என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பிரா"
- கருப்பு நிற உள்ளாடை மார்பக புற்றுநோயை உண்டாக்கும்.
- பிரா அணிந்து தூங்குவது புற்றுநோயை உண்டாக்கும்.
கருப்பு நிறத்தில் உள்ளாடை (பிரா) அணிந்தால் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கும் என்ற எண்ணம் பலரிடம் இருக்கிறது. இது ஒரு கட்டுக்கதை தான். உள்ளாடை விஷயத்தில் உலவும் கட்டுக் கதைகள் பற்றியும், உண்மைத்தன்மை பற்றியும் பார்ப்போம்.
கட்டுக்கதை 1: கருப்பு நிற உள்ளாடை மார்பக புற்றுநோயை உண்டாக்கும்.
உண்மை: கருப்பு நிற பிரா அல்லது அடர் நிற பிரா அணிவது மார்பக புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்காது. அடர் நிற பிராக்கள் அதிக வெப்பத்தை உறிஞ்சிவிடும், அதனால் மார்பக புற்றுநோய் ஏற்படக்கூடும் என்பது கட்டுக்கதையை நம்புபவர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால் அதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை. கருப்பு நிற பிரா, அடர் நிற பிரா, பிற வண்ண நிற பிரா அணிவது அல்லது பிரா அணியாமல் இருப்பது அவரவரின் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது.
கட்டுக்கதை 2: பிரா அணியாமல் இருப்பது மார்பகத்தை வேகமாக வளரச் செய்துவிடும்.
உண்மை: மார்பக அளவை குறைக்கும் விஷயத்தில் உள்ளாடை எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இதேபோல் மார்பகங்களில் கிரீம்கள், லோஷன்கள், எண்ணெய் பயன்படுத்துவது அதன் அளவை பாதிக்காது. உடல் எடை அதிகரித்தால் மார்பக அளவு அதிகரிக்கும். உடல் எடையை குறைப்பது மார்பக அளவு குறைவதற்கு வித்திடும்.
கட்டுக்கதை 3: இறுக்கமாக உள்ளாடை அணிவது புற்றுநோயை உண்டாக்கும்.
உண்மை: இறுக்கமாக உள்ளாடை அணிவது அசவுகரியத்தை ஏற்படுத்தும். தேவையற்ற உடல் தொந்தரவுகளுக்கு வழிவகுக்கும். ஆனால் புற்றுநோயை உண்டாக்குவதற்கு சாத்தியமில்லை. எனினும் மார்பகத்துக்கு பொருத்தமான அளவு கொண்ட உள்ளாடையை தேர்ந்தெடுப்பது நல்லது.
கட்டுக்கதை 4: உள்ளாடை அணியாவிட்டால் மார்பகம் வலுவிழந்து விடும்.
உண்மை: மார்பகங்கள் தளர்வடைவதை பிராக்கள் தடுக்கும் என்பதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை. மார்பகங்கள் தொய்வடைந்தால், உள்ளாடையால் அதை தடுக்க முடியாது.
கட்டுக்கதை 5: கம்பி இழை போன்ற பிராக்களை அணிவது புற்றுநோயை உண்டாக்கும்.
உண்மை: சாதாரண பிரா, ஸ்போர்ட்ஸ் பிரா உட்பட எந்த வகையான பிராவை அணிவதற்கும், மார்பக புற்றுநோய்க்கும் தொடர்பு இல்லை. இருப்பினும் கம்பி இழைகள் அழுத்தம் கொடுக்க தொடங்கினால் அசவுகரியத்தை ஏற்படுத்தும்.
கட்டுக்கதை 6: பிரா அணிந்து தூங்குவது புற்றுநோயை உண்டாக்கும்.
உண்மை: தூங்கும் போது பிரா அணிவது மார்பக புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்பதற்கு அறிவியல் ரீதியாக எந்தவொரு ஆதாரமும் இல்லை. உள்ளாடை அணியாமல் தூங்கினால் மார்பக வடிவம் மாறிவிடும் என்பதற்கும் ஆதாரம் இல்லை.
