search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரி"

    • ரூ.50 லட்சத்தை இழந்ததால் ஏலக்காய் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்.
    • விருதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் டி.சி. கிட்டங்கி தெருவை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 52 ) ஏலக்காய் வியாபாரி. இவர் பங்குச்சந்தை வர்த்தகத்திலும் ஈடுபட்டு வந்தார்.

    இந்த நிலையில் அவர் பங்கு சந்தை வர்த்தகத்தில் ரூ.50 லட்சத்தை இழந்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் அவர் தனது பூர்வீக வீட்டை விற்பனை செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதனை எண்ணி மிகவும் வேதனை அடைந்த அருண்குமார் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ரூ.50 லட்சத்தை இழப்பதற்கு நான் மட்டும்தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது பற்றி அவரது மனைவி கார்த்திகா விருதுநகர் மேற்கு போலீசில் புகார் செய்தார் .அதன் பெயரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை உத்தப்ப நாயக்கனூர் சுப்பிரமணியன் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 45). இவர் பாணி பூரி வியாபாரம் செய்து வந்தார். ராஜாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.

    இதனால் அவர் பலரிடமும் கடன் வாங்கி செலவழித்து வந்துள்ளார். அதனை அவரது மனைவி ராணி கண்டித்தார்.

    இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த ராஜா, உத்தப்பநாயக்கனூர்- வத்தலகுண்டு ரோட்டில் உள்ள தோட்டம் ஒன்றில், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உத்தப்ப நாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 குற்றவாளி
    • 54 சதவீத களவாடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    நெல்லை சரக டி.ஐ.ஜி.பிரவேஷ்குமார் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது:-

    திருநெல்வேலி மாவட்டத் தில் 36 குற்றவாளிகளும், தென்காசி மாவட்டத்தில் 20 குற்றவாளிகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 53 குற்றவாளிகளும் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத் தில் 17 குற்றவாளிகளும் ஆக மொத்தம் திருநெல்வேலி சரகத்தில் 126 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த ஆண்டு இதுவரை கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    திருநெல்வேலி சரகத்தில் 779 எதிரிகளுக்கு நிர்வாக நீதிபதி மூலம் நன்னடத்தை பிணைய பத்திரம் பெற்றும், நன்னடத்தை பிணையை மீறிய 19 எதிரிகள் மீது பிணை முறிவு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள் ளனர். 2677 குற்றவாளி களுக்கு எதிரான பிணையில் வெளிவரமுடியாத பிணை ஆணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    திருநெல்வேலி சரகத்தில் உள்ள மாவட்டங்களில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 1050 பிணையில் விட முடியாத பிணை ஆணை நிறை வேற்றியுள்ளனர். சென்னை மாநகர காவல் சட்டத்தின் கீழ் 226 வழக்குகளும், 105 கஞ்சா வழக்குகளும், 128 குட்கா வழக்குகளும், 63 லாட்டரி சீட்டு வழக்குகளும், 65 சூதாட்ட தடுப்பு வழக்குகளும் மற்றும் 1922 மதுவிலக்கு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கஞ்சா வழக்குகள் இந்த ஆண்டு இதுவரை திருநெல்வேலி சரகத்தில் 106 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 223 எதிரிகள் கைது செய்யப் பட்டுள்ளனர். இதில் 23 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், 320 எதிரிகளுக்கு நிர்வாக நீதிபதி மூலம் நன்னடத்தை பிணையப் பத்திரம் பெறப்பட்டு, அதில் நன்னடத்தை பிணையை மீறிய 5 எதிரிகள் மீது பிணை மீறியதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். கஞ்சா வழக்கு குற்றவாளிகளின் 120 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இதுவரை திருநெல் வேலி சரகத்தில் 46 சதவீத குற்ற வழக்குகள் புலன் விசாரணையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, 55 சதவீத களவாடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலி சரகத்தில் நடப்பாண்டில் இதுவரை இரண்டு ஆதாயக் கொலை, கூட்டுக் கொள்ளை, 37 வழிப்பறி, 56 வீட்டை உடைத்து திருடிய குற்றம் மற்றும் 136 பெரிய அளவிலான திருட்டு வழக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி சரகத்தில் உள்ள மாவட் டங்களில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 59 சதவீத குற்றவழக்குகள் புலன் விசாரணை மூலம் கண்டுபிடிக்கப்பட்டு அதில் 54 சதவீத களவாடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 6 இலக்க தனித்துவ அடையாள எண் கட்டாயம் இடம் பெற வேண்டும்.
    • நான்கு இலக்க ஹால்மார்க் தங்க நகைகளை ஏப்ரல் முதல் விற்க முடியாது.

