search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயனாளிகள்"

    • தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் மூலம் 120 பயனாளிகளுக்கு ரூ. 32,556 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • 20 பயனாளிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் வைப்பீடு தொகை பத்திரம் ரூ. 10 லட்சம் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் தலைமையில் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலையில் வழங்கினார்.

    அப்போது சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி கூறியதாவது:-

    திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ. 84,99,088 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. வேளாண்மை மற்றும் உலக நலத்துறை சார்பில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்ட மூலம் 120 பயனாளிகளுக்கு ரூ. 32,556 மதிப்பிலும், வேளாண் பொறியியல் துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு நடவு எந்திரம் டிராக்டர் ரூ. 13,01,532 லட்சம் மதிப்பீட்டிலும் , சமூக நலத் துறை சார்பில் 20 பயனாளிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் வைப்பீடு தொகை பத்திரம் ரூ. 10,00,000 லட்சம் மதிப்பில் என மொத்தம் 838 பயனாளிகளுக்கு ரூ. 84,99,088 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம், எம்.எல்.ஏ.க்கள்அன்பழகன், கிரி, மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, திருவிடைமருதூர் ஒன்றியக் குழு தலைவர் சுபா திருநாவுக்கரசு, தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) முத்து மீனாட்சி, வருவாய் கோட்டாட்சியர் லதா, தாசில்தார்கள் சந்தனவேல், பிரபாகரன், கூகூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகாபதி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • இரட்டைகுளம், நீடூர் பெரியமது ஆகிய பஸ் நிறுத்தங்களில் காலை, மாலை வேலைகளில் அரசு பஸ்கள் நிற்காமல் செல்கிறது.
    • அனைத்து வீடுகளுக்கும் கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் காமாட்சிமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு துணைத்தலைவர் மகேஸ்வரி, ஒன்றிய ஆணையர் அன்பரசு, வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மேலாளர் ஜெயராமன் வரவேற்றார்.

    கூட்டத்தில் கவுன்சி லர்கள் பேசியதாவது:-

    வடவீரபாண்டியன் (காங்.):-

    பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், கலைஞர் வீடு கட்டும் திட்டத்தில் பல முறைகேடுகள் நடந்துள்ளது.

    பயனாளிகளுக்கு பணம் வழங்காமல் அலைகழிக்க ப்படுகின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சந்தோஷ்குமார் (அ.தி.மு.க):-

    பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் பயனாளிகளுக்கு 2 வருடமாக பணம் வழங்கப்படாமல் உள்ளது.

    நிதி இல்லை என்று கூறுகிறார்கள்.

    எப்போது பணம் கிடைக்கும். பல வீடுகள் லிண்டல் மட்டத்தில் நிற்கிறது.

    மேற்கொண்டு கட்டுமான பணிகள் தொடங்க பணம் கிடைக்காமல் பயனாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு வழங்கினீர்கள்.

    பயனாளிகள் வீடு கட்ட முடியாமல் பாதியிலயே நிறுத்தப்பட்டு இருந்தது. அவர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் தான் வீடு கட்டி கொடுத்தோம்.

    பல்லவராயன்பேட்டை, இரட்டைகுளம், நீடூர் பெரியமது ஆகிய பஸ் நிறுத்தங்களில் காலை, மாலை வேலைகளில் அரசு பஸ்கள் நிற்காமல் செல்கிறது.

    இதனால் பெண்கள், பள்ளி மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

    அனைத்து பஸ் நிறுத்தத்திலும் அரசு பஸ்கள் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    காந்தி (தி.மு.க):-

    காளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் டாக்டர்கள் பணியில் இருப்பதில்லை.

    காளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கான ஆம்புலன்ஸ் எங்கு செல்கிறது என்றே தெரியவில்லை.

    அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் இல்லாமல் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் பணிகளை ஒன்றிய கவுன்சிலர்களுக்கு பிரித்துகொடுக்க வேண்டும்.

    அரசு வீடுகட்டும் திட்டத்திற்கான ஓர்க் ஆர்டர் பலருக்கு வழங்கப்படாமலேயே இருந்து வருகிறது.

    மோகன் (தி.மு.க):-

    மயிலாடுதுறை நகரை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் அனைத்து வீடுகளுக்கும் கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சிவக்குமார்:-

    மாப்படுகை கங்கை அம்மன் தெரு, பண்ணைத்தெரு, அழகர் நகர் பகுதிகளில் சாலை அமைத்து கொடுக்க வேண்டும்.

    மழைகாலம் தொடங்கியுள்ளதால் டெங்கு காய்ச்சல் போன்ற தொற்றுநோய் பரவாமல் இருப்பதற்கும், கொசுவை கட்டுப்படுத்த கொசுமருந்து தெளிக்க வேண்டும்.

    ஆணையர் அன்பரசு:

    பொறியியல் துறையில் திட்ட மதிப்பீடு தயார் செய்து கொடுப்பதில் காலதாமதம் ஏற்படுவதால் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது.

    அதனை சரிசெய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • 72 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சத்து 52 ஆயிரத்து 935 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
    • தோட்டக்கலைத்துறையின் சார்பில் 4 பேருக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகா உபய வேதாந்தபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் 72 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சத்து 52 ஆயிரத்து 935; மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கி பேசியதா வது, தமிழக அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.

    மக்கள் நேர்காணல் முகாமில் ஊரக வளர்ச்சி த்துறையின் சார்பில் 9 பயனாளிகளுக்கு பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின் ரூ.21 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான ஆணையும், வருவாய்துறையின் சார்பில் 31 பேருக்கு ரூ.31 ஆயிரம் மதிப்பீட்டில் முதியோர் உதவித்தொகை மற்றும் விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணையும், 5 பேருக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான விலையில்லா வீட்டுமனை பட்டாவும், ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 2 பேருக்கு ரூ.11 ஆயிரத்து 700 மதிப்பிலான விலையில்லா தையல் எந்திரமும், வேளாண்மைத் துறை சார்பில் 17 பேருக்கு ரூ.25 ஆயிரத்து 235 மதிப்பீட்டில் இடுபொருட்களும், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 4 பேருக்கு மரக்க ன்றுகளும் என மொத்தம் 72 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சத்து 52 ஆயிரத்து 935 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது என கூறினார்.

    முன்னதாக அரசு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள திட்ட விளக்ககண்காட்சி அரங்கினை பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில், நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்.சித்ரா, ஆர்.டி.ஓ சங்கீதா, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) கண்மணி, ஒன்றியக்குழு உறுப்பினர் முருகேசன், தாசில்தார் பத்மினி, உபயவேதந்தபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்த திட்டம் நலிவடைந்த பிரிவினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகளுக்கு பயனுள்ளதாக இருந்தது.
    • இந்த திட்டத்தில் விண்ணப்பித்து குடியிருப்புகளை பெற தகுதியான நபர்கள் நினைத்திருந்தனர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் அனைவரு க்கும் வீடு திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்டத்திற்கு உட்பட்ட வல்லம் அய்யனார் கோவில் திட்டப் பகுதியில் 384 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளன . இந்த குடியிருப்புகளை ஒதுக்கீடு பெறுவதற்கு நகர்ப்புறங்களில் வசிப்ப வர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

    இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் குடும்பத் தலைவர் மற்றும் குடும்பத் தலைவி ஆகியோரின் ஆதார் அடையாள அட்டை, உணவு பங்கீடு அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களின் நகல்களை இணைத்து வல்லம் அய்யனார் கோவில் திட்ட பகுதியில் உள்ள தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்துபட்டது.

    ஆனால் இதற்கான காலக்கெடு கடந்த 6-ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால் தஞ்சை மாவட்டத்தில் நகர்ப்பு றங்களில் வசிப்பவர்களில் பல தகுதியான பயனாளிகள் விண்ணப்பிக்க முடியாமல் போனது.

    இது குறித்து நகர்ப்புற ங்களில் வசிக்கும் பொதும க்கள் கூறும்போது:- நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்படும் திட்டம் ஒரு உன்னதமான திட்டமாகும்.

    இந்த திட்டம் நலிவடைந்த பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் , ஆதரவற்ற விதவைகளுக்கு பயனுள்ளதாக இருந்தது. ஆனால் இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு கடந்த 6-ம் தேதியுடன் விண்ணப்பிக்கும் கால அவகாசம் முடிவடைந்து விட்டது. இதனால் குறிப்பிட்ட நாட்களுக்குள் பலரால் விண்ணப்பிக்க இயலவி ல்லை. தற்போதைய காலத்தில் வீடு கட்டுவதுஎன்பது மிகவும் சவாலான ஒன்று.

