search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பற்றாக்குறை"

    • அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள்- நர்சுகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
    • மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் நகர் பகுதிகளில் அரசு மருத்துவமனைகள், கிராமப் பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பெரும்பாலும் நிர்ண யிக்கப்பட்ட பணி இடங் களில் முழுமையாக டாக்டர் கள், நர்சுகள் பணிபுரிய வில்லை. பெரும்பாலான இடங்களில் பணியிடங்கள் காலியாகவே உள்ளது.

    அரசு மருத்துவமனைக்கு தினமும் குறைந்தது 400-க் கும் மேற்பட்ட நோயாளிகள், ஆரம்ப சுகாதார நிலையங் களில் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். தவிர உள் நோயாளிகளாகவும் பலர் சிகிச்சை பெற்று வருகின்ற னர்.

    அவ்வாறு வருபவர் களுக்கு டாக்டர், நர்சுகள் பற்றாக்குறையால் உடனடி யாக சிகிச்சை அளிக்க வழி இல்லை. இது தவிர பெரும் பான்மையான மருத்துவ மனைகளில் கர்ப்பிணி களுக்கு பிரசவம் பார்க்க மகப்பேறு டாக்டர்களும் பற்றாக்குறையாக உள்ளனர்.

    இதனால் ஆரம்ப சுகா தார நிலையங்களுக்கு வரும் கர்ப்பிணிகளை மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனர்.

    இந்த கால விரயத்தாலும் உரிய நேரத்தில் வாகனங்கள் கிடைக்காததாலும் அசம்பா விதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அரசு மருத்துவ மனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறையை தீர்த்து, கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்க மகப்பேறு டாக்டர்களை நியமிக்க மாவட்ட நிர்வாகம் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போலீசார் பற்றாக்குறையால் குற்றவாளிகளை கண்காணித்து அவர்களை பிடிப்பதும், குற்றங்கள் ஏற்படும் முன்பு தடுப்பதும் தற்போது பெரும் சவாலாக மாறி இருக்கிறது.
    • பணியமர்த்தப்பட்ட போலீசார், டி.எஸ்.பி, அலுவலகம், தனிப்படை என மாற்று பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றன. கும்மிடிப்பூண்டி, காட்டுப்பள்ளி, மீஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் தனியார் நிறுவனங்கள்அதிகரித்து வரும் நிலையில் பொன்னேரி பகுதிகளில் வெளியூர்களில் இருந்து குடியேறும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. குறிப்பாக தற்போது வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் அதிகமானோர் வசித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே கடந்த சில மாதங்களாக பொன்னேரி மற்றும் சுற்றுவட்டார பகுதி களில் குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. போலீசார் பற்றாக்குறையால் குற்றவாளிகளை கண்காணித்து அவர்களை பிடிப்பதும், குற்றங்கள் ஏற்படும் முன்பு தடுப்பதும் தற்போது பெரும் சவாலாக மாறி இருக்கிறது.

    பொன்னேரி காவல் நிலைய எல்லையான, 8 கி.மீ., சுற்றளவு பகுதிக்குள், 15 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய 44 பெரிய கிராமங்கள், 22 சிறு கிராமங்கள் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகள், ஆண்டார் குப்பம் மேட்டுப்பாளையம், ஆசான புதூர், பெரும்பேடு குப்பம். ஏலியம்பேடு, உள்ளிட்ட சுமார் 80 கிராமங்கள் வருகின்றன.

    பொன்னேரி போலீஸ் நிலையத்தில், ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்இன்ஸ்பெக்டர், 33 காவலர்கள் பணியில் இருந்தனர். ஆனால் தற்போது ஒரு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு), ஒரு சப்- இன்ஸ்பெக்டர் மற்றும் 4 காவலர்கள் என, மொத்தம், 6 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இங்கு பணியமர்த்தப்பட்ட போலீசார், டி.எஸ்.பி, அலுவலகம், தனிப்படை என மாற்று பணிகளில் ஈடுபட்டு உள்ளனர்.

