என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன மழை"

    • தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது.
    • 3500 ஏக்கர் உப்பளம் காலையில் பெய்த கனமழையால் மழை நீரில் மூழ்கியது.

    விழுப்புரம்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி சில நாட்களே ஆன நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த மழை சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்னும் 4 நாட்கள் வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பாக மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது.

    வங்காள விரிகுடா பகுதியான மரக்காணத்தில் சுமார் 19 மீனவ கிராமங்கள் உள்ளன. எனவே வானிலை அறிவித்தபடி மரக்காணம் மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் காலை 6 மணி முதல் விடாமல் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை மரக்காணம் மற்றும் மரக்காணத்தை சுற்றியுள்ள 60 கிராமங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் மரக்கா ணத்தில் உள்ள விவசாய நிலங்கள் ஏரி குளங்களில் நீர் வரத்து அதிகமாக வருகிறது. கன மழை கொட்டி வருவதால் விவசாய நிலங்களில் மழை நீர் கடல் போல் சூழ்ந்து ள்ளது.

    இதனால் அந்த பகுதியில் நெல் மணிலா மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்தி ருக்கும் விவசாய பெருங்குடி வாழ் மக்கள் அனைவரும் பாதிப்புக்கு ள்ளாகி உள்ளனர். குறிப்பாக மரக்கா ணத்தில் உள்ள 3500 ஏக்கர் உப்பளம் காலையில் பெய்த கனமழையால் மழை நீரில் மூழ்கியது. இதனால் உப்பள உற்பத்தி நிறுத்தப்பட்டது. உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டதால் இந்த உப்பளத்தை நம்பி இருக்கும் 5000 தொழிலாளர்கள் வேலை இல்லாமல் அன்றாடம் வயிற்றுப் பிழப்பிற்கு அல்லோள்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த மழை மரக்காணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான அனுமந்தை, கீழ்புத்துப்பட்டு ,ஆலத்தூர், பிரம்மதேசம், எக்கியார்குப்பம் உள்ளிட்ட 60 கிராமங்களில் தொடர்ந்து மழை பெய்த வண்ணம் உள்ளது. இதனால் பாதிப்படைந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெய்து வரும் கனமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுகின்றனர்.

    • தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்றும் அதே பகுதியில் நிலவுகிறது.
    • இது மேலும் அதற்கடுத்த 3 நாட்களில் மேற்கு - வடமேற்கு திசையில் தமிழக - புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

    நாமக்கல்:

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்றும் அதே பகுதியில் நிலவுகிறது.

    இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வலுபெறக்கூடும்.

    இது மேலும் அதற்கடுத்த 3 நாட்களில் மேற்கு - வடமேற்கு திசையில் தமிழக - புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதையொட்டி தமிழகத்தில் வருகிற நாட்களில் இடி மின்னலுடன் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    அதன் தொடர்ச்சியாக வருகிற 22-ந் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது‌ என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • உப்பிலியபுரம் பகுதியில் விட்டு விட்டு வெளுத்து வாங்கியது
    • கன மழையால் நெற்பயிர்கள் சாய்ந்தது

    திருச்சி:

    தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.அதன்படி நேற்று பிற்பகல் முதல் பெரும்பாலான மாவட்டங்களில் விட்டு விட்டு நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று மாலை முதல் இரவு விடிய, விடிய பாட்டம் பாட்டமாக மழை பெய்தது. ஒரு சில இடங்களில் காற்றுடன் மழை கொட்டியது.இதில் திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் பகுதியில் நேற்றிரவு பெய்த கனமழையால் நெற்பயிர்கள் சாய்ந்தன. இந்த பகுதியில் அதிக அளவில் விவசாயிகள் சம்பா பயிரிட்டுள்ளனர். அதிலும் பணப்பயிராக கருதப்படும் சீரக சம்பா நெல் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது.இதுவே உப்பிலியபுரம் பகுதி விவசாயிகளுக்கு கூடுதல் வருமானத்தை ஈட்டித்தரும் விவசாய பயிராகும். நெற்பயிர்கள் பூட்டு வாங்கியுள்ள நிலையில், மழை பெய்ததால் அவை அனைத்தும் சாய்ந்துள்ளதாக தெரிவித்த தங்கநகர் பகுதியை சேர்ந்த விவசாயி கண்ணன் கூறுகையில், இந்த ஆண்டு நெல் மகசூல் கேள்விக்குரியதாகி உள்ளது என்றார்.


    • அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையிலும் வெப்பத்தின் தாக்கம் கடுமையாகவே காணப்பட்டது.
    • நேற்று மாலை 4.30 மணியிலிருந்து 5.30 மணி வரை பலத்த சூறாவளி காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது.

    அவினாசி :

    கடந்த மாதம் 29 ந்தேதி உடன் அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாகவே காணப்பட்டது. பகல் நேரத்தில் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு வெப்பம் பொதுமக்களை வாட்டி எடுத்தது.

    கடந்த 1 ந்தேதி பள்ளிகள் செயல்பட இருந்த நிலையில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் காரணமாகபள்ளிகள் செயல்படும் தேதி மாற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை முதல் மாலை 4 மணி வரை அவினாசி பகுதியில் கடுமையான வெப்பம் காணப்பட்டது. இதையடுத்து கருமேகங்கள் சூழ்ந்தது. நேற்று மாலை 4.30 மணியிலிருந்து 5.30 மணி வரை பலத்த சூறாவளி காற்றுடன் மழை கொட்டி தீர்த்தது. இதனால் ரோடுகளில் பள்ளமான பகுதிகளில் மழை நீர் குட்டை போல் தேங்கி நின்றது. சில இடங்களில் ரோட்டில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை உருவானதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • கன மழையால் முறிந்து விழுந்தது
    • போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதி

    அணைக்கட்டு:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனிடையே நேற்று இரவு 9 மணி முதல் சுமார் 3 மணி வரை அணைக்கட்டு, ஒடுகத்தூர் ஆகிய சுற்றுப்பகுதியில் மழை வெளுத்து வாங்கியது.

    இதனால் அணைக்கட்டு- ஒடுகத்தூர் செல்லும் பிரதான சாலையில் எடைத்தெரு எனும் கிராமத்தில் சாலையோரம் இருந்த புளியமரம் முறிந்து சாலையில் விழுந்தது.

    இதனால் மரத்தின் அடியில் இருந்த மல்லிகை கடையின் மேல் பகுதி சிறிது சேதமாகியது. மேலும் பிரதான சாலை என்பதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் வாகனங்கள் செல்ல முடியாமல் நின்று கொண்டு இருப்பதாகவும் வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவலறிந்து விரைந்து வந்த சப்- இன்ஸ்பெக்டர் தயாநிதி மற்றும் போலீசார் சாலையில் நடுவே போக்குவரத்துக்கு இடையூராக இருந்த புளியமரத்தினை பொக்லைன் எந்திரத்தின மூலம் அகற்றி போக்குவரத்துக்கு வழிவகை செய்தனர்.

    வேப்பங்குப்பம் போலீசார் கூறுகையில்:-

    தற்போது தொடர் மழைக்காலம் என்பதால் சாலையோரம் உள்ள பழமையான புளியமரங்கள் வேரோடு சாய்கின்றது. மரத்தின் கிளைகள் முறிந்து சாலையில் விழுந்து போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்ப்படுத்துகின்றது. சில நேரங்களில் வாகமத்தின் மீது கூட விழலாம் எனவே மழைக்காலங்களில் குடும்பத்துடன் வாகனத்தில் செல்லுவதை குறைத்துக்கொள்ள வேண்டும், குழந்தைகளை அழைத்து செல்லக்கூடாது எனவும் மரங்கள் நிறைந்த இடத்தில் செல்லும் போது முழு கவனமுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

    • அரக்கோணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் பல்வேறு மாவட்டங்களிலும் தயார் நிலையில் முகாமிட்டுள்ளனர்.
    • கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும்.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் 3 நாட்களில் தீவிரமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கன மழையின் காரணமாக திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் இடுக்கி, கண்ணூர் மாவட்டங்களில் 20 சென்டி மீட்டருக்கு மழை பெய்யும் என கருதப்படுவதால் அந்த 2 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பருவமழை வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு கடலோரப்பகுதிகளில் வசிப்பவர்களும், தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    பாதுகாப்பு நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மை படையினர் பல்வேறு மாவட்டங்களிலும் தயார் நிலையில் முகாமிட்டுள்ளனர்.

