என் மலர்
நீங்கள் தேடியது "தீர்வு"
- காலில் கட்டுடன் வந்து அமர்ந்திருந்த பெண்ணிடம் எழுந்து சென்று குறைகளை கேட்டறிந்தார்.
- பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட பெட்டிசன்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் முன்னிலையில் பெட்டிசன் மேளா நடைபெற்றது.
இதில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட பெட்டிசன்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.
அப்போது, கால் உடைந்த நிலையில் காலில் கட்டுடன் வந்து அமர்ந்திருந்த பெண்ணிடம் எழுந்து சென்று போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் குறைகளை கேட்டறிந்தார்.
இது பொதுமக்களின் மனதில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமாரின் மனித நேயத்தையும், பெருந்தன்மையையும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
- நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் சமரச மையம் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும்.
- சமரச முறையிலும் தீர்வு காணுமாறு மாவட்ட சமரச மைய முதன்மை மாவட்ட நீதிபதி கேட்டு கொண்டுள்ளார்.
சேலம்:
சேலம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சமரச மையத்தில் வருகிற 16-ந்தேதி சமரச நாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, ஏற்கெ னவே நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் சமரச மையம் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும்.
இதில் தனி நபர் தகராறு, பண வசூல் தகராறு, குடும்ப தகராறு, சொத்து தகராறு, காசோலை தகராறு, மின்சார வாரியம், தொழிலா ளர் நலம், உரிமையியல் மற்றும் இதர வழக்குகளுக்கு தீர்வு காணலாம்.
சமரச மையம் மூலம் முடித்துக்கொள்ளும் வழக்கிற்கு மேல் முறையீடு கிடையாது. இந்த வழக்கு களை சமரச மையத்தில் பேச்சு வார்த்தைகள் மூலம் சமரச முறையில் தீர்வு காண்பதால், யார் வென்ற வர்? யார் தோற்றவர்? என்ற பாகுபாடு இன்றியும் உறவு முறைகள் தொடர்ந்து நீடிக்கவும், சமரச மையம் வழிவகை செய்கிறது.
இதற்கு மேலாக சமரச மையம் மூலமாக முடித்துக்கொள்ளும் வழக்கு களுக்கு செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம் முழுமை யாக திருப்பிக்கொ டுக்கப்ப டும். எனவே பொதுமக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் தங்களது வழக்கு களை சமரச மையத்திற்கு அனுப்பி சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீர்வு காணுமாறு மாவட்ட சமரச மைய முதன்மை மாவட்ட நீதிபதி கேட்டு கொண்டுள்ளார்.
- ஊராட்சிகளில் மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது.
- முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சு.கொளத் தூர், தேவபாண்ட லம், கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக் குட்பட்ட சிறுவங்கூர், உலகங்காத்தான், உளுந்தூர் பேட்டை சட்டமன்ற தொகுதிக் குட்பட்ட எலவனசூர் கோட்டை, களமருதூர் ஆகிய ஊராட்சிகளில் மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினர். விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன், மணிக்கண்ணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணிகள், நெடுஞ்சா லைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசியதாதாவது:-
தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியின்படி மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிதியுதவியாக ரூ.4 ஆயிரம் வழங்கும் கோப்பில் முதல் கையெழுத்திட்டார். இதேபோல் பெண்கள் கல்லூரி படிப்பை நல்லமுறையில் கற்க வேண்டும் என்பதற்காகவும், அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் அவர்களின் கணக்கில் மாதம் ரூ.ஆயிரம் வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை உருவாக்கி அதனை செயல்படுத்தி வருகிறார்.
