என் மலர்
நீங்கள் தேடியது "ஆழ்துளை கிணறு"
- மனுவின்மீது விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வட்டாரவளர்ச்சி அலுவலர் கந்தசாமி தெரிவித்தார்.
- உடுமலைஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.விடம் மனுகொடுக்கப்பட்டது.
உடுமலை:
உடுமலைஒன்றியம் செல்லப்பம்பாளையம் ஊராட்சியில் ஊராட்சிக்கு சொந்தமான ஆழ்துளைக்கிணறை சேதப்படுத்தி ஆழ்துளைகுழாய்களை உடைத்தெறிந்துள்ள சமூகவிரோத கும்பல்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். நீர்வளமிக்க ஆழ்துளைக்கிணற்றை பயன்படுத்தி மக்களுக்கு தண்ணீர்விநியோகம் செய்திடவேண்டும் என மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் உடுமலைஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.விடம் மனுகொடுக்கப்பட்டது. இதில் சிபிஐ. எம்., செல்லப்பம்பாளையம் கிளைச்செயலாளர் பிரபுராம், உடுமலைஒன்றியச் செயலாளர் கி.கனகராஜ்,டிஓய்எப்ஐ. செயலாளர் தமிழ்த்தென்றல், மாதர்சங்க செயலாளர் சித்ரா, விவசாயிகள் சங்கதலைவர்கள் ராஜகோபால், பரமசிவம் ஆகியோர் பங்கேற்றனர். மனுவின்மீது விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வட்டாரவளர்ச்சி அலுவலர் கந்தசாமி தெரிவித்தார்.
- 14 லட்சம் மதிப்பிலான புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செ ல்வம் பரிந்துரைத்தார்.
- ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை நேற்று தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
கடலூர்:
வடலூர் நகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தடையில்லா குடிநீர் வினியோகம் செய்வதற்கு பல்வேறு நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டு ஆபத்தாரணபுரம் கிழக்குத் தெருவில் என்.எல்.சி., சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூபாய் 14 லட்சம் மதிப்பிலான புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செ ல்வம் பரிந்துரைத்தார்.
அத ன்பேரில் பேரில் மாவட்டக் கல்விக் குழுத் தலைவரும் குறிஞ்சி ப்பாடி ஒன்றிய செயலா ளருமான சிவக்குமார் ஆகியோர் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை நேற்று தொடங்கி வைத்து, பொதும க்களுக்கு இனி ப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சி யில் நகர மன்ற தலைவர் சிவக்குமார், நகர செயலாளர் தமிழ்ச்செ ல்வன், 3வது வார்டு நகர மன்ற உறுப்பினர் இளவரசன், கிளைக் கழக செயலாளர் ஆனந்த ராஜன் மற்றும் நகரமன்ற உறுப்பி னர்கள், இளைஞர் அணி, மாணவர் அணி உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- தோலம்பாளையம் ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளது. இதில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர்.
- பணிகள் நிறைவடையாமல் இதற்கான தொகை முழுவதையும் ஒப்பந்ததாரருக்கு வழங்கி உள்ளதாக கிராம மக்கள் புகார் கூறி வருகின்றனர்.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தோலம்பாளையம் ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளது. இதில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர்.
இதுமட்டு மல்லாமல் நீலாம்பதி, ஊக்கையனூர், மொட்டியூர், ஊக்கப்பட்டி, மேல்பாவி குளியூர், செங்குட்டை, பட்டிசாலை, காலணிபுதூர், சீங்குழி, ஆலங்கண்டி, ஆலங்கண்டிபுதூர், ஆலங்கண்டி கீலூர், கோனாரி உள்ளிட்ட கிராமங்களில் 3 ஆயிரம் பழங்குடியின மக்கள் உள்ளனர்.
இதனிடையே 9, 10-வது வார்டுகளுக்கு உட்பட்ட தோலம்பாளையம் கிராமத்தில் மட்டும் சுமார் 1500 பேர் குடியிருந்து வருகின்றனர்.
