search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229701"

    • சிவத்தையாபுரத்தில் தீவிர தூய்மைப்பணி மற்றும் எனது குப்பைக்கு நானே பொறுப்பு என்ற பெயரில் விழிப்புணர்வு முகாம் தூரிதப்படுத்துதல் நிகழ்ச்சி நடந்தது.
    • சாயர்புரம் பேரூராட்சியை தூய்மையான பகுதியாக மாற்றுவோம் என பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    சாயர்புரம்:

    சாயர்புரம் பேரூராட்சி சார்பில் சிவத்தையாபுரத்தில் தீவிர தூய்மைப்பணி மற்றும் எனது குப்பைக்கு நானே பொறுப்பு என்ற பெயரில் விழிப்புணர்வு முகாம் தூரிதப்படுத்துதல் நிகழ்ச்சி நடந்தது.

    இந்த நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பாக்கியலெட்சுமி தலைமை தாங்கி மரக்கன்று நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

    இதில் சாயர்புரம் பேரூராட்சி பகுதியை தூய்மையான பகுதியாக மாற்றுவோம் என பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை கொடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

    இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, பிரவினா சொரிமுத்துபிரதாபன், சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் தலைவர் அறிவாழி, ஸ்ரீவைகுண்டம் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சிவத்தையாபுரம் சொரிமுத்துபிரதாபன், பேரூராட்சி மேஸ்திரி கல்யாண் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    திருநாவலூர் அருகே மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை திருநாவலூர் அடுத்த தேவியானந்தல் கிராமத்தில் மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கிராமத்தில்உள்ள ஊராட்சியில் மரக்கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் திருநாவலூர் யூனியன் தலைவர் சாந்தி இளங்கோவன், வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வகணேசன், ஒன்றிய கவுன்சிலர் விஜய் ஆறுமுகம்ஊராட்சி மன்ற தலைவர் ஜானகி ஆளவந்தான் ,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பத்மநாபன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நாகராணி ஏழுமலை, ஊராட்சி எழுத்தர் உமா மகேஸ்வரன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்மற்றும் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதனைத் தொடர்ந்துதேவியானந்தல் கிராமத்தில் பொது இடத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வைக்கும் நிகழ்ச்சி கிராமத்தில்நடைபெற்றது.

    • ஈரோடு முதல் பழனி வரையுள்ள மாநில நெடுஞ்சாலை மிக முக்கியமான சாலையாகும்.
    • சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தின் வழியாக பழைய கோட்டை முதல் தாராபுரம் வரை செல்லும் ஈரோடு பழனி சாலை அகலப்படுத்தும் பணிகள் சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தச்சாலை அகலப்படுத்தும் பணிக்காக 50 ஆண்டுகள் கடந்த வேம்பு, புளி, வாகை, புங்கன், நொச்சி, வெள்ளவேல மரங்கள் பலவும் வெட்டி அகற்றப்பட்டு, சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதில் வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக சாலை ஓரத்தில் நெடுஞ்சாலைத் துறையினர் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.

    ஈரோடு முதல் பழனி வரையுள்ள மாநில நெடுஞ்சாலை மிக முக்கியமான சாலையாகும். ஆறுபடை வீடுகளில் தமிழ் கடவுள் முருகனின் முக்கிய வீடாக பழனி விளங்குகிறது‌. வட மாவட்டங்களில் இருந்து பழனிக்கு பாத யாத்திரையாக வரும் லட்சக்கணக்கான முருகபக்தர்கள் பயன்படுத்தும் சாலையாகவும், ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் சபரி மலைக்குச் செல்ல பயன்படுத்தும் முக்கிய சாலையாக இது அமைந்துள்ளது.

    மேலும் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் உணவு தானியம், எண்ணெய் வித்து பொருட்களை வேறு மாநிலங்களுக்கு கொண்டு செல்ல இரு தேசிய நெடுஞ் சாலைகளை இணைக்கும் முக்கிய மாநில நெடுஞ்சாலை யாக இது உள்ளது.

    ஈரோடு முதல் 112 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையை அகலப்படுத்தும் பணிகள் தற்போது சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் சாலையை அகலப்படுத்த அருகில் இருந்த 50 ஆண்டுகள் கடந்த பழமையான மரங்களை வெட்டி அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இதனை அடுத்து வேப்பமரம்,புளிய மரம் என பல நூறு மரங்கள் வெட்டப்பட்டு சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக வெட்டப்பட்ட மரங்களை ஈடு செய்யும் வகையில்,காங்கயம் நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர்கள், விரிவாக்கம் செய்த சாலை ஓரத்தில் புதிதாக வேம்பு புங்கன், நாவல், வாகை,புளி உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டு சுற்றிலும் பாதுகாப்பு வேலிகள் அமைத்து மரக் கன்றுகளை பராமரித்து வருகின்றனர்.

    மழை காலம் இல்லாத சமயங்களில் சாலைப்பணியாளர்கள் அவ்வப்போது தண்ணீர் ஊற்றி கண்காணித்தும் வருவதால்,ஒரு சிலவற்றை தவிர மற்ற மரங்கள் நன்கு துளிர்த்து வளர்ந்து உள்ளது.வெட்டபட்ட மரங்களுக்கு பதில் உடனடியாக மரக்கன்று வைத்து பராமரித்து வரும் நெடுஞ்சாலைத் துறையின் செயலை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    • பசுமை இயக்க திட்டத்தில் பசுமை பரப்பை 33 சதவீதமாக 2031-ம் ஆண்டிற்குள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
    • இதற்காக மரக்கன்றுகள் வனத்துறை சார்பில் வளர்க்கப்பட்டு பல்வேறு இடங்களில் நடப்பட இருக்கிறது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு பசுமை இயக்க திட்டத்தில் பசுமை பரப்பை 33 சதவீதமாக 2031-ம் ஆண்டிற்குள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக மரக்கன்றுகள் வனத்துறை சார்பில் வளர்க்கப்பட்டு பல்வேறு இடங்களில் நடப்பட இருக்கிறது. ஒவ்வொரு வனக்கோட்டத்திற்கும் மரக்கன்றுகள் நடுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    4.29 லட்சம் மரக்கன்றுகள்

    அதன்படி சேலம் வனக்கோட்டத்திற்கு 4.29 லட்சம் மரக்கன்று ஆத்தூர் வனக்கோட்டத்திற்கு 5.39 லட்சம் என ெமாத்தம் மாவட்ட வனக்கோட்டத்திற்கு 9.68 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை, 20 இடங்களில் வளர்க்கப்பட்டு வருகிறது.

    இதில் மலை வேம்பு, தேக்கு, மகிழம், ஈட்டி, புளியம், மலைநெல்லி, கொய்யா, செம்மரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் இடம் பெற்றுள்ளன. அரசு சார்பில் ஒரு மரக்கன்று வளர்க்க 20 ரூபாய்க்கு மேல் வழங்கப்படுகிறது.

    • எம்.எல்.ஏ. தியாகராஜன் தலைமை தாங்கி திடக்கழிவு மேலாண்மை வளமீட்பு மைய பூங்கா வளாகத்தில் பல அரிய வகை மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
    • பேரூராட்சி செயல் அலுவலர் குமார் மற்றும் பலர் தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்து பேசினர்.

    திருச்சி:

    தா.பேட்டை அடுத்த மேட்டுப்பாளையம் பேரூராட்சியில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தொடக்க விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு முசிறி தொகுதி எம்எல்ஏவும், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளருமான காடுவெட்டி ந.தியாகராஜன் தலைமை தாங்கி திடக்கழிவு மேலாண்மை வளமீட்பு மைய பூங்கா வளாகத்தில் பல அரிய வகை மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

    பேரூராட்சித் தலைவர் சௌந்தரராஜன் அனைவரையும் வரவேற்றார். பேரூராட்சி செயல் அலுவலர் குமார் மற்றும் பலர் தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்து பேசினர்.

