மணிக்குள் தேரோட்டம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது

    கன்னியாகுமரி :

    உலகப் புகழ்பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதம் 10 நாட்கள் விசாக பெருந்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா வருகிற 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழாஅடுத்தமாதம் (ஜூன்)2-ந் தேதி வரை 10நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் அதிகாலை ௫ மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் 11-30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானமும் மாலை 6 மணிக்கு சமய உரையும் இரவு 7 மணிக்கு பாட்டுக்கச்சேரியும் 8மணிக்கு பரத நாட்டியம் மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடக்கிறது. பின்னர் 9 மணிக்கு அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது . வைகாசி விசாக திருவிழாவையொட்டி வருகிற 22-ந் தேதி மாலை 5 மணிக்கு கோட்டார் இளங்கடை பட்டாரியர் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சார்பில் கொடிப்பட்டம் மரபுபடி விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு மத ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டான நிகழ்ச்சியாக கன்னியாகுமரியைச் சேர்ந்த கிறிஸ்தவ மீனவர் கள் கொடிமர கயிறை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவி லில் ஒப்படைக்கி றார்கள்.

    அதைத்தொடர்ந்து 1-ம் திருவிழாவான 24-ந்தேதி காலை 9-30மணிக்கு மேல்10-30மணிக்குள் திருக்கொடியேற்றம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் 9 மணிக்கு அம்மன் பூப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 2-ம் திரு விழாவான 25-ந்தேதி காலை 7 மணிக்கு பல்லக்கில் அம்மன் வீதி உலா வருதலும் இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரியும் 9 மணிக்கு கிளி வாகனத்தில் அம்மன் வீதி உலா வருதலும் நடக்கிறது. 3-ம்திருவிழாவான 26-ந்தேதி காலை 7 மணிக்கு அன்னவாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் இரவு 7 மணிக்கு பக்தி இன்னிசையும் 9மணிக்கு அன்ன வாகனத்தில் அம்மன் வீதி உலா வருதலும் நடக்கிறது. 4-ம்திருவிழாவான 27-ந்தேதி காலை6 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் மாலை 5 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு பக்தி நிகழ்ச்சியும் 9 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது. 5-ம் திருவிழாவான 28-ந்தேதி காலை 6 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும் 8 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் நடக்கிறது. 6-ம் திருவிழாவான 29-ந்தேதி காலை 7 மணிக்கு யானை வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் 9 மணிக்கு இந்திர வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது. 7-ம்திருவிழா வான 30-ந்தேதி அதிகாலை 5-30 மணிக்கு பல்லக்கில் அம்மன்வீதி உலாவருதலும் பிற்பகல் 3-30மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு பரதநாட்டியமும் இரவு 9 மணிக்கு வெள்ளி இமயகிரி வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது. 8ம் திருவிழாவான 31-ந்தேதி மாலை 5 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு இன்னிசை கச்சேரியும் 8-30மணிக்கு அம்மன் கொலுசு தேடும் நிகழ்ச்சியும் 9 மணிக்கு பூப்பந்தல் வாகனத்தில் அம்மன் வீதிஉலாவருதலும் நடக்கிறது.

    9-ம் திருவிழாவான ஜூன் 1-ந் தேதி காலை 8-30மணிக்கு மேல் 9 மணிக்குள் திருத்தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, பால் வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தேர்வடம் தொட்டு இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள். இதில் குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், விஜய் வசந்த் எம்.பி., கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம். எல்.ஏ. தளவாய்சுந்தரம், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியாகுமரி சிறப்பு நிலைபேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், துணைத்தலைவர் ஜெனஸ் மைக்கேல் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ஆனிரோஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். தேர் நிலைக்கு நின்றதும் பகல் 12 மணிக்கு அன்னதானமும் கஞ்சிதர்மமும் நடக்கிறது. மாலை 6.30 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 7-30 மணிக்கு இன்னிசை கச்சேரியும் 8-45 மணிக்கு பக்தி பஜனையும் 9 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதி உலா வருதலும் நடக்கிறது.

    10-ம் திருவிழாவான 2-ந்தேதி காலை 9-30 மணிக்கு மேல் 10-30 மணிக்குள் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 8 மணிக்கு நர்த்தன பஜனையும் நடக்கிறது. 9 மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. நள்ளிரவு 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணைஆணையர் கவிதா பிரியதர்ஷினி, நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்மேலாளருமான ஆனந்த் மற்றும் கோவில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

    • ராதா கிருஷ்ணபுரம் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் 10 நாட்களும் சமய மாநாடு நடக்கிறது
    • 1 மணிக்கு உச்சகால பூஜை, தொடர்ந்து அன்னதானம், மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில் களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இக்கோவிலில் மாசி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை திருவிழா நிறைவுபெறும் வகையில் 10 நாட்கள் விழா நடக்கிறது.

    இந்த வருடத் திருவிழா மார்ச் 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 14-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவை முன்னிட்டு ராதா கிருஷ்ணபுரம் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் 10 நாட்களும் சமய மாநாடு நடக்கிறது. ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் நடக்கும் 86-வது இந்து சமய மாநாடு நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.

    அதில் காலை 4.30 மணிக்கு கோவிலில் திருநடை திறக்கப்பட்டு 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷ பூஜை, 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் திருக்கொடியேற்றம் நடக்கிறது. பகல் 12 மணிக்கு கருமன்கூடல் தொழிலதிபர் கல்யாண சுந்தரத்தின் இல்லத்தில் இருந்து அம்மனுக்கு சீர் கொண்டு வருதல், 1 மணிக்கு உச்சகால பூஜை, தொடர்ந்து அன்னதானம், மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    மாநாட்டு பந்தலில் காலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு பஜனை, 8.30 மணிக்கு மாநாடு கொடியேற்றம், தொடர்ந்து நடக்கும் சமய மாநாட்டை மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரஸ்ரீ ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் திறந்து வைத்து உரையாற்றுகிறார். தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தர் ராஜன் குத்துவிளக்கேற்றி உரையாற்றுகிறார். நாகர்கோவில் மாதா அமிர்தானந்தமயி மட மாவட்ட பொறுப்பாளர் நிலகண்டாம்ருத சைதன்யா, வெள்ளிமலை ஆஸ்ரமத் தலைவர் சைதன்யானந்த மகராஜ் சுவாமிகள் மற்றும் குமாரகோவில் சின்மயா மிஷன் சுவாமி நிஜானந்தா ஆகியோர் ஆசி வழங்குகின்றனர்.

    குமரி மாவட்ட திருக்கோவில் இணை ஆணையர் ஞானசேகர், பத்மனாபபுரம் தேவஸ்வம் தொகுதி கண்காணிப்பாளர் ஆனந்த், கோவில் ஸ்ரீகாரியம் செந்தில் குமார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சிந்துகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் சிவகுமார், மண்டைக்காடு பேரூராட்சி தலைவர் ராணிஜெயந்தி ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.

    தமிழக இந்து அறநிலை யத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் சேகர்பாபு, முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், விஜய் வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி, தளவாய் சுந்தரம், இந்திய உணவு கழக இயக்குனர் தெய்வ பிரகாஷ், கேரள முன்னாள் அமைச்சர் சிவகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை யாற்றுகின்றனர்.

    6.30 மணிக்கு ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பூஜையும், 9 ஆயிரம் திருவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு பரத நாட்டியம், 2-ம் நாள் காலை 6 மணிக்கு லலிதா சகஸ்ர நாமம், விஷ்ணு சகஸ்ர நாமம், 10 மணிக்கு பெரிய புராண விளக்கவுரை, பிற்பகல் 3 மணிக்கு பஜனை, இரவு 8.30 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. 3-ம் நாள் காலை 8 மணிக்கு அகவல் பாராயணம், பிற்பகல் 3.30 மணிக்கு தேவார இன்னிசை, 4.30 மணிக்கு பாலப்பள்ளம் குருகுல மாணவர்களின் யோகா, மாலை 6 மணிக்கு குருகுல மாணவர்களின் யோகா, மாலை 6.30 மணிக்கு கர்நாடகா இன்னிசை, இரவு 9.30 மணிக்கு கதகளி நடக்கிறது. 4-ம் நாள் இரவு 8 மணிக்கு திரைப்பட பின்னணி பாடகர் மகதி குழுவினரின் கர்நாடகா மற்றும் பக்தி இன்னிசை, 11 மணிக்கு கதாகாலஷேபம் நடக்கிறது.

    5-ம் நாள் பிற்பகல் 2 மணிக்கு சிந்தனை சொல்ல ரங்கம், மாலை 4 மணிக்கு இசை சொற்பொழிவு, இரவு 10 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. 6-ம் நாள் காலை 9 மணிக்கு பஜனை போட்டி, மாலை 3.30 மணிக்கு திருமுறை பக்தி பண்ணிசை, 5.30 மணிக்கு ஆன்மீக உரை, இரவு 11 மணிக்கு ஈஷா யோகா நிகழ்ச்சி, இரவு 12 மணிக்கு மேல் வலிய படுக்கை பூஜை, இரவு 8 மணிக்கு வீரமணி ராஜூ குழுவினரின் பக்தி இன்னிசை போன்றவை நடக்கிறது. 7-ம் நாள் மற்றும் 8-ம் நாள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சொற்பொழிவு போட்டி, 7-ம் நாள் மாலை 4 மணிக்கு சங்க வருடாந்திர கூட்டம், 5 மணிக்கு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு மாதர் மாநாடு, 10.30 மணிக்கு புராண நாட்டிய நாடகம் நடைபெறுகிறது.

    8-ம் நாள் மாலை 4 மணிக்கு வாழும்கலை மைய சத்சங்கம், மாலை 5 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு அய்யாவழி கலை நிகழ்ச்சி, 10.30க்கு பக்தி இன்னிசை நடக்கிறது. 9-ம் நாள் காலை 9 மணிக்கு சிவபுராண விளக்கவுரை, பிற்பகல் 3 மணிக்கு வில்லிசை, மாலை 6 மணிக்கு நடக்கும் சமய மாநாட்டில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றுகிறார். இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளலும், பெரிய சக்கர தீவட்டி வீதி உலாவும் நடக்கிறது.

    10-ம் நாள் பிற்பகல் 2 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில்

    பிளஸ்-2 பொதுத்தேர்வில் 500 மதிப் பெண்ணும் அதற்கு மேலும், 10-ம் வகுப்பில் 400-ம் அதற்கு மேலும் மதிப்பெண் பெற்ற இந்து மாணவர்களையும், சொற்பொழிவு போட்டி யில் வெற்றி பெற்ற மாண வர்களையும் பாராட்டி பரிசு வழங்குதல், இரவு 9.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி, 12 மணிக்கு ஒடுக்கு பூஜை பதார்த்தங்கள் திருக் கோவிலுக்கு கொண்டு வருதல், 12.30 மணிக்கு மேல் ஒரு மணிக்குள் நடக்கும் ஒடுக்கு பூஜையுடன் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.

    ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை ஆதர வுடன் ஹைந்தவ சேவா சங்கத்தினர் செய்து வரு கின்றனர்.

    ×