search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229974"

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -1.
    • இப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

    பொன்னியின் செல்வன்

    இந்த படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். இதையடுத்து 'பொன்னியின் செல்வன்' படத்தை நான் நிராகரித்தேன் என்று அமலாபால் கூறியுள்ளார்.

    அவர் அளித்துள்ள பேட்டியில் பேசியதாவது, "சில வருடங்களுக்கு முன் 'பொன்னியின் செல்வன்' படத்துக்காக மணிரத்னம் என்னை அழைத்தார். நான் அவர் ரசிகை என்பதால் உற்சாகமாக ஆடிஷனில் கலந்துகொண்டேன். ஆனால், அப்போது அந்தப் படம் தொடங்கப்படவில்லை. இதனால் வருத்தமும், கவலையும் அடைந்தேன்.

    அமலாபால்

    பின்னர் 2021-ம் ஆண்டு அதே படத்துக்காக அவர் என்னை அழைத்தபோது எனக்கு நடிக்கும் மனநிலை இல்லை. அதனால் மறுக்க வேண்டியதாகிவிட்டது. இதற்காக வருந்துகிறேனா? என்றால் இல்லை. ஏனென்றால் சில விஷயங்கள் நியாயமானவை. சரியானது. அது கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது மற்றும் நாம் எப்படி பார்க்கிறோம் என்பதைப் பற்றியது என்று நான் நினைக்கிறேன்" என அமலாபால் பேசியுள்ளார்.

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -1.
    • இப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

    பொன்னியின் செல்வன்

    ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில், இப்படத்தின் புதிய வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில், எழுத்தாளர் கல்கி குறித்தும் பொன்னியின் செல்வன் கதையில் வரும் கதாபாத்திரங்களின் இயற்கையான குணம் குறித்தும் விவரிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம் 30-ஆம் இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது.
    • இவ்விழாவில் ரஜினி மற்றும் கமல் சிற்ப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

    மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், பிரபு, நாசர், சரத்குமார், ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா, அதிதி ராவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர்.

    ஜெயம் ரவி - விக்ரம்

    இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஜெயம் ரவி பேசியதாவது, "இந்த வாய்ப்பு எப்படி வந்தது என்று அனைவரும் கேட்டார்கள். எனக்கு தெரியாது, மணிரத்தினம் கூப்பிட்டார், சென்றேன், நடித்தேன் என்று கூறினேன். இந்த கதாபாத்திரம் கிடைப்பதற்கு நான் அப்படி என்ன நல்லது செய்து விட்டேன் என்று தோன்றியது.

    இன்னும் கொஞ்சம் தீவிரமாக யோசித்த போது, நான் சினிமாத் துறைக்கு வந்து 20 வருடங்களாகிறது. நீண்ட வருடங்களாக உழைத்திருக்கிறேன், அதன் பலனாகத்தான் இந்த கதாபாத்திரம் எனக்கு கிடைத்திருக்கிறது எனக்கு தோன்றியது.

    ஜெயம் ரவி

    கமல் சாரும் ரஜினி சாரும் பல ஆண்டுகள் தங்கள் உழைப்பால் தான் முன்னுக்கு வந்தார்கள். அப்படிப்பட்ட உழைப்பால் தான் எனக்கு இந்த படம் கிடைத்திருக்கிறது என்றும் நான் நம்புகிறேன். பேச்சால் ஒருவரை மாற்றமுடியுமா? என்று நினைத்தேன். ஆனால், அது மணி சாரால் முடியும் என்று நான் தெரிந்து கொண்டேன்.

    ஏனென்றால், அருண்மொழிவர்மன் மக்களிடம் எப்படி இருப்பான், அக்காவிடம் எப்படி இருப்பான், மற்ற ராஜாக்களிடம் எப்படி இருப்பான் என்று ஒவ்வொன்றாக விளக்கிக் கொண்டே வந்தார். அவர் சொல்லி முடித்ததும் ஒரு மூட் கிரியேட் ஆச்சி. அப்படியே வீட்டுக்கு சென்றேன். எப்போது பாத்தாலும் ஆதே மூடில் இருந்தேன். இதுனால் வீட்டில் திட்டு வாங்கினேன். ஆறு மாதத்தில் அதே மூடில் அவர் சொல்லிக் கொடுத்தது போல் நடித்தேன். இவரிடம் நடிப்பதே பெரும் பாக்கியம்" என்று பேசினார்.

    • சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது.
    • இவ்விழாவில் ரஜினி மற்றும் கமல் சிற்ப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

    மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், பிரபு, நாசர், சரத்குமார், ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா, அதிதி ராவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர்.

    பொன்னியின் செல்வன்

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் சங்கர் பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது, "முதன் முதலாக மணிரத்னம் சார் 'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்கப் போகிறார் என்று கூறியதும் மிகவும் ஆர்வமாக இருந்தது.

    மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வனா அருமையாக இருக்கிறதே என்று நினைத்தேன். படம் எப்ப வரும் என்று மிகவும் எதிர்பார்த்து இருந்தேன். இறுதியில் விரைவில் வரவுள்ளது. தமிழ் சினிமா ரசிகனா, மணிரத்னம் சார் ரசிகனா 'பொன்னியின் செல்வன்' பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன்" என்று கூறினார்.

    • சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது.
    • இவ்விழாவில் ரஜினி மற்றும் கமல் சிற்ப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

    மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், பிரபு, நாசர், சரத்குமார், ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா, அதிதி ராவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர்.

    பொன்னியின் செல்வன்

    இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர் ரஹ்மான் இசை கச்சேரி நடைபெற்றது. இதில், 'ஆயுத எழுத்து' படத்தில் இடம்பெற்ற 'யாக்கை திரி காதல் சுடர்' பாடலை மேடையில் இருந்த கலைஞர்கள் பாடினார்கள். அப்போது திரிஷா மற்றும் சித்தார்த் இருவரும் அந்த பாடலுக்கு இருந்த இடத்தில் இருந்து உற்சாகமாக நடனமாடி ரசித்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    • சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது.
    • இவ்விழாவில் ரஜினி மற்றும் கமல் சிற்ப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

    மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், பிரபு, நாசர், சரத்குமார், ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா, அதிதி ராவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர்.

    பொன்னியின் செல்வன்

    இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது, "எங்கிருந்து இதை ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. என்னுடைய மணிரத்னம் கதை பற்றி சொல்ல நிறைய உள்ளது. இதை எம்.ஜி.ஆர் வாங்கி வைத்திருந்தார். அவர் சீக்கிரம் எடுத்துவிடு என்று சொன்னார் அப்போது புரியவில்லை. ஆனால், அந்த எண்ணம் அனைவருக்கும் வந்து விட்டது. நான் முயற்சி செய்தேன். ஆனால், என்னால் எடுக்க முடியவில்லை என்ற வருத்தம் உள்ளது.

    மணிரத்னம் வெற்றி பட்டியலில் முக்கிய படமாக இது இருக்கும். இது ஒரு சிறிய குடும்பம். இதில் பொறாமை பட நேரமில்லை. அதை இளம் வயதில் புரிந்து கொண்டவர் நானும் ரஜினியும். வந்திய தேவன் கதாப்பாத்திரத்தில் ரஜினியை நடிக்க வைக்க வேண்டும் என சிவாஜி சொன்னார்.

    அதை கேட்ட எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏன்னா, அந்த கேரக்டரில் நான் நடிக்க வேண்டும் என்றிருந்தேன். சரி சிவாஜி சாரே ரஜினினு சொல்லிட்டாரேன்னு அதை விட்டுவிட்டு.. அப்ப எனக்கு என்ன கேரக்டர்ன்னு கேட்டேன்? நீ அருண்மொழி வர்மன் கேரக்டர் செய் என்றார். அது அன்று நடக்காமல் போனது. இன்று. ரஜினி செய்ய நினைத்த கேரக்டரில் கார்த்தியும், எனக்கான கேரக்டரில் ஜெயம்ரவியும் நடிக்க கிடைத்துள்ளது. வெற்றி வரும், தோல்வி வரும் ஆனால், அதை புரிந்துகொள்ள வேண்டும்.

    ஏ.ஆர்.ரஹ்மானின் ஒவ்வொரு பாட்டும் என்னுடைய இதய துடிப்பை அதிகரித்தது. நீங்கள் எனக்காக போட்ட பாடலை நான் திரும்ப திரும்ப கேட்டு வந்தேன்" என்று கூறினார்.

    • சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது.
    • இவ்விழாவில் ரஜினி மற்றும் கமல் சிற்ப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டனர்.

    மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், பிரபு, நாசர், சரத்குமார், ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா, அதிதி ராவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர்.

    இவ்விழாவில் கலந்துக் கொண்ட நடிகர் ரஜினி, தான் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வேண்டும் என மணிரத்னத்திடம் கேட்டதாக தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டையராக நடிக்க வேண்டும் என மணிரத்னத்திடம் கேட்டேன், ஆனால் மணிரத்தினம் உங்களுடைய ரசிகர்களிடம் என்னால் திட்டுவாங்க இயலாது எனக் கூறி அந்த வேண்டுகோளை மறுத்துவிட்டார்.

