search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 228238"

    • குமாரபாளையத்தில் ஆனங்கூர் சாலையில் இருந்து நாராயண நகர் செல்லும் வழியில் பழைய பாலம் மிகவும் சேதமானதால் புதிதாக கட்டப்பட்ட பாலம் திறக்கப்பட்டது.
    • தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.24 லட்சம் மதிப்பில் புதிய பாலம் கட்டப்பட்டது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் ஆனங்கூர் சாலையில் இருந்து நாராயண நகர் செல்லும் வழியில் கோம்பு பள்ளம் உள்ளது.

    இதனை கடக்க இருந்த பழைய பாலம் மிகவும் சேதமானதால் ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தியின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.24 லட்சம் மதிப்பில் புதிய பாலம் கட்டப்பட்டது. இதன் கட்டுமான பணிகள் பல மாதங்கள் நீடித்தது. இதனால் பொதுமக்கள் வெகு தூரம் சுற்றி வரும் நிலைக்கு ஆளாகினர்.

    இதன் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது இந்த பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • பொதுமக்கள் இதனை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கீதாஜீவன் கேட்டுக் கொண்டார்.
    • கல்வி உதவித்தொகைகளை அமைச்சர் கீதாஜீவன் ஏழை எளிய மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகரம் தெற்கு மண்டலம் 57-வது வார்டு எம்.சவேரியார்புரத்தில் இ-சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு இ-சேவை மையத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இ-சேவை மையத்தில் வழங்ககூடிய சேவைகள் குறித்து ஆய்வு செய்தார்.

    பொதுமக்கள் இதனை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அப்போது கேட்டுக் கொண்டார்.

    திறப்பு விழாவினை முன்னிட்டு ஸ்ரீ கணேஷ்நகர் பத்திரகாளி அம்மன் கோவில் தர்மகர்த்தா சுயம்பு நாடார், முள்ளக்காடு ஊராட்சி மன்றத் தலைவர் கோபிநாத் நிர்மல், உப்பு உற்பத்தியாளர் எல்.ஆர்.சிவாகர், சவேரியார்புரம் ஞானஜெகன்ஆகியோர் அளித்த கல்வி உதவித்தொகைகளை அமைச்சர் கீதாஜீவன் ஏழை எளிய மாணவ-மாணவிகளுக்கு வழங்கினார்.

    விழாவில் மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி, காங்கிரஸ் கட்சி மாநில துணைத் தலைவர் சண்முகம், தூத்துக்குடி மாநகர தி.மு.க. செயலாளர் எஸ்.ஆர். ஆனந்தசேகரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஜெயலட்சுமி சுடலைமணி, சுயம்பு, ராஜதுரை, பச்சிராஜ் மற்றும் மாநகர அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சேலம் அஸ்தம்பட்டியில்உ ள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கமர்சியல் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது.
    • கமர்சியல் நீதிமன்றம் சென்னையில் திறக்கப்பட்டு உள்ளது. 2-வதாக சேலத்தில் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டியில்உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குடும்பநல நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. அதற்கு பின்பகுதியில் கமர்சியல் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது.

    இதனை சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரனாத் பன்டாரி திறந்து வைத்தார். பின்னர் குத்து விளக்கேற்றி நீதிமன்றத்தை பார்வையிட்டார். அப்போது அங்கு நடந்த வழக்கு விசாரணை பார்வையிட்டார்.

    அவருடன் உயர் நீதிமன்ற நீதிபதிகள், சுந்தர், அனிதாசுமந்த், கார்த்திகேயன் சதீஷ்குமார், அப்துல்குத்தூஸ், இளந்திரையன், செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக நீதிபதி முனீஸ்வரனாத் பன்டாரியை சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். ஏற்கனவே கமர்சியல் நீதிமன்றம் சென்னையில் திறக்கப்பட்டு உள்ளது.

    2-வதாக சேலத்தில் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கோவை, காஞ்சிபுரத்தில் கமர்சியல் நீதிமன்றம் திறக்கப்பட உள்ளது.

    • விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது.
    • இங்கு மாதந்தோறும் உண்டியல் திறக்கப்படுவது வழக்கம்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இங்கு மாதந்தோறும் உண்டியல் திறக்கப்படுவது வழக்கம்.

