search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230127"

    • ஈரோடு மாவட்டத்தில் கந்துவட்டி கொடுமை குறித்து புகார் அளிக்க வாட்ஸ்-அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வைக்கின்றனர்.

    ஈரோடு:

    கடலூரை சேர்ந்த ஆயுத ப்படை போலீசார் சமீபத்தில் கந்துவட்டி கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் கந்துவட்டி சம்பந்தமான புகார்கள் வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருந்தால் அதனை உடனே விசாரித்து முடித்து வைக்க வேண்டும் என டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடி உத்தரவிட்டார்.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட போலீசார் கந்துவட்டி கொடுமை குறித்த விசாரணையை தீவிரப்படுத்தினர்.ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வைக்கின்றனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கந்துவட்டி புகார் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வாட்ஸ்-அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் கந்து வட்டி சம்பந்தமாக ஈரோடு நேரு வீதியை சேர்ந்த கறி கடை நடத்தி வரும் மோகமத் ஷெரிப் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஒருவரை கைது செய்துள்ளனர்.

    எனவே கந்து வட்டி சம்பந்தமாக யாராவது புகார் அளிக்க விருப்பமிருந்தால் ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேரடியாகவே, அல்லது போலீஸ் சூப்பிரண்டு வாட்ஸ்-அப் எண் 9655220100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

    மேலும் போலீஸ் நிலையத்தில் உள்ள காவல் உதவி ஆப் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம். இது குறித்து விசாரணை நடத்தி தக்க நடவடிக்கை எடுப்பதுடன் தகவல் தருபவர்களின் பெயர், முகவரி ரகசியமாக வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த கந்துவட்டிக்காரர் கைது செய்யப்பட்டார்.
    • ரூ.1 லட்சமும் அதற்குறிய வட்டியும் உடனே தரவில்லை என்றால் குடும்பதோடு கொன்று கொளுத்தி விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே உள்ள பள்ளபச்சேரி கிராமத்தை சேர்ந்த சித்திரை சாமி என்பவரிடம் 8 ஆண்டுகளுக்கு முன்பு ஹபீபா என்ற பெண் ரூ.3 லட்சம் கடன் வாங்கினார். இந்தத் தொகைக்கு மாதம்தோறும் ரூ.24 ஆயிரம் வட்டி செலுத்தி வந்துள்ளார். கடன் வாங்கிய பணம் ரூ.3 லட்சத்தில் ரூ.2 லட்சத்தை திருப்பி செலுத்தி விட்டார்.

    ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டிய நிலையில், சித்திரை சாமி அடியாட்களுடன் ஹபீபா வீட்டிற்கு சென்று தொந்தரவு செய்தார். நேற்று ஹபீபா கணவருடன் திருப்புல்லாணி ஆதிஜெகநாதர் கோவில் தெப்பக்குளம் அருகே உள்ள மீன் கடை அருகே சென்றபோது அவரை வழி மறித்த கந்து வட்டிக்காரர் சித்திரை சாமி, ரூ.1லட்சமும் அதற்குறிய வட்டியும் உடனே தரவில்லை என்றால் குடும்பதோடு கொன்று கொளுத்தி விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தார்.

    இதுகுறித்து ஹபீபா திருப்புல்லாணி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்திரை சாமியை கைது செய்தனர்.

    • சேலம், நாமக்கல் மாவட்ட எஸ்.பி. அலுவலகங்கள் மற்றும் டி.எஸ்.பி. அலுவலகங்களில் கந்துவட்டி புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
    • கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார்கள் அளித்து வருகின்றனர். அதன்மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    சேலம்:

    கடலூர் மாவட்டத்தை சேர்ந்த போலீஸ்காரர் செல்வக்குமார் என்பவர் கந்துவட்டி கொடுமை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    அவரிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக அனிதா என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இதனையடுத்து கந்து வட்டியை ஒழிக்க டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். நிலுவையில் உள்ள வழக்குகள், அனைத்து போலீஸ் நிலையங்களிலும் நிலுவையில் உள்ள கந்துவட்டி புகார்கள் மற்றும் வழக்குகள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும்.

    கந்துவட்டி கும்பலை சேர்ந்தவர்கள் பொது மக்களிடம் மிகுந்த வட்டி வசூலித்த தொகை எவ்வளவு? என்பது பற்றி முறையாக விசாரிக்க வேண்டும். இதுதொடர்பாக உரிய சட்ட ஆலோசனைகளை பெற்று வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

    நாமக்கல் மாவட்டத்தில் கந்துவட்டி சம்பந்தமான பிரச்சினைகள் குறித்து இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகங்களில் புகார் அளிக்கலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி கூறியிருந்தார்.

    இதேபோல் சேலம் மாவட்டத்தில் கந்துவட்டி, வங்கி காசோலை மற்றும் பத்திரம் வைத்து மிரட்டுபவர்கள் மீது பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாகவோ அல்லது போலீஸ் துணை சூப்பிரண்டுகள் அல்லது போலீஸ் நிலையம் மூலமோ தெரிவித்தால் விசாரித்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் தெரிவித்திருந்தார்.

    இதை தொடர்ந்து சேலம், நாமக்கல் மாவட்ட எஸ்.பி. அலுவலகங்கள் மற்றும் டி.எஸ்.பி. அலுவலகங்களில் கந்துவட்டி புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

    கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார்கள் அளித்து வருகின்றனர். அதன்மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் கந்துவட்டி நிதிநிறுவன உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. நாமக்கல்லை அடுத்த புதுச்சத்திரம் அருகே உள்ள திருமலைப்பட்டி பாலப்பட்டியை சேர்ந்தவர் ரங்கசாமி. விவசாயி. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல்லை சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளரான சுந்தரராஜனிடம் ரூ.10 லட்சம் கடன்பெற்றார்.

    இதற்காக அவர் தனக்கு சொந்தமான வெவ்வேறு நிலங்களை பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. அதற்கு தொடர்ந்து வட்டி செலுத்தி வந்து உள்ளார்.

    இதனிடையே நிதி நிறுவன உரிமையாளர் சுந்தர்ராஜன், விவசாயி ரங்கசாமியிடம் ரூ.40 லட்சம் கந்து வட்டி கேட்டு மிரட்டுவதோடு, குடும்பத்தினருடன் சேர்ந்து கூட்டு சதி செய்து ரங்கசாமியின் நிலத்தை அபகரித்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து விவசாயி ரங்கசாமி புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் சுந்தரராஜன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×