என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்கம்பம்"

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது.
    • திருக்குவளை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு நேற்றிரவு  தனியார் பஸ் சென்றது.

    இன்று காலை நாகை-திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் ஆலங்குடி சீராவட்டம் பாலம் அருகே சென்றது. அப்போது அந்த பகுதியில் மழை ெபய்துள்ளது.

    இந்நிலையில்   சீராவட்டம் பாலம் இறக்கத்தில் பஸ் சென்ற போது அதன் வேகத்தை கட்டுப்படுத்த டிரைவர் பிரேக் பிடித்துள்ளார்.

    அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி கவிழந்தது.

    இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பஸ்சில் இருந்த பயணிகளை மீட்டு ெவளியேற்றினர்.

    இதில் பஸ்சில் பயணித்த 8 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் ஓட்டுநர்க ளுக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

    விபத்து குறித்து திருக்குவளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    மேலும் கிரேன் மற்றும் மீட்பு ஊர்தியின் உதவியோடு கவிழ்ந்த பஸ்சை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இதனால் நாகை-திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • மழையால் சாய்ந்த மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டது.
    • கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், கொடிப்பங்கு பஞ்சாயத்துக்குட்பட்ட உள்ள சவேரியார் பட்டினம் குடியிருப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக 2 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.

    இதனை அறிந்த அந்த பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கிங் பீட்டர் மின் வாரியத்திற்கு தகவல் கொடுத்தார்.

    உடனடியாக மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு கிராம மக்கள் உதவியுடன் ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு, மின் ஊழியர் ராஜேந்திரன் தலைமையில் பணியாளர்களைக் கொண்டு மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டன.

    விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுத்து மின்கம்பங்களை சீரமைத்ததற்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • மின் கம்பத்தை புதிய இடத்தில் வைப்பதற்கு அரசுக்கு ரூ .68 ஆயிரத்து 210 செலுத்த வேண்டுமென மின்சாரம் வாரியம் தெரிவித்தது.
    • பொதுமக்களிடம் இருந்து 40 ஆயிரம் நிதி உதவி பெற்று உதவி மின் பொறியாளரிடம் வழங்கினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 24 -வது வார்டு சாமுண்டிபுரம் சலவைக்காரர் 3 வது வீதியில் பல ஆண்டுகளாக போக்குவரத்துக்கு இடையூறாக 3 மின் கம்பம் இருந்தது. இதனை மாற்றுவதற்கு மின்சார வாரியத்திடம் கோரிக்கை வைத்தனர்.ஆனால் மின் கம்பத்தை மாற்றி புதிய இடத்தில் வைப்பதற்கு அரசுக்கு ரூ .68 ஆயிரத்து 210 செலுத்த வேண்டுமென மின்சாரம் வாரியம் தெரிவித்தது.

    உடனடியாக ம.தி.மு.க. கவுன்சிலர் நாகராஜின் முயற்சியில்இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக அப்பகுதி பொதுமக்களிடம் கலந்து ஆலோசித்து அவர்கள் ஒத்துழைப்புடன் மின்சார வாரியத்துக்கு கட்ட வேண்டிய தொகை ரூ. 68,210யை பொதுமக்களிடம் இருந்து 40 ஆயிரம் நிதி உதவி பெற்று மீதமுள்ள ரூ.28 ஆயிரத்தை தனது சொந்த நிதியிலிருந்து கொடுத்து உதவி மின் பொறியாளரிடம் வழங்கினார். அப்போது மாமரத்து வீதியைச் சார்ந்த கோபி என்ற பழனி குமார் , உதவியாளர் சதாசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.

    • போலீசார் அனைவரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • 8 பேரில் ஹபிஸ் என்பவருக்கு வலது கை எலும்பு முறிவு மற்றும் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை உக்கடம் கரும்பு கடை பகுதியை சேர்ந்தவர்கள் அனஸ் (20), ஹபீஸ் (19), சிஹாப் (20), சன்சார் (20), சுகைல் (19), ஆசீர் (18), அரபாஸ் (19), இப்ராஹிம் (20). இவர்கள் அனைவரும் நண்பர்கள்.

    நண்பர்கள் அனைவரும் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டனர். இதனையடுத்து காரில் நண்பர்கள் அனைவரும் ஊட்டி சென்றனர். காரை இப்ராஹிம் ஓட்டி சென்றார். ஊட்டி-குன்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்த நண்பர்கள் மீண்டும் இன்று அதிகாலை கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது மேட்டுப்பாளையம் அடுத்துள்ள கல்லாறு பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஓட்டல் அருகே வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மின்கம்பத்தில் எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் கார் முழுவதுமாக சேதம் அடைந்தது. கார் மின்கம்பத்தின் மீது மோதியதில் காரில் பயணம் செய்த 8 பேரில் ஹபிஸ் என்பவருக்கு வலது கை எலும்பு முறிவு மற்றும் 2 பேருக்கு காயம் ஏற்பட்டது.

    இச்சம்பவம் குறித்து அறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் விரைந்து சென்று அனைவரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    சுற்றுலா சென்று விட்டு வீடு திரும்பிய போது ஏற்பட்ட விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • இணைப்பு சாலையின் நடுவே மின்கம்பம் நடப்பட்டது.
    • இதனால் மாற்று வழியில் 5 கி.மீ சுற்றிச்செல்லும் அவல நிலை உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த விழுந்த மாவடி மணல்மேட்டில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கஜா புயலின் போது எல்லைரோட்டையும் -சடச்சி கச்சல் சாலையை இணைக்கும் 2 கிலோ மீட்டர் இணைப்பு சாலையின் நடுவே மின்கம்பம் நடப்பட்டது.

    சாலையின் நடுவே இடையூறாக உள்ள இந்த மின்கம்பத்தால் பள்ளி வாகனங்கள், ஆம்புலன்ஸ், மற்ற வாகனங்கள் என அனைத்தும் மாற்றுவழியில் 5 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் அவல நிலை உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    மேலும் சாலை பணியையும் மேற்கொள்ள முடியாமல் மணல் சாலையாக உள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

    எனவே உடனடியாக மின்கம்பத்தை அகற்றி சாலையின் ஓரத்தில் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மின்கம்பிகள் சீரமைக்கபடாமல் மிகவும் தாழ்வான நிலையில் செல்கின்றன.
    • போா்க்கால அடிப்படையில் சேதமடைந்த மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமரு கல் ஒன்றியப் பகுதிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இடி,மின்னல், சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    இந்த மழையில் திட்டச்சேரி, திருமருகல்,போலகம்,இடையாத்தங்குடி,ஏனங்குடி,கருப்பூர்,வடகரை,திருப்புகலூர், கணபதிபுரம்,நெய்குப்பை, மருங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் சாய்ந்து விழுந்து மின்கம்பிகள் அருந்தும், மின்கம்பங்கள் சாய்ந்தும் சேதமடைந்தது.

    இதனால் ஒன்றிய பகுதிகளில் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் சேதம் அடைந்த மின்கம்பிகள் மற்றும் மின்கம்பங்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்ற மின் இணைப்பு வழங்கப்பட்டது.

    ஆனால் ஒன்றிய பகுதிகளில் பல இடங்களில் சாய்ந்து விழுந்த மின்கம்பங்கள் சீரமைக்க ப்படாமலும், மின்கம்பிகள் முழுவதுமாக சீரமைக்காமல் மிகவும் தாழ்வாகவும் உள்ளன.

    இதனால் காற்று சற்று வேகமாக வீசும்போது மின்கம்பிகள் அறுந்து கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவம் அவ்வப்போது நேரிடுகிறது.

    இதனால் மனிதர்கள் உயிரிழப்புகள் ஏற்படும் அபாய நிலை உள்ளது.

    இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடி க்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    எனவே அதிகாரிகள் போா்க்கால அடிப்படையில் சேதமடைந்த மின்கம்பங்க ளை சீரமைப்பதுடன், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகளை உயரத்தில் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் சாய்ந்து வரும் மின்கம்பத்தால் பொதுமக்கள் அச்சம்
    • உயிர் பலி ஏற்படும் முன் சீர்செய்ய வலியுறுத்தல்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுக்கா புதுக்குறிச்சி துணை மின் நிலைய எல்லைக்குப்பட்ட நாரணமங்கலம்-புதுக்குறிச்சி செல்லும் ஏரி பாதையில், கீழே விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தை படத்தில் காணலாம். கீழே விழுந்து உயிர்பலி ஏற்படும் முன்பாக அதனை சரி செய்யவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மின்சாரத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பங்களை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
    • அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம், கீழக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பல்லாயிர குடும் பத்தினர் வசித்து வரு கின்றனர். அந்தந்த பகுதிகளில் மின்கம்பங்கள் அமைத்து அதன் மூலம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மின் வாரிய அலுவலர்கள் முறை யாக மின்கம்பத்தை பராமரிக்காததால் தற்போது பல மின்கம்பங்கள் பழுதடைந்து உள்ளது.

    குறிப்பாக கீழக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மின் கம்பத்தின் தலை பகுதியில் உள்ள சிமெண்டுகள் பெயர்ந்தும், இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது.

    இந்த மின்கம்பம் அருகே குழந்தைகள் விளையாடி வரு கின்றனர். அதுமட்டுமல்லாது அந்த மின்கம்பத்தை கடந்து முதியோர், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் செல்கின்ற னர். அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்வதால் அதிர்வுகள் ஏற்பட்டு அவ்வப்போது மின்தடையும் ஏற்படுகிறது. பல மாதங்க ளாகியும் மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் பழுதடைந்துள்ளது. இதனை சீரமைக்க மின்வாரிய அலுவலர்களிடம் பலமுறை அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த வொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

    மின்கம்பங்கள் எந்த நேரத்திலும் உடைந்து விழும், டிரான்ஸ்பார்மர்கள் எப்பொழுது வெடித்து சிதறும் நிலையில் உள்ளது. இதனை மின்வாரிய அதிகாரிகள் மின் கம்பங்கள், டிரான்ஸ்பாரங்களை மாற்றாமல் மெத்தனம் காட்டி வருகின்றனர். பழுத டைந்த மின்கம்பங்களால் நகரில் பல பகுதியில் விபத்து ஏற்பட்டு வருகிறது. அசம்பாவிதம் ஏற்படு வதற்குள் மின்வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருவாரூர் நகராட்சியில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை முற்றிலுமாக நிறைவு செய்ய வேண்டும்.
    • வார்டுகளில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நகர்மன்ற கூட்டம் நகர்மன்றத் தலைவர் புவனப் பிரியா செந்தில் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பருவமழை தொடங்க இருப்பதால், அனைத்து வார்டுகளிலும் பாரபட்சம் இன்றி மழை நீர் வடிகால்களை தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    திருவாரூர் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளிலும் உள்ள மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை முற்றிலுமாக நிறைவு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    மேலும் நகராட்சி முழுவதும் உள்ள வார்டுகளில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். பழுதடைந்த மின் கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்களை அமைத்து தர வேண்டும்.

    இவைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகர் மன்ற உறுப்பினர்கள் பேசினர்.

    நகர்மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகியும் உறுப்பினருக்கான அடையாள அட்டை வழங்கப்படவில்லை. நகர்மன்ற உறுப்பினர் என்பதற்கு எந்த அடையாளமும் இல்லாமல் இருக்கிறது.

    உடன் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அனைவரின் புகைப்படங்களும் சேகரித்து ஒரு வார காலத்திற்குள் அடையாள அட்டை வழங்கு வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் நகராட்சி மேலாளர் முத்துக்குமார், நகர மன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், சங்கர், செந்தில், ரஜினி சின்னா, அசோகன் உள்ளிட்ட நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • பூதராயநல்லூர் கிராமத்தில் வயல்வெளிகளில் இரும்பு கம்பங்கள் நட்டு மின்சாரம் கொண்டு வரப்படுகிறது.
    • சிறிய மின் கம்பத்திற்கு இடையில் மரம் ஒன்று முளைத்து கிளை விட்டு உயர்ந்து வளர்ந்து நிற்கிறது.

    பூதலூர்:

    பூதலூர் அருகே உள்ள பூதராயநல்லூர் கிராமத்தில் வயல்வெளிகளில் இரும்பு கம்பங்கள் நட்டு மின்சாரம் கொண்டு வரப்படுகிறது. 30 அடி உயரமுள்ள மின்கம்பத்தில் அடியில் இருந்து 6 உயரத்திற்கு சிறிய அளவிலான மற்றொரு இரும்பு கம்பம் நடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வரிசையாக நடப்பட்டுள்ள மின் கம்பங்களில் ஒன்றில் பெரிய மின் கம்பத்துக்கும் அதற்கு பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள சிறிய மின் கம்பத்திற்கு இடையில் மரம் ஒன்று முளைத்து கிளை விட்டு உயர்ந்து வளர்ந்து நிற்கிறது.

    இந்த மின்கம்பம் அமைந்துள்ள வயல் தற்போது தரிசாக காணப்படுகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் வயலில் தண்ணீர் பாய்ச்சி விவசாய பணிகள் தொடங்கிவிடும். அப்போது இதில் வளர்ந்துள்ள மரம் மேலே உள்ள மின்சாரக் கம்பியை தொடுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த மின்சார வயர்களின் வழியாக செல்லும் கிராமங்களில் மின்தடைஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

    எனவே பூதராய நல்லூர் கிராமத்தின் அருகில் வயல்வெளியில் உள்ள மின்சாரக் கம்பத்தில் வளர்ந்துள்ள மரத்தை அகற்றி சீரான மின்விநியோகத்திற்கும் எதிர்காலத்தில் மின் பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ளவும் வழி செய்ய வேண்டும் என்று விவசாயிகள். சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கரும்பு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று செம்மேடு சர்க்கரை ஆலைக்கு சென்று கொண்டிருந்தது.
    • இச்சம்பவம் குறித்து அவலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    மேல்மலையனூர் அருகே கரடிக்குப்பம் கிராமத்திலிருந்து நேற்று மாலை கரும்பு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று செம்மேடு சர்க்கரை ஆலைக்கு சென்று கொண்டிருந்தது. அவலூர்பேட்டை செல்லியம்மன் கோவில் அருகில் சென்ற போது எதிர்பாரதவிதமாக சாலை ஓரம் இருந்த சிமெண்ட் மின்கம்பத்தில் மோதியது. இதனால் மின்கம்பம் முறிந்தது.இதுகுறித்து தகவலறிந்த மின்சார துறையினர் விரைந்து செயல்பட்டு மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் பெரும் மின் விபத்து தடுக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து அவலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலையின் இருபுறமும் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
    • சாலையின் நடுவில் உள்ள மின் கம்பங்கள் அகற்றாமல் சாலை போடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூா் நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் ராஜேஷிடம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினா் ஆா்.சிகாமணி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    திருப்பூா் மாநகராட்சி வாா்டு எண்-5 வாவிபாளையம் பகுதியில் பேருந்து நிறுத்தம் முதல் பெருமாநல்லூா் ஊத்துக்குளி சாலை வரை சாலையின் இருபுறமும் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே சாலை விரிவாக்கம் செய்யும் பணிக்காக கடந்த ஒரு மாதம் முன்பு சாலையின் ஒரு புறம் குழி தோண்டப்பட்டது. அடுத்த கட்டப் பணி எதுவும் செய்யாத நிலை இருந்தது. இதனால் சாலை குறுகலானதால் இப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடியும், அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.

    இந்நிலையில், சாலையின் நடுவில் உள்ள மின் கம்பங்கள் அகற்றாமல் சாலை போடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. எனவே, சாலையின் நடுவே உள்ள மின் கம்பங்களை உடனடியாக அகற்றி பின்னா் சாலை அமைக்கும் பணியை வேகப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ×