என் மலர்
நீங்கள் தேடியது "வளர்ச்சி"
- 2022-23 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக ரூ.1,34,630 கோடியாக அதிகரித்துள்ளது.
- ஊரகப் பகுதிகளில் 9,54,899 புதிய வேலைவாய்ப்புகளை காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் உருவாக்கியுள்ளது.
கோவை,
பிரதமர் நரேந்திரமோடி தலைமையின் கீழ் 'தற்சார்பு இந்தியா திட்டத்தை' புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் வகையில், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் வலுவான இந்தியாவின் தோற்றத்தை உலக நாடுகள் முன்வைத்துள்ளது.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன் முறையாக, காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையப் பொருட்களின் விற்பனை ரூ.1.34 லட்சம் கோடியைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
ஊரகப் பகுதிகளில் வசிக்கும் கைவினைஞர்களால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட காதி பொருட்களின் விற்பனை, கடந்த 9 ஆண்டுகளில் 332 சதவீதம் என்ற இமாலய வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
2013-14 நிதியாண்டில் ரூ.31,154 கோடியாக இருந்த இந்த ஆணைய பொருள்களின் விற்பனை, 2022-23 நிதியாண்டில் இதுவரை இல்லாத அளவில் அதிகபட்சமாக ரூ.1,34,630 கோடியாக அதிகரித்துள்ளது.
அதேபோல ஊரகப் பகுதிகளில் 9,54,899 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் மற்றொரு புதிய சாதனையையும் படைத்துள்ளது.
"மகாத்மா காந்தியால் எழுச்சி பெற்று, பிரதமர் நரேந்திரமோடி மற்றும் நாட்டின் கடைகோடி கிராமங்களில் உள்ள கைவினைக் கலைஞர்களின் அயராத கடின உழைப்பினால் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுத்தல் மற்றும் 'மேக் இன் இந்தியா' ஆகிய திட்டங்களின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு இது ஒரு சான்றாகும்." என்று ஆணையத்தின் தலைவர் மனோஜ் குமார் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்," மத்தியில் மோடி அரசின் 9 ஆண்டு கால ஆட்சியில், காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் முயற்சியோடு காதி தயாரிப்புகளுக்கு புதிய வாழ்வு அளிக்கும் வகையில் 'தன்னிறைவிலிருந்து வளம்' என்பதை வலியுறுத்தி 9 சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன" என்றார்.
- அதிகாரிகளுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவுரை
- ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம், மேல்புரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சித்திட்ட பணிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அனைத்து மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதனடிப்படையில், மேல்புறம் ஊராட்சி ஒன்றி யம் முழுக்கோடு ஊராட்சிக்கு ட்பட்ட பகுதியில் ரூ.35 லட்சம் மதிப்பில் புண்ணியம் மாத்தூர்கோணம் சாலை பணிகளும், வெள்ளாங்கோடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் சிதறால் பட்டன்விளை ஆட்டுக்கடவு சாலை பணிகளும், ரூ.35 லட்சம் மதிப்பில் பனிச்சமூடு கிருஷ்ணன்கோவில் சாலை பணிகளும், ரூ.38 லட்சம் மதிப்பில் வெள்ளாங்கோடு, செட்டிவிளை (பள்ளி கோணம் ஆர்.சி.சர்ச் சாலை) சாலை பணிகளும், மாஞ்சாலுமூடு பகுதியில் ரூ.46 லட்சம் மதிப்பில் கைதகம் படப்பச்சை சாலை பணிகளும், மலையடி ஊராட்சிக்குட்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பில் காங்கோடு சாணி சாலை பணிகளும், ரூ.24 லட்சம் மதிப்பில் உத்திரங்கோடு சண்டிப் பாறை சாலை பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து மேல்புறம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வன்னியூர் ஊராட்சிக் குட்பட்ட செழுவன்சேரி-மஞ்சவிளை சாலை, துப்பிறமலை சாலை பணிகளும், மருதங்கோடு ஊராட்சிக்குட்பட்ட காணாகும் கொடி யூர்க்கோணம் சாலை பணிகளும், விளவங்கோடு ஊராட்சிக்குட்பட்ட மடிச்சல் சாட்டுமுக்கு சாலைப்ப ணிகளும், முழுக்கோடு, வெள்ளாங்கோடு ஆகிய ஊராட்சிகளில் முதல்-அமைச்சர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.6 கோடி மதிப்பிலான சாலை பணிகளும் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.
இப்பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சிகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஒர்கிங் சென்டர் கட்டிட பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
- உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், பேச்சிப்பாறை ஊராட்சி மற்றும் மேல்புறம் ஊராட்சி ஒன்றியம், மாங்கோடு மற்றும் புலியூர் சாலை ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணி களை நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
பேச்சிப்பாறை ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரம் குடியிருப்பில் ரூ.10.40 லட்சம் மதிப்பில் மறு சீரமைக்கப்பட்டு வரும் கட்டிட பணிகளை பார்வை யிட்டேன். பணிகளை விரைந்து முடித்து குடியி ருப்பு பகுதி மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மணியங்குழியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021-22-ன் கீழ் ரூ.11.97 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிட பணியும் ஆய்வு செய்யப்பட் டது.அதனைத்தொடர்ந்து மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சுய உதவி குழு கட்டிட பணி களை ஆய்வு மேற்கொண்ட தோடு பணிகளை விரைந்து முடித்திட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவு றுத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஒர்கிங் சென்டர் கட்டிட பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.
கட்டுமான பணிகளின் தரத்தினை உறுதி செய்திட வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து மேல்புறம் ஊராட்சி ஒன்றி யத்துக்குட்பட்ட மாங்கோடு ஊராட்சி பகுதியில் பிர தான் மந்திரி கிராம சாலை இணைப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.69 கோடி மதிப்பில் வெள்ளாடிச்சிப்பாறை-ஓடவள்ளி முதல் நெட்டா வரை 2,400 மீட்டர் நீளத்தில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள தார் சாலையை பார்வை யிட்டேன். சாலை யின் தரம் ஆய்வு செய்யப் பட்டது. மேலும், புலி யூர்ச்சாலை ஊராட்சி யில் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.23.57 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப் பட்டு வரும் ஊராட்சி அலுவலக கட்டி டத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இவ்வாறு அவர் கூறினார். இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, ஊராட்சி மன்ற தலைவர்கள், உதவி செயற்பொறியாளர்கள், வட்டார வளர்ச்சி அலு வலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்
- ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன் தலைமை தாங்கினார்.
கன்னியாகுமரி:
அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் கொட்டாரம் பெருமாள்புரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக அவைக்கூடத்தில் நடந்தது. ஊராட்சி ஒன்றிய தலைவர் அழகேசன் தலைமை தாங்கினார். துணை தலைவி சண்முகவடிவு, ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்பரதி, கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் அருண்காந்த், பிரேமலதா, ராஜேஷ், ஆரோக்கிய சவுமியா, பால்தங்கம், ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நீலகண்டமூர்த்தி, ஒன்றிய பொறியாளர் ஹெலன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் 15-வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் செலவில் சாலை, குடிநீர் உள்பட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்வது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- ரூ.30 லட்சம் மதிப்பில் சுகாதார மைய கட்டிட பணியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- பூத்துறை பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தினை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.
நாகர்கோவில்:
முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தூத்தூர், நடைக்காவு, சூழால், வாவறை, முஞ்சிறை, பைங்கு ளம், விலாத்துறை ஆகிய
ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் பின்னர் அவர் கூறியதாவது:- கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கீழ் உள்ள தூத்தூர் ஊராட்சிக்குட்பட்ட பூத்துறை பகுதியில் தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் ரூ.5.25 லட்சம் மதிப்பில் புதிய சமுதாய சுகாதார கட்டிடம் அமைக்கும் பணியையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2023-24-ன் கீழ் ரூ.14.31 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடப் பணியையும், 15-வது நிதிக்குழு 2023-24 திட்டத்தின் கீழ் தூத்தூர் ஊராட்சி அலுவலகம் அருகில் பவர் பிளாக் அமைத்தல் ஆகிய பணிகளையும், நடைக்காவு ஊராட்சி க்குட்பட்ட வாழனூர் பகுதியில் ஜல் ஜீவன் திட்டம் 2023-24-ன் கீழ் ரூ.12 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணியையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 2023-24-ன் கீழ் ரூ.9.85 லட்சம் மதிப்பில் காஞ்சிரக்கோடு முதல் சாத்தன்கோடு வரையுள்ள கால்வாய்களை துர்வாரும் பணியையும், சூலால் ஊராட்சிக்குட்பட்ட சட்டமன்ற உறு ப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.24.70 லட்சம் மதிப்பில் வெங்கஞ்சி அரசுதொடக்கப் பள்ளியில் 2 வகுப்பறைகள் கட்டும் பணியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, வாவறை ஊராட்சி பகுதியில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் 2022-23-ன் கீழ் ரூ.13.25 லட்சம் மதிப்பில் மணலி முதல் பள்ளிக்கல் வரையிலான சாலை மேம்பாட்டு பணியையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021-22-ன் கீழ் ரூ.18 லட்சம் மதிப்பில் பள்ளிக்கல் அரசு நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியையும், முஞ்சிறை ஊராட்சிக்குட்ப்பட்ட பார்த்திவபுரம் பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.13.75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடப்பணிகளும்,
பைங்குளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.17.50 லட்சம் மதிப்பில் குரங்கினார்விளை முதல் முள்ளகிரிவிளை வரையிலான சாலை மேம்பாட்டு பணியையும், விலாத்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.9.60 லட்சம் மதிப்பில் தையல் எந்திர அறை கட்டும் பணி யினையும், உதச்சிக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022-23-ன் கீழ் ரூ.22 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணியையும், நெல்லிகாவிளை பகுதியில் 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் சுகாதார மைய கட்டிட பணியையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக பூத்துறை பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தினை கலெக்டர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு குழந்தைகளுடன் கலந்துரையாடினார்.இந்த ஆய்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, செயற்பொறியாளர் ஹசன் இப்ராஹிம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிறிஸ்டோபர் ராஜேஷ், டேவிட், ஊராட்சி மன்ற தலைவர்கள் லைலா (தூத்தூர்), மெற்றில்டா, உதவி பொறியாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- மென்பொருள் ஏற்றுமதியில் சென்னை முக்கிய இடத்தை பிடித்துள்ள நிலையில் புதிய தகவல் தொழில் நுட்ப பூங்காக்களும் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது.
- ஒரு ஏக்கருக்கு 3 கோடி ரூபாய் என விலை நிர்ணயம் செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் முதன் முறையாக 2000-ம் ஆண்டில் டைடல் பார்க் உருவானதில் இருந்து தகவல் தொழில்நுட்ப பூங்காக்களின் வளர்ச்சி அபரி மிதமானது.
பழைய மகாபலிபுரம் சாலை, ரேடியல் சாலை, கிண்டி, பெருங்குடி, போரூர், வண்டலூர், அம்பத்தூர், சிறுசேரி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ஐ.டி. நிறுவனங்களின் எண்ணிக்கை பல மடங்காகிவிட்டது.
மென்பொருள் ஏற்றுமதியில் சென்னை முக்கிய இடத்தை பிடித்துள்ள நிலையில் புதிய தகவல் தொழில் நுட்ப பூங்காக்களும் தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஆவடியை அடுத்த பட்டாபிராமில் தகவல் தொழில்நுட்ப பூங்கா மிகப்பெரிய அளவில் அமைக்கப்பட்டு வருகிறது. இதுதவிர இப்போது சென்னையின் வெளிவட்ட சாலையின் கிழக்கு பகுதியான மண்ணிவாக்கம், மலையம்பாக்கம் வண்ட லூர் பகுதியிலும் புதிதாக தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.
டைடல் பார்க் நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் இதற்கு முதற்கட்ட அனுமதியை வழங்கி உள்ளது.
இதற்கான நிலப்பரப்பு தேர்வு செய்யப்பட்டு அதை சரிப்படுத்தும் பணிகளும் நடந்து வருகிறது.
இதில் மலையம்பாக்கம் பகுதியில் அமையும் தொழில்நுட்ப பூங்காவுக்கு 5.33 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கருக்கு 3 கோடி ரூபாய் என விலை நிர்ணயம் செய்து ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2-வது ஐ.டி. பூங்கா மண்ணிவாக்கத்தில் 5.04 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இதற்கு ஏக்கருக்கு ரூ.5 கோடி என நிலமதிப்பு வழங்கப்பட்டுள்ளது.
3-வது தொழில்நுட்ப பூங்கா வண்டலூரில் 0.5 ஏக்கர் பரப்பளவில் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இங்கு நில மதிப்பு ஏக்கருக்கு ரூ.8.05 கோடி மதிப்பாக உள்ளது.
இந்த 3 புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காவை 1½ வருடத்தில் கட்டி முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் மென்பொருள் ஏற்றுமதியில் மேலும் வளர்ச்சி அடைய இது உதவும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இந்தியாவின் விளையாட்டு துறையின் வருவாய் 2023-ல் ரூ.15,766 கோடியாக அதிகரித்துள்ளது
- இந்த வருவாயில் 87 சதவீதம் கிரிக்கெட் போட்டி மூலம் கிடைக்கிறது
விளையாட்டு, இ-ஸ்போர்ட்ஸ் மற்றும் பொழுதுபோக்கு, குரூப் தலைவர் எம். வினித் கர்னிக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது :-
இந்தியாவின் விளையாட்டு துறையின் வருவாய் 2023-ல் ரூ.15,766 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த வருவாயில் 87 சதவீதம் கிரிக்கெட் போட்டி மூலம் கிடைக்கிறது. 2023-ல் கிரிக்கெட் மூலம் கிடைக்கும் வருவாய் சுமார் ரூ.15,000 கோடியைத் தாண்டி உள்ளது.
மேலும், கால்பந்து, ஹாக்கி, பேட்மிண்டன் உள்ளிட்ட மற்ற விளையாட்டுகளின் பங்கு 13 சதவீதம். 2022-ஆம் ஆண்டை விட 2023-ம் ஆண்டில் மொத்த வருவாய் ரூ.15,766 கோடியாக அதிகரித்து 11 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த வருவாயில் ஸ்பான்சர்ஷிப் செலவுகள், மீடியா செலவுகள் மற்றும் ஒப்புதல் கட்டணங்கள் ஆகியவை அடங்கும்.
விளையாட்டுகளில் பெண்களின் பங்கேற்பு விஷயத்தில் பின் தங்கியுள்ளது. ஸ்பான்சர்ஷிப் செலவுகள் 2022 -ஐ விட 24 சதவீதம் அதிகரித்து 2023 -ல் ரூ.7,345 கோடியாக உயர்வு அடைந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இயற்கை சீற்றங்களை தாங்கி வளர கூடிய 5000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளது.
- 3 வருடங்கள் மரங்களின் வளர்ச்சி கண்காணிக்கப்படும்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் கூறியதாவது,
திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதிகளில் அரசு இடங்கள், பள்ளிகள், பூங்காக்கள், குப்பை கிடங்குகள், குளம், ஆறு, வாய்க்கால் கரை பகுதிகளில் இந்தாண்டு நகராட்சிக்கு வருமானம் தரக்கூடிய வகையிலும், இயற்கை சீற்றங்களை தாங்கி வளர கூடிய 5000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளது.
இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனம், நகராட்சி நிர்வாகம், பாலம் தொண்டு நிறுவனம், ஸ்கார்டு தொண்டு நிறுவனம் இணைந்து இப்பணியை மேற்கொள்ளவுள்ளது.
இப்பணியானது ஒரு மாதத்தில் முடிவடையும். தொடர்ந்து 3 வருடங்கள் மரங்களின் வளர்ச்சி கண்காணிக்கப்படும் என்றார்.
இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் அப்துல் ஹரிஸ் மரக்கன்றை நட்டு பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மக்கள் கல்வி நிறுவன இயக்குனர் பாலகணேஷ், பாலம் சேவை நிறுவன செயலாளர் செந்தில்குமார், திட்ட அலுவலர் திருலோகசந்தர் மற்றும் அலுவலர்கள் கனகதுர்கா, திலகவதி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
- சிவகங்கை மாவட்டத்தில், முதல் கட்டமாக 89 கிராம ஊராட்சிகளில் ரூ.32.42 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் நடப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- சமுதாயப்பணிகள் தொடா்பாக கருத்துக்கேட்புக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சிவகங்கை
சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், பிரவலூர் ஊராட்சியை அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம் 2022-23-ன் கீழ் தன்னிறைவு அடையச் செய்வது குறித்தும், பொதுமக்களின் தேவைகள் மற்றும் சமுதாயப்பணிகள் தொடா்பாகவும் கருத்துக்கேட்புக் கூட்டம் நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி பேசியதாவது:-
முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கிராமப்புற வளா்ச்சியில் தனிகவனம் செலுத்தி அனைத்து கிராமப்புற பகுதிகளையும், நகா்ப்புறப்பகுதிகளுக்கு இணையாக மாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 கிராம ஊராட்சிகளிலும் பிற துறைகளை ஒருங்கிணைத்து திட்டங்களை செயல்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு முதல் கட்டமாக மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டத்தின் கீழ் மொத்தம் 89 கிராம ஊராட்சிகளில் நீர்நிலை புனரமைத்தல் தொடா்பாக தேர்வு செய்யப்பட்ட 118 பணிகள் ரூ.958.44 லட்சம் மதிப்பீட்டிலும், குக்கிராமங்களில் தெருக்கள், வீடுகள் அமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் தொடா்பாக தேர்வு செய்யப்பட்ட 192 பணிகள் ரூ.752.93 லட்சம் மதிப்பீட்டிலும், சமத்துவ சுடுகாடு, இடுகாடு என்று பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளுதல் தொடா்பாக தேர்வு செய்யப்பட்ட 21 பணிகள் ரூ.80.86 லட்சம் மதிப்பீட்டிலும், பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொதுப்பயன்பாட்டு கட்டமைப்புக்களை உருவாக்குதல் தொடா்பாக தேர்வு செய்யப்பட்ட 105 பணிகள் ரூ.749.21 லட்சம் மதிப்பீட்டிலும், உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ.3242.22 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் தொடக்கமாக பிரவலூர் ஊராட்சியில் பொதுமக்களின் தேவைகள் மற்றும் சமுதாயப்பணிகள் தொடா்பாக கருத்துக்கேட்புக் கூட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் பிரவலூர் ஊராட்சியைச் சார்ந்த மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினா்கள் இந்த பகுதியில் கிடைக்கப்பெறும் கால்நடைச்சாணம், தென்னை, வாழை ஆகியக்கழிவுகளைக் கொண்டு எரிவாயு கலன் அமைப்பது குறித்தும், சுகாதார நாப்கின், பனைஓலைக்கூடை முடைதல், தையற்கூடம் போன்ற வைகள் தொடா்பாக பயிற்சி பெறுவது குறித்தும் மற்றும் பொதுமக்கள் எடுத்துரைத்துள்ளனர்.
இதனை கருத்தில் கொண்டு பிரவலூர் ஊராட்சியை தன்னிறைவு அடைய செய்வதற்கான முன் மாதிரியான ஊராட்சியாக உருவெடுக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) குமார், உதவி திட்ட அலுவலா்கள் விசாலாட்சி (வீடு, சுகாதாரம்), செல்வி (உட்கட்டமைப்பு), சிவகங்கை வட்டாட்சியா் தங்கமணி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஜெகநாதன், ரத்தினவேல், பிரவலூர் ஊராட்சி மன்றத்தலைவா் கவிதா மற்றும் பலா் கலந்து கொண்டனா்.
- இளைஞர்களின் சாதனை நாட்டின் வளர்ச்சிக்கு வழிகாட்டியாக அமையும் என ராமநாதபுரம் கூடுதல் கலெக்டர் பேசினார்.
- போட்டித் தேர்வு, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, கலை நிகழ்ச்சி என பல்வேறு போட்டிகள் நடந்தன.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் முகமது சதக் தஸ்தகிர் தொழில்நுட்ப கல்லூரியில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மூலம் மாவட்ட நேரு யுவ கேந்திரா, செய்யது அம்மாள் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து இளையோர் திருவிழாவை நடத்தியது.
கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பிரவீன் குமார் தலைமை தாங்கி இளையோர்களுக்கான பல்வேறு போட்டிகளை ெதாடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:-
கல்லூரியில் படிக்கும் போது சந்தோஷமாக இருக்கும். அதுதான் நம்முடைய வாழ்க்கையிலும் இருக்கும் என்று நினைத்து விடக்கூடாது. படித்து முடித்து வெளியே வந்து ஒரு இலக்கை பெறுவதற்கு நாம் படும் சிரமத்தை அளவிட முடியாது. அதனால் தான் படிக்கும்போேத ஒவ்வொருவரும் எதிர்காலத்தில் லட்சியம் என்ன? என்று திட்டமிட்டு செயல்பட்டு படித்தால் அந்த வெற்றி எளிதாக கிடைத்துவிடும்.
இதே போல் படிக்கும் காலத்திலேயே திட்டமிட்டு செயல்பட வேண்டும். இளைஞர்களாகிய நீங்கள் நினைத்தால் முடியாதது ஒன்றுமில்லை. வெற்றி என்னும் இலக்கு உங்கள் அருகாமையில் உள்ளது.
படிக்கும் காலத்தில் எதிர்காலத்தின் திட்டத்தை நினைத்து அதற்கேற்ப படித்து சாதனை படைக்க வேண்டும். உங்களுடைய ஒவ்வொருவரின் சாதனை தான் நாட்டின் வளர்ச்சிக்கும் வழிகாட்டியாக அமையும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இளைஞர்களுக்கான போட்டித் தேர்வு, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, கலை நிகழ்ச்சி என பல்வேறு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்று, நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில் நேரு யுவகேந்திர ஒருங்கிணைப்பாளர் பிரவீன் குமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில்குமார், முகமது சதக் தஸ்தகீர் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் சோமசுந்தரம், செய்யது அம்மாள் கல்லூரி வள்ளி விநாயகம், பரமேசுவரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- கர்ப்பிணி பெண்களுக்கு 11 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
- தாய்மை என்பது உன்னதமான மகிழ்ச்சியை தரக்கூடியது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா மாவட்ட திட்ட அலுவலர் ஜோஸ்பின் சகாய பிரமிளா தலைமையில், வட்டார திட்ட அலுவலர் கண்ணகி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சுஜாதா முன்னிலையில் நடைப்பெற்றது.
நிகழ்ச்சியை நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார். மாரிமுத்து எம்.எல்.ஏ கர்ப்பிணி பெண்கள் நலத்திட்டம் குறித்து எடுத்துரைத்தார்.
ெதாடர்ந்து, செல்வராசு எம்.பி கர்ப்பிணி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், புடவை, வளையல், பேரீட்சை பழங்கள் உள்பட 11 வகையான சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசும்போது, குழந்தையின் வளர்ச்சியானது கருவுற்ற திலிருந்து தொடங்குகிறது, தாய் மகிழ்ச்சியாக இருந்தால் தான் குழந்தை நன்றாக வளர்ச்சி அடைந்து ஆரோக்கியமாக பிறக்கும். தாய்மை என்பது உன்னதமான மகிழ்ச்சியை தரக்கூடியது என்றார்.
மேலும், வட்டார மருத்துவ அலுவலர் கௌரி கர்ப்பிணிகளின் மருத்துவ பரிசோதனை குறித்து பேசினார். நிகழ்ச்சியில் ஊட்டசத்து கண்காட்சி நடைப்பெற்றது, கர்ப்பிணிகளுக்கு புளிசாதம், காய்கறி சாதம், புலவு, லெமன் சாதம், வடை, தயிர்சாதம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் டாக்டர் ஆர்த்தி, ஊராட்சி தலை வர்கள் வீரசேகரன், ஜானகிராமன், மாலினி ரவிச்சந்திரன், பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார், ஊட்டசத்து ஒருங்கிணைப்பாளர் ராஜவேந்தன், உதவியாளர் மேனகா, சூபர்வைசர்கள் கமலா, காயத்ரிதேவி, ஜெயந்தி மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- விழுந்தமாவடி அரசு பள்ளி 14 வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகங்களை கொண்டதாகும்.
- மாணவர்களின் நலன் கருதி பள்ளியை மறவாமல் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த விழுந்தமாவடி தம்பிரான் குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான நாகராஜன்.
இவர் விழுந்தமாவடியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 35 ஆண்டுகளாக தொழில் பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் இதே பள்ளியில் பயின்று தற்பொழுது ஓய்வு பெற உள்ள நிலையில் தான் பயின்ற மற்றும் பணிபுரிந்த பள்ளிக்கு ஏதாவது செய்ய நினைத்த ஆசிரியர் 14 வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகம் உள்ள பள்ளி கட்டிடத்திற்கு சுமார் 1.25 லட்சம் மதிப்பீட்டில் பள்ளியின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் நலன் கருதியும் வெள்ளை அடித்து வர்ணம் பூசி வருகிறார்.
இன்னும் பத்து நாட்களில் பணிகள் நிறைவு பெற உள்ள நிலையில் இந்தப் பணி தனக்கு மன நிறைவை அளிப்பதாகவும் மன மகிழ்ச்சி அளிப்பதாகவும் இதே போல் மாணவர்கள் தங்கள் பயின்று பல்வேறு துறைகளுக்கு சென்றாலும் தன் பயின்ற பள்ளிகளுக்கு மாணவர்களின் நலன் கருதி பள்ளியை மறவாமல் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என ஆசிரியர் வேண்கோள் விடுத்தார்.
ஆசிரியரின் இத்தகைய செயலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுலை தெரிவித்தனர்.