மேலும், விவசாயிகள் நலன் காக்க இதுவரை ஒன்றரை இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கி விவசாயிகளின் துயர் துடைத்துள்ளார். தொடர்ந்து நடப்பாண்டிலும் கிட்டத்திட்ட 50 ஆயிரம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழஙகப்படும் என பட்ஜெட்டில் அறி வித்துளார். இதுபோன்று எண்ணற்ற திட்டங்களை மக்களுக்காக மக்களைத் தேடி செய்து வருகிறார்கள். அதன்படி மக்களைத் தேடி மனுக்கள் பெறும் முகாமில் சங்கராபுரம் சட்டமன்ற தொகுதியில் 631 கோரிக்கை மனுக்களும், கள்ளக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 866 மனுக்களும், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியில் 888 மனுக்களும் ஆக மொத்தம் 2 ஆயிரத்து 385 மனுக்கள் பெறப்பட்டன. அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படும். தீர்வு காணப்படாத மனுக்கள் தொடர்பாக மனுதாரர் களுக்கு உடனடியாக பதில் அளிக்கப்படும் என கூறினார் முன்னதாக அமைச்சர் மாடாம்பூண்டியில் இருந்து மணலூர்பேட்டை வழியாக திருவண்ணாமலை வரை செல்வதற்கான மகளிர் இலவச பஸ்சினையும், கள்ளக்குறிச்சியில் இருந்து திருவண்ணாமலை வழியாக பெங்களூர் செல்லும் புதிய பஸ்சினைனையும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட் போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி, வேளாண்மை இணை இயக்குநர் கருனாநிதி, துணை இயக்குநர் சுகாதார பணிகள் ராஜா, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் யோகஜோதி, கண்காணிப்பு பொறியாளர் (நெடுஞ்சாலை) பழனி, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் மோகனசுந்திரம், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஷெர்லி ஏஞ்சலா, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் ரெத்தினமாலா, மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, மாவட்ட ஆவின் சேர்மேன் ஆறுமுகம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் மண்டல பொது மேலாளர் செந்தில், ஒன்றிய குழு தலைவர்கள் சத்தியமூர்த்தி, தாமோதரன் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். உளுந்தூர்பேட்டை எலவனாசூர்கோட்டையில் நடந்த விழாவில் நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் வைத்தியநாதன், உளுந்தூர்பேட்டை தாசில்தார் ராஜ், மாவட்ட மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் சரவணன், உதவி அலுவலர் சிவகுமார், ஊராட்சி மன்ற தலைவர் நந்தகோபால், நகர மன்ற கவுன்சிலர்கள் டேனியல் ராஜ் செல்வகுமார், ரமேஷ் பாபு, மாலதி ராமலிங்கம், சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதி மன்றத்தில் 502 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
- இதனை மாவட்ட தலைமை நீதிபதி பல்கிஸ் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கோர்ட் வளாகத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடந்தது. இதனை மாவட்ட தலைமை நீதிபதி பல்கிஸ் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சப்-கோர்ட் நீதிபதியுமான சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.இதில் குடும்ப நல கோர்ட்டு மாவட்ட நீதிபதி தனசேகரன், மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டு நீதிபதி மூர்த்தி, மாவட்ட உரிமையியல் கோர்ட்மு நீதிபதி ராஜமகேஷ்வர், குற்றவியல் கோர்ட்மு நீதிபதிகள் சுப்புலட்சுமி, சங்கீதா ஆகியோர் கொண்ட 4 அமர்வானது கோர்ட்டுகளில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை சமரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணை நடந்தியது.
இதில் வங்கி வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், சிறு குற்ற வழக்குகள் என மொத்தம் 502 வழக்குகள் ரூ.ஒரு கோடியே 60 லட்சத்து 10 ஆயிரத்து 300 மதிப்பில் தீர்வு காணப்பட்டது. நிகழ்ச்சியில் வக்கீல்சங்க தலைவர் வள்ளுவன்நம்பி, வழக்கறிஞர்கள் அசோசியேஷன் சங்க தலைவர் மணிவண்ணன், வக்கீல்கள் சங்கர், அருணன், திருநாவுக்கரசு உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர்கள் செய்திருந்தனர்.
- தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 2,286 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
- ஆணைக்குழு ஊழியர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் செய்திருந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி திலகம் தலைமையில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (ேலாக் அதாலத்) நடந்தது.
விருதநகர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மாவட்ட கோர்ட்டு மற்றும் விருதுநகர், அருப்புக் கோட்டை, திருச்சுழி, சிவகாசி, சாத்தூர், ராஜ பாயைம் ட்ட சட்டப்பணிக் குழுக்கள் சார்பில் கோர்ட்டு வளாகங்களிலும் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடந்தது.