    கனமழை மற்றும் காற்றின் காரணமாக ஆலப்புழாவில் 36 வீடுகளும், பத்தனம் திட்டாவில் 3 வீடுகளும் இடிந்தன. அங்கு வசித்தவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மழை நீடித்து வருவதால், எர்ணாகுளம், ஆலப்புழா மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நீர்நிலை பகுதிகளில் மக்கள் குளிக்கவோ அல்லது மீன் பிடிக்கவோ செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே காசர்கோடு அருகே மழைக்கு மரம் சாய்ந்ததில் மாணவி ஒருவர் பலியாகி உள்ளார். காசர்கோடு மாவட்டம் புத்திகே அருகே உள்ள அங்காடி மோகர் பகுதியை சேர்ந்தவர் யூசுப். இவரது மனைவி பாத்திமா சைனப். இவர்களுது மகள் ஆயிஷாத் மின்கா (வயது 11). இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு புறப்பட்டார். அப்போது அங்கு நின்ற ஒரு மரம் காற்றில் முறிந்து விழுந்தது. அதன் கிளை ஆயிஷாத் மின்கா மீது விழுந்தது. இதனை கண்ட சக மாணவ-மாணவிகள் கூச்சலிட்டனர். உடனடியாக அங்கு நின்றவர்கள் மரக்கிளைகளை அகற்றி ஆயிஷாத் மின்காவை மீட்டனர். பின்னர் அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஆயிஷாத் மின்கா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியது.

    கேரளாவில் பெய்து வரும் கனமழை குறித்து மாநில முதல்-மந்திரி பினராய் விஜயன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், மாநிலத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் மழையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இடுக்கி, பத்தனம் திட்டா, மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, ஆலப்புழா மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

    மேலும் கூடுதலாக மாநில அவசர கால செயல்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. கடலோர பகுதிகளில் வசிப்பவர்கள், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    • 2 மணி நேரமாக பெய்த கன மழையால் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பணியாட்கள், சுற்றுலா பயணிகள் என பலரும் அவதியடைந்தனர்.
    • வாகன ஓட்டிகள் வெளிச்சம் இல்லாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் சூழலும் உருவானது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர் சாரல் மழை மற்றும் மிதமான மழை பெய்து வந்தது.காலையில் மாணவ- மாணவிகள், பள்ளி, கல்லூரி செல்லும் நேரங்களில் கடந்த சில தினங்களுக்கு முன் வரை அவ்வப்போது சாரல் மழை, மிதமான மழை பெய்து வந்த நிலையில் 2 நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    நேற்று மதியம் திடீரென பெய்த சாரல் மழை, கன மழையாக மாறியது. சுமார் 2 மணி நேரமாக பெய்த கன மழையால் மாலை நேரத்தில் பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மாணவ- மாணவிகள், அன்றாட பணிகளுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பணியாட்கள், சுற்றுலா பயணிகள் என பலரும் அவதியடைந்தனர்.

    ஒரு சில வாகன ஓட்டிகள் வெளிச்சம் இல்லாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்லும் சூழலும் உருவானது. மேலும் நள்ளிரவு வரை மழை கொட்டித் தீர்த்தது.நேற்றைய திடீர் மழையால் கொடைக்கானல் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் சுற்றுலாப்பணிகள் பாதிப்படைந்தனர்.

    மழையால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    • தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது.
    • அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

    சேலம்:

    தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இன்று காலை முதலே வெயிலில் தாக்கம் அதிகமாக உள்ளது.

    இந்த நிலையில் நாளை (22 -ந் தேதி) சேலம், நாமக்கல், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • தரைப்பாலம் கட்டி யதிலிருந்தே அதிக அள வில் மழை பெய்யும் போ தெல்லாம், இது போன்ற நிகழ்வு தொடா்ந்து நடை பெறுகிறது.
    • தரைப்பாலத்தில் இருந்து நீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வே ண்டும்

    மத்தூர், 

    கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டியில் உள்ள தரைப்பாலம் கடந்த 2013-ம் ஆண்டு பெங்களூரு- பாண்டிச்சேரி சாலையில் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையின் காரணமாக இந்த தரைப் பாலத்தில் தண்ணீா் வெளியேறும் பாதை அடைத்துக் கொண்டதால் தரைத்தளத்தில் அதிக அளவு மழைநீா் தேங்கியது.

    இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் அருகே உள்ள கெரிகேப்பள்ளி தரைப்பாலம் வழியாக சுமாா் 10 கிலோ மீட்டா் சுற்றிச் சென்றன. இரு சக்கர வாகனங்களில் செல்பவா்கள் சாலையைக் கடக்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினா். பெங்களூரில் இருந்து புது வைக்கு செல்லும் பிரதான வழித்தடம் என்பதால் பெங்களூரில் இருந்து வரும் வாகனங்கள் இந்த ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கியுள்ள தண்ணீரில் சிக்கி பழுதாகி நின்றன.

    தரைப்பாலம் கட்டி யதிலிருந்தே அதிக அள வில் மழை பெய்யும் போ தெல்லாம், இது போன்ற நிகழ்வு தொடா்ந்து நடை பெறுகிறது. தரைப்பாலத்தில் இருந்து நீரை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்க வே ண்டும் என இப்பகுதி வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • நேற்று வரை 239 கன அடியாக இருந்த வைகை அணையின் நீர்வரத்து இன்று 332 கன அடியாக அதிகரித்துள்ளது.
    • மதுரை மக்களின் குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது.

    மேலும் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும். இந்த ஆண்டில் போதிய அளவில் மழைப்பொழிவு இல்லாததால் தண்ணீர் திறக்கப்பட வில்லை.

    இதனால் விவசாய பணிகளில் தாமதம் காட்டி வந்தனர். இந்நிலையில் நேற்று தேனி மாவட்டத்தில் கன மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வரை 239 கன அடியாக இருந்த வைகை அணையின் நீர்வரத்து இன்று 332 கன அடியாக அதிகரித்துள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 47.64 அடியாக உள்ளது. மதுரை மக்களின் குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 1698 மி.கன அடியாக உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 118.90 அடியாக உள்ளது. அணைக்கு 417 கனஅடி நீர் வருகிறது. அணையில் இருந்து 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 2430 மி.கன அடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.16 அடியாக உள்ளது. வரத்து, திறப்பு இல்லை. இருப்பு 340.60 மி.கன அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 78.22 அடியாக உள்ளது. அணைக்கு 12 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 37.36 மி. கன அடியாக உள்ளது.

    பெரியாறு 20.4, தேக்கடி 5.8, கூடலூர் 0.8, சண்முகாநதி அணை 1, உத்தமபாளையம் 0.4, போடி 6.8, வைகை 0.4, சோத்துப்பாறை 17, மஞ்சளாறு 5.2, வீரபாண்டி 2.4, அரண்மனைபுதூர் 3.8, பெரியகுளம் 0.5 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

    கன மழை

    குறிப்பாக மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான கெங்கவல்லி, மேட்டூர், ஆனைமடுவு, தம்மம்பட்டி, தலைவாசல் உள்பட பல பகுதிகளில் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஒடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது.

    சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வயல்வெளிகள் உள்பட எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. தொடர் மழையால் விவசாய பயிர்கள் செழித்து வளர்ந்து வருவதால் விவாசயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம், ஏற்காட்டில் சாரல்

    சேலம் மாநகரில் நேற்று சாரல் மழை பெய்தது. இந்த மழையால் மாநகரில் குளிர்ந்த காற்று வீசியது. ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ஏற்காட்டில் நேற்று மாலையும் சாரல் மழை பெய்தது. மழையை தொடர்ந்து கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் இல்லாமல் ஏற்காட்டின் முக்கிய பகுதிகளில் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக கெங்கவல்லியில் 25 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மேட்டூர் 21.6, ஆனைமடுவு 20, தம்மம்பட்டி 15, தலைவாசல் 12, வீரகனூர் 9, சேலம் 5.3, ஓமலூர் 5, காடையாம்பட்டி 5, ஏற்காடு 4.4, கரியகோவில் 4, ஆத்தூர் 4, எடப்பாடி 3, சங்ககிரி 2.4, பெத்தநாயக்கன் பாளையம் 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 136.7 மி.மீ. மழை பெய்துள்ளது. மாவட்டம் முழுவதும் இன்று காலை வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.   

    • சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
    • இந்த நிலையில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஏற்காட்டில் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் புழுக்கத்தில் தவித்து வந்தனர்.

    திடீர் மழை

    இந்த நிலையில் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஏற்காட்டில் கன மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் ஏற்காட்டில் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. விடுமுறை நாளான நேற்று அதிக அளவில் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.

    இதே போல மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான ஆத்தூர், கெங்கவல்லி, மேட்டூர், தம்மம்பட்டி, காடையாம்பட்டி உள்பட பல பகுதிகளில் கன மழை பெய்தது. மழையை தொடர்ந்து மாவட்டத்தின் பல பகுதிகளிலும் குளிர்ந்த காற்று வீசியது.

    67.4 மி.மீ. பதிவு

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 33.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஆத்தூர் 13, கெங்கவல்லி 10, மேட்டூர் 6.2, தம்மம்பட்டி 4, காடையாம்பட்டி 1 மி.மீ என மாவட்டம் முழுவதும் 67.4 மி.மீ. மழை பெய்துள்ளது.

    ×