    நேற்று 10 நிரந்தர உண்டியல், ஒரு கோசாலை உண்டியல் திறக்கப்பட்டு கணக்கிடப்பட்டன. அதில் ரூ. 55 லட்சத்து 5 ஆயிரத்து 70-ம், தங்கம் 231.650 கிராமும், வெள்ளி 1386.900 கிராமும் கிடைத்தது.

    இந்த பணியில் சாத்தூர், துலுக்கப்பட்டியை சேர்ந்த ஓம்சக்தி பக்தர் குழு மற்றும் மதுரை அய்யப்ப சேவா சங்கம், கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    விருதுநகர் இந்து அறநிலைய துறை உதவி ஆணையர் வளர்மதி, இருக்கன்குடி கோவில் ஆணையர் கருணாகரன், தலைமையில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி, சவுந்திர ராஜன், ஹரிராம்,மற்றும் அறங்காவலர் குழுவினர் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

    • உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
    • வழக்கறிஞர்கள் சங்க அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

    பல்லடம்:

    பல்லடம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கடந்த மே மாதம் திறப்பு விழா செய்யப்பட்டது. இந்த நிலையில் வழக்கறிஞர்கள் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் சார்பு நீதிமன்றத்தையும், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இயங்க அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில்,குற்றவியல் நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், சார்பு நீதிமன்றம் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வழக்கறிஞர்கள் சங்க அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. அலுவலகத்தை சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி திறந்து வைத்தார். இதில் வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் சக்திவேல், வழக்கறிஞர்கள் வெங்கடாசலபதி, ஈஸ்வரமூர்த்தி, மகேஸ்வரன், ராஜேஷ், மற்றும் வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • குமாரபாளையம் காசி விஸ்வேஸ்வரர் கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டது.
    • பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்பட்ட பணம் மற்றும் நாணயங்களை எண்ணப்பட்டது.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து வரும் குமாரபாளையம் அக்ரஹாரம் லட்சுமிநாராயண சுவாமி மற்றும் காசி விஸ்வேஸ்வர சுவாமி கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் இருந்த, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தப்பட்ட பணம் மற்றும் நாணயங்கள் எண்ணப்பட்டது. தக்கார் நவீன்ராஜா, ஆய்வர் வடிவுக்கரசி, செயல் அலுவலர் சின்னசாமி, கோவில் எழுத்தர் ஸ்ரீ சைல வெங்கடேச முருகன், அர்ச்சகர் சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர். இதில் ரொக்கம் மற்றும் நாணயங்கள் சேர்த்து ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 995 ரூபாய் இருந்தது. இந்த தொகையை முறைப்படி அரசிடம் சேர்க்கப்பட்டது.

    • காரைக்குடி புதிய பஸ் நிலையத்தில் இலவச கழிவறை திறக்கப்பட்டது.
    • பொதுமக்களின் இலவச பயன்பாட்டிற்காக காரைக்குடி நகர்மன்றதலைவர் முத்துத்துரை தலைமையேற்று திறந்து வைத்தார்.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பஸ் நிலையத்தில் அமைந்துள்ள பழைய கட்டண கழிவறையை ரூ.3.75 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டது. அதை பொதுமக்களின் இலவச பயன்பாட்டிற்காக காரைக்குடி நகர்மன்றதலைவர் முத்துத்துரை தலைமையேற்று திறந்து வைத்தார்.நகர்மன்ற துணை தலைவர் குணசேகரன், நகராட்சிஆணையாளர் லட்சுமணன் முன்னிலை வகித்தனர்.

    நகராட்சி உதவி பொறியாளர் சீமா, கவுன்சிலர்கள் சோனா கண்ணன், முகமதுசித்திக், பிலோமினா, அஞ்சலிதேவி, பூமிநாதன், முன்னாள் தி.மு.க. நகர இளைஞரணி அமைப்பாளர் காரை சுரேஷ், வட்ட செயலாளர்கள் பாண்டி, பாலாஜி கண்ணன், சுகாதார ஆய்வாளர் சுந்தர், ஒப்பந்ததாரர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    சேலம் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின்னர் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் 1 முதல் 9 வரை படித்து வந்த மாணவர்களுக்கு கடந்த மாதம் 13-ந்தேதி கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து இன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இதையடுத்து திட்டமிட்டபடி பள்ளிகள் இன்றுகாலை பள்ளிகள் திறக்கப்பட்டது. பல பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்து இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

    சேலம் மாவட்டத்தில் 1,110 தொடக்கப் பள்ளிகள், 366 நடுநிலைப் பள்ளிகள், 136 உயர்நிலைப்பள்ளிகள், 159 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 1771அரசு பள்ளிகளும் 123 அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், 504 தனியார் சுயநிதி பள்ளிகள் எனவும் மொத்தமாக 2398 அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் செயல்பட்டுகிறது. சேலத்தில் ஒரு சில தனியார் பள்ளிகள் திறக்கப்படவில்லை.

    பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி ஏற்கனவே அனைத்து பள்ளிகளிலும் புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டது. இன்றே மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப் பட்டன. தொடர்ந்து வருகிற 20-ந் தேதி பிளஸ்-2 மாணவர்களுக்கும் 27-ந் தேதி பிளஸ்- 1 மாணவர் களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • சுமார் 200 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • 10 குழந்தைகள் மையத்தில் சேர்க்கப்பட்டனர்.

    அரவேனு,

    அரவேனு அருகே உள்ள காமராஜர் நகர் பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் திறக்கபட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கோத்தகிரி அரவேனு அருகே உள்ள காமராஜர் நகர் பகுதியில் சுமார் 200 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் அங்கன்வாடி மையம் இல்லாததால் குழந்தைகளை விட்டுச் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி சிரமப்பட்டு வந்தனர்.

    மேலும் தங்கள் கிராமத்தில் அங்கன்வாடி மையம் திறக்க வேண்டும் என கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஜக்கனாரை ஊராட்சிக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் திறக்க ஜக்கனாரை ஊராட்சி தலைவர் நடவடிக்கை மேற்கொண்டார். இதன்படி நேற்று வாடகை கட்டிடத்தில் புதிய அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு அங்கன்வாடி மேற்பார்வையாளர் சாந்தி தலைமை வகித்தார். கவுன்சிலர் மனோகரன் வரவேற்றார். ஊராட்சித் தலைவர் சுமதி சுரேஷ் அங்கன்வாடி மையத்தைத் திறந்து வைத்தார். அங்கன்வாடி மையம் திறக்கப்பட்ட முதல் நாளில் சுமார் 10 குழந்தைகள் மையத்தில் சேர்க்கப்பட்டனர்.

    மேலும் ஊராட்சி தலைவர் கூறுகையில் விரைவில் வருவாய்த்துறை அல்லது ஊராட்சிக்கு சொந்தமான நிலம் தேர்வு செய்யப்பட்டு அங்கு நிரந்தரமான அங்கன்வாடி மையம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர் சபீலா, உதவியாளர் தீபா உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். தங்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப் பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    • ரூ.58 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சென்னிமலை முருகன் கோவில் புதிய அன்னதான கூடம் திறக்கப்பட்டது.
    • அன்னதான கூடத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    சென்னிமலை:

    சென்னிமலை மலை மீதுள்ள முருகன் கோவிலில் புதிதாக ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அன்னதான கூடத்தை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இதை தொடர்ந்து சென்னிமலை முருகன் கோவில் புதிய அன்னதான கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு பூஜைகளை தலைமை குருக்கள் ஸ்ரீலஸ்ரீ ராமநாத சிவாச்சாரியார் தலைமையில் அர்ச்சகர்கள் செய்தனர்.

    இதில் இந்து அறநிலையத்துறை ஈரோடு மாவட்ட ஆணையர் பரஞ்ஜோதி, செயல் அலுவலர் அருள்குமார், மாவட்ட கவுன்சிலர் தமிழ்செல்வம், சென்னிமலை யூனியன் சேர்மேன் காயத்திரி இளங்கோ, சென்னிமலை வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் செங்கோட்டையன், சென்னிமலை பேரூர் செயலாளர் ராமசாமி, சென்னிமலை டவுன் பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீதேவி அசோக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நேற்று மதியம் முதல் புதிய அன்னதான கூடத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×