    மேலும் பிரபல பத்திரிக்கை ஒன்றில் மறைந்த அமரர் ஜெயலலிதா வாசகர்கள் கேள்விக்கு பதிலளித்து வந்தார். ஒரு வாசகர் பொன்னியின் செல்வன் படம் இப்பொழுது எடுத்தால் வந்தியத்தேவன் கதாபாத்திரத்திற்கு எந்த நடிகர் பொருத்தமாக இருப்பார் என்று கேட்டிருந்தார். அதற்கு ஜெயலலிதா அவர்கள் ஒரே வரியில் ரஜினிகாந்த் என்று எழுதியிருந்தார்கள். இது சொன்ன உடனே எனக்கு குஷியாகிடுச்சு. அதற்கு பிறகு தான் நான் பொன்னியின் செல்வன் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.

    இதை கேட்ட பின்னர் தான் பொன்னியின் செல்வன் படத்தில் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்கிற ஆசை தனக்கு உண்டானது. ஆனால் மணிரத்தினம் தனது ரசிகர்களை காரணம் காட்டி சின்ன ரோல் கூட கொடுக்க மறுத்தது தனக்கு வருத்தமாக உள்ளது என்றார்.

    • மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • நேற்று நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    கல்கி எழுதிய புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் திரைப்படமாக இயக்கி உள்ளார். இரண்டு பாகங்களாக தயாராகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

    இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதற்காக அங்கு பிரமாண்ட அரங்கு அமைத்து இருந்தனர். விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொண்டு பாடல் மற்றும் டிரைலரை வெளியிட்டனர்.

    ஏ.ஆர்.ரகுமான்

    ஏ.ஆர்.ரகுமான்

    இவ்விழாவில் கலந்துக் கொண்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பேசும்போது, "இந்த படத்துக்காக தோடி உள்பட எத்தனையோ ராகத்தில் பாடலும், இசையும் அமைத்து மணிரத்னத்திடம் போட்டு காண்பித்தேன். ஆனால் அவர் அதை ஏற்கவே இல்லை. சில விஷயங்களை கற்பனை செய்து, தமிழ் மற்றும் தென்னிந்திய கலாசாரத்தை நினைத்து இசையமைத்தேன். இடையிடையே சின்ன சின்ன அரபிக் டச் கொடுத்து இசையமைத்தேன். மணிரத்னத்திடம் போட்டு காட்டினேன். ஒரு மாதம் கழித்து அவர் ஓ.கே. என்றார். அப்படி இந்த படத்துக்கு பார்த்து பார்த்து இசை வடிவம் கொடுத்திருக்கிறோம்" என்றார்.

    • பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைப்பெற்றது.
    • இவ்விழாவில் திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், பிரபு, நாசர், சரத்குமார், ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா, அதிதி ராவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர்.

    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

    இதில் கலந்துக் கொண்ட நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் படம் குறித்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, பல ஆண்டுகள் தமிழ் மக்கள், தமிழ் ரசிகர்கள் எதிர்ப்பார்த்து கொண்டிருந்த ஒரு தருணம். பொன்னியின் செல்வன் படம் வரப்போகிறது இதில் நானும் ஒரு அங்கமாக இருப்பது என்பது பெருமையாக உள்ளது. மற்ற படங்களில் பணியாற்றும் போது நம் சிந்தனைகள் வெளியே சென்று வரும் இதில் பணியாற்றும் போது எங்கிருந்தாலும் சிந்தனை அந்த கதாப்பாத்திரத்திலேயே இருக்கும். இதில் நடித்த அனைவருக்கும் இதே உணர்வு தான் இருந்தது. தமிழ் சினிமாவில் இருக்கக்கூடிய அனைத்து பெரிய நடிகர்களும் இப்படத்தில் இருக்கிறார்கள் மொத்த தமிழ் திரையுலக்கத்தையும் பொன்னியின் செல்வன் படத்தில் நீங்கள் பார்ப்பீர்கள். உங்கள் அன்பு எப்பொழுதும் தேவை.

    பொன்னியின் செல்வன் - கார்த்தி

    பொன்னியின் செல்வன் - கார்த்தி

    இந்த படத்தில் எல்லா கதாப்பாத்திரங்களும் மிக முக்கியமானவை. ஒவ்வொரு கதாப்பாத்திரமும் ரொம்ப அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பாதி கதாப்பாத்திரங்கள் உண்மையாக வாழ்ந்தவை பாதி கதாப்பாத்திரம் கற்பனையாக வடிவமைக்கப்பட்டது. வந்தியத்தேவன் எல்லா கதாப்பாத்திரத்தையும் சந்திக்கக் கூடியவை எல்லாரிடமும் ஒரே மாதிரி பேச முடியாது. உடல் மொழி பேசுகிற மொழி ஒவ்வொருவரிடமும் மாறும் என்றார்.

    கார்த்தி

    கார்த்தி

    இதற்கு முன்பு ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சோழன் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கார்த்தி, ஆயிரத்தில் ஒருவனில் சோழ தூதுவனாக நடித்திருந்தேன். முதலில் நீங்கள் கதையை புரிந்துக் கொண்டு வாங்க என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார். மேலும் அந்த படத்திற்கும் இதற்கும் எந்த ஒப்பிடுதலும் இல்லை. பொன்னியின் செல்வன் படத்தில் அந்த காலக்கட்டத்தில் வாழ வேண்டும் என்றார். 

    • மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
    • நேற்று நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

    கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள "பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.

    இவ்விழாவில் ஜெயம் ரவி கலந்துக் கொண்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரிடம், மற்ற இயக்குனர்களின் படங்களில் நடித்ததற்கும், மணிரத்னம் படத்தில் நடித்ததற்கும் என்ன வித்தியாசம்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அவர் கூறியதாவது, மற்ற படங்களுக்கும், மணிரத்னம் படத்துக்கும் உள்ள வித்தியாசத்தை நானே தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். மற்ற படங்களில் வசனத்துக்கு முக்கியத்துவம் இருக்கும். மணிரத்னம் படத்தில் வசனத்தை விட, உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்றார்.

    பொன்னியின் செல்வன் படத்தில் உங்களுடன் பிரபு, சரத்குமார், விக்ரம், கார்த்தி என பல கதாநாயகர்கள் நடித்திருக்கிறார்கள். உங்கள் இடையே போட்டி இருந்தததா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, பிரபுவுடன் நான் ஏற்கனவே நடித்து இருக்கிறேன். என்னிடம் ஏதாவது தவறாக தெரிந்தால், ஒரு மூத்த நடிகர் என்ற முறையில் திருத்தங்கள் சொல்வார். அவர் மகனிடம் கூட அப்படி சொல்ல மாட்டார். என் மீது அவருக்கு பாசம் அதிகம். விக்ரம் பிரபுவிடம் ஏதாவது குறை தெரிந்தால் அதை நேரடியாக அவர் சொல்ல மாட்டார். என் மூலம் சொல்ல செய்வார். கதாநாயகர்களுக்குள் போட்டி இருந்தது உண்மை. அது ஆரோக்கியமான போட்டிதான் என்றார்.

    மேலும் ராஜராஜ சோழனாக நடிக்க உங்களிடம் மணிரத்னம் சொன்ன முக்கிய அறிவுரை என்ன? என்ற கேள்விக்கு, படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு போன பிறகும் ராஜராஜ சோழனை மறந்து விடாதே. உன் நடை, உடை, பேச்சு எல்லாவற்றிலும் ராஜராஜ சோழன் இருக்க வேண்டும் என்று மணிரத்னம் சொல்லியிருந்தார் என்றார். 

    • மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கம்.
    • டிரைலர் வெளியீட்டு விழாவில் ரஜினி, கமல் பங்கேற்பு.

    கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன். இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. 

    ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன்,  ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்பட முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

    இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகர் பிரசாத் படத் தொகுப்பு செய்கிறார். இந்த நிலையில், பொன்னியின் செல்வன்-1 திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

    இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட முன்னணி நடிகர்கள் பங்கேற்றனர். அப்போது 3.23 நிமிடங்கள் ஓடும் திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். 

    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள இந்த டிரைலருக்கு தமிழில் கமல்ஹாசன், இந்தியில் அனில்கபூர், தெலுங்கில் ராணா டகுபதி, மலையாளத்தில் பிரித்விராஜ் மற்றும் கன்னடத்தில் ஜெயந்த் கைக்கினி குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -1.
    • பொன்னியின் செல்வன் படத்தின் புதிய கதாப்பாத்திரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

    கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன்-1". இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

    பொன்னியின் செல்வன்

    முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா செப்டம்பர் 6-ஆம் தேதி சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் தொடர்ச்சியான அப்டேட்டுகளை கொடுத்து படக்குழு ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

    இதையடுத்து, இப்படத்தின் புதிய கதாப்பாத்திரங்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. அதில், 'ஆழ்வார்க்கடியான் நம்பி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயராம் நடித்துள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

    பொன்னியின் செல்வன்

    இந்த பதிவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் கார்த்தி, "ஓய் நம்பி இங்கேயும் வந்துவிட்டாயா…. உம்மை மட்டும் பிளாக் செய்யவும் முடியவில்லை ரிப்போர்ட் பண்ணவும் முடியவில்லை….சரியான தொல்லையப்பா" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ×