search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229919"

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடந்தது
    • 53 மாணவர்கள், அறிஞர்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெவ்வேறு தலைப்பில் சமர்ப்பித்தனர்.

    சிவகாசி

    சிவகாசி காளிஸ்வரி கல்லூரியின் முதுகலை வணிகவியல் துறை சார்பாக சமூக அறிவியல் ஆய்வுகளின் மாதிரிகளை வடிவமைத்தல் மற்றும் புள்ளியில் கருவிகளைத் தீர்மானித்தல் என்ற தலைப்பில் 2 நாள் தேசிய அளவிலான கருத்தரங்கு நடந்தது.

    முதல் நாள் கருத்தரங்கில் ஒருங்கிணைப்பாளர்- முதுகலை வணிகவியல் துறைத் தலைவி அமுதாராணி வரவேற்றார். துணை முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். முதுகலை வணிகவயில் துறை உதவிப்பேராசிரியர் சரஸ்வதி, தலைமை விருந்தினரை அறிமுகப்படுத்தினார். மதுரை அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தின் வணிகவியல் உதவிப்பேராசிரியர் வள்ளி தேவசேனா தொடக்க உரையாற்றினார். மற்றொரு சிறப்பு விருந்தினரான சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் தன்னாட்சி கல்லூரி, உதவிப்பேராசிரியர் மற்றும் வணிகவியல் துறைத்தலைவர் செல்வகுமாரை, 2-ம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி அழகுலட்சுமி அறிமுகம் செய்தார்.

    முதுகலை வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் லட்சுமணகுமார், தொழில்நுட்ப அமர்வின் சிறப்பு விருந்தினரான, புதுச்சேரி பல்கலைக்கழக மேலாண்மை ஆய்வுத் துறை பேராசிரியர், காசிலிங்கத்தை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினர் பேசுகையில், தரவு பகுப்பாய்விற்குத் தேவைப்படும் விளக்கமான புள்ளி விவரம் மற்றும் கோட்பாட்டை விளக்கினார்.

    2-ம் நாள் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினரான வணிகவியல் நிதி கணக்கியல் பள்ளியின் உதவிப்பேராசிரியர் சுரேசை, உதவிப்பேராசிரியர் சதீஸ்குமார் அறிமுகம் செய்தார். தொழில்நுட்ப அமர்வின் தலைமை விருந்தினராக மாலினியை, முதுகலை வணிகவியல் துறை உதவிப்பேராசிரியை தங்கபாண்டிஸ்வரி அறிமுகம் செய்தார்.

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி இணைப்பேராசிரியர் மற்றும் தலைவர் வணிகவியல் துறை தலைவர் குருசாமி, இணைப்பேராசிரியர் மற்றும் நிறும செயலரியல் துறை தலைவர் செந்தில்குமார், கோவில்பட்டி ஜி.வி.என்.கல்லூரி உதவிப்பேராசிரியர் மற்றும் வணிகவியல் துறை தலைவர் ஆர்சாக்ரடீஸ், ஆகியோர் ஆராய்ச்சி கட்டுரை வழங்கல் அமர்விற்கான அறிக்கையாளர்களாக செயல்பட்டனர். மொத்தம் 53 மாணவர்கள், அறிஞர்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெவ்வேறு தலைப்பில் சமர்ப்பித்தனர்.

    கருத்தரங்கில் பங்கேற்ற மாணவ- மாணவிகளுக்கு காளீஸ்வரி குழும இயக்குநர் சண்முகராஜ், சான்றிதழ்கள் வழங்கினார். 2 நாள் நடந்த தேசிய கருத்தரங்கில் 18 ஆய்வு அறிஞர்கள், 25 பேராசிரியர்கள் மற்றும் 256 மாணவர்கள் 11 கல்லூரிகளில் இருந்து பங்கேற்று பயனடைந்தனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மாற்றுத்திறனாளி மாணவர் சங்க கருத்தரங்கு நடந்தது.
    • உதவிப்பேராசிரியர் சாந்தி நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் இளைஞர் மன்றம் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர் சங்கம் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.

    இதில் ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியை அர்ச்சனாதேவி பங்கேற்று ''விடாமுயற்சி-வெற்றியின் திறவுகோல்'' என்ற தலைப்பில் பேசினார். மாணவர்கள் தமக்குள்ள திறமைகளைப் பயனுள்ள வகையில் வெளிகொணருவதற்கான வழிமுறைகளைத் எடுத்துரைத்தார்.

