search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229611"

    • பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம் அமைக்க மானியம் வழங்கப்படும் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • இதில் 50 சதவீத மானிய அடிப்படையில் அதிக பட்சமாக ரூ.4 லட்சம் மானியம் வழங்கப்படும்.

    மதுரை

    தமிழக அரசு, வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம், தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் "வேளாண் எந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் பழுது நீக்கும் பராமரிப்பு மையம்" மானியத்தில் அமைக்கும் புதிய திட்டத்தை கடந்த 2021-2022-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. மதுரை மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    விவசாயிகள் தங்கள் வேளாண் எந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை தங்கள் விளைநிலங்களிலேயே பழுது நீக்கி பராமரிக்கவும், விவசாயிகள் வேளாண் பணிகளை எவ்வித இடர்பாடுகளுமின்றி குறித்த நேரத்தில் செய்திடவும், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி, நிலையான வருமானம் ஈட்டி பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்க த்துடனும் இம்மையங்கள் அமைக்கப்படுகின்றன. தொழில் முனைவோர், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இம்மை யங்கள் மானியத்தில் அமைத்துத் தரப்படும். இம்மையங்கள் ரூ.8 லட்சம் செலவில் அமை க்கப்படுகின்றன. இதில் 50 சதவீத மானிய அடிப்படையில் அதிக பட்சமாக ரூ.4 லட்சம் மானியம் வழங்கப்படும்.

    மையங்கள் அமைக்க போதிய இடவசதியும், மும்முனை மின்சார இணைப்பும் கொண்ட கிராமப்புற இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தி நிறுவனங்கள், வேளாண்மைப் பொறியியல் துறையின் மதுரை மற்றும் உசிலம்பட்டி உதவி செயற்பொறியாளர் (வே.பொ) அலுவலகத்தை அணுகி விண்ணப்பத்தினை அளிக்கலாம்.

    மாவட்ட கலெக்டரின் மாவட்ட அளவிலான செயற்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளிகளுக்கு இம்மையம் மானியத்தில் அமைத்து தரப்படும். மேலும், விவரங்களுக்கு அருகாமையிலுள்ள வேளாண்மைப் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளரை (வே.பொ) அணுகி பயன்பெறலாம்.

    இந்த தகவலை கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.

    • மதிப்புக்கூட்டும் எந்திரங்களை மானிய விலையில் பெறலாம் என வேளாண் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்
    • ஈரோடு மாவட்டத்தில் 13 மதிப்பு கூட்டும் எந்திரங்கள் வழங்க ரூ.9.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்படுகிறது.

    ஈரோடு:

    வேளாண் பொறியியல் துறை மூலம் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் அறுவடைக்கு பின் சார் தொழில் நுட்பம், மதிப்பு கூட்டும் எந்திரங்கள் மானியத்தில் வழங்குதல் திட்டம் செயல்படுகிறது.

    ஈரோடு மாவட்டத்தில் 13 மதிப்பு கூட்டும் எந்திரங்கள் வழங்க ரூ.9.47 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்படுகிறது. தங்கள் பகுதியில் விளையும் விளை பொருட்களை, தங்கள் பகுதிகளிலேயே மதிப்பு கூட்டி அதிக விலைக்கு விற்று லாபம் பெற மதிப்பு கூட்டும் எந்திரங்கள் உதவும்.

    வேளாண் விளை பொருட்களை மதிப்பு கூட்டும் எந்திரங்களான மாவரைக்கும் எந்திரம், தேங்காய் மட்டை உரிக்கும் எந்திரம், நிலக்கடலை செடியில் இருந்து காய் பிரித்தெடுக்கும் எந்திரம், நிலக்கடலை தோல் உரித்து தரம் பிரிக்கும் எந்திரம், எண்ணெய் பிழிந்தெடுக்கும் செக்கு எந்திரம், வாழை நார் பிரித்தெடுக்கும் கருவி, கால்நடை தீவனம் அரைக்கும் எந்திரம் போன்றவை அனைத்து விவசாயிகளுக்கும் 40 சதவீத மானியத்திலும் ஆதிதிராவிடர் பழங்குடியினர் சிறு, குறு விவசாயிகளுக்கு, 60 சதவீத மானியமும் வழங்கப்படும்.

    விருப்பம் உள்ள விவசாயிகள், mis.aed.tn.gov.in என்ற இணைய தளத்தில் விபரம் அறியலாம். மேலும் ஈரோடு உதவி செயற்பொறியாளரை 0424 2904843, கோபி உதவி செயற்பொறியாளரை 04285 290069 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம்.

    • மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவிகள் வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
    • மொத்தம் ரூ .72.82 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    உடுமலை

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமையில் திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் குருமலை மற்றும் குழிபட்டி செட்டில் மென்டில் வாழும் 124 மரபு வழி மலைவாழ் மக்களுக்கு வன உரிமைச் சட்டம் 2006 ன் படி தனிநபர் வன உரிமை ஆவணம் வழங்கப்பட்டது.

    மேலும், 102 நபர்களுக்கு ரூ .71.26 லட்சம் மதிப்பீட்டில் தொழில் முதலீட்டுக்கான அரசு மானிய விடுவிப்பு உத்தரவு ஆணைகள் மற்றும் 13 நபர்களுக்கு ரூ .1.56 லட்சம் மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகளை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வழங்கினார்கள்.

    வனப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் ஆட்சிகாலத்தில் தர்மபுரியில் தான் முதன்முதலில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தொடங்கப்பட்டன.

    மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவிகள் வழங்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் , மலைவாழ் மக்களுக்கு தொழில் தொடங்குவதற்கு குறைந்தது 8 ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். ஆகையால், மலைவாழ் மக்கள் கண்டிப்பாக தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி படிக்க வைக்க வேண்டும். இதுவரை பொதுத்தேர்தலில் மட்டும் வாக்களித்து வந்தீர்கள். இப்பொழுது உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களிலும் வாக்களிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே மலைவாழ் மக்கள் அரசு அளிக்கின்ற அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும்,தமிழ்நாடு முதலமைச்சர் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள படி உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது .

    அந்த வகையில் , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் தொழில் தொடங்க தாட்கோ மூலம் மானியம் வழங்கப் படுகிறது. தாட்கோ மூலம் 2022-2023 நிதியாண்டில் கறவை மாடு வாங்குதல், வாகனம் வாங்குதல், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு பொருளாதார கடனுதவி வழங்குதல் உள்ளிட்ட தொழில் தொடங்கும் நடவடிக்கைகளுக்கு வங்கி மூலம் கடனும் , தாட்கோ மூலம் மானியமும் வழங்கப்படுகிறது .

    பொதுமக்கள் அடிப்படை தேவைகள் குறித்து பல்வேறு கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. செட்டில் மென்ட் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு தேவைகள் குறித்து கேட்டறிந்து பழங்குடியின மக்கள் முன்னேற்றத்திற்காக உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அந்த வகையில் இன்றைய தினம் தாட்கோ மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 26 நபர்களுக்கு ரூ .38.43 லட்சம் மதிப்பீட்டில் மானியமும் , வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 12 நபர்களுக்கு இளைஞர்களுக்கான ரூ .18.85 லட்சம் மானியமும் வழங்கப்பட்டது.

    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் 50 நபர்களுக்கு ரூ 11.50 லட்சம் மானியமும், நில மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1 நபருக்கு ரூ .0.91 லட்சம் மானியமும் என மொத்தம் 102 நபர்களுக்கு தாட்கோ மூலம் ரூ .71.26 லட்சம் மானியமும் வழங்கப்பட்டது.

    வருவாய்த்துறையின் சார்பில் 13 நபர்களுக்கு ரூ .1.56 லட்சம் மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகைக்கான ஆணையினையும் மற்றும் 124 மரபு வழி மலைவாழ் மக்களுக்கு தனிநபர் வன உரிமை ஆவணமும் என மொத்தம் ரூ .72.82 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார் .

    இந்நிகழ்ச்சியில் , மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் ரவிச்சந்திரன் , தாட்கோ மாவட்ட மேலாளர் மணிமேகலை , உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜஷ்வந்த் கண்னண் . வட்டாட்சியர் கணேசன் ,ஆதிதிராவிடர் நல வட்டாட்சியர் கனிமொழி, உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர் மகாலட்சுமி முருகன் , மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் ,பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்

    ×