search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாவூர்சத்திரம்"

    • வழி தெரியாமல் ஊருக்குள் புகுந்த மானை தெருநாய்கள் கடித்தன.
    • கடப்போகத்தி காட்டுப் பகுதியில் அதிகளவில் மான்கள் உள்ளது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே வழி தெரியாமல் ஊருக்குள் புகுந்த மான் ஒன்றை தெருநாய்கள் கடித்து குதறிக்கொண்டிருந்தன.

    அதனை கண்ட பொதுமக்கள் நாய்களை அங்கிருந்து துரத்தி விட்டு வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை அலுவலர் நேரில் வந்து பார்த்தபோது நாய்கள் கடித்ததில் மான் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. இறந்த மான் பெண் மான் என்றும், அதற்கு 3 வயது இருக்கும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    பாவூர்சத்திரம் அருகே உள்ள கடப்போகத்தி பகுதியில் அமைந்துள்ள காட்டுப் பகுதியில் அதிகளவில் மான்கள் உள்ளது. அங்கிருந்து தப்பி ஊருக்குள் வந்த மானை நாய்கள் துரத்தி கடித்துள்ளதாக வனத்துறை அலுவலர் தெரிவித்தார்.

    • கல்வி தொலைக்காட்சி குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தொலைக்காட்சி வழங்குமாறு ஊராட்சி தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • குத்தாலிங்கராஜன் என்ற கோபி தனது சொந்த நிதியிலிருந்து வண்ண தொலைக்காட்சி வாங்கி அதனை அங்கன்வாடி மையத்திற்கு வழங்கினார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள மாடியனூர் பாளையம் ஆ.பொன்னுச்சாமி நாடார் தொடக்க பள்ளியில் உள்ள அங்கன்வாடியில் பயின்று வரும் குழந்தைகளுக்கு கல்வி தொலை க்காட்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அங்கு அங்கன்வாடி பணியாளராக பணிபுரிந்து வரும் கவிதா, ஆவுடையானூர் ஊராட்சி தலைவர் குத்தாலிங்கராஜன் என்ற கோபியிடம் தொலைக்காட்சி வழங்கு மாறு கோரிக்கை விடுத்தி ருந்தார்.

    அதனை ஏற்று ஆவுடையானூர் ஊராட்சி தலைவர் தனது சொந்த நிதியிலிருந்து வண்ண தொலைக்காட்சி வாங்கி அதனை அங்கன்வாடி மையத்திற்கு வழங்கினார்.

    தொடர்ந்து அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்புகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினர்கள் திருமலை செல்வன், ராஜாராம், ராதா சிங், தங்க ராஜா, தங்கம், கார்த்திக் ராஜா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • பழமையான ஆலமரத்தை அகற்ற இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் வந்தனர்.
    • போலீசார் அங்கு கூடியிருந்த கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தென்காசி:

    நெல்லை- தென்காசி நான்கு வழி சாலை பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் பாவூர்சத்திரம் அருகே உள்ள நவநீதகிருஷ்ணபுரத்தில் சாலையோரம் உள்ள மிகப் பழமையான மூனால் முப்புடாதி அம்மன் கோவிலை நான்கு வழிச்சாலை அமைப்பதற்காக கோவிலில் இருந்த சிலைகளை வேறு இடத்திற்கு மாற்றவும், கோவிலை ஒட்டி நின்ற மிக பழமையான ஆலமரத்தை அகற்றுவதற்காகவும் தென்காசியில் இருந்து இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் வந்தனர்.

    தொடர்ந்து அவர்கள் போலீசார் பாதுகாப்புடன் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். கோவிலில் உள்ள பீடங்களை வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லும் போது அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது பெண், ஆண் சாமியாடிகள் திடீரென சாமி ஆடி குறி சொல்ல தொடங்கினர்.

    அப்பொழுது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை அங்கிருந்து தூக்கி சென்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் போலீசார் அங்கு கூடியிருந்த கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோவில் பீடங்களை மாற்றியதோடு பழமையான ஆலமரத்தையும் ஜே.சி.பி. எந்திரத்தை கொண்டு அகற்றும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.

    கோவிலில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட சிலைகளை ஊர் பொதுமக்களின் அனுமதி பெறாமல் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் தென்காசிக்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் நவநீதகிருஷ்ண புரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டு அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அவர்களிடம் போலீசார் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் எடுத்து செல்லப்பட்ட விக்கிரகங்களை கொண்டு வராததால் ஊர் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று காலையில் எடுத்துச் செல்லப்பட்ட விக்கிரகங்களை இரவு இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஊர் பொதுமக்களிடம் ஒப்படைத்தனர். அதன் பின்னர் ஊருக்கு பொதுவான கட்டிடத்தில் அம்மன் விக்கிரகங்களை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து பொதுமக்கள் வழிபட தொடங்கினர்.