    இந்த நிகழ்வில் மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் 40 மாணவர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை இளைஞர் மன்ற அமைப்பாளர் விஜயலட்சுமி, மாற்றுத்திறனாளி மாணவர் சங்க அமைப்பாளர் மதுமதி ஆகியோர் செய்திருந்தனர்.

    2-ம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவர் அருண் பாண்டியன் வரவேற்றார். 3-ம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவர் ஜெயக்குமார் நன்றியு கூறினார்.

    சிறப்பு ெசாற்பொழிவு

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலத்துறை இலக்கிய மன்றம் சார்பில் சிறப்புச்சொற்பொழிவு நடந்தது. இதில் விருந்தினராக விருதுநகர் காமராஜ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி உதவிப்பேராசிரியர் கயல்விழி பங்கேற்று ''நிகழ்நிலை நெறி முறைகளுக்கான வழிகாட்டுதல்'' என்ற தலைப்பில் பேசினார்.

    அவர் பேசுகையில், மாணவர்கள் நிகழ்நிலை தளங்களை பயனள்ள முறையில் பயன்படுத்துவதற்கான நெறிமுறைகளை செயல்பாடுகளின் மூலம் எடுத்துரைத்தார். முன்னதாக உதவிப்பேராசிரியர் அர்ச்சனாதேவி, வரவேற்றார்.

    துறைத் தலைவர் பெமினா தொடக்கவுரை ஆற்றினார். உதவிப்பேராசிரியர் சாந்தா கிறிஸ்டினா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். உதவிப்பேராசிரியர் சாந்தி நன்றி கூறினார்.

    • திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் ‘கிளவுட் கம்ப்யூட்டிங்’ என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.
    • தொழில்நுட்ப வல்லுனர் ஆர்.என்.ரவீஷ்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் வழிகாட்டுதல்படி கணினி அறிவியல் (சுயநிதிப்பிரிவு) துறையில் 'கிளவுட் கம்ப்யூட்டிங்' என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பெங்களூரில் மென்பொருள் தொழில்நுட்ப வல்லுனர் ஆர்.என்.ரவீஷ்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். துறைத்தலைவர் ஆ.கவிதா வரவேற்று பேசினார். பேராசிரியர் டி.பெனட் நன்றி கூறினார். விழாவில் பேராசிரியர்கள் ஜெயந்தி, சகாய ஜெயசுதா மற்றும் ஆய்வக உதவியாளர் ஜெயந்தி கலந்து கொண்டனர். மேலும் 2-ம் மற்றும் 3-ம் ஆண்டு மாணவர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

    • பெண்களுக்கு எதிரான பாலியல் விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது.
    • மனிதவள மேம்பாட்டு நிறுவனர் விஜயகுமார் வரவேற்றார்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியும், மனிதவள மேம்பாட்டு நிறுவனம் இணைந்து மகளிர் மற்றும் குழந்தைகள் பாலியல் வன்முறையில் இருந்து தற்காத்துக்கொள்ளும் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கத்தை நடத்தியது. மனிதவள மேம்பாட்டு நிறுவனர் விஜயகுமார் வரவேற்றார். மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் கலந்து கொண்டு பேசினார்.

    நிகழ்ச்சியில் துணை மேயர் விக்னேஷ்பிரியா, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருப்பதி, ராஜபாளையம் அலுவலர் ராஜேஷ், மாவட்ட சைபர் கிரைம் ஆய்வாளர் உமாமகேஸ்வரி, மாநில நுகர்வோர் அமைப்பின் தலைவர் சுப்பிரமணியம், மண்டல தலைவர் சேவுகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு போஸ்டர்களை மேயர் சங்கீத இன்பம், கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சிவக்குமார் வெளியிட்டனர். இயக்குனர் காசீஸ்வரி நன்றி கூறினார்.

    • காவேரி கூக்குரல் இயக்கத்தினர் விவசாயிகளை நேரில் சந்தித்து இலவச ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.
    • கரத்தரங்கில் மரங்களை வளர்க்கும் முன்னோடி விவசாயிகள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

    காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப் பணியால் தமிழக விவசாயிகளிடம் 'மரம்சார்ந்த விவசாயம் செய்ய வேண்டும்' என்ற ஆர்வம் அதிகரித்து வருகிறது. இதையொட்டி, அவர்களுக்கு முறையான வழிகாட்டுதல்களை வழங்கும் விதமாக திருச்சியில் மாபெரும் மரப் பயிர் சாகுபடி கருத்தரங்கு நாளை (18-ம் தேதி) நடைபெற உள்ளது.

    இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னை பிரஸ் கிளப்பில் நடைபெற்றது. இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    சுற்றுச்சூழலுடன் சேர்த்து விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் விதமாக மரம்சார்ந்த விவசாய முறையை நாங்கள் ஊக்குவித்து வருகிறோம். இதற்கு தமிழக விவசாயிகளிடம் சிறப்பான வரவேற்பு உள்ளது.

    மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் செய்தியாளர் சந்திப்பு

    மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் செய்தியாளர் சந்திப்பு

    எங்களுடைய களப் பணியாளர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் விவசாயிகளை நேரில் சந்தித்து இலவச ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். அத்துடன் இம்முறையை பின்பற்றி நன்கு லாபகரமாக விவசாயம் செய்து வரும் முன்னோடி விவசாயிகளின் தோட்டங்களில் கருத்தரங்கு மற்றும் களப் பயிற்சிகளை நடத்தி வருகிறோம்.

    அந்த வகையில், திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகாவில் உள்ள கொப்பம்பட்டியில் நடைபெறும் இக்கருத்தரங்கில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகளும், வேளாண் வல்லுனர்களும் பங்கேற்று விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்க உள்ளனர்.

    இதில் வன மரபியல் மற்றும் மரப் பெருக்கு நிறுவனத்தின் (IFGTB) விஞ்ஞானி டாக்டர். மாயவேல் அவர்கள் 'மலைவேம்பில் மலைக்க வைக்கும் வருமானம்' எனும் தலைப்பிலும், ஓய்வு பெற்ற வேளாண் இணை இயக்குனர் டாக்டர் ஹரிதாஸ் அவர்கள் 'பலா – பழமும் தரும், மரம் மூலம் மொத்த பணமும் தரும்' எனும் தலைப்பிலும், பல்லடத்தை சேர்ந்த முன்னோடி விவசாயி திரு. துரைசாமி அவர்கள் '4 அடுக்கு பாதுகாப்பில் 40 ஏக்கரில் சந்தன மரங்கள் 'என்ற தலைப்பிலும், காரைக்குடியை சேர்ந்த ஆசிரியர் திரு. ராமன் அவர்கள்'மழை நீரே போதும் – 60 ஏக்கர் நிலத்தில் அற்புத காடு' என்ற தலைப்பிலும், பண்ருட்டியில் சமவெளியில் மிளகு பயிரிடும் விவசாயி திரு. திருமலை அவர்கள் 'கருப்பு பனையில் கருப்பு தங்கம் ( மிளகு)' என்ற தலைப்பிலும் பேசவுள்ளனர். மேலும், தேக்கு, குமிழ் தேக்கு, மகோகனி, வேங்கை போன்ற மரங்களை வளர்க்கும் முன்னோடி விவசாயிகள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

    இக்கருத்தரங்கு நடைபெறும் 'லிட்டில் ஊட்டி' என்ற பெயரிலான வேளாண் காட்டில் சுமார் 1 லட்சத்திற்கு மேற்பட்ட பல்வேறு வகை மரங்களை அக்காட்டின் உரிமையாளர் டாக்டர் துரைசாமி வளர்த்து வருகிறார். அந்த பிரமாண்ட வேளாண் காட்டை விவசாயிகள் சுற்றி பார்க்கும் 'பண்ணை பார்வையிடல்' இந்நிகழ்வும் அன்றைய தினம் நடைபெற உள்ளது.

    காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள் 94425 90079, 94425 90081 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் ஆங்கிலத்துறை கருத்தரங்கு நடந்தது.
    • ‘மொழி வகுப்புகளை திறமையாக கையாளுவது எப்படி?’’ என்பது குறித்து ஆங்கிலத்துறை பேராசிரியர் சொற்பொழிவாற்றினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலத்துறை ஆய்வுமன்றமான ''மினர்வா'' சார்பில் ஆசிரியர் மேம்பாட்டு திட்ட கருத்தரங்கு நடந்தது.