இறுக்கமாக பிரா அணிந்தால் மார்பகம் சரியான வடிவில் இருக்கும் என்று நினைப்பதும் தவறானது. தளர்வான பிரா அணிவதும் அசவுகரியத்தை கொடுக்கும். நிறைய பேர் தவறான அளவு கொண்ட பிராக்களை அணிகிறார்கள். இதனால் சீரான ரத்த ஓட்டமின்மை, சரும பிரச்சினை, சுவாச கோளாறு போன்ற பாதிப்புகள் உண்டாகக்கூடும்.
இரவில் தூங்கும்போது மென்மையான பிரா அணிவது மார்பக அசைவை குறைக்கும். அதன் இயக்கத்தை கட்டுப்படுத்த உதவும். மார்பக வலியை குறைத்து சவுகரியமான தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
- தளர்ந்த மார்பகத்தை நார்மலாக காட்ட உதவும் பிராக்களும் இருக்கின்றன.
- பெரிய மார்பகத்தை சிறிய மார்பகமாகக் காட்ட உதவும் பிராக்களும் இருக்கின்றன.
சிறிய மார்பகத்தை பெரிதாக்க, பெரிய மார்பகத்தை சிறிய மார்பகமாகக் காட்ட, தளர்ந்த மார்பகத்தை நார்மலாக காட்ட உதவும் பிராக்களும் இருக்கின்றன. அவற்றை பற்றி அறிந்து கொள்ளலாம்.
மினி மைஸர் (Minimizer Bra)
இவ்ளோ பெரியதாக இருக்கே… என்று தங்களது மார்பகத்தைப் பார்த்து வருந்தும் பெண்களுக்கு உதவும் பிரா இது. இது, மார்பகத்தை சற்று அழுத்தி அளவை சிறியது போன்று காட்டும். அவ்வளவுதான்.
பேடட் பிரா(Bra)
அடுத்த பெண்களின் பெரிய மார்பகத்தைப் பார்த்து ஏங்கும் சின்ன மார்பகப் பெண்களின் ஏக்கத்தை தணிக்க உதவும் பிரா இது. சிறிய மார்பகத்தால் தாழ்வுமனப்பான்மைக்கு ஆளான ஒல்லி பெண்கள் இந்த பிராவை அணிந்து கொண்டால், தராளமாக நிமிர்ந்து நடக்கலாம். எங்களுக்கும் பெருசுதான்… என்று சொல்லாமல் சொல்லி வாலிபர்களை கிரங்க வைக்கலாம். உங்களது பிரா சைஸ் 30 என்றால், 32 சைஸ் பேடட் பிரா வாங்கி அணிய வேண்டும்.
புஷ் அப் பிரா (Push Up Bra)
சில பெண்கள் பார்ப்பதற்கு கொழுக்மொழுக் என்று இருப்பார்கள். இவர்களது மார்பகமும் பெரியதாகவே இருக்கும். இப்படிப்பட்ட மார்பகம் கொண்டவர்களுக்கு சீக்கிரமே மார்பகம் தளர்ந்து போய்விடும். அவ்வாறு தளர்ந்து போன மார்பகத்தை நார்மலாக்க உதவுவது இந்த பிரா. இந்த பிராவின் அடிப் பாகத்தில் உள்ள ஜெல் நிரப்பப்பட்ட பேக், தளர்ந்த மார்பகங்களை சற்று நிமிர்த்த உதவுகிறது.
அண்டர் ஒயர் பிரா (Underwire Bra)
இதுவும், புஷ் அப் பிராவைப் போன்று, தளர்ந்த மார்பகங்களுக்கு உதவுவதுதான். ஆனால், இதில் ஜெல் பேக் கிடையாது. இந்த வகை பிராவின் அடிப் பகுதியில் இருக்கும் ஒயர், தளர்ந்து போன மார்பகத்திற்கு கூடுதல் சப்போர்ட் கொடுக்கும். அவ்வளவே.
கியூட் வெட்டிங் பிரா(bra)
மேல்நாட்டு கிறிஸ்தவ திருமணங்களில் மணப்பெண், மார்பகத்திற்கு மேலே தோள் பகுதி முழுவதும் தெரியுமாறு விசேஷ ஆடை அணிந்திருப்பாள். அவ்வாறு ஆடை அணியும்போது இந்த வகை பிரா அணிவதுதான் பாதுகாப்பானது. இந்த பிரா பெரிய ஸ்ட்ராப்களுடன் இடுப்பு வரை நீண்டும் ஸ்லிப் போல இருக்கும். இந்தப் பிராவை அணிந்துகொண்டு க்ளோஸ் நெக் சுடிதாரோ, சல்வாரோ அணிந்து கொண்டால், அவ்வளவு அழகாக இருக்கும். தோற்றமும் கவர்ச்சியாகத் தெரியும்.
மெசக்டமி பிரா(bra)
கேன்சர் காணமாக மார்பகங்களை பறிகொடுத்த பெண்களுக்கான பிரத்யேக பிரா இது. இதில், கப்களுக்குள் சிலிகான் ஜெல் பேக்குகள் இருக்கும். இதை அணிந்து கொண்டால், மார்பகம் இல்லை என்ற உணர்வே தெரியாது. அசல் மார்பகம் போன்ற தோற்றத்தையும், உணர்வையும் தரக்கூடியது இந்த பிராவின் தனிச்சிறப்பு. இந்த வகை பிராக்களை, ஆர்டர் செய்தால் மாத்திரமே வாங்க முடியும். விலை அதிகமாகவே இருக்கும்.
- இன்றைய பெண்களில் பலர் சரியான சைஸ் பிராவை அணிவதில்லை.
- தப்பு தப்பாக பிராவை(bra) அணிவது பாதிப்புகளை ஏற்படுத்தும்.
பெண்களின் எடுப்பான முன்னழகை அழகாக காட்டுவது நாம் அணியும் பிரா(bra) தான். இதை நாம் சரியாக தேர்ந்தெடுத்து விட்டாலே போதும் நாம் அணியும் ஆடை அழகாக கச்சிதமாக தோற்றமளிக்கும்.
இன்றைய பெண்களில் பலர் சரியான சைஸ் பிராவை அணிவதில்லை. ஏதோ குத்துமதிப்பாக வாங்கி அணிந்து கொள்கிறார்கள். உள்ளே அணிவதை யார் பார்க்கப் போகிறார்கள் என்ற அவர்களது எண்ணம் தான் இதற்கு காரணம். இப்படி, தப்பு தப்பாக பிராவை(bra) அணிந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதையும் தெரிந்து கொள்ள மறந்து விடுகிறார்கள்.
அதனால், என்னென்ன பிராக்கள்(bra) இன்றைய மார்க்கெட்டில் உள்ளன? எப்படி சரியான பிராவை தேர்வு செய்து அணிவது? சரியான அளவு தெரியாமல் அணிவது என்ன பாதிப்புகளை ஏற்படுத்தும்? இதுபோன்ற கேள்விகளுக்கான விடையை இங்கே காண்போம்.
முதலில் என்னென்ன பிராக்கள்(bra) இப்போது மார்க்கெட்டில் வலம் வருகின்றன என்று பார்த்து விடுவோம்
டி-சர்ட் பிரா (T-Shirt Bra)
இன்றைய இளம்பெண்களில் பலர் டி-சர்ட், துப்பட்டா இல்லாத டாப்ஸ் ஆகியவற்றையே அணிந்துகொள்ள ஆசைப்படுகிறார்கள். வழக்கமாக அணியும் பிராவை அணிந்து கொண்டு டி-சர்ட் போட்டுக்கொண்டால், என்ன டிசைன் பிரா அணிந்து இருக்கிறோம், முதல் கொக்கியில் பிராவை(bra) மாட்டி இருக்கிறோமா அல்லது இரண்டாவது கொக்கியிலா? – இதுபோன்ற புள்ளிவிவரங்கள் பார்ப்பவர் கண்களுக்கு தெரிந்துவிடும். இந்த பிரச்சினையை போக்க வந்ததுதான் டி-சர்ட் பிரா. கப்பில் தையல் இல்லாமல் காணப்படும் இந்த பிராவை அணிந்துகொண்டால் நல்ல லுக் கிடைக்கும்.
டீன்-ஏஜ் பிரா (Teenage Bra)
டீன் ஏஜின் (13 முதல் 19 வயது வரை) ஆரம்பத்தில்தான் மார்பகங்களின் வளர்ச்சி ஆரம்பமாகிறது. அந்தநேரத்தில், சரியான பிராவை(bra) தேர்வு செய்து அணிய வேண்டும். அந்த சரியான பிராதான் இது. எந்தவொரு பிட்டிங்கும், கப் ஷேப்பும் இல்லாமல் இருக்கும் இந்த பிராவை(bra) டீன்-ஏஜ் வயது பெண்கள் அணிந்து வந்தால் மார்பகங்களை இறுக்காமல் இருக்கும். பிரா(bra) அணிவது அவசியம் என்ற எண்ணமும் அவர்களிடம் உருவாக உதவும்.
புல் போர்ட் பிரா (Bull Sports Bra)
வழக்கமாக எல்லாப் பெண்களும் அணியும் பிரா இதுதான். இந்த வகை பிரா வாங்கும் போது, பிராவின் கப் சைசானது மார்பகத்தை முழுவதுமாக மறைத்து, தாங்கிப் பிடிக்கிறதா என்று மட்டும் பார்த்துக் கொண்டால் போதுமானது.
நாவல்டி பிரா (Novelty Bra)
திருமணத்தன்று பெண்கள் அணிவதற்கு உகந்த பிரா(bra) இது. பேப்ரிக், லெதர், லேஸ், சாட்டின் என்று பலவித மெட்டீரியல்களில் கிடைக்கும் இந்த பிராவை அணிந்தால் மென்மையான உணர்வை அனுபவிக்கலாம்.
ஸ்போர்ட்ஸ் பிரா (Sports Bra)
விளையாடும் போது அணிந்து கொள்ள ஏற்ற பிரா இது. இந்த வகை பிராவில் வழக்கமான பிராக்களில் தோள்பட்டையில் காணப்படும் ஸ்ட்ராப் இருக்காது. விளையாடும் போது உறுத்தலான உணர்வும் ஏற்படாது.
மெட்டர்னிட்டி பிரா (Maternity Bra)
கருவுற்ற பெண்களுக்கான பிரத்யேக பிரா இது. கர்ப்பக் காலத்தில் ஒரு பெண்ணின் மார்பக அளவு அதிகரித்துக் கொண்டே வரும். அதற்கு ஏற்ற வகையில் இந்த பிராவும் விரிந்து கொடுக்கும்.
நர்சிங் பிரா (Nursing Bra)
கைக்குழந்தை உள்ள பெண்களுக்கான பிரா இது. இதில், கப்பின் இணைப்பை மட்டும் உயர்த்தி விட்டு, குழந்தைக்குப் பால் கொடுத்து விடலாம்.
கன்வர்டபுள் பிரா (Convertible Bra)
பார்ட்டிகளில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு என்றே உருவாக்கப்பட்டது இது. தோள்களை மறைக்காத மேற்கத்திய நவீன ரக ஆடைகளை அணிந்து கொள்ளும் போது இதை அணிந்து கொள்ளலாம். இப்படி பல வகைகள் பிராக்களில் உண்டு.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்