search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 227938"

    வாழப்பாடியில் ஐவர் அணி கால்பந்து போட்டி நடைபெற்றது.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் என்.ஜி.ஆர்., 149 கபடி குழு மற்றும் அண்ணாமலை ஜூவல்லர்ஸ் சார்பில் ஐவர் அணி கால்பந்து போட்டி 2 நாட்கள் நடைபெற்றது.

    தொடக்க விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கலைஞர்புகழ் தலைமை வகித்து, போட்டியை தொடங்கி வைத்தார்.

    பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் எம்ஜிஆர் பழனிசாமி, சாய்பாபா அறக்கட்டளை தலைவர் ஜவஹர் ஆகியோர் வீரர்களை வரவேற்றனர். போட்டியில், சேலம், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த 25 அணிகள் பங்கேற்றன.

    இதில் சேலம் அவரஞ்சிஅம்மா அணி முதல் பரிசும், 149 அணி 2-ம் பரிசும், வாழப்பாடி கருடன் 3-ம் பரிசும், வித்யா மெமோரியல் அணி 4-ம் பரிசும் பெற்றன.

    வெற்றி பெற்ற அணிகளுக்கு, கோப்பைகள், ரொக்கப்பரிசு மற்றும் சிறந்த வீரர்களுக்கு பதக்கங்களை பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் எம்.கோபிநாத், ஆர்.குணாளன், கால்பந்து குழு நிர்வாகிகள் ராம், உதயகுமார், நித்தீஸ் ஆகியோர் வழங்கி பாராட்டினர்.

    • போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்
    • தட்சணமாற நாடார் சங்க மாநில தலைவர் ஆர்.கே.காளிதாசன் தொடங்கி வைத்தார்.

    வீ.கே.புதூர்:

    உலக சிலம்பம் விளையாட்டுச் சங்கம் சார்பில் தென்காசி மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி பாவூர்சத்திரம் செயின்ட் அசிசி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

    தென்காசி மாவட்ட தலைவர் சத்தியசீலன் வரவேற்றுப் பேசினார். இப்போட்டியை தட்சணமாற நாடார் சங்க மாநில தலைவர் ஆர்.கே.காளிதாசன் தொடங்கி வைத்தார்.

    சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளிமுருகன், சுரேஷ்,செல்வராஜ், சட்ட ஆலோசகர் ஆலங்குளத்தை சேர்ந்த சாந்தகுமார் உள்ளிட்டோரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    உலக சிலம்பம் விளையாட்டு சங்க நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் சுதாகரன் தலைமையேற்றார்.மேலும் கழக அமைப்பு பேச்சாளர் ராமச்சந்திரன், எம்.எம். ஜவுளிக்கடை அதிபர் முருகன் ஆகியோரும் கலந்து கொண்டனர். தென்காசி மாவட்ட செயலாளர் சுதர்சன் நன்றி கூறினார்.

    தகுதி திறன் போட்டியில் முருகேஷ், புவணிகா,கவுதமி ஆகியோரும், தொடுதிறன் போட்டியில் சிவதீபக், பாலாராமகிருஷ்ணன், அருள்ரீகன் ஆகியோரும், இரட்டை கம்பு பிரிவில் ருத்ரன், தமிழமுதன், பவித்ரன் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

    வெற்றி பெற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    ×