    போலீஸ் பற்றாக்குறையால், பொன்னேரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட ஒழுங்கு, குற்றசம்பவங்கள், சட்ட விரோத நடவடிக்கைகளை கண்காணிக்க முடியாத நிலை உள்ளது. எனவே போலீஸ் பற்றாக்குறையை நீக்கி, இரவு ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ராமநாதபுரம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறையை போக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • மகப்பேறு டாக்டர்கள் இல்லை.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர் பகுதிகளில் அரசு ஆஸ்பத்திரிகளும், கிராமப் பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இங்கு பெரும்பாலும் நிர்ணயிக்கப்பட்ட பணி இடங்களில் முழுமையாக டாக்டர்கள், நர்சுகள் பணி புரியவில்லை.

    இதனால் பல இடங்களில் பணியிடங்கள் காலியாகவே உள்ளது. அரசு ஆஸ்பத்தி ரிக்கு தினமும் குறைந்தது 400-க்கும் மேற்பட்ட நோயாளிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். தவிர உள்நோயாளிகளாகவும் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களுக்கு டாக்டர், நர்சுகள் பற்றாக்குறையால் உடனடியாக சிகிச்சை அளிக்க முடியாமல் உள்ளது. இது தவிர பல ஆஸ்பத்திரிகளில் கர்ப்பிணி களுக்கு பிரசவம் பார்க்க போதிய அளவில் மகப்பேறு டாக்டர்கள் இல்லை.

    இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் கர்ப்பிணிகள் வேறு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்படு கின்றனர்.

    எனவே அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், நர்சுகள் பற்றாக்குறையை போக்க வும், ேபாதிய அளவில் மகப்பேறு டாக்டர்களை நியமிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மேயர் மகேஷ் தாக்கல் செய்தார்
    • 2023- 24-ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் கூட்டமும் மற்றும் கவுன்சில் கூட்டமும் இன்று நடந்தது.

    நாகர்கோவில், மார்ச்.31-

    நாகர்கோவில் மாநகராட்சி புதிய அலுவலகத்தில் 2023- 24-ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் கூட்டமும் மற்றும் கவுன்சில் கூட்டமும் இன்று நடந்தது.

    கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமை தாங்கினார். ஆணையர் ஆனந்த் மோகன், துணை மேயர் மேரி பிரின்சி லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மண்டல தலைவர்கள் அகஸ்டினாகோகிலவாணி, ஜவகர், முத்துராமன் ,செல்வகுமார் கவுன்சிலர்கள் டி. ஆர். செல்வம், ஸ்ரீலிஜா, அனிதா சுகுமாரன், மீனாதேவ் ,நவீன் குமார், உதயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பொறியாளர் பாலசுப்பிரமணியன், நிர்வாக அதிகாரி ராம் குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 2023 -24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டு ஆணையர் ஆனந்தமோகன் மேயர் மகேஷிடம் வழங்கினார்.அதனை மேயர் மகேஷ் கவுன்சில் கூட்டத்தில் தாக்கல் செய்தார். கூட்டத்தில் மேயர் மகேஷ் பேசியதாவது:-

    மாநகராட்சியில் அனைத்து பகுதி மக்களுக்கும் அத்தியாவசிய வசதிகள் கிடைக்கப்பெற வேண்டும் என்ற நோக்கத்தில் சாலை வசதி, தெரு விளக்கு, கழிவு நீர் ஓடை கட்டுதல், குடிநீர் வினியோகம் ஆகியவற்றிற்கு அனைத்து வார்டுகளுக்கும் சமமாக முக்கியத்துவம் கொடுத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது சுகாதாரம், பூங்கா சீரமைப்பு போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சொத்து வரி உயர்வு, புதிய கட்டிடங்களுக்கான சொத்து வரி மூலமாக கூடுதல் வருவாய் கிடைக்கும். சாலைகள் மேம்பாட்டிற்கும் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது ரூ.30 கோடி செலவில் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. குடிநீர் பிரச்சினையை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம்.

    அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ. 296 கோடியில் புத்தன் அணை குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 93 சதவீத பணிகள் தற்பொழுது முடிவடைந்துள்ளது. நாகர்கோவில் மாநகரப் பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.இதையடுத்து பஸ் நிலையங்களை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். வடசேரிபஸ்நிலையம் அண்ணாபஸ்நிலையம் ஆம்னி பஸ்நிலையங்கள் நவீனப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பாதாள சாக்கடை திட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 52 வார்டுகளிலும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களிடமிருந்து குப்பைகள் தரம்பிரித்து வாங்கப்பட்டு வருகிறது.நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட கிருஷ்ணன்கோவில் பகுதியில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.

    மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 685 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. சபையார் குளம், சுப்பையார்குளம், நீராடி குளம், செம்மங்குளம் ஆகிய வற்றை தூய்மைப்படுத்தி நீர் ஆதாரங்களை பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாகர்கோவில் நகர மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டே மாநகராட்சி செயல்படுகிறது. மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வருவாய் மற்றும் மூலதன நிதியாக இந்த ஆண்டுரூ. 234.98 லட்சம் வருவாய் கிடைக்கிறது. குடிநீர் மற்றும் வடிகால் நிதி மூலமாகரூ. 17 கோடியை 67 லட்சம் நிதி கிடைக்கிறது. இந்த 2023-24-ம் ஆண்டு நாகர்கோவில் மாநகராட்சிக்கு ரூ.252.64 லட்சம் நிதி கிடைக்கும். வருவாய் மற்றும் மூலதன செலவாக ரூ.239 கோடியே 57 லட்சமும் குடிநீர் மற்றும் வடிகால் செலவாக ரூ.15 கோடியை 91 லட்சம் செலவாகிறது.மொத்தம்ரூ. 255 கோடியே 48 லட்சம் செலவு ஆகிறது. இந்த ஆண்டு ரூ.2 கோடியே 84 லட்சம் பட்ஜெட் பற்றாக்குறை பட்ஜெட்டாக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முத்துப்பேட்டை வட்டாரத்தில் 3 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.
    • நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மற்றும் சுகாதார துறை அமைச்சர் ஆகியோருக்கு காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஹிர் அனுப்பி உள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டாரத்தில் 3 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.

    இதில் 15 மருத்துவ பணியிடங்கள் உள்ளன.

    தற்போது 4 மருத்துவர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர்.

    இதனால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    சிகிச்உசை பெறுவதற்கு காத்திருக்கும் சூழல் உள்ளது.

    எனவே உடனடியாக காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தஞ்சை அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட கோவில்களில் போதிய வருவாய் இல்லாத காரணத்தினால் ஏற்பட்டுள்ளது.
    • தமிழக அரசு மானியமாக ரூ.3 கோடியை தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்திற்கு கடந்த 4-ந் தேதி வழங்கியது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அரண்மனை தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட 88 கோவில்களில் பெரும்பாலான கோவில்களில் போதிய வருவாய் இல்லாத காரணத்தினால் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையை ஈடுசெய்யும் வகையில் தமிழக அரசு மானியமாக ரூ.3 கோடியை தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்திற்கு கடந்த 4-ந் தேதி வழங்கியது.

    இதனை தமிழக முதல் - அமைச்சர் மு.க. ஸ்டாலின், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லேவிடம் வழங்கினார்.

    இதில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் இந்து சமய அறநிலைத்துறை செயலர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் கண்ணன், திருமகள், இணை ஆணையர் சுதர்சன், உதவி ஆணையர் கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் நிதி வழங்கிய தமிழக அரசுக்கும், முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலி னுக்கும் தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரேசன் கடைகள், அங்கன்வாடி மையங்களில் ஊழியர்களின் பற்றாக்குறை கடுமையாக நிலவி வருகிறது.
    • இப்பணிகளுக்கு 5 வருடங்களுக்கு மேலாக போதுமான ஊழியர்கள் நியமிக்கவில்லை.

    சேலம்:

    சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள ரேசன் கடை பணியில் போதுமான ஊழியர்கள் இல்லை. குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் பெரும்பாலான ரேசன் கடைகள், அங்கன்வாடி மையங்களில் ஊழியர்களின் பற்றாக்குறை கடுமையாக நிலவி வருகிறது. இப்பணிகளுக்கு 5 வருடங்களுக்கு மேலாக போதுமான ஊழியர்கள் நியமிக்கவில்லை.

    கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ரேசன் கடை, அங்கன்வாடி பணிக்கு ஆட்கள் தேர்வு மாவட்ட கூட்டுறவு நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டது. முதுநிலை பட்டதாரிகள், ஆராய்ச்சி, ஆசிரியர் கல்வி பயின்ற பட்டதாரிகள் பல ஆயிரம் பேர் விண்ணப்பித்து, நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டனர். ஆனால், இந்த தேர்வில் லஞ்சம், முறைகேடு ஆகியவை விளையாடியது. இதனால் இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு ஊழியர்களை நியமிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளாமல் இருந்து வந்தது. இதனால் ரேசன் கடைகளில் ஆட்கள் பற்றாக்குறையினால் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து அரசு ஊழியர்கள் சங்க அமைப்புகள் இப்பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யுமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு அழுத்தங்கள் கொடுத்து வந்தன.

    இதையடுத்து ரேசன் கடைகளில் காலியாக உள்ள ஊழியர் பணிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்யும் பணி வருகிற நவம்பர் மாதம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையத்தின் குழு உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவு ரேசன் கடைகளில் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் தேர்வு தொடர்புடைய விதிகளில் சில திருத்தங்களை செய்து அரசாைண வெளியிடப்பட்டுள்ளன.

    இப்பணிகளுக்கு அக்டோபர் மாதம் 13-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 14-ம் தேதி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது. அதன் பிறகு நேர்முகத்தேர்வு டிசம்பர் மாதம் 15-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஜனவரி மாதம் 2-ம் தேதி தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டு, பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது. 

    • கடந்த 2012-ம் ஆண்டு குடமுழுக்கு நடத்துவதற்காக பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டது.
    • திருப்பணிக்கு நிதி பற்றாக்குறையால் பணிகள் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    குத்தாலம்:

    குத்தாலம் அருகே பழைமை வாய்ந்த வழுவூர் வீரட்டேஸ்வரர் கோயிலில் திருப்பணியை துவக்கக் கோரி இந்து மகாசபை அமைப்பின் ஆலய பாதுகாப்புப் பிரிவு சார்பில் கோயில் முன்பு மண்டியிட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சிவபிரானுடைய வீரச்செயல்கள் விளங்கிய இடங்களிலுள்ள திருத்தலங்கள் வீரட்டத்தலங்கள் என்று போற்றப்படுகிறது. தமிழகத்தில் எட்டு இடங்களில் அட்ட வீரட்டேஸ்வரர் கோயில்கள் அமைந்துள்ளன.

    அவற்றில் ஒன்று மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வழுவூர் கிராமத்தில் அமைந்துள்ளது. சமயக் குரவர்களால் பாடப்பட்ட இக்கோயில் 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது.

    இக்கோயிலில் கடந்த 2012-ஆம் ஆண்டு குடமுழுக்கு நடத்துவதற்காக பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி தொடங்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் பணிகளை தொடராமல் கிடப்பில் போடப்பட்டது.

    இந்நிலையில் இந்த ஆண்டு மீண்டும் திருப்பணி மீண்டும் தொடங்கப்பட்டு இந்துசமய அறநிலையத்துறை சார்பில் ரூ.36 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.

    இதையடுத்து, இக்கோயிலில் மீண்டும் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி தொடங்கியது.

    மேலும் திருப்பணிக்கு நிதிப் பற்றாக்குறையால் பணிகள் பாதியிலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

    மேலும் கோயில் நிர்வாகம் முறையாக செயல்படாததால், உபயதாரர்கள் நிதி அளிக்க முன்வந்தும், நிதியை பெற முடியாமல் திருப்பணிகள் பாதியிலேயே நிற்கின்றது.

    இந்நிலையில், கோயில் திருப்பணியை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தி இந்து மகா சபா அமைப்பின் ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் ராம.நிரஞ்சன் தலைமையில் கோயிலின் முன்பு அவ்வமைப்பினர் மண்டியிட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    திருப்பணிக்கான செலவை முழுமையாக அரசே ஏற்று பணியை முடிக்க வேண்டும் என்றும், இதற்கு அரசு செவி சாய்க்காவிட்டால், அடுத்த கட்டமாக பிச்சை எடுத்து நிதி திரட்டும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அவ்வமை ப்பினர் தெரிவித்துள்ளனர்.

    • போலீஸ் பற்றாக்குறையால் ரோந்து பணியில் தொய்வு ஏற்பட்டது.
    • இதனால், திருட்டு சம்பவங்கள். திருடர்கள், சமூக விரோதிகள் நடமாட்டம் குறைந்திருந்தது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட போதுமான போலீசார் இல்லாததால் குற்றச்சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. கீழக்கரை பகுதியில் விரிவாக்க பகுதிகள் அதிகம் உருவாகின்றன. போலீஸ் நிலையத்தில் அதிகாரிகளை தவிர போலீசார் பற்றாக்குறை அதிகமாக உள்ளது.

    பணியில் உள்ள போலீசாரும் பல்வேறு பாதுகாப்பு பணிகளுக்கு சென்று விடுவதால், இரவு நேர ரோந்து பணிகளில் ஈடுபட முடியவில்லை.முன்பு நகர் பகுதிகளில் தினமும் போலீசார் ரோந்து வந்தனர். இதனால், திருட்டு சம்பவங்கள். திருடர்கள், சமூக விரோதிகள் நடமாட்டம் குறைந்திருந்தது.

    தற்போது ரோந்து பணியில் போலீசார் ஈடுபடும் நாட்கள் குறைவாகவே உள்ளது. இதை சாதகமாக்கி வீடு புகுந்து திருடுவது, செயின் பறிப்பு சம்பவங்களும், சில நேரங்களில் கொலைகளும் நடக்கின்றன. ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் நிர்வாகம் கீழக்கரையில் போதுமான போலீசாரை நியமித்து ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்தனர்.

    • ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தலைக்காய சிகிச்சை பிரிவு இல்லாததால் நோயாளிகள் தவித்து வருகின்றனர்.
    • மயக்க மருந்து டாக்டர்கள் குறைவாக உள்ளதால் தினமும் 4 அறுவை சிகிச்சைதான் மேற்கொள்ள முடிகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் மாவட்ட அரசு ஆஸ்பத்திரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியாக மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆஸ்பத்திரியில் அனைத்து மருத்துவ சிகிச்சைகளும் அளிக்க கூடிய வகையில் தேவையான வசதிகளும் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

    ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விபத்தில் பாதிக்க ப்படுபவர்கள் தலைக்காயம் ஏற்பட்டால் அவர்கள் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் இருந்து மதுரைக்குதான் பரிந்துரை செய்யப்பட்டு வருகின்றனர். மருத்துவ கல்லூரி வந்தால் தலைக்காய சிகிச்சை உள்ளிட்ட அனைத்து அறுவை சிகிச்சைகளும் இங்கேயே பார்க்கலாம் என்று நம்பி இருந்த மக்களுக்கு இது ஏமாற்றமாக உள்ளது.

    இதுதவிர, ஆஸ்பத்திரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் மருத்துவ கல்லூரி கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் பல சிறப்பு சிகிச்சை பிரிவுகள் இன்னும் தொடங்கப்படாமலேயே உள்ளன.

    இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாக டாக்டர் கூறு கையில், கட்டிட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்து துரிதப்படுத்த உத்தர விட்டுள்ளார். மயக்க மருந்து டாக்டர்கள் குறைவாக உள்ளதால் தினமும் 4 அறுவை சிகிச்சைதான் மேற்கொள்ள முடிகிறது. இதனால் ஒட்டுமொத்தமாக அறுவை சிகிச்சை பாதிக்கப்படுகிறது.

    விரைவில் கூடுதலாக மயக்க மருந்து டாக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆக்சிஜன் மையம் எலும்பு அறுவை சிகிச்சை, அறுவை அரங்கு புதிய கட்டிடம் முடிவடைந்ததும் அதில் செயல்படும். இன்னும் 3 மாத காலத்தில் ஒவ்வொரு சிகிச்சைக்கும் தனி பிரிவுகள் தொடங்கப்பட்டு அதற்கென தனி அறுவை சிகிச்சை அரங்குகள் செயல்பட தொடங்கும். அதற்கு தேவையான எந்திரங்கள் வந்துள்ளன. 3 மாதத்திற்குள் அனைத்து எந்திரங்களும் வந்துவிடும்.

    ஆஸ்பத்திரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 11 ஆயிரம் கிலோலிட்டர் திரவ ஆக்சிஜன் மையத்திற்கென தனியாக ஜெனரேட்டர் அமைக்கப்பட்டு வருகிறது என்றார்.

    • நாடு முழுவதிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், இளநீரின் தேவையும் மிகவும் அதிகரித்து வருகிறது.
    • தற்போது 1.5 முதல் 1.75 லட்சம் வரையில் மட்டுமே இளநீர் கிடைக்கிறது.

    உடுமலை:

    உடுமலை, பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில், தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது.இதில் இளநீர் சாகுபடிக்கான வீரிய ஒட்டுரக தென்னை மரங்கள் மட்டும் 3.5 லட்சம் உள்ளன.சாவக்காடு சிகப்பு, பச்சை, மலேசியன் சிகப்பு, மஞ்சள், நெட்டை ஒட்டு ரக இளநீர் சாகுபடி செய்யப்படுகிறது. உடுமலை, பொள்ளாச்சி, ஆனைமலை பகுதியில் சாகுபடியாகும் இளநீர், திருப்பூர், சென்னை, மதுரை, சேலம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி உள்பட தமிழகம் முழுவதிலும் அனுப்பப்படுகிறது.அதேபோல், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வடமாநில பகுதிகளுக்கும் அனுப்பப்படுகிறது.

    இந்நிலையில் நாடு முழுவதிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், இளநீரின் தேவையும் மிகவும் அதிகரித்து வருகிறது.ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:-

    கத்திரி வெயில் முடிந்தும், நாடு முழுவதிலும் வெயிலின் தாக்கம் குறையாமல் உள்ளது. இதனால், தமிழகம் முழுவதிலும் இளநீருக்கான தேவை அதிகரித்துள்ளது. தற்போது மும்பை, ஆந்திரா, குஜராத், புதுடெல்லி பகுதிகளில் இப்பகுதி இளநீருக்கு அதிக கிராக்கி உள்ளது.ஆனால் இளநீர் வரத்து குறைந்து வரும் நிலையில், தமிழகத்தின் தேவைக்கே போதுமானதாக உள்ளது.

    வடமாநிலங்களுக்கு அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. டிசம்பர், ஜனவரி மாதங்களில் நாடு முழுவதிலும், தினமும் 3 முதல் 5 லட்சம் இளநீர் அனுப்பப்பட்டு வந்தன. தற்போது 1.5 முதல் 1.75 லட்சம் வரையில் மட்டுமே இளநீர் கிடைக்கிறது.இதன் வாயிலாக பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகாவில் தினமும் 57 லட்சம் ரூபாய் வரையில் வர்த்தகம் நடக்கிறது. தற்போது வரத்து குறைவு, தேவை அதிகரிப்பால், பண்ணையில் ஒரு இளநீர் 31 முதல் 32 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மழை காலம் துவங்கும் வரையில் விலை குறையாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×