இதில் நிலுவையில் உள்ள சிவில், கிரிமினல், வாகன விபத்து, காசோலை சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கி வாராக்கடன்கள் மற்றும் சிறு வழக்குகள் உட்பட 5 ஆயிரத்து 921 வழக்குகள் பரிசிலினைக்கு எடுக்கப்பட்டது. அதில் சுமார் 2 ஆயிரத்து 286 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.5 கோடியே 8 லட்சத்து 75 ஆயிரத்து 903 பயானளிகளுக்கு கிடைத்தது.
இதில் வழக்கறிஞர்கள். நீதிமன்ற ஊழியர்கள், தன்னார்வ சட்டப்பணியாளர்கள், அரசுத்துறை அலுவலர்கள், அரசு எலும்பு முறிவு மருத்துவர், வங்கி மேலா ளர்கள், இன்சூரன்ஸ் கம்பெனி அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு ஊழியர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் செய்திருந்தனர்.
- சொத்து வழக்கு, குடும்ப வழக்கு, உள்ளிட்ட 192 வழக்குகள் எடுக்கப்பட்டு அதில்144 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
- வழ க்கறிஞர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம்:
பல்லடம் வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் பல்லடத்தில் மக்கள் நீதிமன்றம் பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி (பொறுப்பு ) மேகலா மைதிலி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, காசோலை வழக்கு, சொத்து வழக்கு, குடும்ப வழக்கு, உள்ளிட்ட 192 வழக்குகள் எடுக்கப்பட்டு அதில்144 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
தீர்வு தொகையாக ரூ.2,34,08,632 வழங்கப்பட்டது. இதில் வழ க்கறிஞர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பொது வினியோக திட்ட முகாமில் 30 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது
- முகாமிற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் சிவசங்கரன் தலைமை தாங்கினார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள தழுதாழையில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் பொது வினியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் சிவசங்கரன் தலைமை தாங்கினார். வேப்பந்தட்டை வட்ட வழங்கல் அலுவலர் பழனியப்பன் முன்னிலை வகித்தார். முகாமில் ரேஷன் அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம், புகைப்படம் மாற்றம் மற்றும் செல்போன் எண் இணைப்பு உள்ளிட்ட தேவைகளுக்கு பொதுமக்கள் 30 பேர் மனு கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. முடிவில் கிராம நிர்வாக அலுவலர் ரவி நன்றி கூறினார்.
- போக்குவரத்து வசதி உள்ளிட்ட 481 மனுக்கள் பெறப்பட்டது.
- 211 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு ஆணை வழங்கப்பட்டது.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் 1432 ஆம் பசலி வருவாய் தீர்வாய நிறைவு விழா மற்றும் குடிகள் மாநாடு பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் பிரபாகர் தலைமையிலும், வட்டாட்சியர் சுகுமார் முன்னிலையிலும் நடைபெற்றது.
பெருமகளூர், குருவிக்க ரம்பை, ஆவணம், பேராவூரணி சரகத்தில் வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், உட்பிரிவு, முதியோர் உதவித்தொகை, போக்கு வரத்து வசதி உள்ளிட்ட 481 மனுக்கள் பெறப்பட்டது.
இதில் 211 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு பயனாளி களுக்கு ஆணை வழங்கப்ப ட்டது.
நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் அருள்ராஜ், சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் பாஸ்கரன், வட்ட வழங்கல் அலுவலர் அருள்மணி, வட்டத் துணை ஆய்வாளர் செந்தில்குமார், தலைமை இடத்து துணை வட்டாட்சியர் பாலசுப்ர மணியன், மண்டல துணை வட்டாட்சியர் சுப்பிரமணியன், தேர்தல் துணை வட்டாட்சியர் கண்ணகி, நில அளவையர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் ரூ.2.78 கோடி தீர்வு தொகையாக அறிவிக்கப்பட்டது.
- 35 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ராமநாதபுரம், பரமக்குடி, ராமேசுவரம், கமுதி, முதுகுளத்தூர், திருவாடானை ஆகிய நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் நடந்தது.
ராமநாதபுரத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான விஜயா தலைமை வகித்தார்.
இதில் எடுத்துக்கொண்ட 337 வழக்குகளில் 35 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. ரூ.2 கோடியை 78 ஆயிரம் தீர்வு தொகையாக அறிவிக்கப்பட்டது.
