search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 228238"

    • சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புளியம்பட்டி ஊராட்சியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடங்கள் பழுதடைந்து காணப்பட்டது.
    • இதை தொடர்ந்து சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புளியம்பட்டி ஊராட்சியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடங்கள் பழுதடைந்து காணப்பட்டது. இடிந்து விழும் நிலையில் இருந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டிகொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    இதை தொடர்ந்து சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அதேபோல புளியம்பட்டி காலனி பகுதியில், பழுதடைந்த மற்றொரு தார்சு கட்டிடமும் 2 லட்ச ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது.

    இதையடுத்து இந்த கட்டிடங்களின் திறப்பு விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி தலைமையில், தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் அழகிரி, அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் சரவணன், முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணன், அய்யனார் ஆகியோர் கலந்துகொண்டு புதிய கட்டிடத்தையும், புதுபிக்கப்பட்ட கட்டிடத்தையும் திறந்து வைத்தனர்.

    தொடர்ந்து குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். முடிவில் ஊராட்சி மன்ற செயலர் லட்சுமணன் நன்றி கூறினார்.

    • பெரம்பலூரில் பொதுப்பணித்துறை கோட்ட அலுவலகம் திறப்பு
    • முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்திற்கென புதிதாக பொதுப்பணித்துறை கட்டட கோட்ட அலுவலகம் அமைக்க அரசு அனுமதி அளித்து புதிய அலுவலகம் நேற்று முதல் செயல்பட துவங்கியுள்ளது.

    பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய இரண்டு மாவட்டத்திற்கான பொதுப்பணித்துறை கட்டிட கோட்ட அலுவலகம் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ) அரியலூரில் செயல்பட்டு வருகிறது. இதனால் கட்டிடம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கு பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பொதுப்பணித்துறை ஒப்பந்தகாரர்கள் அரியலூர் சென்று வந்தனர். மேலும் பொதுமக்களும் கட்டிட எஸ்டிமேட் பெற அரியலூருக்கு செல்லவேண்டிய நிலை இருந்து வந்தது.

    இந்நிலையில் பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கையை ஏற்று பெரம்பலூர் மாவட்டத்திற்கென தனியாக பொதுப்பணித்துறை கட்டிட கோட்ட அலுவலகம் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) அமைக்க அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் அந்த அலுவலகத்திற்காக செயற்பொறியாளர் பணியிடம் ஒதுக்கீடு செய்து செயற்பொறியாளரையும் நியமனம் அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதன்படி பெரம்பலூர் தாலுகா அலுவலக வளாகத்திற்குள் உள்ள பொதுப்பணித்துறை கட்டட உப கோட்ட அலுவலகத்தில் தற்காலிமாக கோட்ட அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூரில் பொதுப்பணித்துறை கட்டட கோட்ட அலுவலகம் அமைக்க உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் வேலு ஆகியோருக்கு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

    • பேராணிபட்டி மக்கள் தங்கள் பகுதியில் பகுதிநேர ரேசன்கடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
    • பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று பகுதிநேர ரேசன் கடையை செந்தில்நாதன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்நாதன் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டபோது பேராணிபட்டி மக்கள் தங்கள் பகுதியில் பகுதிநேர ரேசன்கடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று தற்போது பேராணிபட்டியில் பகுதிநேர ரேசன்கடை அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.

    இதில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு ரேசன் கடையை திறந்து வைத்து ரேசன் பொருட்களை பொது மக்களுக்கு வழங்கினார். அப்ேபாது தங்களது நீண்டநாள் கோரிக்கையை ஏற்று உடனடியாக நடவடிக்கை எடுத்த, செந்தில்நாதன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    இதில் கூட்டுறவு சங்க தலைவர் சங்கர்ராமநாதன், ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், செல்வமணி, மாவட்ட கவுன்சிலர் கோமதி, ஊராட்சி மன்ற தலைவர் லோகநாதன், கண்ணன் மற்றும் ஊர் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால் நடவடிக்கை
    • நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.80 அடியாக உள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் அணை பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

    இதையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளுக்கு கணிச மான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இரண்டு அணைகளும் முழு கொள்ளளவை எட்டி வருவதையடுத்து அணை யின் நீர்மட்டத்தை பொதுப் பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

    பேச்சிப்பாறை அணை யில் இருந்து உபரி நீர் இன்று மதியம் 1000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் களியல், திற்பரப்பு அருவி மற்றும் குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகிறார்கள்.

    திற்பரப்பு அருவியில் வெள்ளம் அதிகளவு வரும் என்பதால் பேரூராட்சி நிர்வாகம் அதற்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    48அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 45.64 அடியாக இருந்தது. அணைக்கு 1560 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 575 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. 1000 கனஅடி உபரிநீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.27 அடியாக உள்ளது .அணைக்கு 1127 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.அணையில் இருந்து 160 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 12.63 அடியாக உள்ளது. அணைக்கு 215 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 150 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

    சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 12.73 அடியாகவும், பொய்கை நீர்மட்டம் 16.90 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 37.89 அடியாகவும் உள்ளது.

    நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.80 அடியாக உள்ளது.

    • மேலூர் அருகே புதிய கலையரங்கத்தை பெரியபுள்ளான் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • மேலூர் ஊராட்சி ஒன்றியம், சருகு வலையபட்டி ஊராட்சியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.

    மேலூர்

    மேலூர் ஊராட்சி ஒன்றியம், சருகு வலையபட்டி ஊராட்சியில் உள்ள லட்சுமிபுரத்தில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டப்பட்டது.

    இதை மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளான் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். இதில் மேலூர் யூனியன் சேர்மன் பொன்னுசாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் பொன்ராஜேந்திரன், சருகு வலையப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அருந்தேவி ராமநாதன், கூட்டுறவு சங்கத்தலைவர் செல்வராஜ், கிளைச்செயலாளர் ராமநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயபாலன், பாலசந்தர், மேலூர் நகர்மன்ற உறுப்பினர் திவாகர் தமிழரசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சருகுவலையபட்டி முருகேசன், கிடாரிபட்டி சுரேஷ், மற்றும் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சப்-இன்ஸ்பெக்டர், 3 போலீசார் நியமனம்
    • கன்னியாகுமரியிலும் புற காவல் நிலையம் திறக்க வேண்டும்

    நாகர்கோவில், செப்.3-

    நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் நிலையம் செயல் பட்டு வருகிறது.

    ரெயில்வே போலீசார்

    இங்கு ஒரு இன்ஸ்பெக் டர், 3 சப்-இன்ஸ்பெக் டர்கள் மற்றும் 25 போலீ சார் பணியில் உள்ளனர். நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் முதல் திருவ னந்தபுரம் பாறசாலை வரை யிலும் நாகர்கோவி லில் இருந்து கன்னியாகுமரி வரை உள்ள பகுதிகளிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.மேலும் ரெயில்களில் நடக்கும் குற்ற சம்பவங்களை கண்டுபிடிக்கவும் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    சமீபகாலமாக ெரயில் களில் குட்கா கஞ்சா கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரயிலில் கடத்தப்பட்ட சுமார் 25 கிலோ கஞ்சா பொருட்களை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.

    இந்த நிலையில் குழித் துறை மற்றும் வள்ளியூர் பகுதிகளில் ஏற்படும் விபத்து களினால் உயிரிழப்புகள் ஏற்பட்டு ரெயில்கள் தாமத மாக செல்வதாக புகார்கள் வந்தது. இதற்கு முக்கிய காரணம் போலீசார் நாகர்கோவிலில் இருந்து சம்பவ இடத்திற்கு செல்ல நீண்ட நேரம் ஆவதால் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் இருந்து வந்தது.

    எனவே குழித்துறை மற்றும் வள்ளியூர் ரெயில் நிலையத்தில் புறகாவல் நிலைய அமைக்க நடவ டிக்கை எடுக்கப்பட் டது. நீண்ட நாட்கள் கோரிக்கையான குழித்துறை மற்றும் வள்ளியூரில் புறகாவல் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது. குழித்துறையில் ரெயில் நிலையத்திற்கு உள்ளே பிளாட்பாரத்தில் புறக்காவல் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது. அங்கு ஒரு சப்-இன்ஸ் பெக்டர் மற்றும் 3 போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ள னர்.

    இதே போல் வள்ளியூரில் முதல் பிளாட்பாரத்தில் புறகாவல் நிலையம் திறந்து செயல்பட்டு வரு கிறது. இங்கு ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 4 போலீசார் முதல் கட்டமாக பணியமர்த்தப்பட்டு உள்ள னர். நேற்று முதல் புற காவல் நிலையம் செயல்பட தொடங்கியுள்ளது. வள்ளி யூர் மற்றும் குழித்துறையில் புறகாவல் நிலையம் திறக்கப்பட்டதையடுத்து அந்த பகுதியில் நடக்கும் குற்ற செயல்களை தடுக்க வும், ெரயில் விபத்துகளில் உயிரிழப்பு நடந்தால் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று அதை மீட்பு பணியை மேற்கொள்வதற்கும் தற்போது இந்த புற காவல் நிலையங்கள் உதவியாக இருக்கும் என்று தெரிகிறது.

    குழித்துறை, வள்ளியூரில் புற காவல் நிலையம் திறக்கப்பட்டதையடுத்து நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பணிபுரிந்த போலீசாரே அங்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் குறைவான போலீசாரே பணியில் இருந்த நிலையில் புற காவல் நிலையத்திலும் இங்கு உள்ளவர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே புற காவல் நிலையத்திற்கு புதிதாக போலீசாரை நியமனம் செய்து பணியமர்த்த வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.மேலும் நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கும் கூடுதல் போலீசாரை நியமனம் செய்ய வேண்டும்.

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.ஆனால் அங்கும் புறக்காவல் நிலை யம் இல்லை.

    எனவே கன்னியாகுமரியிலும் புற காவல் நிலையம் திறக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • விவசாயிகளிடமிருந்து நேரடியாக கிலோ 105.90 ரூபாய்க்கு கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது.
    • அரசு கொப்பரை கொள்முதல் மையங்களுக்கு வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை பகுதிகளில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ள நிலையில் தேங்காய் மற்றும் கொப்பரைக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் தென்னை விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை, பெதப்பம்பட்டி, பொங்கலூர், காங்கயம் ஆகிய ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் அரசு கொப்பரை கொள்முதல் மையங்கள் துவக்கப்பட்டது.

    கடந்த பிப்ரவரி 1-ந் தேதி முதல் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கிலோ 105.90 ரூபாய்க்கு கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது. இம்மையங்கள் ஜூலை 31 வரை மட்டுமே செயல்பட்ட நிலையில், வெளி மார்க்கெட்டில் கொப்பரை விலை கடும் வீழ்ச்சியடைந்ததால் அரசு கொப்பரை கொள்முதல் மையங்களுக்கு வரத்து அதிகரித்து காணப்பட்டது. மாநில அளவில் கொப்பரை கொள்முதலில் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தில் இருந்த நிலையில் மாவட்ட அளவில் உடுமலை அரசு கொப்பரை மையம் முதலிடத்திலும், பெதப்பம்பட்டி மையம் இரண்டாமிடத்திலும் இருந்தது.

    வெளி மார்க்கெட்டில் கொப்பரை விலை வீழ்ச்சியடைந்துள்ளதோடு தேங்காய்க்கும் விலை இல்லாததால் தென்னை விவசாயிகள் கடுமையாக பாதித்தனர்.எனவே அரசு கொப்பரை கொள்முதல் மையங்களை நீடிக்க வேண்டும், கூடுதல் விலை மற்றும் கட்டுப்பாடு இல்லாமல் கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில் மத்திய அரசு செப்டம்பர் 30-ந்தேதி வரை கொப்பரை கொள்முதல் செய்ய அனுமதியளித்தது. இதனையடுத்து மாநில அரசு சார்பில் ஏற்கனவே செயல்பட்டு வந்த மையங்களில் கொப்பரை கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டதால் உடுமலை, பெதப்பம்பட்டி மையங்களில் மீண்டும் கொப்பரை கொள்முதல் துவங்கியுள்ளது.

    இது குறித்து திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் பாலச்சந்திரன் கூறியதாவது:- விலை ஆதாரத்திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் வருகிற 30-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியான விவசாயிகள் புகைப்படம், ஆதார் நகல், வங்கி பாஸ் புத்தகம் நகல், வி.ஏ.ஓ., உரிமைச்சான்று, அடங்கல், சிட்டா ஆகிய ஆவணங்களுடன் ஒழுங்கு முறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர்களை அணுகலாம்.

    தற்போது பருவ மழை பெய்து வருவதால் உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் உடைக்கும் எந்திரம் மற்றும் பண்ணைக்கழிவுகள் கொண்டு எரித்து சூடான காற்று வாயிலாக குறைந்த நேரத்தில், நேரடியாக கொப்பரை உற்பத்தி செய்யும் எந்திரம் நிறுவப்பட்டுள்ளது.விவசாயிகள் இந்த எந்திரங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டுமே ஆர்டிபிசிஆர் ஆய்வகமானது செயல்பட்டு கொண்டிருந்தது.
    • வைரஸ் தொற்று, மஞ்சள் காமாலை, டெங்கு போன்ற பல்வேறு வகையான வைரஸ் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை வழங்கப்படும்.

    மன்னார்குடி:

    சென்னையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு த்துறையின் சார்பில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு தலைமை மருத்து வமனையில் ரூ.1 கோடியே 35 லட்சம் மதிப்பீட்டில் ஆர்டிபிசிஆர் ஆய்வகத்தை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சித்தலைவர்
    பால சுப்ரமணியன்கலந்து கொண்டனர்.

    இவ்வாய்வ கத்தின் மூலம் கொரோனா வைரஸ் தொற்று, மஞ்சள் காமாலை, டெங்கு போன்ற பல்வேறு வகையான வைரஸ் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை வழங்கப்படும்.

    இதுவரை திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மட்டுமே ஆர்.டி.பி.சி.ஆர் ஆய்வகமானது செயல்பட்டு கொண்டிருந்தது.

    தற்போது கூடுதலாக மன்னார்குடி அரசு தலைமை மருத்துவ மனையிலும் ஆர்.டி.பி.சி.ஆர் ஆய்வகமானது செயல்படுகிறது.

    இதன்மூலம் மன்னார்கு டியை சுற்றியுள்ள பகுதிக ளிலுள்ள பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.

    இந்நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இணை இயக்குநர் மரு.செல்வகுமார், மன்னார்குடி ஆர்.டி.ஓ கீர்த்தனா மணி, மன்னார்குடி நகரமன்ற தலைவர்.சோழராஜன், துணை தலைவர் கைலாசம், மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.விஜயகுமார்,மருத்துவமனை நிலைய அலுவலர் மரு.கோவிந்தராஜ், ஆர்டிபிசிஆர் ஆய்வக அலுவலர் மரு.பாரதிகண்ணமா, தேசிய நல்வாழ்வு குழும அலுவலர் மரு.வினோத்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • அரசு மருத்துவமனை ஆய்வகம் திறப்பு விழா நடந்தது.
    • இதில் அமைச்சர்-மேயர் பங்கேற்றனர்.

    சிவகாசி

    தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் சிவகாசி அரசு மருத்துவமனையில் ரூ.1 கோடியே 35 லட்சம் செலவில் ஆர்.டி.பி.சி.ஆர். ஆய்வகம் அமைக்கப்பட்டது. இதன் திறப்புவிழா சென்னை யில் நடைபெற்றது.

    முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு காணொலி காட்சி மூலம் சிவகாசி அரசு மருத்துவ மனையில் உள்ள ஆய்வகத்தை தொடங்கி வைத்தார். அதனை தொ டர்ந்து சிவகாசி அரசு மருத்து வமனையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு ஆய்வ கத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சிவ காசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன், மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி, சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதாஇன்பம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆனந்தூரில் புறக்காவல் நிலையத்தை டி.எஸ்.பி. திறந்து வைத்தார்.
    • ஊராட்சி மன்ற தலைவர் துரத்தும்நிஷா அபுதாஹீர் தலைமை தாங்கினார்.

    ஆர்.எஸ்.மங்கலம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா ஆனந்தூர், சிறு நாகுடி, இராதானூர், சாத்தனூர், திருத்தேர்வளை ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் சமீப காலமாக திருட்டு, கொள்ளை சம்பவங்கள் அதிக அளவில் நடந்தன.

    குற்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலையத்தில் இருந்து போலீசார் வரவேண்டி இருப்பதாலும், இந்த காலதாமதத்தால் குற்றவாளிகள் தப்பித்து செல்ல வாய்ப்புள்ளதாகவும் இதன் காரணமாக ஆனந்தூரில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து ஆனந்தூர் பஸ் நிலையம் அருகே புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் துரத்தும்நிஷா அபுதாஹீர் தலைமை தாங்கினார். ஆர்.எஸ்.மங்கலம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், தெற்கு பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் அப்துல்சலாம், செயலாளர் முகமது இஸ்மாயில், வடக்கு பள்ளிவாசல் ஜமாஅத் தலைவர் மவுதார் சாகுல்ஹமீது, செயலாளர் சீனிஉமர், ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் தலைவர் ராதிகாபிரபு, துணைத்தலைவர் சேகர், ஆணையாளர் முத்துகிருஷ்ணன், வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மலைராஜன், மாவட்ட கவுன்சிலர் உஷாராணி நாகராஜன், ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டி, முசிரியாபேகம் புரோஸ்கான் முன்னிலை வகித்தனர்.

    திருவாடனை துணை கண்காணிப்பாளர் நிரேஷ் ரிப்பன் வெட்டி புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்தார். நாசீர் உசேன் வரவேற்றார்.

    ஆனந்தூரைச்சேர்ந்த ஓய்வு பெற்ற துணை கண்காணிப்பாளர் முகமது பலுலுல்லா பேசினார். இதில் அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் நந்திவர்மன், தி.மு.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் காந்தி, இலக்குவன், ஆர்.எஸ்.மங்கலம் தெற்கு ஒன்றிய செயலாளர் மோகன், வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன்.

    பா.ஜ.க. ஒன்றிய தலைவர் நரசிங்கம், துணைத் தலைவர் தமிழரசன், ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட த.மு.மு.க. தலைவர் பட்டாணி மீரான், இஸ்லாமிய இளைஞர் சங்கத் தலைவர் உமர்அலி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஹரிகி ருஷ்ணன், செ ந்தாமரை, ஜெகவீரபாண்டியன், கிருஷ்ணவேணி சுமன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாமணி, தி.மு.க. முன்னாள் நகர செயலாளர் முகமதுரபீக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அண்ணா பூங்கா மற்றும் ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதியில் பொதுமக்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
    • தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் அண்ணா பூங்கா நேற்று முதல் சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

    பரமத்தி வேலூர்:

    கர்நாடகா மாநிலத்தில் கொட்டிய கனமழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சுமார் 2. 50 லட்சம் கன அடி தண்ணீர் வந்தது. அப்போது மேடடூர் அணையிலிருந்து நீரை திறந்து விட்டனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக வந்ததன் காரணமாக காவிரி கரையோரம் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டது.

    இந்நிலையில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அண்ணா பூங்கா மற்றும் ஜேடர்பாளையம் அணைக்கட்டு பகுதியில் பொதுமக்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.

    தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால் அண்ணா பூங்கா நேற்று முதல் சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் அணைக்கட்டு பகுதியில் பொதுமக்கள் சென்று பார்வையிடவும் குளிக்கவும் அனுமதி இல்லை. அங்கு பராமரிப்பு பணிகள் நடத்து வருவதால் தற்போது அப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.

    ஜேடர்பாளையம் அண்ணா பூங்கா திறக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் சுற்றுலா பயணிகள் வருவதால் அப்பகுதியில் உள்ள வறுத்த மீன் விற்பனை செய்யும் கடைகள், ஓட்டல்களில் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இனி வரும் விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மீன் விற்பனை அதிகரிக்கும் . அண்ணா பூங்கா திறப்பால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கன மழை பெய்வதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    • இதனால் கரையோர பகுதி மக்கள் வெளியேற்றம்.

    மேட்டூர்:

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கன மழை பெய்வதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    ஏற்கனவே அந்த அணைகள் நிரம்பி உள்ளதால் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 35 ஆயிரத்து 629 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரத்து 250 கன அடி தண்ணீரும் என 2 அணைகளில் இருந்தும் மொத்தம் இன்று காலை 44 ஆயிரத்து 879 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே ஓசூர், அஞ்செட்டி, பிலிகுண்டுலு, ராசிமணல், கேரட்டி நாட்றாம்பாளையம் உள்பட பல பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஒகேனக்கலில் நீர்வரத்து மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காவிரியில் இரு கரைகளையும் தொட்ட படி வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுகிறது.

    ஒகேனக்கலில் நேற்று முன்தினம் 50 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று மாலை 1 லட்சத்து 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இன்று காலை 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் வருகிறது. ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளை யும் மூழ்கடித்த படி தண்ணீ ர்கரை புரண்டு ஓடுகிறது. அருவிகளுக்கு செல்லும் நடை பாதையில் 3 அடிக்கும் மேல் தண்ணீர் செல்கிறது.

    இதையடுத்து ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், காவிரி கரைக்கு செல்லவும் 24 -வது நாளாக தடை நீடிக்கிறது. ஆடிப்பெருக்கு விழாவான இன்று ஒகேனக்கலில் ஏராளமானோர் குவிந்து புனித நீராடுவது வழக்கம்.ஆனால் நீர்வரத்து அதிகரிப்பால் இன்று ஒகேனக்கல் செல்ல முடியாமல் பொது மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஓகேனக்கல் காவிரி கரையில் தாழ்வான பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் ஊட்டமலை, சத்திரம், நாடார் கொட்டாய், உள்பட காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகிறார்கள்.

    நேற்று மாலை ஒகேனக்கல் காவிரியில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர் கோவிந்தராஜ் என்பவர் மெயின் அருவில் பகுதியில் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவரை தீயணைப்பு படையினர் கயிறு மூலமாக பத்திரமாக மீட்டனர்.

    ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது.மேட்டூர் அணைக்கு நேற்று காலை 51 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து இன்று காலை 1 லட்சத்து 41 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

    மேட்டூர் அணையில் இருந்து மின் நிலையங்கள் வழியாக 23 ஆயிரம் கன அடி தண்ணீரும், உபரி நீர் போக்கியான 16 கண் மதகு வழியாக 1 லட்சத்து 17 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 500 கன அடியும் என மொத்தம் 1 லட்சத்து 40 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120.12 அடியாக இருந்தது.

    இதனால் மேட்டூர் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. புதிதாக திறக்கப்பட்ட தண்ணீர் காவிரியில் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளிக்கிறது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் மேட்டூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.

    இதனால் காவிரி கரையோர மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விட்டுள்ளனர். மேலும் தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆபத்தை விளைவிக்கும் வகையில் நீர் நிலைகள் அருகில் செல்லவும், செல்பி புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேட்டூர் அணை பூங்கா, செக்கானூர் கதவணை, கோட்டையூர், பரிசல் துறை, பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பட்டி உள்பட காவிரி கரையோர பகுதிகளில் சிறுவர்கள் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும், ஆடிப்பெருக்கு நாளில் காவிரி ஆற்றில் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    துணி துவைக்க, புகைப்படம் எடுக்க தடை விதித்து கல்வடங்கம், கோனோரிப்பட்டி, பூலாம்பட்டி பகுதிகளில் உள்ள காவிரி ஆற்றின் கரையில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் பூலாம்பட்டி காவிரி ஆற்றில் இ யக்கப்பட்டு வரும் விசைப்படகு போக்குவரத்து 3-வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் மக்கள் 10 கி.மீ. சுற்றி செல்கிறார்கள்.

    மேலும் மேட்டூர் காவிரி கரையேர பகுதிகளில் வருவாய்துறையினர், உள்ளாட்சி துறையினர், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் காவிரி கரையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காவிரியில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரால் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் வெளிேயற்றப்பட்டு உள்ளனர். மேலும் அந்த பகுதியில் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். 

    ×