    விழாவில் திமுக ஒன்றிய செயலாளர்கள் கே.கே.ஆர்.சேகரன், கே.பெரியசாமி, நகர செயலாளர்கள் தர்மராஜ், தங்கராசு, தலைமை பொதுக்குழு உறுப்பினர் கணேசன், பேரூராட்சி உறுப்பினர்கள், பணியாளர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

    இறுதியில் பேரூராட்சி தலைமை எழுத்தர் சம்பத் நன்றி கூறினார்.

    • நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் 150 மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் தொடங்கி வைத்தாா்.
    • ஊராட்சிகளுக்கு சொந்தமான இடங்களில் அதிக அளவில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    நாமக்கல்:

    சுற்றுச்சூழலைப் பாதுகாத்திடும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    நாமக்கல் மாவட்டத்தில் பசுமை நாமக்கல் திட்டத்தின் கீழ், வனத்துறை, ஊரக வளா்ச்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை, பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் மற்றும் வங்கிகள், தனியாா் தொண்டு நிறுவனங்கள், தன்னாா்வலா்கள் மூலம் அரசுக்கு சொந்தமான இடங்கள், பள்ளிகள் மற்றும் நெடுஞ்சாலைகள், ஊராட்சிகளுக்கு சொந்தமான இடங்களில் அதிக அளவில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் எஸ்.வடிவேல், மகளிா் திட்ட இயக்குநா் பிரியா, நாமக்கல் வருவாய் கோட்டாட்சியா் மஞ்சுளா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • நாமக்கலில் சாலையோர மரக்கன்றுகளை நெடுஞ்சா–லைத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.
    • இருமுறைதண்ணீர் விட்டு, இயற்கை உரம் போட்டு, பூச்சிக்கொல்லி மருந்து விட்டு பாதுகாக்கின்றனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் திருச்சி சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நாமக்கல் முதல் திருச்செங்கோடு சாலை குமரமங்கலம் வரை நெடுஞ்சாவைத்துறை சார்பில் நாவல், புங்கன், பூவரசு, நீர் மருது, வாகை மயில் கொண்டை, மகாகனி, பாதான் உள்ளிட்ட மரக்கன்றுகள் 1582 செடிகள் நடப்பட்டன.

    மரக்கன்று நடப்பட்டு வாரம் இருமுறைதண்ணீர் விட்டு, இயற்கை உரம் போட்டு, பூச்சிக்கொல்லி மருந்து விட்டு செடிகளை பராமரிக்கப்பட்டு வருகின்றன. நெடுஞ்சாலைத்துறையினர் பாது–காப்புடன் தொடர்ந்து பராமரிப்பு பணி மேற்கொண்டு வருவதால் சுமார் சுமார் 15 அடி உயரத்திற்கு செடிகள் வளர்ந்துள்ளது. நெடுஞ்சாலை துறையின் தீவிர பராமரிப்பால் சாலையோரம் செடிகள் வளர்ந்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

    • கருங்குளம் தாமிரபரணி ஆற்றின் கரையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
    • நதிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

    செய்துங்கநல்லூர்:

    நெல்லை மாவட்டத்தில் உற்பத்தியாகும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி நதி நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்திற்கு குடிநீர் தரக்கூடிய நதியாக விளங்குகிறது.

    தாமிரபரணி மகாத்மியம் படி வைகாசி விசாகம் அன்று தான் பிறந்த நாள் கூறுவார்கள். அகத்திய பெருமான் இன்று தான் தாமிரபரணியை உருவாக்கினார் என்று கூறப்படுகிறது.

    இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் இன்று பிறந்த நாள் விழா தாமிரபரணி நல இயக்கம் சார்பில் கொண்டாடப்பட்டது.

    இதற்காக கருங்குளம் தாமிரபரணி ஆற்றின் கரையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. அதனை தொடர்ந்து தாமிரபரணி நதியில் நின்று நதியை காக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    தொடர்ந்து நதிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் ராதாகிருஷ்ணன், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    • பல்லடம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பல்லடம்,

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பல்லடம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணமூர்த்தி, குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி சித்ரா, அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனியன், பல்லடம் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் சக்திவேல், மற்றும் வழக்கறிஞர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×