search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூப்"

    • முருங்கைக் கீரை ரசத்தை சூப் போன்றும் குடிக்கலாம்.
    • சூப் பிடிக்காதவர்கள் இப்படி ரசம் போன்று செய்து அருந்தலாம்.

    தேவையான பொருட்கள் :

    முருங்கைக் கீரை (ஆய்ந்தது) - கால் கப்,

    எலுமிச்சைச் சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,

    தக்காளி - ஒன்று,

    மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை,

    உப்பு - தேவைக்கேற்ப.

    அரைத்துக்கொள்ள:

    வெந்தயம், சீரகம் - தலா அரை டீஸ்பூன்,

    பச்சை மிளகாய் - ஒன்று,

    பூண்டு - 2 பல்,

    கறிவேப்பிலை - ஒரு டேபிள்ஸ்பூன்,

    தனியா - ஒரு டீஸ்பூன்.

    தாளிக்க:

    கடுகு - ஒரு டீஸ்பூன்,

    எண்ணெய் - சிறிதளவு,

    காய்ந்த மிளகாய் - ஒன்று,

    கட்டிப் பெருங்காயம் - சிறிதளவு.

    செய்முறை:

    தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கீரையுடன் அரை கப் நீர் விட்டு வேகவிட்டு எடுத்துக்கொள்ளவும்.

    அரைக்கக் கொடுத்துள்ளவற்றை, சிறிதளவு நீர் விட்டு கொரகொரப்பாக அரைக்கவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களைப் போட்டு தாளித்த பின்னர் அரைத்த விழுது, நறுக்கிய தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

    தக்காளி வதங்கியதும் முருங்கைக் கீரையை வேகவைத்த நீருடன் சேர்த்து கொதிக்கவிடவும் (தண்ணீர் அளவு போதவில்லை என்றால், சேர்த்துக்கொள்ளலாம்).

    இறக்கும்போது எலுமிச்சைச் சாறு பிழிந்து இறக்கவும்.

    சூப்பரான முருங்கைக் கீரை ரசம் ரெடி.

    • தினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
    • இன்று சிக்கன், நூடுல்ஸ் சேர்த்து சூப் செய்முறை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    நூடுல்ஸ் - அரை பாக்கெட்

    சிக்கன் - அரை கிலோ

    கேரட் - 1

    உப்பு - தேவையான அளவு

    மிளகு பொடி - தேவையான அளவு

    எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

    ஸ்பிரிங் ஆனியன் - 3

    பூண்டு - 5 பற்கள்

    வெங்காயம் - 1

    கொத்தமல்லி - கையளவு

    செய்முறை

    சிக்கனை நன்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

    நூடுல்ஸை தனியாக வேக வைத்து கொள்ளவும்.

    வெங்காயம், ஸ்பிரிங் ஆனியன், கொத்தமல்லி, கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் மூன்று கிளாஸ் தண்ணீர் சேர்த்து அதில் சிக்கன் துண்டுகளைச் சேர்த்து, அதோடு காய்கறிகளையும், உப்பு சேர்த்து குக்கரை மூடி 6 விசில் வரும் வரைக் காத்திருந்து அணைத்துவிடவும்.

    விசில் போனதும் குக்கர் மூடியை திறந்து வேக வைத்த நூடுல்ஸ், மிளகு தூள் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

    கடைசியாக கொத்தமல்லி, ஸ்பிரிங் ஆனியன் தூவி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான சிக்கன் நூடுல்ஸ் சூப் ரெடி.

    • இதர கீரைகளைவிட இதில் அதிகளவு புரதச்சத்தும், மற்ற சத்துகளும் அடங்கியுள்ளன.
    • முருங்கைக் கீரையில் மற்ற தாவர உணவுகளில் இருப்பதைவிட 25 மடங்கு இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

    தேவையான பொருட்கள் :

    முருங்கைக்கீரை - ஒரு கப்,

    பாசிப்பருப்பு - 5 டீஸ்பூன்,

    சீரகம் - அரை டீஸ்பூன்,

    நெய், மிளகுத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,

    வெங்காயம் -1,

    பூண்டு பல் - 4,

    தோல் சீவிய இஞ்சி - சிறிதளவு,

    பச்சை மிளகாய் - 2,

    உப்பு - தேவைக்கு.

    செய்முறை:

    வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    குக்கரில் பாசிப்பருப்பு, கீரை, சீரகம், வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், இரண்டு கப் தண்ணீர் ஊற்றி மூடி 4 விசில் விட்டு இறக்கவும்.

    விசில் போனவுடன் குக்கரை திறந்து பருப்பு கலவையை நன்கு மசிக்கவும்.

    வாணலியில் நெய் விட்டு உருகியதும் பருப்பு, முருங்கைக்கீரை சாற்றை ஊற்றவும்.

    இதனுடன் ஒரு கப் தண்ணீர், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி பருகலாம்.

    சத்தான முருங்கைக் கீரை சூப் ரெடி.

    • சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
    • தற்போதைய சூழ்நிலையில் நாட்டுக்கோழி சூப் குடிப்பது நல்லது.

    தேவையான பொருட்கள்:

    நாட்டுக்கோழி - 1/4 கிலோ

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

    சின்ன வெங்காயம் - 1/4 கப்

    தக்காளி - 1

    மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

    மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

    தண்ணீர் - 2 கப்

    கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்

    உப்பு சுவைக்கேற்ப

    தாளிப்பதற்கு...

    நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

    பட்டை - 1/2 இன்ச்

    ஏலக்காய் - 1

    கிராம்பு - 1

    கறிவேப்பிலை - சிறிது

    அரைப்பதற்கு...

    மல்லி விதைகள் - 1/2 டீஸ்பூன்

    சீரகம் - 1/2 டீஸ்பூன்

    மிளகு - 1/2 டீஸ்பூன்

    சின்ன வெங்காயம் - 3

    தண்ணீர் - சிறிது

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாகநறுக்கி கொள்ளவும்.

    மிக்சியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு, சிறிது நீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

    நாட்டுக்கோழியையும் நன்கு நீரில் கழுவிக் கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து தாளித்த பின்னர் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, பின் வெங்காயம் மற்றும் சிறிது உப்பு தூவி, பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

    பின்பு தக்காளியைப் போட்டு நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.

    அடுத்து கழுவி வைத்துள்ள நாட்டுக் கோழி, மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து 3 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

    பின் அரைத்து வைத்துள்ள மல்லி, சீரக பேஸ்ட்டை சேர்த்து, தேவையான அளவு நீர் ஊற்றி, உப்பு சுவை பார்த்து, குக்கரை மூடி 5-6 விசில் விட்டு இறக்கவும்.

    குக்கரில் உள்ள விசில் போனாலும், குக்கரைத் திறந்து கொத்தமல்லியைத் தூவினால், சுவையான நாட்டுக்கோழி சூப் தயார்!

    • தினமும் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
    • காய்கறிகளை சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு அரிசி காய்கறி சூப் செய்து கொடுக்கலாம்.

    தேவையான பொருட்கள்

    புழுங்கலரிசி – 1 டேபிள் ஸ்பூன்,

    ஏதாவது கலந்த காய்கறிகள் – 1/4 கப்

    இஞ்சி பூண்டு விழுது – 1/4 டீஸ்பூன்,

    வெங்காயம் – 1,

    தக்காளி – 1,

    புதினா, கொத்தமல்லித்தழை – சிறிது,

    தேங்காய்ப்பால் – 1/2 கப்,

    வெண்ணெய் – 2 டீஸ்பூன் + எண்ணெய் – 1 டீஸ்பூன்,

    கரம் மசாலாத்தூள் – 1 சிட்டிகை,

    உப்பு – தேவைக்கு.

    செய்முறை

    அரிசியை நன்றாக கழுவி ஊற வைக்கவும்.

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கிகொள்ளவும்.

    குக்கரில் வெண்ணெய் + எண்ணெயை ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு வதக்கிய பின்னர் கரம் மசாலாத்தூள், வெங்காயம், தக்காளி, புதினா, கொத்தமல்லித்தழை போட்டு வதக்கவும்.

    வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

    இத்துடன் ஊற வைத்த அரிசியை போட்டு நன்றாக வதக்கி 3 கப் தண்ணீர், உப்பு போட்டு கொதித்ததும் குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்கவும்.

    விசில் போனதும் குக்கர் மூடியை திறந்து தேங்காய்ப்பால் சேர்த்து அடுப்பில் வைத்து கொதி வரும் முன் இறக்கி பரிமாறவும்.

    இப்போது சத்தான சுவையான அரிசி காய்கறி சூப் ரெடி.

    ×