search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அருள்நிதி"

    • நடிகர் அருள்நிதியின் 15-வது படமான டி-பிளாக் திரைப்படத்தின் புதிய அறிவிப்பு.
    • இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் தனது வலைத்தளப் பக்கத்தில் வெளியிடவுள்ளார்.

    'வம்சம்' படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் அருள்நிதி. இப்படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது. இதையடுத்து 'மௌனகுரு', 'டிமாண்டி காலனி', 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'பிருந்தாவனம்', 'கே-13' என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களாக நடித்து முன்னணி நடிகராக உயர்ந்தார்.

    அதன்பின் நடிகர் அருள்நிதி அவருடைய 15-வது படத்தை யுடியூப்பில் பிரபலமான எருமசாணி தொடர் மூலம் புகழ்பெற்ற விஜய்குமார் ராஜேந்திரன் இயக்கினார். டி-பிளாக் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஒளிப்பதிவாளர் அரவிந்த்சிங் தயாரித்துள்ளார். சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தை வெளியிட உள்ளது. இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    டி-பிளாக்


    இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள "ஐஸ் கட்டி குருவி" என்ற வீடியோ பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் நாளை (14.06.2022) மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாக அருள்நிதி தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிவித்துள்ளார். இவரின் இந்த அறிப்பை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.



    • அறிமுக இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடித்துள்ள படத்தின் அறிவிப்பு.
    • நடிகர் அருள்நிதி நடித்துள்ள 'தேஜாவு' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அறிமுக இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் நடிகர் அருள்நிதி, நடித்துள்ள திரைப்படம் 'தேஜாவு'. இந்த படத்தில் நடிகை ஸ்மிருதி வெங்கட் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் மதுபாலா, காளி வெங்கட், ராகவ் விஜய், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மிஸ்டரி திரில்லர் வகை கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் அருள்நிதி போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

     

    தேஜாவு

    தேஜாவு


    இந்த திரைப்படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் சார்பில் கே.விஜய் பாண்டி தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில் தேஜாவு திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த திரைப்படம் வருகிற ஜூலை 21-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழ் திரையுலகில் மாறுபட்ட திரைக் கதைகளை தேர்வு செய்து நடித்து வருபவர் அருள்நிதி. இவர் நடித்திருக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பை வித்யாசமான கெட்-அப் உடன் வெளியிட்டிருக்கிறார்.

    தமிழ் திரையுலகில் மாறுபட்ட திரைக் கதைகளை தேர்வு செய்வதில் பெயர் பெற்ற நடிகர் அருள்நிதி. 'களத்தில் சந்திப்போம்' படத்தை தொடர்ந்து இயக்குனர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் 'டைரி' படத்திலும், அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் 'தேஜாவு' படத்திலும், விஜய் குமார் இயக்கத்தில் 'டி பிளாக்' படத்திலும் நடித்து முடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் திரைக்குவர இருக்கிறது.

    அருள்நிதி

    அருள்நிதி

    இந்நிலையில் அருள்நிதி நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட்டை வித்யாசமான கெட்-அப் உடன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அருள்நிதி அறிவித்துள்ளார். அருள்நிதி அடுத்த படத்தில், ராட்சசி படத்தை இயக்கிய கௌதம் ராஜுடன் கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் தயாரிக்க, டி இமான் இசையமைக்கவுள்ளார். அருள்நிதி கிராமத்து இளைஞனாக முரட்டு மீசையில் இருக்கும் கெட்-அப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    ×