search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெய்யருவி"

    • இயற்கை எழில் சூழ்ந்த பகுதி குண்டாறு நீர்த் தேக்கமாகும்
    • நெய்யருவி சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்பும் அருவியாக மாறி வருகிறது

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதி குண்டாறு நீர்த் தேக்கமாகும். குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இந்த அணைக்கும் வந்து செல்வது வழக்கம்.

    இந்த அணையில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள நெய்யருவி சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்பும் அருவியாக மாறி வருகிறது.

    இந்த அருவியை சுற்றி 5 க்கும் மேற்பட்ட தனியார் அருவிகள் உள்ளன. இந்த அருவிகளுக்கு செல்லும் சாலை மிகவும் கரடு முரடான சாலை என்பதால் தனியார் ஜீப் முலம் தான் செல்ல முடியும்.

    மேலும் நெய்யருவி அருகாமையில் அமைந்துள்ள ஆற்றை கடந்து தான் மேலே குறிப்பிட்ட அருவிகளுக்கு செல்ல முடியும்.

    இந்த ஜீப் பாதை மிக புதுவித அனுபவம் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    தற்போது மேற்கு தொடர்ச்சி அடிவார பகுதியில் விட்டு விட்டு பெய்த மழையால் பிரதான அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகின்றன.

    குற்றாலம் ஐந்தருவி, புளியருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ள நிலையில் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் தற்போது நெய்யருவிக்கு அதிகளவில் வர தொடங்கி உள்ளனர். இதனால் அங்கு கூட்ட நெரிசலுடன் காணப்படுகிறது.

    அண்டை மாலநிலத்தவரும், தமிழகத்தின் பிற மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தற்போது குண்டாறுக்கு மேல் உள்ள தனியார் அருவிகளில் குளிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    அவ்வாறு வரும் பயணிகள் தனியார்அருவிகளுக்கு செல்ல ஜீப்களை பயன் படுத்தி வருகின்றனர். தற்போது கேரளாவில் பெய்துவரும் தொடர்மழையால் அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    மேலும் சாலைகள் முழுவதும் கரடு முரடாக காட்சியளிக்கிறது. ஆற்றில் தண்ணீர் வருவதால் ஜீப்பில் பயணிக்கு சுற்றுலா பயணிகள் தங்களுக்குள் இருக்கும் ஆபத்தை உணராமல் தங்களின் சந்தோசத்திற்காக ஜீப்பயணத்தை தேர்வு செய்து பயணித்து வருகின்றனர்.

    ஓடையை கடக்கும் போது எதிர்பாராவண்ணம் பேராபத்து நடக்கவாய்ப்புகள் அதிகம் என்பதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெய்யருவியில் குளிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான கழிப்பிட வசதிகள், பெண்கள் உடை மாற்றும் அறை சாலை வசதி என அடிப்படைகளை வசதிகளை செய்து தர வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×