இப்பகுதியில் உப்பு தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளதால் இங்கு ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீா வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனிடையே கடந்த 2020-21-ம் ஆண்டு 15-வது மானிய நிதிக்குழு திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 9 மாதத்திற்கு முன் தொடங்கப்பட்டது. இதில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டது.
ஆனால் கிணற்றில் இருந்து இதுவரை சின்டெக்ஸ் தொட்டிக்கு தண்ணீர் குழாய் மூலம் ஏற்றாமல் அப்படியே காலியாக வைத்துள்ளனர். இதனால் இந்த தொட்டியில் உள்ள குழாய்கள் பழுதடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்கள் தேவைக்காக அவசர அவசரமாக தொடங்கப்பட்ட இப்பணி முடிந்தும் மக்களின் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. ஆனால் பணிகள் நிறைவடையாமல் இதற்கான தொகை முழுவதையும் ஒப்பந்ததாரருக்கு வழங்கி உள்ளதாக கிராம மக்கள் புகார் கூறி வருகின்றனர்.
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய ஆய்வு செய்து பாதியில் நிற்கும் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- கட்டாலங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது.
- ஊரக வளர்ச்சித் துறையினரும், வருவாய்த் துறையினரும் ஆழ்துளை கிணறுகள் அனைத்தையும் மூடிமுத்திரையிட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய கிராம ஊராட்சி பகுதிகளில், சேர்வைக்காரன் மடம், கட்டாலங்குளம் மற்றும் குமாரகிரி உள்ளிட்ட பகுதிகளில் வணிக நோக்குடன் சட்டத்துக்கு புறம்பாக, ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்தது.
இதனால் அதன் சுற்றுப்பகுதிகளிலுள்ள விவசாய கிணறுகளில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால் இது குறித்து விவசாயிகள் மாவட்ட கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.
அதன் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஊரக வளர்ச்சித் துறையினரும், வருவாய்த் துறையினரும் சேர்ந்து சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில் உள்ள ஆழ்துளை கிணறுகள் அனைத்தையும் மூடிமுத்திரையிட்டனர்.
தற்போது கட்டாலங்குளம் ஊராட்சியிலும் இது போன்று சட்டத்துக்கு புறம்பாக ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுவதை தடுத்து நிறுத்தும் வகையில் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பெயரில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகராஜன்(கிராம ஊராட்சி) ராமராஜ் (வட்டார ஊராட்சி) தாசில்தார் செல்வகுமார்,மண்டல துணை தாசில்தார் ரம்யா தேவி, வருவாய் ஆய்வாளர் செல்லம்மாள்,கிராம நிர்வாக அலுவலர் ரவிச்சந்திரன், சாயர்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், தனிப்படை தலைமை காவலர் மைக்கேல்,கட்டாலங்குளம் ஊராட்சி செயலர் நல்லசிவம் மற்றும் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர், அப்போது அப்பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்ட18 ஆழ்துளை கிணறுகளை மூடி முத்தரையிட்டு நடவடிக்கை மேற்கொண்டனர்.
- திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவர் தொடங்கி வைத்தார்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் ஒன்றியம் கொடுமாம்பள்ளி ஊராட்சியில் கடும் குடிநீர் பஞ்சம் உள்ளதாகவும் அங்கு ஆழ்துளை கிணறு அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
அவர்களது கோரிக்கையை ஏற்று ஒன்றிய கவுன்சிலர் டாக்டர் திருப்பதி பொது நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி கொடுமாம் பள்ளி ஜவ்வாது மலை செல்லும் சாலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சுதா திருநாவுக்கரசு தலைமை வகித்தார், அனைவரையும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நந்தகுமார் வரவேற்றார் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை ஒன்றிய குழு தலைவர் விஜயா அருணாச்சலம், ஒன்றிய கவுன்சிலர் டாக்டர் திருப்பதி பூஜை போட்டு பணிகளை தொடங்கி வைத்து பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சத்தியவாணி வில்வம் உட்பட ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
- குழந்தையை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர்.
- குழந்தைக்கு பேச்சுத் திறன் இல்லாததால், குழந்தையுடன் தொடர்பு கொண்டு பேச முடியவில்லை.
ஹாப்பூர்:
உத்தர பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், கோட்லா சதத் என்ற பகுதியில், மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் 4 வயது ஆண் குழந்தை ஒன்று தவறி விழுந்துள்ளது. இது தொடர்பாக உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், குழந்தையை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அங்கு வரவழைக்கப்பட்டனர்.
சுமார் 55 அடி ஆழம் கொண்ட அந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து குழந்தையை மீட்க மீட்புப் படையினர் விறுவிறுப்பாக செயல்பட்டனர். குழந்தைக்கு பேச்சுத் திறன் இல்லாததால், குழந்தையுடன் தொடர்பு கொண்டு பேச முடியவில்லை. இதனால் மீட்புப் பணி சவால் நிறைந்ததாக இருந்தது. குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருப்பதற்காக ஆழ்துளை கிணற்றுக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது.
இந்த நிலையில் சுமார் 5 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு குழந்தையை மீட்புப் படையினர் பத்திரமாக மீட்டனர். உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். குழந்தையின் உடலில் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
- தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் கோவிலுக்கு எண்ணற்ற வருவாய் கிடைத்தது.
- தமிழக அரசும் அறநிலையத்துறையும் சிந்திக்க வேண்டும்.
திருப்பூர் :
கோவில் பூசாரிகள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் வாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகம் முழுவதும் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களுக்கு ஏறத்தாழ 4 லட்சத்துக்கும் மேற்பட்ட நிலங்கள் உள்ளன. கோவில்களுக்கு நிரந்தர வருவாய் ஏற்படுத்தவும், செலவினங்களை ஈடு செய்யும் வகையிலும் இது போன்ற நிலங்கள் பயன்பட்டன. கொடை வள்ளல்கள், பக்தர்கள் கோவில் பெயருக்கு தானமாக வழங்கிய நிலங்கள் மூலம் கோவிலுக்கு எண்ணற்ற வருவாய் கிடைத்தது.
இவற்றில் பெரும்பாலான நிலங்கள் பயன்பாடின்றி விடப்பட்டுள்ளன. இவ்வாறான நிலங்களில் ஆழ்துளை கிணறு மூலம் நீர் பாசன வசதி ஏற்படுத்தி இவற்றை குத்தகைக்கு விடுவதன் மூலம் அறநிலையத்துறையின் வருவாய் பெருகும். மேலும் பாசன வசதி கிடைப்பதால் விவசாயிகளும் ஆர்வத்துடன் விவசாயம் மேற்கொண்டு வேளாண் உற்பத்தியை பெருக்குவார்கள். அரசுக்கு கூடுதல் வருவாய், வேலை உற்பத்தி அதிகரிப்பு மற்றும் வேலைவாய்ப்பு பெருகுதல் என்பது உள்ளிட்ட நன்மைகள் கிடைக்கும். எனவே இது குறித்து தமிழக அரசும் அறநிலையத்துறையும் சிந்திக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சிறுவனுக்கு கயிறு மூலம் தண்ணீர் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆம்புலன்சு வாகனங்கள் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர்.
- சமீப காலமாக ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி விழுந்து இறக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
அகமத்நகர்:
மத்திய பிரதேச மாநிலம் புர்கன்பூர் மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி. ஒருவர் தனது மனைவியுடன் மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகர் சோபரா கிராமத்தில் தங்கி கரும்பு வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.
இவர்களுடன் இருந்த 5 வயது மகன் சாகர் புத்தா பரலோ நேற்று மதியம் அங்குள்ள ஒரு விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டு இருந்தான். அப்போது அவன் திடீரென மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். சுமார் 200 அடி ஆழம் கொண்ட அந்த ஆழ்துளை கிணற்றின் பாதியில் சிக்கி கொண்டான். உயிர் பயத்தில் அவன் கதறி அழுதான்.
இதைக்கேட்டு அருகில் கரும்பு வெட்டிக்கொண்டு இருந்த அவனது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்து அங்கு ஓடி வந்தனர். இது பற்றி உடனே போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஜே.சி.பி. எந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. சிறுவனை உயிருடன் மீட்க ஆழ்துளை கிணற்றின் அருகில் பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. சிறுவனுக்கு கயிறு மூலம் தண்ணீர் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆம்புலன்சு வாகனங்கள் மற்றும் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர். நேற்று நள்ளிரவு வரை மீட்பு பணி தொடர்ந்து நடந்தது. இரவு நேரம் என்பதால் விளக்கு வெளிச்சத்தில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சிறுவனை காப்பாற்ற போராடினார்கள். ஆனால் அவர்களது முயற்சிக்கு பலன் அளிக்கவில்லை. சிறிது நேரம் சிறுவன் அழுதுகொண்டே இருந்தான். ஆனால் அதன் பிறகு அவனிடம் இருந்து எந்த சத்தமும் வரவில்லை.
இன்று அதிகாலை சாகர் புத்தா பரேலா பிணமாக தான் மீட்கப்பட்டான். மகன் பிணத்தை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இது அங்கு திரண்டு இருந்த கிராம மக்களின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.
சமீப காலமாக ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறி விழுந்து இறக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதில் ஒரு சிலர் மட்டுமே உயிருடன் மீட்கப்படுகின்றனர்.
- தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்ற நிலையில் 40 மணி நேர போராட்டத்திற்கு பின் சிறுவன் மீட்கப்பட்டான்.
- பலியான சிறுவன் குடும்பத்திற்கு மத்தியபிரதேச அரசு சார்பில் ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போபால்:
மத்தியபிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் உள்ள கெர்கேடிபத்தர் கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் லோகேஷ் அகிர்வார் நேற்று அப்பகுதியில் விளையாடி கொண்டிருந்தான்.
அப்போது அங்கு தோண்டப்பட்ட 60 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளான். இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கும், மீட்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சிறுவனை பாதுகாப்பாக காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு கொண்டு வரப்பட்ட ஜேசிபி எந்திரங்கள் மூலம் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறுவனின் உடல்நிலையை கண்காணிக்க கேமிரா ஒன்று ஆழ்துளை கிணற்றில் இறக்கப்பட்டுள்ளது. தற்போது கிணற்றில் 43 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக உதவி போலீஸ் சூப்பிரண்டு சமீர்யாதவ் கூறுகையில், ஆழ்துளை கிணற்றில் ஆக்சிஜன் சப்ளை செய்யப்படுகிறது. இருப்பினும் சிறுவனிடம் இன்னும் பேச முடியவில்லை. சிறுவனை கண்டுபிடிக்க வெப் கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்பு படையின் 3 குழுக்களும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் சம்பவ இடத்தில் முகாமிட்டு மீட்பு பணியை துரிதப்படுத்தி வருகின்றனர்.
கிணற்றுக்குள் சில அசைவுகள் தென்படுகிறது. இது சிறுவன் உயிருடன் இருப்பதற்கான அறிகுறி. கிணற்றை ஒட்டி குழி தோண்டப்பட்டு வருகிறது. விரைவில் சிறுவன் மீட்கப்படுவான் என்றார்.
தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்ற நிலையில் 40 மணி நேர போராட்டத்திற்கு பின் சிறுவன் மீட்கப்பட்டான். உடனடியாக அவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பலியான சிறுவன் குடும்பத்திற்கு மத்தியபிரதேச அரசு சார்பில் ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆழ்துளை குழிக்குள் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு குழந்தையை மீட்கும் முயற்சிகள் நடைபெற்றன.
- மயங்கிய நிலையில் மீட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
போபால்:
மத்தியப் பிரதேச மாநிலத்தின் செஹோர் மாவட்டம் முங்காவ்லி கிராமத்தில் 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றின் குழிக்குள் இரண்டரை வயது குழந்தை தவறி விழுந்தது.
தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் மற்றும் ஜே.சி.பி. இயந்திரங்களுடன் விரைந்து வந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் முயற்சியில் இறங்கினர். 100 அடி ஆழத்தில் குழந்தை சிக்கி இருந்தது. இரவு, பகல் பாராமல் மீட்பு பணி மேற்கொண்டனர்.
இந்நிலையில், சுமார் 55 மணி நேர போராட்டத்திற்கு பின் அக்குழந்தை மயக்க நிலையில் மீட்கப்பட்டதாக தகவல் வெளியானது.
மீட்கப்பட்ட பெண் குழந்தை அங்கிருந்த ஆம்புலனஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
300 அடி போர்வெல் குழிக்குள் விழுந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- சுமார் 55 மணி நேர போராட்டத்திற்கு பின் அக்குழந்தை மயக்க நிலையில் மீட்கப்பட்டது.
- மத்தியப் பிரதேச முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தின் செஹோர் மாவட்டம் முங்காவ்லி கிராமத்தில் 300 அடி ஆழ ஆழ்துளை கிணற்றின் குழிக்குள் இரண்டரை வயது குழந்தை தவறி விழுந்தது.
தகவலறிந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் மற்றும் ஜே.சி.பி. இயந்திரங்களுடன் விரைந்து வந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குழந்தையை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.
100 அடி ஆழத்தில் குழந்தை சிக்கி இருந்தது. இரவு, பகல் பாராமல் மீட்பு பணி மேற்கொண்டனர். இந்நிலையில், சுமார் 55 மணி நேர போராட்டத்திற்கு பின் அக்குழந்தை மயக்க நிலையில் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட பெண் குழந்தை அங்கிருந்த ஆம்புலனஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆழ்துளை கிணற்றின் குழியில் விழுந்து உயிரிழந்த குழந்தைக்கு மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்தியப் பிரதேச முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மனம் அளவற்ற வேதனையும் துயரமும் நிறைந்துள்ளது. தொடர் மற்றும் அயராத முயற்சிகளுக்குப் பிறகும், சேஹூரில் உள்ள முங்காவாலியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த அப்பாவி சிறுமியை எங்களால் காப்பாற்ற முடியவில்லை.
இந்த துக்க நேரத்தில் குழந்தையை இழந்து வாடும் குடும்பத்தினருடன் நாம் அனைவரும் இருக்கிறோம்.
சிறுமியின் ஆன்மா சாந்தியடையவும், குடும்பத்தினருக்கு இந்த இழப்பை தாங்கும் ஆற்றலையும் இறைவன் தர பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
- சொா்ணபுரி காா்டன் பகுதி பொதுமக்கள் மனு அளித்தனர்.
- தோல் அரிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
திருப்பூர்
திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீா்க்கும் கூட்ட முகாம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பூா் மாநகராட்சி 16 -வது வாா்டு மாமன்ற உறுப்பினா் தமிழ்செல்வி கனகராஜ் தலைமையில் சொா்ணபுரி காா்டன் பகுதி பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: -திருப்பூா் மாநகராட்சி 16 வது வாா்டு சொா்ணபுரி காா்டன் பகுதியில் 1,500-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீா் எடுக்கும்போது சாயக்கழிவு கலந்து முற்றிலும் மாசுபட்ட தண்ணீா் வருகிறது.
இதைப் பயன்படுத்தும்போது தோல் அரிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.ஆககே எங்களது பகுதியில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து நிலத்தடி நீரைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.