    நான்கு வழிச்சாலை பணிகள் தேவையான ஒன்றுதான் இருப்பினும் பழமையான கோவில் மற்றும் ஆலமரங்களை நவநீதகிருஷ்ணபுரத்தில் அகற்றாமல் சாலையில் படர்ந்த ஆலமரத்தின் கிளைகளை மற்றும் அகற்றிவிட்டு நான்கு வழி சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் இந்து அறநிலையத்துறை மற்றும் சாலை அமைத்து வரும் அதிகாரிகள் மீதும் குற்றம் சாட்டி உள்ளனர்.

    • மாவட்ட செயலாளர் அய்யப்பன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    தென்காசி:

    கீழப்பாவூர் ஒன்றிய பகுதியில் உள்ள ஊராட்சிகளின் மக்கள் கோரிக்கைகள், குடிநீர், சாலைவசதி, சுகாதாரத்தை பேணி காக்க வலியுறுத்தியும், தூய்மை பணியாளர்களுக்கான தினக்கூலியாக ரூ.478 வழங்கிட கோரியும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் நடக்கும் முறைகேடுகளை தடுத்து நிறுத்திட கோரியும், பூலாங்குளம் ஊராட்சியில் போலியான வீட்டு ரசீதுகள் அச்சிட்டு லட்சக்கணக்கான ரூபாய் முறைகேடுகள் நடப்பதாகவும், அதனை தடுக்க கோரியும் மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியின் கீழப்பாவூர் ஒன்றிய கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்து.

    பாவூர்சத்திரத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அய்யப்பன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    இதில் மாவட்ட தலைமை குழு உறுப்பினர் வேல் முருகன், சுப்பிர மணியன், மாவட்ட குழு உறுப்பினர்கள் மாடசாமி, மாதவன், வேலு, பேச்சிமுத்து மற்றும் பீடி சங்கத்தலைவர் அய்யம்பெருமாள், விவசாய சங்க தலைவர், சமூக ஆர்வலர் திருமுருகன் ஆகியோர் பேசினர். ஒன்றிய கமிட்டி உறுப்பினர்கள் அண்ணாதுரை, சிவராஜன், முத்துலட்சுமி, ராமசாமி, பாலசுப்பிரமணியன், கருப்பையா, அரிச்சந்திரன், நடராஜகுமார், சரவண விநாயகன் மற்றும் விவசாய சங்க தலைவர்கள் சுடலை மாடன், சின்னபாண்டியன், பீடி சங்க தலைவர் ஆறுமுகராஜ், கிராமப்புற விவசாய தொழிலாளர் சங்க தலைவர் ராமர்பாண்டியன், கட்டுமான சங்க தலைவர்கள் குமார், பலவேசம், பூலாங்குளம் சக்திவேல் முருகன், ராமநாடன், செட்டியூர் மாரியப்பன் மற்றும் தூய்மை பணியாளர் சங்க நிர்வாகிகள்,பெண்கள் உள்பட78 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர். கீழப்பாவூர் ஒன்றிய பகுதி ஊராட்சிகளின் மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    • கேசவராஜ் சாலடியூர் சந்திப்பு பகுதியில் லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டிருந்தார்.
    • சுடலையாண்டி அந்த பகுதியில் கையில் 176 லாட்டரி சீட்டுகளுடன் நின்றார்.

    நெல்லை:

    பாவூர்சத்திரத்தை அடுத்த கீழப்பாவூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலக தெருவை சேர்ந்தவர் கேசவராஜ்(வயது 51). இவர் அங்குள்ள சாலடியூர் சந்திப்பு பகுதியில் நின்று லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த போலீசாரை கண்டதும் அவர் தப்பியோட முயற்சித்தார்.

    உடனே அவரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 460 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். தென்காசி அருகே கீழப்புலியூரை சேர்ந்த சுடலையாண்டி(66) என்பவர் கையில் 176 லாட்டரி சீட்டுகளுடன் அந்த பகுதியில் நின்றார். அவரை தென்காசி போலீசார் கைது செய்து லாட்டரியை பறிமுதல் செய்தனர்.

    • செல்லையா அங்குள்ள குளத்தில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.
    • சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று செல்லையா உடலை மீட்டனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் பெரியகுளத்தில் கருமடையூர் கிராமத்தை சேர்ந்த செல்லையா (வயது80). இவர் இயற்கை உபாதை கழிக்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்குள்ள குளத்தில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

    இது குறித்து பொதுமக்கள் பாவூர்சத்திரம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் பேர குழந்தைகளுடன் பழைய மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.
    • கல்வியை போதித்த ஆசிரியர்களுக்கு சந்தன மாலைகளை சூட்டினர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள பூலாங்குளத்தில் மாதாபட்டணம் எஸ்.எஸ்.வி. மேல்நிலைப்பள்ளியின் 1981-ம் ஆண்டு முதல் 1983-ம் ஆண்டு வரை பயின்ற பள்ளி மாணவர்கள் சுமார் 75 பேர் 40 ஆண்டுகளுக்கு பின்பு சந்திக்கும் நிகழ்ச்சியை நடத்தினர்.