    திருப்பூர் :

    வரும் ஏப்ரல் முதல் விற்பனை செய்யும் தங்க ஆபரணங்களில் முக்கோ ண வடிவிலான ஹால்மார்க் முத்திரையுடன், 6 இலக்க தனித்துவ அடையாள எண் கட்டாயம் இடம் பெற வேண்டும்என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவை இல்லாத தங்க ஆபர ணங்களை விற்பனை செய்யக்கூடாது என்று அறி வித்துள்ளது.தங்கத்தின் தூய்மைக்கான சான்றிதழாக ஹால்மார்க் முத்திரை வழங்கப்படுகிறது.

    ஹால் மார்க்கின் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்காக தனித்துவ அடையாள எண் வழங்க ப்படுகிறது.இதில் 3 இலக்கங்கள் ஆங்கில எழுத்துக்களாலும், 3 இலக்கங்கள் எண் வடி விலும் இருக்கும். இந்த அடையாள எண் முன்பு நான்கு இலக்கங்களில் வழங்கப்பட்டது. ஏப்ரல் முதல் 6 இலக்க அடையாள எண் கட்டா யமாக்கப்பட்டு ள்ளது. பழைய நான்கு இலக்க ஹால்மார்க் தங்க நகைகளை ஏப்ரல் முதல் விற்க முடியாது.இது குறித்து தர நிர்ணயத்தினர் கூறுகையில், வரும் ஏப்ரல் முதல் தங்க ஆபரணங்களில் 6 இலக்கங்களை கொண்ட தனித்துவ அடையாள எண் இருக்க வேண்டும். அப்படி இல்லாத நகைகள் பறிமுதல் செய்யப்படும்.சம்மந்த ப்பட்ட ஹால்மார்க்கிங் மையத்தின் மீதும், விற்ப னையாளர்கள் மீதும் நட வடிக்கை மேற்கொள்ள ப்படும்.

    பழைய நடைமுறை யில் ஹால்மார்க் முத்திரை மற்றும் 4 இலக்க எண்ணு டன் கூடிய தங்க ஆபரண ங்கள் விற்பனை யை முடிக்க கால அவகாசம் மார்ச் 31-ந் தேதி நிறை வடைகி றது என்றனர். நகை வியாபாரிகள் கூறுகையில், பழைய ஹால் மார்க் முத்திரை நகைகளை விற்பனை செய்ய ஓராண்டு கால அவகாசம் வழங்க வேண்டும். அதே சமயம் பழைய ஹால்மார்க் பதித்து விற்பனை செய்த நகை களின் தரத்துக்கு மக்களிடம் என்ன சொல்லப்போ கிறார்கள் என்பதை அறிவிக்க வேண்டும் என்றார். 

    • தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பெட்ரோல் வெடிகுண்டு மாதிரிகளை சேகரித்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூரைச் சேர்ந்தவர் ராஜா முகமது. இவர் அதே பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு ராஜா முகமது வழக்கம் போல் தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார்.

    நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் ராஜா முகமது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் பெட்ரோல் குண்டு வெடித்ததில் வீட்டின் வெளியே இருந்த திரைச்சீலை எரிந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜா முகமது உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    அதன் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத், மேலூர் டி.எஸ்.பி. ஆர்லியஸ் ரெபோனி, மேலூர் இன்ஸ்பெக்டர் மன்னவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பெட்ரோல் வெடிகுண்டு மாதிரிகளை சேகரித்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நேற்று மாலை ராஜா முகமது, தனது மனைவி ரம்ஜானுடன் மோட்டார் சைக்கிளில் பள்ளிவாசலுக்கு சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ராஜா முகமது ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கணவன்-மனைவி கீழே விழுந்தனர். இது தொடர்பாக ராஜா முகமது, விபத்தை ஏற்படுத்திய நபர்களிடம் தட்டிக்கேட்ட போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. எனவே அந்த நபர்கள் தான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி சென்றார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டின் விட்டத்தில் வேட்டியில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.
    • வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (58) இவர் மளிகை கடைகளுக்கு மசாலா பொருட்கள் சப்பளை செய்யும் வேலை செய்து கொண்டிருந்தார். இவருக்கு மகாலட்சுமி (57) என்ற மனைவியும் அபிநயா என்ற மகளும் உள்ளனர்.

