search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229844"

    • கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் சந்திரனை சரமாரியாக வெட்டியது.
    • இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே ராமாபுரம் மதுரா பக்ரிமணியம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 60). விவசாயி. இவர் இன்று அதிகாலை அந்த பகுதியில் உள்ள சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சந்திரனை சுற்றிவளைத்தனர். கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் சந்திரனை சரமாரியாக வெட்டியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பிணமானார். இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் சந்திரன் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. இதனால் ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து சந்திரனை கொலை செய்த நபர்கள் யார் எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து தீவிரமாக துப்புதுலக்கி வருகிறார்கள்.

    • ஊருக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு, பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
    • வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் பூட்டை உடைத்து 5 பவுன் நகையை திருடி சென்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தஞ்சையை அடுத்த மாரியம்மன் கோவில் ரமணா நகர் பகுதியை சேர்ந்தவர் ரவிகுமார் மனைவி மோனிகாஸ்ரீ (வயது 30). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு பெங்களூருவுக்கு சென்றார்.

    இந்த நிலையில் இவருடைய வீடு திறந்து இருப்பதாக வீட்டின் அருகில் உள்ளவர்கள் மோனிகாஸ்ரீக்கு செல்போனில் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஊருக்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு, பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு மோனிகாஸ்ரீ அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு, அதில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன.

    மேலும் அதில் இருந்த 5 பவுன் நகைகளை காணவில்லை. வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் பூட்டை உடைத்து பவுன் நகையை திருடி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து, தாலுகா போலீஸ் நிலையத்தில் மோனிகாஸ்ரீ புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சப்-இன்ஸ்பெக்டர் சித்ரா சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் சண்முகப்பிரியா கழுத்தில் கிடந்த 7 பவுன் செயினை பறித்து கொண்டு சென்றனர்.
    • படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    சீர்காழி:

    மணல்மேடு ஆத்தூர் கேசிங்கன் ஜி.என். நகரை சேர்ந்தவர் ராஜராஜன். இவருடைய மனைவி சண்முகப்பிரியா (வயது 36).இவர் வக்கிர மாரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    இந்த நிலையில் சண்முகப்பிரியா கொள்ளிடத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.

    வைத்தீஸ்வரன் கோவில் அருகே அட்டகுளம் என்ற இடத்தில் சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் சண்முகப்பிரியா கழுத்தில் கிடந்த 7 பவுன் செயினை பறித்து கொண்டு சென்றனர்.

    அப்போது ஸ்கூட்டரில் இருந்து தடுமாறி சண்முகப்பிரியா கீழே விழுந்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • உங்கள் நகைகளை கழற்றி தாருங்கள், நாங்கள் பாதுகாப்பாக பையில் வைத்து தருகிறோம்.
    • சரஸ்வதி தான் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகைகளை கழற்றி அந்த மர்மநபர்களிடம் கொடுத்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சரஸ்வதி (வயது 60). சம்பவத்தன்று இவர் மயிலாடுதுறை சென்று விட்டு தஞ்சைக்கு பஸ்சில் வந்தார்.‌

    பின்னர் தற்காலிக மார்க்கெட் அருகே உள்ள ஏ.ஓய். நகரில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள், சரஸ்வதியின் அருகில் மோட்டார் சைக்கிளில் நிறுத்தினர்.

    இங்கு திருட்டு சம்பவம் அதிகமாக நடக்கிறது. இவ்வளவு நகைகளை அணிந்து கொண்டு செல்லாதீர்கள். உங்கள் நகைகளை கழற்றி தாருங்கள், நாங்கள் பாதுகாப்பாக பையில் வைத்து தருகிறோம் என சரஸ்வதியிடம் கூறினர். இதனை உண்மை என்று நம்பிய சரஸ்வதி தான் அணிந்திருந்த 8 பவுன் தங்க நகைகளை கழற்றி அந்த மர்ம நபர்களிடம் கொடுத்தார்.

    இதனை சாதகமாக பயன்படுத்திய அந்த மர்ம நபர்கள் நகைகளுக்கு பதிலாக ஒரு கல்லை அந்தப் பையில் மறைத்து வைத்து கொடுத்தனர். அந்தப் பையுடன் வீட்டுக்கு சென்ற சரஸ்வதி அவிழ்த்து பார்த்த போது நகைகளுக்கு பதிலாக கல்லை ஏமாற்றி வைத்து தன்னை மர்மநபர்கள் மோசடி செய்தது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து தஞ்சை மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சாலையோரம் வெட்டி போடப்பட்டு இருந்த மரத்துண்டுகளை பறிமுதல் செய்தனர்.
    • அனுமதியின்றி சிலர் மரத்தை வெட்டி கடத்த முயற்சிப்பதாக சேரம்பாடி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் சேரம்பாடி அருகே சுங்கம் பகுதியில் நின்றிருந்த ராட்சத மரத்தை சிலர் உரிய அனுமதி பெறாமல் வெட்டி அகற்றியதாக புகார் எழுந்தது.