    பூலாங்குளத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடந்த நிகழ்வில் 75 பழைய மாணவர்களும் தங்களின் குழந்தைகள் மற்றும் பேர குழந்தைகளுடன் உற்சாகமாக கலந்து கொண்டு கலந்துரையாடிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்தது.

    இதில் தங்களுக்கு பள்ளியில் கல்வியை போதித்த குருவாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு சந்தன மாலைகளை சூட்டி கவுரவித்து அவர்களுடன் சேர்ந்து குழுபுகைப் படத்தை ஆர்வமுடன் எடுத்துக் கொண்டனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணும் பொழுது தங்களின் பள்ளி படிப்பு காலத்தில் நண்பர்கள் உணவருந்தியதை நினைவு கூறும் வகையில் உணவினை ஒருவருக்கொருவர் பரிமாறிய நிகழ்ச்சி அங்கிருந்தவர்களை ஆச்சரியப் படுத்தியது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாதாபட்டணம் எஸ்.எஸ்.வி. மேல்நிலைப்பள்ளியின் பழைய மாணவர்கள் குழு செய்திருந்தனர்.

    • ஏ.டி.எம். மையத்தின் கதவானது பழுதடைந்து சாய்ந்த நிலையில் உள்ளது.
    • கதவை தொட்டால் உடனடியாக மேலே விழும் நிலையில் காட்சியளிக்கிறது.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் நெல்லை -தென்காசி நான்கு வழிச்சாலை ஓரத்தில் 5-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் ஏ.டி.எம். மையங்கள் இயங்கி வருகின்றன. அதில் வென்னிமலை முருகன் கோவிலுக்கு செல்லும் ஆர்ச்சிக்கு எதிரே இயங்கி வரும் அரசுடைமையாக்கப்பட்ட ஒரு வங்கியின் ஏ.டி.எம். மையத்தின் முன்பக்க கண்ணாடி கதவானது பழு தடைந்து கதவின் மேற்புறத்தில் பிடிமானம் இல்லாமல் சாய்ந்த நிலையில் உள்ளது.

    இதனால் அந்த வங்கியின் வாடிக்கை யாளர்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்த ஏ.டி.எம். மையத்தின் கதவை கண்டு அச்ச மடைந்துள்ள னர். உள்ளே யாரேனும் சென்றால் கதவை தொடாமல் செல்ல முடியாது. கதவை தொட்டால் உடனடி யாக மேலே விழும் நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது.

    இந்த ஏ.டி.எம். மையத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் அருகில் இருக்கும் மற்றொரு ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பணத்தை எடுத்து வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையத்தின் அதிகாரிகள் பாவூர்சத்திரத்தில் வாடிக்கை யாளர்களை அச்சுறுத்தும் வண்ணம் காட்சியளிக்கும் கண்ணாடி கதவினை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாடிக்கை யாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நெல்லை- தாம்பரம் சிறப்பு ரெயிலானது நேற்று இரவு பாவூர்சத்திரம் ரெயில் நிலையம் கடந்து சென்று கொண்டிருந்தது.
    • சிக்னல் கம்பத்தில் மோதிய வாலிபர் தூக்கி வீசப்பட்டு இறந்தது விசாரணையில் தெரியவந்தது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்திற்கு அருகே தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் இறந்த நிலையில் கிடப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தென்காசி ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

    அங்கு சுமார் 25 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில் கிடந்தார். இறந்த அந்த நபர் யார்? எவ்வாறு உயிரிழந்தார்? என்பது குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் விசாரணை மேற்கொண்டார்.

    நெல்லையில் இருந்து தாம்பரத்திற்கு அம்பாசமுத்திரம், பாவூர்சத்திரம், தென்காசி வழியாக இயக்கப்பட்டு வரும் நெல்லை- தாம்பரம் சிறப்பு ரெயிலானது நேற்று இரவு பாவூர்சத்திரம் ரெயில் நிலையம் கடந்து சென்று கொண்டிருந்தபோது படிக்கட்டில் நின்று பயணம் செய்த அந்த வாலிபர் பாவூர்சத்திரம் ரெயில்வே கேட்டின் அருகே தண்டவாளத்தின் ஓரத்தில் நின்ற சிக்னல் கம்பத்தில் மோதி தூக்கி வீசப்பட்டு இறந்தது தெரியவந்தது.