    ஆங்கிலத்துறை உதவிப்பேராசிரியர் கே.பி. ஸ்வப்னா, வெளிப்ப டையான யதார்த்தவாதக் கோட்பாடுகள் மற்றும் கேத்தரின் பெல்சேயின் யதார்த்தவாதக் கோட்பா டுகளின் கருத்துகளை விளக்கினார். அவர் பேசுகையில், இந்த கோட்பாடுகள் ஆய்வுகளில் எவ்வாறு செயலாக்க முடியும்? என்பது பற்றியும், ஆய்வுகளை நுண்ணறிவு மிக்கதாகவும், ஆர்வ மிக்கதாகவும் கோட்பாடுகள் மாற்றுவதைப் பற்றி யும் விளக்கினார். அதனைத் தொடர்ந்து உதவிப்பேராசிரியர் எஸ்.சாந்தி, ''மொழி வகுப்புகளை திறமையாக கையாளுவது எப்படி?'' என்பது குறித்து சொற்பொழிவாற்றினார்.அவர் மொழி வகுப்புகளை விரிவான முறையில் கையாளுவதற்கான வழி முறைகளை வழங்கினார்.

    உதவிப்பேராசிரியர் எம்.பரிதா பேகம் நன்றி கூறினார்.இதில் ஆங்கிலத்துறையின் அனைத்துப் பேராசிரி யர்களும் பங்கேற்றனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் தேசிய அளவிலான வணிகவியல் கருத்தரங்கு நடந்தது.
    • கோவை பல்கலைக்கழக வணிகவியல் துறை பேராசிரியர் செல்லசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் முதுகலை வணிகவியல் துறையின் சார்பில் '' நிலையான, உலகளாவிய வணிகம்- தற்போதைய போக்குகள், சவால்கள்'' என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு 2 நாட்கள் நடந்தது.

    ஒருங்கிணைப்பாளர் லட்சுமணகுமார் வரவேற்றார். முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். துணை முதல்வர்கள் பாலமுருகன், முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினர்.

    துணைத்தலைவி அமுதாராணி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். கோவை பல்கலைக்கழக வணிகவியல் துறை பேராசிரியர் செல்லசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

    அவர் பேசுகையில், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் சந்திக்கும் பல்வேறு சவால்களாக மூலதனம், தொழிலாளர்கள், சந்தைப்படுத்துதல், தொழில் நுட்பம் போன்றவற்றை பட்டியலிட்டு, அந்த சவால்களை தங்களுக்கான வாய்ப்பாக மாற்றி கொள்வதற்கு தேவையான அறிவுரையை வழங்கினார். மேலும் சிறு, குறு தொழில்கள், நிறுவனங்கள்தான் இந்தியாவை உலகளவில் முதல் இடத்திற்கு கொண்டு செல்லும் என்றார்.

    மற்றொரு சிறப்பு விருந்தினராக பெங்களூர் ஜெயின் பல்கலைகழகத்தின் முதுகலை வணிக நிர்வாகவியல் துறை இணைப்பேராசிரியர் யவனராணியை, உதவி பேராசிரியர் சரஸ்வதி அறிமுகம் செய்தார்.

    2-ம் நாள் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற பெங்களூர் கிரீஸ்ட் பல்கலைக்கழக வணிக வியல் துறை இணை பேராசிரியர் சுரேசை, உதவி பேராசிரியர் சதீஷ்குமாரும், மதுரை காமராஜர் பல்கலைக்கழக மேலாண்மை துறை பேராசிரியர் விஜயதுரையை, உதவி பேராசிரிரயர் தங்கபாண்டிஸ்வரியும் அறிமுகப்படுத்தினர்.

    நிறைவு விழாவில் துறைத்தலைவி அமுதாராணி வரவேற்றார். ெநல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை க்கழகத்தின் மேலாண்மை துறை உதவி பேராசிரியர் மாரிமுத்து பேசினார்.

    கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு முதல்வர் கிருஷ்ணமூர்த்தி சான்றிதழ்கள் வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் லட்சுமணகுமார் நன்றி கூறினார். இதில் 7 மாவட்டங்களில் உள்ள 10 கல்லூரிகளில் இருந்து 256 மாணவர்கள் பங்கேற்று ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

    • பழைய பென்சன் திட்டம் குறித்து கருத்தரங்கு நடைபெற்றது.
    • அரசு ஊழியர்களின் சி.பி.எஸ். ஒழிப்பு இயக்க கருத்தரங்கு நடந்தது.

     மதுரை

    மதுரை உலக தமிழ் சங்க அரங்கில் தமிழக அரசு ஊழியர்களின் சி.பி.எஸ். ஒழிப்பு இயக்க கருத்தரங்கு நடந்தது. இதில் புதிய பென்சன் திட்டத்தை ஒழிப்பது, பழைய பென்சன் திட்டத்தை அமலுக்கு கொண்டு வருவது தொடர்பாக தலைவர்கள் பேசினர்.

    தமிழக அரசு ஊழியர்கள் சங்க முன்னாள் தலைவர் சுப்பிரமணியம், சி.பி.எஸ். ஒழிப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜராஜேசுவரன், மாவட்ட தலைவர் சரவணன், கல்யாணி, மணிகண்டன், மாரியப்பன் ஒருங்கிணைப்பாளர்கள் ஆசிப் (தேனி), முனியாண்டி (விருதுநகர்), செல்வகுமார் (சிவகங்கை), அங்கன்வாடி பணியாளர் சங்க மாநில செயலாளர் பரஞ்ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.
    • பாரம்பரிய நெல் வகைகள் மற்றும் எளிய வேளாண் கருவிகளின் கண்காட்சியும் இடம்பெற உள்ளது.

    கோவை:

    ஈஷா விவசாய இயக்கம் சார்பில் மாபெரும் நெல் சாகுபடி குறித்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சி திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 28-ந் தேதி நாளை மறு நாள்(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

    இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.

    இது தொடர்பாக சென்னையில், ஈஷா விவசாய இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் நிருபர்க–ளுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    நெல் சாகுபடியில் விவசாயிகள் அன்றாடம் சந்திக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் ஈஷா சார்பில் வேளாண் வல்லுனர்களின் கருத்த–ரங்கமும் கண்காட்சியும் திருச்சியில் நடக்கிறது.

    இதில் பிரபல வேளாண் வல்லுநர் பாமயன், இயற்கை விவசாயத்தின் அவசியம் மற்றும் பாரம்பரிய நெல் ரகங்களின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரை ஆற்ற உள்ளார்.

    பூச்சி செல்வம், நெல் பயிரில் பூச்சி மேலாண்மை செய்வது குறித்து ஆலோசனைகள் வழங்க உள்ளார். சித்தர் பாரம்பரிய அரிசியின் மருத்துவ குணங்கள் மற்றும் சந்தை வாய்ப்பு குறித்தும், கால் கிலோ விதை நெல்லில் லாபகரமாக மகசூல் எடுக்கும் நுட்பங்கள் குறித்து ஆலங்குடி பெருமாளும் உரையாற்றுகின்றனர்.

    இது தவிர பாரம்பரிய நெல் வகைகள் மற்றும் எளிய வேளாண் கருவிகளின் கண்காட்சியும் இடம்பெற உள்ளது. இந்த ஒரு நாள் நிகழ்ச்சி திருச்சி இருங்கலூரில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவ கல்லூரி வளாகத்தில் ஆகஸ்ட் 28-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. தமிழ்மாறன், அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த விவசாயி பிரவீன்குமார் உள்ளனர்.

    • ஊடுபயிராகவும் தனி பயிராகவும் கோகோ சாகுபடி பயன் அளிப்பதாக உள்ளது.
    • விவசாயிகளுக்கு வழிகாட்டல் வழங்கும் கருத்தரங்கு.

    உடுமலை :

    உடுமலை பகுதியில் தென்னையில் ஊடுபயிராகவும் தனி பயிராகவும் கோகோ சாகுபடி செய்வது சிறந்த பயன் அளிப்பதாக உள்ளது. இதனால் ஒரு சில விவசாயிகள் அதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எனவே அவர்களுக்கான வழிகாட்டல்கள் வழங்கும் வகையிலும் புதிய விவசாயிகளுக்கு கோகோ சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கும் வகையிலும் விவசாயிகளுக்கான கருத்தரங்கம் நடத்தப்பட உள்ளது.

    நாளை வியாழக்கிழமை காலை 9 மணியளவில் உயர் விளைச்சலுக்கான நவீன சாகுபடி தொழில் நுட்பங்கள் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கம் உடுமலை வட்டார ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் அருகில் நடத்தப்பட உள்ளது.

    தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் இந்த கருத்தரங்கில் அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என உடுமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் மாணவர் தூதுவர் பயிற்சி திட்ட கருத்தரங்கு நடைபெற்றது.
    • முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் தமிழியல்துறை சங்கப்பலகை இலக்கிய–மன்றமும், தமிழ்நாடு அரசின் தமிழ்வளா்ச்சித் துறை செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித்திட்ட இயக்கமும் இணைந்து "சொற்குவை" மாணவ தூதுவர் பயிற்சித் திட்டம்-2022 என்னும் தலைப்பிலான பயிலரங்கை நடத்தியது.

    முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். துணை முதல்வர்கள் பாலமுருகன், முத்துலட்சுமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தின் இயக்குநர் விசயராகவன் சிறப்புரையாற்றினார்.

    அவர் பேசுகையில், "சொற்குவை என்பதற்கு சொல் குடுவை என்பது பொருள் ஆகும். சொற்குவை என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர் முனைவர் பரஞ்சோதி ஆவார். ஒரு சொல்லிற்குப் பல பொருளும் பல–பொருளிற்கு ஒரு சொல்லும் உடைய மொழி தமிழ்மொழி ஆகும். அன்றாடம் பேசும் போது பிறமொழி கலவாமல் தமிழில் பேசுங்கள். அதுவே தமிழ்மொழியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்றார்.

    மதுரை உலகத்தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் இயக்குநர் பசும்பொன் "மொழியில் சொற்பிறப்பு. கலைச்சொல்லாக்கம்" என்ற தலைப்பிலும், சென்னை. உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்மொழி மற்றும் மொழியியல் புல உதவிப்பேராசிரியர் சுலோசனா "இலக்கியத்தில் கலைச்சொற்கள்''என்ற தலைப்பிலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துறைத்தலைவர் ரேணுகாதேவி "அகராதியியலின் நோக்கும் போக்கும்'' என்ற தலைப்பிலும், தமிழியல்துறை உதவிப்பேராசிரியர் அமுதா "மொழிபெயர்ப்புக்கலை" என்ற தலைப்பிலும், உதவிப்பேராசிரியர் பொற்கொடி ''கணினிததமிழ் வளர்ச்சியில் சிக்கல்களும் தீர்வுகளும்'' என்ற தலைப்பிலும் பேசினர்.

    தமிழியல்துறைத் தலைவர் செந்தில்நாதன் வரவேற்றார். தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் பொற்கொடி நன்றி கூறினார். இந்த நிகழ்வில் பல துறைகளைச் சேர்ந்த 210 மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    • பெண்களின் சட்ட உரிமைகள் குறித்த கருத்தரங்கு நடந்தது.
    • இந்த நிகழ்ச்சியில் பல துறைகளைச் சார்ந்த 150 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் வணிகவியல் நிறும் செயலரியல் துறை மற்றும் சட்ட விழிப்புணர்வுக் கழகம், சிவகாசி இன்னர் வீல் கிளப்புடன் இணைந்து ''பெண்களின் சட்ட உரிமைகள்'' என்ற தலைப்பில் சிறப்பு விரிவுரையை நடத்தியது.

    வழக்கறிஞர் கார்த்தீஸ்வரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில், பெண்களுக்கான மிக முக்கிய சட்ட உரிமைகளை விளக்கினார். உடல் ரீதியாகவோ அல்லது பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் பின்தொடரும் மற்றும் தொடர்பு கொள்ளும் ஆணுக்கு எதிராகவோ புகார் செய்ய ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிமை உண்டு என்றார்.

    துறைத் தலைவர் மற்றும் இணைப்பேராசிரியர் செந்தில்குமார் வரவேற்றார். சட்ட விழிப்புணர்வுக் கழக ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகபாண்டி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை உதவிப்பேராசிரியர் ஜாஸ்மின் பாஸ்டினா செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் பல துறைகளைச் சார்ந்த 150 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ×