search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்டக்டர்"

    • நாமக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக அரசு நகரப் பஸ்சில் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • நாமக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக அரசு நகரப் பஸ்சில் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் முதல்முறையாக அரசு நகரப் பஸ்சில் பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    நாமக்கல் பணிமனை 1,2 ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய இடங்களில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனைகள் உள்ளன. இந்த பணிமனைகள் மூலம் 171 நகர மற்றும் புறநகர பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    600-க்கும் மேற்பட்ட டிரைவர், கண்டக்டர், தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளனர். அண்மையில் வாரிசு அடிப்படையில் 10 பேருக்கு போக்குவரத்துக் கழகத்தில் டிரைவர், கண்டக்டர் மற்றும் இதர பணியிடங்களில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது.

    இதில் பணிக்காலத்தின் போது உயிரிழந்த பயணச்சீட்டு பரிசோதகரான முனியப்பன் அவரது மகள் இளையராணி (வயது 34) என்பவருக்கு நாமக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக அரசு டவுன் பஸ்சில் (ராசிபுரம், சேலம், பஸ் எண் 52) நடத்துனர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார்.

    இதுகுறித்து இளையராணி கூறியது:

    எந்த துறையானாலும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் வெற்றி பெறலாம்.

    தந்தை இறப்பால் வாரிசு வேலை கிடைத்தது. 10 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது நான் மட்டும் பெண். இப்பணிக்காக ஒரு மாதம் வரை பயிற்சி பெற்றேன். தற்போது வேலை எளிதாகி விட்டது ஆர்வமுடன் பணியாற்றி வருகிறேன் என்றார் இளையராணி.

    இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக நாமக்கல் மண்டல மேலாளர் பாண்டியன் கூறியதாவது:

    இதற்கு முன்பாக நாமக்கல் மாவட்டத்தில் அரசுப் பஸ்சில் பெண் கண்டக்டர்கள் பணியாற்றினார்களா? என்பது சரிவர தெரியவில்லை சேலம், தர்மபுரி மாவட்டங்களில் பணியாற்றுகின்றனர்.

    தற்போது ராசிபுரம் பணிமனையில் வாரிசு அடிப்படையில் ஒருவருக்கு பெண் கண்டக்டர் பணி வழங்கப்பட்டுள்ளது என்றார்.

    • கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் அரசு பஸ் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்ட தனியார் பஸ் கண்டக்டரை விசாரணை நடத்தி கண்டித்து அனுப்பி வைத்தார்.
    • இந்த சம்பவத்தால் சுமார் 20 நிமிடங்கள் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    கொடுமுடி:

    வேலூரில் இருந்து ஈரோடு செல்லும் தனியார் பஸ் கொடுமுடி பஸ் நிலையத்துக்கு காலை 9.30 மணிக்கு வந்து 9.40-க்கு செல்ல வேண்டும்.

    இந்நிலையில் இன்று 9.25 மணிக்கு கொடுமுடி பஸ் நிலையம் வந்த தனியார் பஸ்சின் கண்டக்டர் பஸ் நிலையத்தில் ஈரோட்டுக்கு பயணிகளை ஏற்றி கொண்டு இருந்தார்.

    அப்போது அங்கு இருந்த அரசு பஸ் நேரக்காப்பாளர் 9.30-க்கு அரசு பேருந்து உள்ளது. பயணிகளை ஏற்ற வேண்டாம் என்று கூறியதற்கு அப்படித்தான் ஏற்றுவேன் என்று தகராறில் ஈடுபட்டார்.

    அப்போது அங்கு வந்த கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் அரசு பஸ் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்ட தனியார் பஸ் கண்டக்டரை விசாரணை நடத்தி கண்டித்து அனுப்பி வைத்தார்.

    மேலும் தனியார் பஸ் கண்டக்டர் சென்னையில் உள்ள கல்லூரியில் எம்.பி.ஏ பட்ட படித்து வருபவர் என்றும், கல்லூரி விடுமுறை என்பதால் இன்று ஒரு நாள் கண்டக்டராக பணிக்கு வந்தவர் என்றும் தெரிய வந்தது. இந்த சம்பவத்தால் சுமார் 20 நிமிடங்கள் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • செஞ்சி அருகே பஸ்சை நிறுத்தாத கண்டக்டரை தே.மு.தி.க. பிரமுகர் தாக்கினார்.
    • செஞ்சிஅருகே பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 55).

    விழுப்புரம்:செஞ்சிஅருகே பாலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 55) இவர் விழுப்புரத்தில் இருந்து அரசு பஸ்சில் பயணம் செய்துள்ளார். அவர் பாலப்பட்டு கிராமத்தில் பஸ்சை நிறுத்த கூறி உள்ளார். ஆனால் கண்டக்டர் கொளஞ்சி பஸ் பாலப்பட்டில் நிற்காது என்று தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கோவிந்தன் ஊர்க்காரர்களுக்கு போனில் தகவல் தெரிவித்து உள்ளார். இதனை அறிந்த கோவிந்தன் உறவினர்கள் திரண்டனர். அப்போது அந்த வழியாக வந்த பஸ்ஸை மறித்து கண்டக்டரை தாக்கினர். இது குறித்து கண்டக்டர் கொளஞ்சி அனந்தபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் தே.மு.தி.க. மாவட்ட பொருளாளர் தயாநிதி உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.

    • கத்தியை காட்டி மிரட்டி மினி பஸ் கண்டக்டரிடம் பணப்பையை பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • தனியார் மினி பஸ் கண்டக்டரிடம் பணப்பையை பறித்ததை ஒப்புக் கொண்டார்.

    மதுரை

    மதுரை எழுமலை சூளாபுரத்தைச் சேர்ந்தவர் சுப்புராஜ் (வயது 60). இவர் தனியார் மினி பஸ்சில் கண்ட க்டராக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவர் சம்பவத்தன்று இரவு பணியில் இருந்தார்.

    அப்போது மினி பஸ் ஆண்டார்கொட்டாரம்- சக்கிமங்கலம் ரோட்டில் சென்றது. அப்போது பஸ்சில் பயணித்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி சுப்புராஜிடம் இருந்து பணப்பையை பறித்தனர்.

    அதன்பிறகு அவர்கள் கல்மேடு பகுதியில் இறங்கி தப்பிச் சென்றுவிட்டனர். இதுதொடர்பாக சுப்புராஜ் கருப்பாயூரணி போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    பஸ் கண்டக்டர் சுப்புராஜிடம் பணப்பையை பறித்து சென்ற 2 பேர் அடையாளம் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் ஆண்டார் கொட்டாரத்தில் பதுங்கி இருந்த ஒருவரை பிடித்து, போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை செய்தனர்.

    இதில் அவர் ஆண்டார் கொட்டாரம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் தர்மர் என்ற கோட்சா (வயது 23) என்பது தெரியவந்தது. அவர் மீது ஏற்கனவே சிலைமான், அண்ணாநகர், கருப்பாயூரணி ஆகிய போலீஸ் நிலையங்களில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. போலீஸ் விசாரணையில் அவர் தனியார் மினி பஸ் கண்டக்டரிடம் பணப்பையை பறித்ததை ஒப்புக் கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் தப்பி ஓடிய அய்யனார் நகர் முருகன் மகன் குட்டை ரமேஷ் என்பவரை போலீசார் வருகின்றனர்.

    ×