search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229701"

    • ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு மரம் என்ற அடிப்படையில் அனைத்து மாணவா்களையும் கொண்டு மரக்கன்றுகள் நடப்படுகின்றன.
    • மாணவா்களால் நடப்படுகிற மரக்கன்றுகளுக்கு அவா்களது பெயா் சூட்டப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு மரம் என்ற அடிப்படையில் மரக்கன்று நடும் பணி தொடங்கப்பட்டது.

    தொடா்ந்து 8 -ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நாட்டு நலப் பணித் திட்டச் சிறப்பு முகாமை துணைவேந்தா் திருவள்ளுவன் மரக்கன்றுகள் நட்டு வைத்து தொடங்கி வைத்தாா்.

    இம்முகாமில் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு மரம் என்ற அடிப்படையில் அனைத்து மாணவா்களையும் கொண்டு மரக் கன்றுகள் நடப்படுகின்றன.

    இத்திட்டத்தில் 2,000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. இப்பல்கலைக்கழகத்தில் படிக்கக் கூடிய அனைத்து மாணவா்களும் தங்களது படிப்பு காலம் முடியும் வரை மரக்கன்றுகளைப் பேணி பாதுகாக்க வேண்டும். மாணவா்களால் நடப்படுகிற மரக் கன்றுகளுக்கு அவா்களது பெயா் சூட்டப்படும் என துணைவேந்தா் திருவள்ளுவன் தெரிவித்தாா்.

    இவ்விழாவில் பதிவாளா் (பொ) தியாகராஜன், நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் பழனிவேலு, வெங்கடேசன், இந்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    • கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப் பட்டியில் தி.மு.க. சுற்றுச்சூழல் அணி சார்பில் பள்ளி, கல்லூரி, மாணவ- மாணவிகளுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • இந்நிகழ்ச்சியில் மாணவிகள் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்கள்.

    கோபி,ஆக.26-

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப் பட்டியில் தி.மு.க. சுற்றுச்சூழல் அணி சார்பில் பள்ளி, கல்லூரி, மாணவ- மாணவிகளுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சுற்றுச்சூழல் அணி யின் மாநில அமைப்பாளர் கார்த்திகேய சிவ சேனாதிபதி தலைமை தாங்கினார் .வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் கே. கே.செல்வன் முன்னிலை வகித்தார்.

    இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாணவ- மாணவி களுக்கு மரக்கன்று களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாணவிகள் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில்வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் நல்லசிவம், தி.மு.க. சுற்று ச்சூழல் அணியின் மாநில துணைச்செயலாளர்கள் மணிசுந்தர், பழ செல்வக்குமார், நாராயணமூர்த்தி,, உசிலம்பட்டி அருண், தி.மு.க. சுற்றுச்சூழல் அணி ஈரோடு தெற்கு மாவட்ட அமைப்பாளர் எல்லப்பாளையம் சிவகுமார், டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் சிவபாலன் , திமுக. சுற்றுச்சூழல் அணி யின் அமைப்பாளர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வீடு தோறும் விருட்சம் என்கிற திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மிகப்பெரிய மரங்கள் சரணாலயம் தஞ்சை மாவட்டம் திருமலைசமுத்திரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விருட்சவனம் என்பது சிறப்புக்குரியது.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் வீடு தோறும் விருட்சம் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இதில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டு மரக்கன்று வழங்கினார்.

    தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள வீடு தோறும் விருட்சம் என்கிற திட்டத்தின் கீழ் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்று நடும் நிகழ்ச்சியும், மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நேட்டிவ் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவி கண்ணன் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன் வாழ்த்துரை வழங்கினார்.

    நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கி பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தஞ்சை மாவட்டம் செழிப்பான மாவட்டமாக இருந்து வருகிறது. ஆனாலும் தஞ்சை மாவட்டத்தில் வனங்களின் பரப்பளவு ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இதேபோல் மரங்கள் அடர்ந்த பகுதியும் மிகவும் குறைவு.

    பார்க்கும் திசை அனைத்திலும் வயல்வெளிகளும் பசுமையும் இருந்தாலும் மாவட்டத்தில் மரங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

    இதனை கருத்தில் கொண்டு மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இந்த வீடு தோறும் விருட்சம் என்கிற திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

    மரங்களின் எண்ணிக்கை அதிகரிக்க லட்ச கணக்கில் மரக்கன்றுகளை எளிதில் நட்டு விட முடியும்.ஆனால் எத்தனை கன்றுகள் வளர்ந்து மரமாகும் என்பது கேள்விக்குறி.

    இதன் காரணமாக வருகிற ஒரு வருடத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நட்டு மரமாக வளர்ப்பது என்ற குறிக்கோளுடன் இந்த வீடு தோறும் விருட்சம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

    இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

    இசை வனம் தமிழகத்திலேயே மிகப்பெரிய மரங்கள் சரணாலயம் தஞ்சை மாவட்டம் திருமலைசமுத்திரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விருட்ச வனம் என்பது சிறப்புக்குரியது.

    திருவையாறு பகுதியில் உள்ள இசை கல்லூரி வளாகத்தில் இசைக்கருவிகள் செய்ய பயன்படும் மர வகைகள் நடவு செய்யப்பட்டுள்ளது இதற்கு இசை வனம் எனப்பெயரிடப்பட்டுள்ளது.

    தற்போது வீடுதோறும் விருட்சம் என்கிற திட்டத்தில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகள் அனைத்தும் நட்டவரின் பெயரிலேயே வளர்த்து உருவாக்கப்பட வேண்டும்.

    இதில் கும்பகோணம் தாசில்தார் தங்க.பிரபாகரன் மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன், நகர் நல அலுவலர் பிரேமா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பாளர் ஜான் ஸ்டீபன் நன்றி கூறினார்.

    • கந்தர்வகோட்டையில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
    • மரக்கன்றுகளை நட்டவுடன் பாதுகாப்பிற்காக மூங்கில் கூடு அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.


    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் பட்டுக்கோட்டை சாலை மற்றும் திருச்சி சாலையில் மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு கந்தர்வகோட்டை வட்டாட்சியர் ராஜேஸ்வரி தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.விழாவில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் நடராஜன், உதவிப் பொறியாளர் கோட்டை ராவுத்தர் மற்றும் சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    மரக்கன்றுகளை நட்டவுடன் பாதுகாப்பிற்காக மூங்கில் கூடு அமைக்கப்பட்டு மரக்கன்றுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

    • 75 மரக்கன்றுகள் நட்டு கலெக்டர் தினேஷ்பொன்ராஜ்ஆலிவர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
    • ஊராட்சியில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சி பணிகள் விபரங்கள் அறிக்கையாக வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

    அம்மாபேட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், கீழகோவில்பத்து ஊரா ட்சியில் சுதந்திரதினத்தை முன்னிட்டு சிறப்பு கிரா மசபை கூட்டம் நடைபெ ற்றது. கீழகோவில்பத்து ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    இதில், தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ்ஆலிவர் கலந்து கொண்டு பேசினார். முன்னதாக 75-வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு 75 மரக்கன்றுகள் நட்டு கலெக்டர் தினே ஷ்பொன்ராஜ்ஆலிவர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    அதனை தொடர்ந்து நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் ஊராட்சியின் வரவு, செலவு கணக்குஉள்பட ஊராட்சியில் நிறைவே ற்றப்பட்ட வளர்ச்சி பணிகள் விபரங்கள் அறிக்கையாக வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

    இந்த கூட்டத்தில் அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன், வேளாண் இணை இயக்குனர் ஜஸ்டின், கும்பகோணம் கோட்டாட்சியர் லதா, பாபநாசம் தாசில்தார் மதுசூதனன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தராஜ், அமானுல்லா உள்பட அனைத்துத்துறை அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பசுமை போர்வைக்கான இயக்கத்திட்டத்தின் கீழ் இலவசமாக மரக்கன்றுகள் பெற விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும் வேளாண் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சின்னசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மரம் சார்ந்த விவசாயத்தின் மூலம் சுற்றுப்புறசூழலை மேம்படுத்த விவசாய நிலங்களில் பயிர்சாகுபடியுடன் மரம் வளர்ப்பினை ஊக்கப்படுத்தும் நோக்கில் 'தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம்"- செயல்படுத்தப்படுகிறது.

    இவ்வியக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் செம்மரம், மகாகனி, ரோஸ்வுட், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, புளியன், கடம்பு, வாகை உள்ளிட்ட 25 வகையான மரக்கன்றுகள் வனத்துறை மற்றும் தோட்டக்கலை துறை நாற்றங்காலில் உற்பத்தி செய்து வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் நடப்பு ஆண்டில் 2.65 லட்சம் மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட உள்ளது.

    அதற்கான மரக்கன்றுகள் வரும் வடகிழக்கு பருவமழை காலத்தின் போது விநியோகம் செய்வதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது. இம்மரக்கன்றுகள் வரப்பு ஓரங்களிலும், வயல் முழுவதும் நடவு செய்யலாம். மரக்கன்றுகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை உழவர் நலத்துறையின் உழவன் செயலி மூலம் தங்களது சர்வே எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றைக் கொண்டு பதிவு செய்துகொள்ளலாம்.

    பதிவு செய்யப்பட்ட வயலை தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் ஆய்வு செய்வார். பின்னர் தங்களுக்குத் தேவைப்படும் மரக்கன்றுகளை வனவியல், தோட்டக்கலை விரிவாக்க மைய நாற்றாங்காலில் இருந்து பெற்று நடவு செய்துகொள்ளலாம். முன் உரிமை அடிப்படையில் மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்படவுள்ளதால் மரக்கன்றுகள் வளர்க்க ஆர்வமாக உள்ள விவசாயிகள் தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர் அல்லது சம்மந்தப்பட்ட வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்புகொண்டு அங்கீகரிக்கப்பட்டுள்ள மரக்கன்றுகள் குறித்து பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • முத்துலாபுரம் வைப்பாற்று கரைகளில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கியது.
    • சீமை கருவேல மரங்களை அகற்றுவதன் மூலம் நிலத்தடி நீர் சேகரிக்கப்பட்டு பொது மக்களுக்கு தடை இன்றி குடிநீர் கிடைக்கும் என்று எம்.எல்.ஏ. பேசினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் வைப்பாறு மற்றும் ஆற்றுக்குள் அடர்ந்து வளர்ந்து இருந்த சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி கடந்த மாதம் தொடங்கியது.

    இதில் 2-ம் கட்டமாக முத்துலாபுரம் வைப்பாற்று பாலத்தின் கிழக்குப் பகுதியில் இப்பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் நேற்று 3-ம் கட்டமாக முத்துலாபுரம் வைப்பாற்று பாலத்தின் மேற்கு பகுதியில் இருந்து நென்மேனி வரையிலான ஆறு மற்றும் கரைகளில் அடர்ந்து வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி தொடங்கியது.

    இதற்கான தொடக்க விழாவில் மரங்கள் மக்கள் இயக்கம் இணை நிறுவனர் செல்வகுமார் வரவேற்று பேசினார்.நீர்வளத்துறை வைப்பாா் உபகோட்டம் உதவி செயற்பொறியாளர் ஸ்ரீராம், நீர்வளத்துறை வைப்பார் வடிநிலப்பிரிவு விளாத்திகுளம் உதவி பொறியாளர் நிவேதா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசியதாவது:-

    பொதுமக்களின் ஒத்துழைப்புடன் மரங்கள் மக்கள் இயக்கம் சார்பில் எம்.பி கனிமொழி தலைமையில் விரைவில் விளாத்திகுளம் தொகுதி முழுவதும் 25 லட்சம் பனை மர விதைகள் நடப்படும். விளாத்திகுளம் கண்மாயில் உள்ள 550 ஏக்கரில் உள்ள சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி தீவிரமாக பொதுமக்களின் ஒத்துழைப்போடு நடைபெற்று வருகிறது.

    இதே போன்று ஒவ்வொரு கிராமங்களிலும் உள்ள கண்மாய்களில் இருக்கின்ற சீமை கருவேல மரங்களை அகற்றுவதன் மூலம் நிலத்தடி நீர் சேகரிக்கப்பட்டு பொது மக்களுக்கு தடை இன்றி குடிநீர் கிடைக்கும். ஒரு கோடி மரக்கன்று என்ற இலக்கை விரைவில் அடங்கி நாட்டிலேயே பசுமையான பகுதியாக விளாத்திகுளம் தொகுதி மாற்றப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் சிவபாலன், தங்கவேல், செல்வகுமார், டி.எஸ்.பி. பிரகாஷ், ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், செல்வகுமார், மும்மூர்த்தி காசிவிஸ்வநாதன், சின்ன மாரிமுத்து, விளாத்திகுளம் பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், துணைத் தலைவர் வேலுச்சாமி, மாவட்ட கவுன்சிலர் ஞானகுருசாமி, நடராஜன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், மரங்கள் மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ராகவன், இணை ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன், பூசனூர் ஊராட்சி மன்ற தலைவர் சோலையம்மாள், மார்த்தாண்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முத்துக்கரும்புளி, தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் ஸ்ரீதர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை மாவட்டம் முழுவதும் 10 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
    • 75-வது சுதந்திர தின விழாவைச் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் முன்னோடித் திட்டமான "பசுமைத் தமிழ்நாடு இயக்கத்தின்" ஒரு பகுதியாக மதுரையில் "மாமதுரை போற்றுதும்" என்னும் தொலைநோக்கு பார்வையுடன், தமிழகத்தில் பசுமைப் பரப்பை அதிகரிக்கவும் பல்லுயிர் வளம் பெருக்கவும் 75-வது சுதந்திர தின விழாவைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையிலும், மதுரை மாவட்டம் முழுவதும் 10 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

    இந்த திட்டத்தின் மூலம் வேம்பு, இலுப்பை போன்ற பாரம்பரிய மரங்களும் மஞ்சநத்தி, புங்கை, பூவரசு போன்ற மருத்துவ குணங்கள் மிகுந்த மரங்களும் மா, கொய்யா, நாவல் போன்ற பழமரங்களும் நடப்படும். இந்த மாபெரும் முன்னெடுப்பில் பங்கேற்க அரசு பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பசுமை அமைப்புகள், குடியிருப்போர் நலச்ச–ங்கங்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பள்ளிகள், மாணவ-மாணவிகள் திரளாக வர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

    மேலும், தனியார் அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நர்சரி வைத்துள்ளவர்கள் தங்கள் பங்களிப்பினை மரக்கன்றுகளாகவும், பொருளாகவும் மனித உழைப்பாகவும் அளிக்கலாம்.

    மரக்கன்றுகள் தொடர்பான பதிவுகளையும், இந்த முன்னெடுப்பில் பங்கேற்க விரும்புவோர் தங்களின் வருகையையும் வருகிற 10-ந் தேதிக்குள் இணையதளத்தின் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு 93630 05523 மற்றும் 94452 29295 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டும், வாட்ஸ்அப் மூலமாக குறுஞ்செய்தி அனுப்பியும் தகவலை பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வல்லம் பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில் குப்பைகளை சரியான முறையில் பராமரிக்கின்றனர்.
    • பசுக்கள் வளர்க்கப்பட்டு, அவற்றின் சாணம் உரம் தயாரிப்புக்கு பயன்படுகிறது.

    வல்லம்:

    தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அய்யனார் நகர் பகுதியில் 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வளம் மீட்பு பூங்காவில் வல்லம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு இயற்கை உரமாக தயார் செய்யப்பட்டு விவசாய பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வளம் மீட்பு பூங்காவை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டார். பின்னர், அரசு பள்ளி‌ மாணவ-மாணவிகளின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மாணவ-மாணவிகள் சுற்றுப்புற மேம்பாடு குறித்து கவிதை வாசித்தனர்.

    பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசியதாவது:-

    வல்லம் பேரூராட்சியில் தினமும் 4 முதல் 5 டன் குப்பைகள் சேர்கின்றன. வல்லம் பேரூராட்சி வளம் மீட்பு பூங்காவில் குப்பைகளை சரியான முறையில் பராமரிக்கின்றனர். இங்கு தோட்டம் அமைக்கப்பட்டு இயற்கை முறையில் காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது. மேலும், பசுக்கள் வளர்க்கப்பட்டு, அவற்றின் சாணம் உரம் தயாரிப்புக்கு பயன்படுகிறது.

    வல்லம் பேரூராட்சி திடக்கழிவு மேலாண்மை மாவட்டத்திற்கு மட்டுமல்ல மாநிலத்திற்கே முன்மாதிரியாக உள்ளது. மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ள‌ மரக்கன்றுகளை அவர்களுடைய பெயர்களை சூட்டியே வளர்க்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு சிறந்த மாவட்டமாக உருவாகும் என்றும், மாநிலத்திலேயே பெரிய விருட்சவனம் திருமலைசமுத்திரத்திலும், இசைவனம் திருவையாறிலும் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    இதனையடுத்து, பள்ளி மாணவ-மாணவிகளுடன் சேர்ந்து 380 மரக்கன்றுகளை நட்டும், மகளிர் சுய உதவி குழுவிற்கு 4 லட்ச நிதி உதவி வழங்கியும், பேரூராட்சி பணியாளர்களுக்கு நல வாரிய அட்டையினையும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார். இதில் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கனகராஜ், வல்லம் பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி, பேரூராட்சி தலைவர் செல்வராணி கல்யாணசுந்தரம், தஞ்சை ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் அருளானந்தசாமி, வல்லம் தி.மு.க. நகர செயலாளர் கல்யாணசுந்தரம், பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன், வல்லம் அரசு பள்ளி ஆசிரியர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் பலர் உடன் இருந்தனர். ஏற்பாடுகளை பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன், தனபால் மற்றும் பலர் செய்திருந்தனர்.

    • செஸ் ஒலிம்பியாட்டில் 188 நாடுகள் பங்கேற்பதை குறிக்கும் வகையில் நடைபெற்றது
    • மொட்டோரை பகுதியில் 188 மரக்கன்றுகள் நடும் பணிகளை வனத் துறை அமைச்சா் தொடங்கி வைத்தாா்.

    ஊட்டி:

    மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கிறது. இதில் 188 நாடுகள் கலந்து கொள்வது குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் இடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சாா்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1.31 லட்சம் செலவில் ஊட்டி அருகே உள்ள மொட்டோரை பகுதியில் 188 மரக்கன்றுகள் நடும் பணிகளை வனத் துறை அமைச்சா் ராமசந்திரன் தொடங்கி வைத்தாா்.

    மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.மரக்கன்று நடும் விழாவை தொடங்கி வைத்து வனத் துறை அமைச்சா் ராமசந்திரன் கூறியதாவது:-

    இந்திய வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் சா்வதேச அளவில் 188 நாடுகளைச் சோ்ந்த 2,000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரா், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனா்.

    நீலகிரி மாவட்டத்தில், பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி, தோட்டக்கலைத் துறை, பள்ளிக் கல்வித் துறை, சுற்றுலாத் துறை உள்ளிட்ட துறைகளின் மூலம் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விளம்பர பதாகைகள் வைத்து விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளன.

    அதேபோல நீலகிரி மாவட்ட கலெக்டர் வருகிற 25-ந் தேதி கோவை மாவட்டத்துக்கு சென்று சா்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்துக்கு டாா்ச் பெற்று வரவுள்ளாா். அதனை தொடா்ந்து, 26-ந் தேதி நீலகிரி மாவட்டத்தில் டாா்ச் ரிலே விழிப்புணா்வு பேரணி நடைபெற உள்ளது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டி 188 நாடுகள் பங்கேற்பதை முன்னிட்டு மொட்டோரை பகுதியில் 188 மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத் தொடா்ந்து, ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் சதுரங்க போட்டி விளையாடுவதற்கு செஸ் போா்டு மற்றும் காய்களை வழங்கினாா்.இதில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநா் மோனிகா ராணா, உதகை ஊராட்சி ஒன்றியத் தலைவா் மாயன், ஊட்டி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நந்தகுமாா், சிவகுமாா், நஞ்சநாடு ஊராட்சித் தலைவா் சசிகலா மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்

    • செஸ் ஒலிம்பியாட்டில் 188 நாடுகள் பங்கேற்பதை குறிக்கும் வகையில் நடைபெற்றது
    • மொட்டோரை பகுதியில் 188 மரக்கன்றுகள் நடும் பணிகளை வனத் துறை அமைச்சா் தொடங்கி வைத்தாா்.

    ஊட்டி:

    மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கிறது. இதில் 188 நாடுகள் கலந்து கொள்வது குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் இடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறையின் சாா்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.1.31 லட்சம் செலவில் ஊட்டி அருகே உள்ள மொட்டோரை பகுதியில் 188 மரக்கன்றுகள் நடும் பணிகளை வனத் துறை அமைச்சா் ராமசந்திரன் தொடங்கி வைத்தாா்.

    மாவட்ட கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார்.மரக்கன்று நடும் விழாவை தொடங்கி வைத்து வனத் துறை அமைச்சா் ராமசந்திரன் கூறியதாவது:-

    இந்திய வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி முதல் ஆகஸ்டு 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் சா்வதேச அளவில் 188 நாடுகளைச் சோ்ந்த 2,000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரா், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனா்.

    நீலகிரி மாவட்டத்தில், பேரூராட்சி, நகராட்சி, ஊராட்சி, தோட்டக்கலைத் துறை, பள்ளிக் கல்வித் துறை, சுற்றுலாத் துறை உள்ளிட்ட துறைகளின் மூலம் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விளம்பர பதாகைகள் வைத்து விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள ப்பட்டுள்ளன.

    அதேபோல நீலகிரி மாவட்ட கலெக்டர் வருகிற 25-ந் தேதி கோவை மாவட்டத்துக்கு சென்று சா்வதேச அளவிலான 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு, நீலகிரி மாவட்டத்துக்கு டாா்ச் பெற்று வரவுள்ளாா். அதனை தொடா்ந்து, 26-ந் தேதி நீலகிரி மாவட்டத்தில் டாா்ச் ரிலே விழிப்புணா்வு பேரணி நடைபெற உள்ளது.

    செஸ் ஒலிம்பியாட் போட்டி 188 நாடுகள் பங்கேற்பதை முன்னிட்டு மொட்டோரை பகுதியில் 188 மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

    அதனைத் தொடா்ந்து, ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் சதுரங்க போட்டி விளையாடுவதற்கு செஸ் போா்டு மற்றும் காய்களை வழங்கினாா்.இதில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குநா் மோனிகா ராணா, உதகை ஊராட்சி ஒன்றியத் தலைவா் மாயன், ஊட்டி வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நந்தகுமாா், சிவகுமாா், நஞ்சநாடு ஊராட்சித் தலைவா் சசிகலா மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.

    • அன்சாரி நகர், கோட்டைவிளை பகுதியிலும் புதுமனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சுமார்250 மரக்கன்றுகள் நடப்பட்டது.
    • சுய உதவி குழுக்கள் பொதுமக்களுக்கு தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கொள்கைகளை விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உத்தரவின்ப டியும் நெல்லை மண்டல பேரூராட்சி களின் உதவி இயக்குனர் வழிகாட்டுதல் படியும் உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் நடவடிக்கையாக டி.டி.டி.ஏ. மேல்நிலை பள்ளி நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள், பேரூராட்சி தலைவர், மன்ற உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பெண்கள் சுய உதவி குழு உறுப்பினர்கள் இணைந்து தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கி புதுமனை அன்சாரி நகர் வரை பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. தொடர்ந்து அன்சாரி நகர், கோட்டைவிளை பகுதியிலும் புதுமனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சுமார்250 மரக்கன்றுகள் நடப்பட்டு பாதுகாப்பு வேலியும் அமைக்கப்பட்டது.

    புதுமனை வடக்கு தெரு மற்றும் மேலத்தெரு பகுதியில் பொது மக்களுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் திட கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. அதனைத் தொடர்ந்து சுய உதவி குழுக்கள் இணைந்து சுல்தான்புரம் பகுதியில் பொதுமக்களுக்கு மக்கும் குப்பை , மக்காத குப்பை மற்றும் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கொள்கைகளை விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் ஹுமைரா அஸ்ஸாப் கல்லாசி, செயல் அலுவலர் பாபு, டி.டி.டி.ஏ. மேல்நிலைப்பள்ளி, ஆசிரியர் டேனியல், கவுன்சிலர்கள் கம்மது ஆபித், சபானா தமீம், அன்புராணி, மும்தாஜ்சலீம், ராஜி , சிவா மற்றும் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×