    சம்பவத்தன்று ரவிச்சந்திரனின் மனைவி மகாலட்சுமி கடைக்கு காய்கறி வாங்க சென்று இருந்தார். மகள் வேலைக்கு சென்று விட்டிருந்தார். ரவிச்சந்திரன் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மகாலட்சுமி கடைக்கு சென்று திரும்பி வந்து வீட்டுக்குள் பார்த்தபோது ரவிச்சந்திரன் வீட்டின் விட்டத்தில் வேட்டியில் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

    உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் ரவிச்சந்தி ரனை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவம னைக்கு கூட்டி சென்று பார்த்த போது வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து வெள்ளகோ வில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜமூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வியாபாரியை தாக்கிய தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர்.
    • திருமணம் செய்து கொடுத்த விவகாரம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது.

    மதுரை

    மதிச்சியம் நடுத்தெருவை சேர்ந்தவர் மகேஷ் குமார் (வயது 46). இவர் தெற்கு தெருவில் இறைச்சி கடை நடத்தி வருகிறார்.

    இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் கோவில் திருவிழாவுக்கு கணக்கு கேட்ட விவகாரம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று மாலை மகேஷ்குமார் கடையில் இருந்தார். அங்கு வந்த 2பேர் அவரை தாக்கிவிட்டு தப்பினர்.

    இது தொடர்பாக மகேஷ்குமார் மதிச்சியம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மதிச்சியம், காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுரேஷ்(42), அவரது மகன் ஹரி ரஞ்சித்(23) ஆகியோரை கைது செய்தனர்.

    ஜெய்ஹிந்த்புரம் இருதய நகரை சேர்ந்தவர் வாசு தேவன்(72). இவரது மகன் மாரிராஜா. இருவருக்கும் இடையே அனுமதியின்றி சகோதரியை திருமணம் செய்து கொடுத்த விவகாரம் தொடர்பாக முன்விரோதம் இருந்தது.

    சம்பவத்தன்று இரவு வாசுதேவன் வீட்டில் இருந்தார். அங்கு வந்த மாரிராஜா தந்தை என்றும் பாராமல் வாசுதேவனை தாக்கி விட்டு தப்பினார். இது தொடர்பாக வாசுதேவன், ஜெய்ஹிந்த்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரி ராஜாவை கைது செய்தனர்.

    • முருகன் 3-வது மைலில் பிரியாணி மற்றும் சிக்கன் கடை நடத்தி வருகிறார்.
    • மன வேதனையில் முருகன் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்ததாக கூறப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி டி.என்.பி. காலனியை சேர்ந்தவர் முருகன் (வயது32). இவர் 3-வது மைலில் பிரியாணி மற்றும் சிக்கன் கடை நடத்தி வருகிறார்.

    தீக்குளிப்பு

    நேற்று மாலை இவர் தென்பாகம் போலீஸ் நிலையம் முன்பு உடலில் மண்எண்ணை ஊற்றி திடீரென தீக்குளித்தார். உடனடியாக அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    10 சதவீத தீக்காயத்துடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறும் போது, முருகனின் அண்ணன் ஆவுடையப்பன். இவருக்கும் இவரது மனைவி சுப்புலட்சுமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

    தகராறு

    இந்நிலையில் சுப்புலட்சுமி தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். தன்னிடம் கூறாமல் மகளுக்கு திருமணம் நடத்தி வைத்ததால் ஆவுடையப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் வருத்தம் அடைந்தனர்.

    இது தொடர்பாக ஆவுடையப்பன், சுப்புலட்சுமியுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். நேற்று இது தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இது தொடர்பாக புகாரின் பேரில் தென் பாகம் போலீசார் இருதரப்பினரையும் போலீஸ் நிலையம் வருமாறு அழைத்தனர். இதனால் ஏற்பட்ட மன வேதனையில் முருகன் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்ததாக கூறப்படு கிறது.

    இந்நிலையில் இது தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் கங்கை நாத பாண்டியன், வியாபாரி முருகன் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

    • வண்ணாரப்பேட்டை போலீசார் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.
    • போலீசார் வழக்குபதிவு செய்து ஜெகதீசனை கைது செய்தனர்.

    ராயபுரம்:

    வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோட்டில் 2000-க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய மொத்த, சில்லரை ரெடிமேட் ஜவுளி கடைகள் உள்ளன. 200-க்கும் மேற்பட்ட துணிக்கடைகள், ஜூஸ் கடை, வளையல் கடை என பல்வேறு நடைபாதை கடைகள் உள்ளன. இந்த கடைகள் நடைபாதைகளை ஆக்கிரமித்து உள்ளதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முன்தினம் நடைபாதை கடைகளை அகற்றுவதற்காக லாரிகளை எடுத்து வந்ததாக தெரிகிறது.

    லாரிகளை முற்றுகையிட்ட நடைபாதை வியாபாரிகள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மாநகராட்சி அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டனர்.

    பின்னர் எம்.சி.ரோடு பகுதியில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வண்ணாரப்பேட்டை போலீசார் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகளும் கடைகளை அகற்றாமல் சென்றனர்.

    இந்நிலையில் நடைபாதை வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த மோகனா (32) என்பவர் 51-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் தன்னையும் நடைபாதை வியாபாரிகளையும் தகாத வார்த்தையில் மிரட்டல் விடும் தோரணையில் பேசி மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்ததாக பழைய வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    போலீசார் வழக்குபதிவு செய்து ஜெகதீசனை கைது செய்தனர். பின்னர் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

    • சேலம் அம்மாபேட்டை சாமிநாதபுரம் பகுதியில் பழைய இரும்பு பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வந்தார்.
    • இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி, கணேசன் சாமிநாதபுரம் பகுதியில் மயங்கி கிடந்தார். போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். இன்று அதிகாலை கணேசன் பரிதாபமாக இறந்தார்.

    சேலம்:

    சேலம் அம்மாபேட்டை ராஜ கணபதி நகரை சேர்ந்தவர் கணேசன். இவர் மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து சேலம் பள்ளப்பட்டி பகுதியில் தனியாக வசித்து வந்தார். மேலும் பழைய இரும்பு பொருட்களை வாங்கி வியாபாரம் செய்து வந்தார்.இந்த நிலையில் கடந்த 26-ந் தேதி, கணேசன் சாமிநாதபுரம் பகுதியில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அந்த பகுதியினர் பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி இன்று அதிகாலை கணேசன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீட்டில் இருந்து வெளியூர் வியாபாரத்திற்கு சென்று வருவதாக ஏழு மலை தனது மனைவி சுகுணாவிடம் கூறி சென்றார்.
    • தகவலின் பெயரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் அங்கு சென்றனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா செங்குறிச்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் ஏழுமலை (வயது 43). இவர் இருசக்கர வாகனம் மூலம் புலி, பூண்டு வியா பாரம் செய்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியூர் வியாபாரத்திற்கு சென்று வருவதாக ஏழு மலை தனது மனைவி சுகுணாவிடம் கூறி சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி தனது உறவினர்களுடன் சேர்ந்த ஏழுமலையை தேடினார். எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று அதிகாலை அதே கிராமத்தை பாலாஜி என்ப வரது கிணற்றில் ஏழமலை பிணமாக மிதந்தார். அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பெயரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் மற்றும் போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் அங்கு சென்றனர். தீயணைப்பு படைவீரர்கள் கிணற்றில் இறங்கி ஏழுமலை உடலை மீட்டனர். அதன் பின்னர்பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வியாபாரி ஏழுமலை எப்படி இறந்தார், கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசார ணை நடத்தி வருகிறார்கள்.

    • சாலையில் விழுந்ததில் அவரது பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
    • களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    இடைக்கோடு மாலைக் கோடு சாமவிளை பகுதியைச் சேர்ந்தவர் பிரின்ஸ் ராஜ் (வயது 33). இவர் மாலைக்கோட்டில் காய்கறி கடை நடத்தி வந்தார்.

    கடந்த 19-ந்தேதி இவர், கோவிக்கரை பிரவின் ராஜ் (27), பிரதீப் (37) ஆகியோருடன் ஓரே மோட்டார் சைக்கிளில் பி கழுவன்திட்டையிலிருந்து மேல்புறம் சாலையில் சென்றார். அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் தீர்ந்துள்ளது.

    இதனால் மோட்டர் சைக்கிளை ரைஸ் செய்தபடி பிரவின் ராஜ் வேகமாக ஓட்டி சென்றுள்ளார். அப்போது பின்னால் அமர்ந்திருந்த பிரின்ஸ் ராஜ் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்துள்ளார்.

    இதில் அவரது பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு அங்கிருந்து காரக்கோ ணம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்த்தனர்.

    அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பிரின்ஸ் ராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×