search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெற்றி"

    • பள்ளி மேலாண்மை குழு தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளியின் சார்பாக சால்வை அணிவித்து பாராட்ட தெரிவிக்கப்பட்டது.
    • பள்ளி மேலாண்மை குழு உள்ளாட்சி பிரதிநிதியாக ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் வார்டு உறுப்பினர் ஐஸ்வர்யா மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கருப்பம் புலம் பி.வி தேவர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சண்முக நாதன் தலைமை வகித்தார் தேர்தல் அதிகாரியாக ஆசிரியர் சுப்ரமணியன் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான தேர்தலை நடத்தினார் இதில் தலைவராக சத்தியா துணை தலைவராக தமிழ்ச்செல்வி பள்ளி மேலாண்மை குழு உள்ளாட்சி பிரதிநிதியாக ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் வார்டு உறுப்பினர்ஐஸ்வர்யா மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

    பள்ளி மேலாண்மை குழு தலைவராக தேர்வு செய்யபட்ட சத்யா பள்ளிக்கு தனது சொந்த செலவில் ரூ.75 ஆயிரம் மதிப்பில் பள்ளி வளாகத்தில் சிசிடிவி கேமரா மற்றும் இன்வெர்ட்டர் வைக்கும் பணியை துவக்கி வைத்தார். பள்ளி மேலாண்மை குழு தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளியின் சார்பாக சால்வை அணிவித்து பாராட்ட தெரிவிக்கப்பட்டது. பள்ளியில் நடைபெற்ற பள்ளி மேலாண்மைகுழு தேர்தலுக்கு வேதார ண்யம் டிஎஸ்பி முருகவேல்இ ன்ஸ்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • 2019-ம் ஆண்டு வெளியான ‘ஜீவி’ படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
    • ஜீவி படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.

    விஜே கோபிநாத் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான படம் 'ஜீவி'. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்திற்கு விமர்சன ரீதியாக அமோக வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்த வெற்றியின் நடிப்பு அனைவரின் பாராட்டுகள் பெற்று, சர்வதேச பட விழாக்களிலும் இப்படத்திற்கு விருதுகள் கிடைத்தன.

    இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜீவி படத்தின் 2-ம் பாகத்தின் அறிவிப்பு வெளியாகி பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. நடிகர் வெற்றி, இயக்குனர் விஜே கோபிநாத், இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி, நடிகர்கள் கருணாகரன், ரோகினி, மைம் கோபி என முதல் பாகத்தில் பணியாற்றிய அதே கூட்டணியுடன் ஜீவி இரண்டாம் பாகம் தொடங்கியிருந்தது. இப்படத்தை மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார். இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.



    ஜீவி 2 படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் நிறைவடைந்த நிலையில், தற்போது ஜீவி-2 படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதனை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பெரிதும் எதிர்ப்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் தற்போது சமூக வலைத்தளப் பக்கத்தில் வைரலாகி வருகிறது.



    • செல்வக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பம்பர்.
    • இந்த படத்தில் வெற்றி கதாநாயகனாக நடித்துள்ளார்.

    வேதா பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் செல்வக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பம்பர். இந்த படத்தில் 8 தோட்டாக்கள் மற்றும் ஜீவி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும், ஷிவானி நாராயணன், ஜி.பி. முத்து, தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

    கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்திற்கு கார்த்திக் நேத்தா பாடல்களை இயற்றியுள்ளார். வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு மு.காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.


    வெற்றி - ஷிவானி

    கேரள மாநில லாட்டரியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி, திருவனந்தபுரம், புனலூர் மற்றும் சபரிமலை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

    பம்பர் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. இப்பணிகளும் விரைவில் நிறைவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகிவிடும் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார். 

    • பெரியபட்டினத்தில் மினிமாரத்தான் போட்டி நடந்தது.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் ஓட்டத்தை முழுமையாக நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் ஆகியவை மக்கள் சங்கமம் மாநாட்டில் வழங்கப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் நகர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற மக்கள் சங்கமம் மாநாடு வருகிற 30 மற்றும் ஜூலை 1-ந் தேதிகளில் பெரியபட்டினம் தர்கா திடலில் நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக மினி மாரத்தான் போட்டி நடந்தது.

    போட்டியை மாநில செயலாளர் முகமது ரசின் தொடங்கி வைத்தார். பெரியபட்டினம் பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி முத்துப்பேட்டை, சேதுநகர், மங்கம்மா சாலை வழியாக மீண்டும் பெரியபட்டினம் வரை 7 கிலோ மீட்டர் தூரம் இந்த மாரத்தான் போட்டி நடந்தது. இதில் முதல் இடத்தை ஆசிப், 2-வது இடத்தை யூசுப், 3-வது இடத்தை மைதீன் ஆகியோர் பெற்றனர்.

    வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் ஓட்டத்தை முழுமையாக நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் ஆகியவை மக்கள் சங்கமம் மாநாட்டில் வழங்கப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
    • போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரமும் வெளியிடப்பட்டது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகளுக்கிடையே மாவட்ட அளவில் போதை பொருள் தடுப்பு குறித்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் அரவிந்த் பங்கேற்று போட்டிகளில் வென்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

    உலகபோதை தடுப்பு விழிப்புணர்வு தினத்தையொட்டி குமரி மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கிடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதைப்பொருள் தடுப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய வாகன ஒட்டுவில்லையினை வெளியிட்டு வாகனங்களில் ஒட்டுவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள துறை அலுவலர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரமும் வெளியிடப்பட்டது.

    அதோடு மாவட்ட சமூக நலத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார வாகனமும் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் போதை பொருள் பழக்கத்திற்கு ஆளாகாமல் இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, மாவட்ட சமூக நலன் மற்றும் உரிமைத்துறை அலுவலர் சரோஜினி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட், அதங்கோட்டாசான் முத்தமிழ் கழக மறுவாழ்வு மைய இயக்குனர் அருள்ஜோதி, நியூ பாரத் டிரஸ்ட் இயக்கு நனர் அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 50 ஆண்டுக்கு பின் பல கோடி சொத்தை ஜமாபந்தி மூலம் முதியவர் மீட்டார்.
    • பண்ருட்டி திருவதிகை உள்ள இவருக்குசொந்தமான நிலத்தை இவருக்கு பட்டா போட்டு சொத்தை இவரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று ஐகோர்ட்டு மூலமாக உத்தரவு பெற்று வந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி சாத்திப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவருக்கு 3 சகோதரர்கள். இவருக்கு பாத்திமான இவரது குடும்ப சொத்தை இவருக்கு தெரியாமல் இவரது சகோதரர் மூலமாக வேறு ஒருவர் வாங்கியுள்ளார். இவருக்கு அப்போது வயது17. இவருக்கு சொந்தமான இந்த சொத்தை மீட்க 17 வயதில் போராட்டத்தை தொடங்கினார். 50 ஆண்டுகளுக்குப் பிறகு இவரது போராட்டத்திற்கு வெற்றி கிடைத்தது.

    இவரது தொடர் முயற்சியால் பண்ருட்டி திருவதிகை உள்ள இவருக்குசொந்தமான நிலத்தை இவருக்கு பட்டா போட்டு சொத்தை இவரிடம் ஒப்படைக்க வேண்டுமென்று ஐகோர்ட்டு மூலமாக உத்தரவு பெற்று வந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் ஜமாபந்தியில் தாசில்தார் சிவா கார்த்திகேயனிடம் முறையிட்டார். தாசில்தார் சிவா.கார்த்திகேயன் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் இவருக்கு பட்டா வழங்கலாம்என்று ஐகோர்ட்டுக்கு கடிதம் எழுதினார். ஐகோர்ட்டு நீதிபதிகள் இவருக்கு பட்டாவழங்கஉத்தரவுபிறப்பித்தனர். இதனை தொடர்ந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவருக்கு பட்டா வழங்கப்பட்டது. பட்டா நகல் தாசில்தாரிடம் இருந்து பெற்ற முதியவர் கதறி அழுத காட்சி பரிதாபமாக இருந்தது. இது பற்றி அவர் கூறுகையில் 50 ஆண்டுகால போராட்டத்தில்எனது தம்பி ,எனது மகன் ஆகியோரை இழந்தேன் என்றார்.

    • போட்டியில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட 6 தென் மாவட்டங்களை சார்ந்த 15 அணிகள் பங்கேற்றது.
    • பனவடலிச்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் போட்டியினை தொடங்கி வைத்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் வட்டம் மேலநீலிதநல்லூரில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பாக தென் மண்டல அளவிலான மாவட்டங்களுக்கிடையேயான கைப்பந்து போட்டி கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

    இந்த போட்டியில் மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களை சார்ந்த 15 அணிகள் பங்கு கொண்டன. போட்டியில் மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி அணி முதல் இடத்தையும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஜி.எஸ். கல்லூரி இரண்டாம் இடத்தையும்,

    பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரி மூன்றாம் இடத்தையும், நாகர்கோவில் தூய அல்போன்சா கல்லூரி அணி நான்காம் இடமும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பைகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

    பரிசளிப்பு விழாவில் நெல்லை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் சந்திரகுமார், தென்காசி மாவட்ட செயலர் ரமேஷ்குமார், கல்லூரி முதல்வர் ஹரிகெங்காராம் மற்றும் முன்னாள் மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக நடை பெற்ற தொடக்க விழாவில் பனவடலிச்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் கலந்து கொண்டு போட்டியினை தொடங்கி வைத்தார். போட்டிக்கான ஏற்பாடுகளை கல்லூரி உடற்கல்வி இயக்குநர் முத்துக்குமார் செய்திருந்தார்.

    • இலக்குகளை நிர்ணயிக்கும்போது, அவை யாரை சார்ந்து இருக்கிறது என்பது முக்கியம்.
    • இலக்கை அடைய தன்னம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் செயல்பட வேண்டும்.

    வாழ்க்கையில் கடினமாக உழைத்தாலும், பலருக்கு முன்னேற்றம் எட்டாக் கனியாகவே இருக்கும். சரியான இலக்கை நிர்ணயித்து செயல்படாததும் இதற்கு காரணமாகும். நாம் என்ன செய்ய வேண்டும்? எவ்வாறு இருக்க வேண்டும்? என்பது குறித்து இலக்குகளை நிர்ணயிப்பது முக்கியமானது. இலக்குகள் வரையறுக்கக் கூடியதாக, அளவிடக் கூடியதாக, அடையக் கூடியதாக, கால வரையறைக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.

    அவற்றை மூன்று படிநிலைகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். நீண்டகால, குறுகியகால, மத்திய கால இலக்குகள் என்று எல்லாவற்றையும் பிரித்து, அதற்கான செயல்பாடுகளைத் தொடர்ந்து செய்து வந்தாலே நம்முடைய இலக்கை எளிதாக அடைய முடியும். சாதனையாளர்கள் ஒவ்வொருவரும், தங்களுடைய இலக்குகளை நோக்கி பயணிக்கின்றனர். அதனாலேயே அவர்கள் வெற்றி பெறுகின்றனர்.

    நம் அன்றாட வாழ்க்கையிலும், ஒரு இலக்கை நிர்ணயித்து அதன்படி நடந்தால் வாழ்வில் வெற்றி பெறலாம். மாணவர்கள் உயர்கல்வி கற்பது, விளையாட்டு வீரர்கள் முதல் பரிசு பெறுவது, தொழில்முனைவோர் தனது தொழிலில் வெற்றி பெறுவது, பணி புரிபவர்கள் அவர்களது துறையில் முதன்மை பதவிக்கு செல்வது போன்ற இலக்குகளை நிர்ணயித்து பயணிக்கலாம்.இதன் மூலம் நேரத்தையும், திறமையையும் ஆக்கப் பூர்வமாக பயன்படுத்த முடியும்.

    இலக்குகளை நிர்ணயிக்கும்போது, அவை யாரை சார்ந்து இருக்கிறது என்பது முக்கியம். நம்முடைய தனிப்பட்ட குறிக்கோளாக, குடும்பம், சமூகம் சார்ந்ததாக இருக்கும்போது அந்த இலக்குகளை எவ்வளவு நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். நடைமுறைக்கு சாத்தியமான, அடையக்கூடிய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். இலக்கினை தீர்மானம் செய்த பிறகு, 'இதை நம்மால் செய்துவிட முடியுமா?' என்று நம்மை நாமே குறைத்து மதிப்பிடுதல் கூடாது. அது நம்முடைய ஊக்கத்தைக் குறைக்கும்.

    நம்முடைய பலவீனமே, எல்லாம் நமக்கு உடனடியாக நடைபெற வேண்டும், நினைத்த வண்ணம் நடக்க வேண்டும் என்று நினைப்பது தான். அவற்றை எல்லாம் நீக்கி விட்டு, சிறிது கால தாமதம் ஆனாலும் பரவாயில்லை. ஆனால், இலக்கை அடைய வேண்டும் என்ற தன்னம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் செயல்பட வேண்டும். நம் இலக்கை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்று முழுமையாக நம்ப வேண்டும்.

    இலக்குகளை நிர்ணயித்த பின்பு, அதில் உள்ள சிக்கல்கள், நாம் சந்திக்கக்கூடிய பிரச்சினைகள் குறித்த தீர்வு பற்றியும் சிந்திக்க வேண்டும். சவால்களை சமாளிக்கும் திறமைகளை எவ்வாறு வளர்த்துக் கொள்வது என்பது குறித்த தெளிவான முடிவுகளை ஆராய்ந்து, அவற்றில் தோல்வி கண்டாலும், அதில் இருந்து மீண்டு வருவதற்கான மன உறுதியையும் வளர்த்துக் கொள்ளுதல் அவசியமானது.

    ×