    இதையடுத்து கூடலூர் ஆர்.டி.ஓ. சரவண கண்ணன் உத்தரவின்பேரில் பந்தலூர் தாசில்தார் நடேசன், வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர் அபிராமி ஆகியோர் நேரில் சென்று பார்ைவயிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் சாலையோரம் வெட்டி போடப்பட்டு இருந்த மரத்துண்டுகளை பறிமுதல் செய்தனர். இதேபோன்று எருமாடு அருகே வெட்டுவாடியில் ராட்சத மரத்தை உரிய அனுமதியின்றி சிலர் வெட்டி கடத்த முயற்சிப்பதாக சேரம்பாடி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் உதவி வனபாதுகாவலர் ஷர்மிலி, வனவர் ஆனந்த், வனகாப்பாளர் மணிகண்டன் மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்றனர். பின்னர் மரத்துண்டுகளை பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகள் குறித்து அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தபால் நிலையம் பகுதியில் காரை நிறுத்திவிட்டு அந்த பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றனர்.
    • சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில் :

    ஈத்தாமொழி பகுதி யைச் சேர்ந்தவர் சிவகுமார் டாக்டர். இவர் ஈத்தாமொழி மற்றும் நாகர்கோவில் பகுதியில் ஆஸ்பத்திரி வைத்துள்ளார்.

    நேற்று மாலை டாக்டர் சிவக்குமார் அவரது மருத் துவமனை நிர்வாக அதிகாரி அரவிந்த் ஆகிய இருவரும் நாகர்கோவிலுக்கு வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தபால் நிலையம் பகுதியில் காரை நிறுத்திவிட்டு அந்த பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றனர்.

    பின்னர் அவர்கள் வந்தபோது காரின் இடது பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. காரில் இருந்த ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பேக் மற்றும் அதிலிருந்து ரூ.85 ஆயிரம் ரொக் கப்பணம், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவை திருடப்பட்டிருந்தது.

    மேலும் மருத்துவ ஆவ ணங்கள் சிலவற்றையும் மர்ம நபர்கள் எடுத்துச் சென்றிருந்தனர். இது குறித்து அரவிந்த், நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், மணிகண்டன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகர்கோவில் நகர பகுதியில் இதேபோல் கார்களின் கண்ணாடியை உடைத்து மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற னர். அதே கும்பல் தற்பொ ழுது மீண்டும் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார் கள்.

    அவர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். டாக்டர் காரின் கண்ணாடி உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 4 மளிகை கடைகளில் அடுத்தடுத்து திருட்டு நடந்ததால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    • நள்ளிரவு நேரத்தில் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த 4 ஆயிரம் மதிப்புடைய சிகரெட் பாக்கெட்டுகளை திருடி சென்றனர்.

    வடவள்ளி:

    கோைவ தொண்டாமுத்தூரில் கோவை வடவள்ளி -சிறுவாணி சாலையில் ஏராளமான மளிகை கடைகள், குடியிருப்புகள் உள்ளன.

    இந்த நிலையில் கடந்த சில 2 நாட்களாக இந்த பகுதியில் உள்ள மளிகை கடைகளில் தொடர் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. சிறுவாணி சாலையில் உள்ள மளிகை கடை ஒன்றில் நள்ளிரவு நேரத்தில் புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த 4 ஆயிரம் மதிப்புடைய சிகரெட் பாக்கெட்டுகளை திருடி சென்றனர்.

    மேலும் அதே பகுதியில் உள்ள சுரேஷ், செந்தில்குமார் ஆகியோரின் மளிகை கடைகளில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் மளிகை பொருட்களையும் அள்ளி சென்றுள்ளனர். நேற்று காலை கடைக்கு வந்த உரிமையாளர்கள் திருட்டு போன சம்பவம் அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

    இதற்கிடையே இடையர்பாளையம் ரோட்டில் உதயகுமார் என்பவரின் கடையை உடைத்து ரூ.7 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கடையில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை பார்வையிட்டார்.

    அப்போது, நள்ளிரவு நேரத்தில் 3 நபர்கள் கையில் கத்தி, கடப்பாரையுடன் சுற்றி திரிகின்றனர். பின்னர் ஆட்கள் யாராவது வருகிறார்களா என நோட்டமிடும் அவர்கள், ஆட்கள் வராததை உறுதி செய்து கொண்டு, கடையின் அருகே சென்று கடை பூட்டை உடைத்து, உள்ளே நுழைந்து பணத்தை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

    இந்த காட்சிகளை தனது செல்போனில் ஏற்றிய அவர், வியாபாரிகள் குழுவில் பகிர்ந்தார். தற்போது இந்த காட்சிகள் வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இந்த காட்சிகளை பார்த்த வியாபாரிகள், தொடர்ந்து நடந்து வரும் திருட்டு சம்பவத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதில் ஈடுபடும் நபர்களை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு அளிக்கவும் வியாபாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    ெதாண்டாமுத்தூர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மளிகை கடையில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ள சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தஞ்சையில் நடந்து சென்ற பெண்ணிடம் மர்மநபர்கள் செயினை பறித்து தப்பி சென்றனர்.
    • மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் திடீரென மங்களநாயகி கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க செயினை பறித்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள மேலஉளூரை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மனைவி மங்களநாயகி (வயது 51).

    இவர் நேற்று இரவு தஞ்சையில் உள்ள ஒரு பல் மருத்துவமனைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

    வ.உ.சி. நகரில் சென்றபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 மர்ம நபர்கள் திடீரென மங்களநாயகி கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க செயினை பறித்தனர்.

    அதிர்ச்சியடைந்த மங்களநாயகி திருடன்.. திருடன்.. என கத்தி கூச்சலிட்டார். ஆனால் அதற்குள் அந்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் தஞ்சை தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ×