என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 227996"
- சிவப்பரிசியில் புரதச்சத்து, நார்ச்சத்து அதிகம் நிறைந்தது.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள் :
சிவப்பரிசி மாவு - 4 கப்
தேங்காய் துருவல் - 1 கப்
தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீரை ஊற்றி, அதில் சிறிது உப்பை போட்டு கொதிக்க விட்டு இறக்கவும். பின்னர் மற்றொரு பாத்திரத்தில் சிவப்பரிசி மாவை போட்டு, அதில் கொதிக்க வைத்துள்ள உப்பு நீரை விட்டு, புட்டு மாவு பதத்தில் கலந்து கொள்ளவும். (முக்கியமாக தண்ணீர் அதிகமாக ஊற்றிவிட வேண்டாம். அதற்காக மிகுந்த வறட்சியுடனும் இருக்கக் கூடாது.)
புட்டு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 1/2 கப் தண்ணீரை ஊற்றி, அந்த பாத்திரத்தில் கொடுத்திருக்கும் சிறு மூடியை வைத்து மூடி கொதிக்கவிடவும்.
பின்னர் புட்டு குழாயில், முதலில் சிறிது புட்டு மாவு போட்டு, பின்னர் துருவிய தேங்காயை போட்டு, மறுபடியும் புட்டு மாவைப் போட்டு, குழாய் நிரம்பும் வரை இந்த முறையில் மாவை நிரப்பவும்.
பிறகு அந்த குழாயை புட்டு பாத்திரத்தின் மேல் வைத்து, 10 முதல் 15 நிமிடம் ஆவியில் வேக வைக்கவும்.
பின்னர் அதனை வெளியில் எடுத்து பரிமாறவும்.
சூப்பரான சத்து நிறைந்த சிவப்பரிசி புட்டு ரெடி. சன்னாவுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- சிவப்பு அவலில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
- அதிக சத்துக்கள் நிறைந்த இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுபலம்.
தேவையான பொருட்கள்
சிவப்பு அவல் - 1 கப்
உப்பு - 1 சிட்டிகை
தண்ணீர் - 2 கப்
கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை - முக்கால் கப்
தேங்காய் துருவல் - முக்கால் கப்
ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை
செய்முறை
சிவப்பு அவலை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக பொடித்துகொள்ளவும்.
2 கப் தண்ணீரை நன்றாக கொதிக்கவிடவும்.
பொடித்த அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் கொதிக்க வைத்த நீரை சிறிது சிறிதாக ஊற்றி நன்றாக கலந்து 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். இப்போது அவல் நன்றாக ஊறி இருக்கும்.
அடுப்பில் இட்லி பாத்திரத்தை வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
அடுத்து இட்லி தட்டில் ஊறவைத்த சிவப்பு அவலை பரப்பி விட்டு 7 முதல் 10 நிமிடங்கள் வேக விடவும்.
வேக வைத்த அவலை ஒரு பாத்திரத்தில் போட்டு (அவல் சூடாக இருக்கும் போதே) அதனுடன் தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
இப்போது சத்தான சுவையான சிவப்பு அவல் புட்டு ரெடி.
- இறாலில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
- இந்த ரெசிபி செய்ய 10 நிமிடங்களே போதுமானது.
தேவையான பொருட்கள்
இறால் - 1/4 கிலோ,
இஞ்சி - 1 துண்டு,
பூண்டு - 5 பல்,
பச்சைமிளகாய் - 5,
சின்ன வெங்காயம் - 100 கிராம்,
சோம்பு, சீரகம் - தலா 20 கிராம்,
மஞ்சள் தூள்- 10 கிராம்,
நல்லெண்ணெய் - 10 மி.லி.,
எலுமிச்சை பழம் - 1,
உப்பு,கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை - தேவைக்கு.
செய்முறை
இறாலை நன்றாக சுத்தம் செய்துகொள்ளவும்.
இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சுத்தம் செய்த இறாலை மிக்சியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, சீரகம், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் அரைத்த இறாலை போட்டு கிளறவும்.
அடுத்து அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
இறால் வெந்து உதிரியாக வரும் போது கொத்தமல்லித்தழை, எலுமிச்சைச்சாறு பிழிந்து புட்டு மாதிரி வரும்வரை கிளறி இறக்கவும்.
இப்போது சூப்பரான இறால் புட்டு ரெடி.
- குழந்தைகளுக்கு இந்த டிபன் மிகவும் பிடிக்கும்.
- கேழ்வரகில்(ராகி) அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு சேமியா - 1 பாக்கெட்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் - தேவையான அளவு
ஏலக்காய் தூள் - கால் தேக்கரண்டி
வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை - தேவையான அளவு
செய்முறை :
தேங்காயை துருவிக்கொள்ளவும்.
கால் கப் தண்ணீரில் உப்பு கலந்து அதை கேழ்வரகு சேமியாவில் தெளித்து 5 நிமிடம் ஊற விடவும்.
பின்னர் ஊறிய கேழ்வரகு சேமியாவை இட்லி தட்டில் வேக வைத்து கொள்ளவும்.
வெந்ததும் அதில் வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை, ஏலக்காய் தூள், தேங்காய் துருவல் சேர்த்து கலந்து பரிமாறவும்.
சத்தான கேழ்வரகு சேமியா புட்டு ரெடி.
- குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சுறா புட்டு மிக சிறந்த உணாவாகும்.
- சுறா புட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நன்கு பால் சுரக்கும்.
தேவையான பொருட்கள்
சுறா மீன் - 1/2 கிலோ
வெங்காயம் - 4
பூண்டு - 20 பல் பெரியது
இஞ்சி - 1 பெரிய துண்டு
பச்சை மிளகாய் - 3
மஞ்சள் தூள் - ½ ஸ்பூன்
தனி மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மல்லி தூள் - ½ ஸ்பூன்
மிளகு தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
கடுகு - ½ ஸ்பூன்
செய்முறை
வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாய், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
சுறா மீனை ஆய்ந்து சுத்தம் செய்து நன்கு கொதித்த வெந்நீரில் 5 முதல் 8 நிமிடம் வரை பொட்டு வைக்கவும்.
இப்போது சுறா மீனை வெந்நீரில் இருந்து எடுத்து மீனின் மேல் உள்ள தோலை எடுத்து விடவும்.
மீனில் சிறிதும் தண்ணீர் இல்லாமல் நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளவும். பிழிந்து எடுத்த மீனை நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.
மீனை நன்கு உதிர்த்த பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், மிளகு தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசறி விடவும்.
மசாலா மீன் முழுவதும் கலக்குமாறு நன்கு கலந்து விடவும். இதை ஒரு ½ மணி நேரம் அப்படியே மூடி பொட்டு மூடி வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின் பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் ஊற வைத்துள்ள மீன் மசாலாவை சேர்த்து நன்கு கிளறவும்.
10 நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும்.
10 நிமிடத்திற்கு பிறகு சுறா புட்டு நன்கு உதிர் உதிராக வந்திருக்கும்.
இப்போது சிறிதளவு கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சுறா புட்டு தயார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்