நிரந்தர மக்கள் மன்ற மாவட்ட நீதிபதி பரணிதரன், மகிளா கோர்ட்டு மாவட்ட நீதிபதி கோபிநாத், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கவிதா, சார்பு நீதிபதி கதிரவன், மாவட்ட உரிமையியல் நீதிபதி நிலவேஸ்வரன், நீதித்துறை நடுவர்கள் பிரபாகரன், வெர்ஜின் வெஸ்டா, வழக்க றிஞர் சங்க பொருளாளர் பாபு, இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- வருகிற 30-ந்தேதி முன்னாள் படைவீரர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடக்கிறது.
- தங்களது குறை களுக்கான மனுக்களை இரட்டைப்பிரதிகளில் வழங்கி தீர்வு காணலாம்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர்கள், படைப்பணியாற்றுவோர், சார்ந்தோர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி கூட்டம் வருகிற 30-ந்தேதி மாலை 4.30 மணிக்கும் மற்றும் முன்னாள் படைவீரர் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாலை 5.30 மணிக்கும் மாவட்ட கலெக்டர் தலைமையில் கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தின், ஒருங்கி ணைந்த கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
இதில் சுயதொழில் வாய்ப்புகள் குறித்து பல்வேறு துறை அலுவ லர்கள் விளக்கி பேசுவர். எனவே ஆர்வமுள்ள சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படை வீரர்கள், சார்ந்தோர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையலாம்.
அதனைத்தொடர்ந்து நடைபெறவுள்ள முன்னாள் படைவீரர் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர், சார்ந்தோர், தற்போது ராணுவத்தில் பணிபுரியும் படைவீரர்களின் குடும்பத்தி னர் தங்களது குறை களுக்கான மனுக்களை இரட்டைப்பிரதிகளில் வழங்கி தீர்வு காணலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் இதர சிவில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
- மொத்தத் தீர்வுத் தொகை ரூ.8 கோடியே 33 லட்சத்து 50 ஆயிரத்து 464 ஆகும்.
கோவை,
கோவை, பொள்ளாச்சியில் நடைபெற்ற சிறப்பு தேசிய மக்கள் நீதிமன்றம் மூலமாக 105 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) எம்.என்.செந்தில்குமார் அறிவுறுத்தல்படி, கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவிலும், பொள்ளாச்சி நீதிமன்ற வளாகத்திலும் சிறப்பு தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நில ஆர்ஜித வழக்குகள், காசோலை வழக்குகள், சமரசம் செய்யக்கூடிய இதர வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், இதர சிவில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இந்த வழக்குகளை கோவையில், மாவட்ட நீதிபதி எஸ்.குமரகுரு மற்றும் கோவை மாவட்ட எட்டாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி எஸ்.தனலட்சுமி ஆகியோர் அடங்கிய அமர்வும், பொள்ளாச்சியில் சார்பு நீதிமன்ற நீதிபதி பி.மோகனவள்ளி மற்றும் பொள்ளாச்சி கூடுதல் உரிமையியல் நீதிபதி என்.பாரதிராஜா ஆகியோர் அடங்கிய அமர்வும் விசாரித்தன.
இதில், மொத்தம் 105 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது. இதன் மொத்தத் தீர்வுத் தொகை ரூ.8 கோடியே 33 லட்சத்து 50 ஆயிரத்து 464 ஆகும்.
இதற்கான ஏற்பாட்டை கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளர் கே.எஸ்.எஸ்.சிவா செய்திருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஊரக வளர்ச்சி துறை தொடர்பான 52 மனுக்களும், இதர மனுக்கள் 300 ஆக மொத்தம் 626 மனுக்கள் வரப்பெற்றன.
- துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை, மாற்றுதிறனாளி கள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் நேரில் அளித்தனர். கூட்டத்தில் பட்டா தொடர்பான 134 மனுக்க ளும், ஆக்கிரமிப்பு தொடர் பாக29 மனுக்களும்இ முதி யோர் உதவித்தொகை தொடர்பாக 34 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 23 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 37 மனுக்களும், மாற்றுத்திறனாளி நல அலுவலகம் தொடர்பாக 17 மனுக்களும், ஊரக வளர்ச்சி துறை தொடர்பான 52 மனுக்களும், இதர மனுக்கள் 300 ஆக மொத்தம் 626 மனுக்கள் வரப்பெற்றன.
பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறை களுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு தீர்வு வழங்க வேண்டும். மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். பொது மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலுவலர் களுக்கு கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ சேகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் உதயகுமார் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.