    உயிரிழந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு ரெயில்வே போலீசார் அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாவூர்சத்திரம் அருகே ரெயிலில் தொங்கியபடி பயணம் செய்த வாலிபர் சிக்னல் கம்பத்தில் மோதி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மேலும் உயிரிழந்த வாலிபரின் முகவரி குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    • காலை 11 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் காமராஜ் நகரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற வென்னிமலை முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் நடைபெற்றது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 11 மணிக்கு சிறப்பு பூஜை, மதியம் அன்னதானம் நடந்தது. இதில் பாவூர்சத்திரம் மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அன்னதான ஏற்பாடுகளை கீழப்பாவூர் வட்டார அரிசி ஆலை அதிபர்கள், நெல் அரிசி வியாபாரிகள் மற்றும் தவிடு வியாபாரிகள் செய்திருந்தனர்.

    • மரத்தின் சுற்றி குப்பை கொட்டப்பட்டு குப்பை மேடாக காட்சியளித்தது.
    • புளியமரத்தில் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே அரியப்பபுரம் ரெயில்வே கேட்டின் கீழ்புறம் மிகவும் பழமை வாய்ந்த புளியமரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் சுற்றிலும் குப்பைகள் கொட்டப்பட்டு குப்பை மேடாக காட்சி அளித்தது. இந்நிலையில் நேற்று மாலை மர்ம நபர்கள் குப்பைகளுக்கு தீ வைத்துள்ளனர். இதில் தீ வேகமாக பரவி பழமை வாய்ந்த புளியமரத்தில் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

    இது குறித்து சுரண்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய போக்குவரத்து அதிகாரி பாலச்சந்தர் தலைமையில் சிறப்பு அலுவலர் ரவீந்திரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சாமி, ராஜேந்திரன், விவேகானந்தன் மற்றும் உதய பிரகாஷ் ஆகியோர் விரைந்து வந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    • போட்டிகள் நடைபெறும் அரங்கத்தில் சாதியை குறிக்கும் வாசகங்கள், பிளக்ஸ் பேனர்கள் வைக்க அனுமதி இல்லை.
    • பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்காத வகையில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் பகுதிகளில் கபடி போட்டிகள் நடத்தப்படும் போது பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்த சிறப்பு ஆலோசனை கூட்டம் காவல்துறை சார்பில் பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது. இதில் ஆலங்குளம், பாவூர்சத்திரம் பகுதிகளை சேர்ந்த கபடி குழுக்களின் நிர்வாகிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பாவூர்சத்திரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடத்தப்படும் அனைத்து கபடி போட்டிகளுக்கும் தகுதியான நடுவர்களை நியமிக்க வேண்டும். போட்டிகள் நடக்கும் ஆடுகளங்களில் இரண்டு நடுவர்கள் நியமிக்கப்பட வேண்டும். நடுவர்கள் ஒருதலை பட்சமாக நடந்து கொள்ளக் கூடாது. போட்டிகள் நடத்தும் நேரம் மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை என்றும் போட்டிகளை நடத்தும் நபர் அல்லது குழுவில் இருந்து எழுத்துப்பூர்வமாக போட்டி நடத்துவதற்கான உறுதிமொழி கடிதம் பெற வேண்டும்.

    போட்டி நடத்தும் குழுவில் அதன் அணி நேரடியாக இறுதி போட்டியில் அல்லது அரை இறுதிப் போட்டியில் விளையாட அனுமதிக்க கூடாது. போட்டிகள் நடைபெறும் அரங்கத்தில் சாதியை குறிக்கும் அடையாளங்கள், வாசகங்கள், பிளக்ஸ் பேனர்கள் வைக்க அனுமதி இல்லை. சாதிய பாடல்கள், சாதி குறித்த அடையாளங்களை சாதி தலைவர்கள் படம் பொறிக்கப்பட்ட ஆடைகளுக்கு அனுமதி கிடையாது. மேலும் வீரர்கள் மது அருந்தி விளையாட அனுமதிக்க கூடாது என்றும் போட்டிகள் நடைபெறும் போது தேவையில்லாத அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் அதற்கு போட்டி நடத்துபவர் அல்லது குழுவே முழு பொறுப்பாளர் ஆவார்கள்.

    போலீசார் விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறும் பட்சத்தில் போட்டிக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டு போட்டி நிறுத்தப்படும். வருங்காலங்களில் அக்குழுவினர் போட்டிகள் நடத்திட அனுமதி வழங்கப்படாது. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்காத வகையில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும். கபடி போட்டி தொடங்குதல் முதல் முடியும் வரை டாக்டர்களுடன் கூடிய ஆம்புலன்ஸ் வாகனம் அங்கு நிறுத்தப்பட வேண்டும். மேற்கண்ட விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளும் கபடி குழுக்களுக்கு மட்டுமே போட்டிகளை நடத்திட அனுமதி வழங்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டது.

    இதில் கபடி குழு நிர்வாகிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

    ×