    அந்தக் குறையை போக்க நகர்ப்புற வழி விட மேம்பாட்டு திட்டம் அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த திட்டத்தில் விண்ணப்பித்து குடியிரு ப்புகளை பெற தகுதியான நபர்கள் நினைத்திருந்தனர். ஆனால் அவகாசம் முடிந்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகின்றனர். எனவே விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை இன்னும் சில நாட்கள் நீட்டிக்க வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நலிவுற்ற குடும்பத்தினருக்கு வீடு கட்டித்தரும் பெரும்பணியை மேற்கொண்டது.
    • 2 வீடுகள் முற்றிலும் கட்டி முடிக்கப்பட்டு அவைகள் பயனாளிகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேசன் ஏழை எளிய மற்றும் நலிவுற்ற குடும்பத்தினருக்கு பல்வேறு விதமான சேவைப் பணிகளை ஆற்றி வருகிறது.

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வேண்டுகோளை ஏற்று மதர் தெரசா பவுண்டேசன், தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து 4 நலிவுற்ற குடும்பத்தினருக்கு வீடு கட்டித்தரும் பெரும்பணியை மேற்கொண்டது.இதில் 2 வீடுகள் முற்றிலும் கட்டி முடிக்கப்பட்டு அவைகள் பயனாளிகள் வசம் ஒப்படைக்கப்பட்டு அவ்வீடுகளில் அவர்கள் நலமுடன் வாழ்ந்து வருகின்றனர். மேலும் 2 வீடுகள் வெகுவிரைவில் கட்டிமுடி க்கப்படும் தருவாயில் உள்ளன.

    இந்த நிலையில் தஞ்சா வூரில் நடைபெற்ற 75-வது சுதந்திரதின விழா நிகழ்ச்சியில் 4 நலிவுற்ற குடும்பங்களுக்கு வீடுகட்டித்தருவதற்கு பேரு தவியாக இருந்த மதர் தெரசா பவுண்டேசன் சேர்மேன் சவரிமு த்துவை பாராட்டி அவருக்கு கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் பாராட்டுச் சான்றிதழை வழங்கி கவுரவித்தார்.

    • முகாமில், காது, மூக்கு, தொண்டை, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது.
    • கலைஞரின் வருமுன் காப்பீட்டு திட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நாகை அடுத்த பொரவச்சேரி பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமில், காது, மூக்கு, தொண்டை, வயிறு சம்மந்தப்பட்ட பிரச்னைகளுக்கு பிரத்யேக மருத்துவர்களும், எலும்பு முறிவு, குழந்தைகள் மருத்துவம் போன்றவைகளுக்கு தனித்தனியே சிறப்பு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டது.

    மேலும், கலைஞரின் வருமுன் காப்பீட்டு திட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு, அங்கேயே பயனாளிகள் மருத்துவ காப்பீட்டு அட்டைகள் வழங்கப்பட்டது.

    பொது சுகாதாரத்துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மருத்துவ முகாமில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட நலக் கல்வி அலுவலர் மணவாளன், வடுகச்சேரி வட்டார மருத்துவ அலுவலர் பிரியதர்ஷினி தலைமையிலான மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

    இதில் ஆண்டவர் செவிலியர் பயிற்சி பள்ளி நடராஜன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் செந்தில்குமார், சுதானந்த கணேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சுகாதார ஆய்வாளர் சேகர் புகழேந்தி நன்றி கூறினார்.

    • சிவகங்கையில் 7 பயனாளிகளுக்கு ரூ.9 லட்சம் கடன் உதவியை கலெக்டர் வழங்கினார்.
    • பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்று பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பாடுகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது. அப்போது 7 பயனாளிகளுக்கு ரூ.9.2 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    பின்னர் கலெக்டர் மதுசூதன் ரெட்டி பேசியதாவது:-

    கூட்டுறவு கடன் சங்க பணியாயாளர்கள் நடப்பாண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இலக்கினை எய்திட முழு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பணியின் போது பொதுமக்களிடம் கனிவாகவும், முறையாகவும் நடந்து கொள்ள வேண்டும். பணியாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும்.

    ஒவ்வொரு திட்டங்களின் வாரியாக உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை, கால அளவு, விவசாயிகளின் பயிர்கள் குறித்த விவரங்கள் போன்றவற்றை முறையாக பராமரித்து உயர்அலுவலர்களுக்கு வழங்க வேண்டும். தமிழக அரசு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்திட்டங்களின் பயன்கள் தகுதியுள்ள, தேவையுள்ள பயனாளிகளுக்கு முழு அளவில் சென்றடைய பணி யாளர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதாகும்.

    எனவே தன்னலமற்ற பணி செய்து அரசின் திட்டங்களின் பயன்கள் பயனாளிகளுக்கு சென்றடைய சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கோ.ஜீனு, மேலாண்மை இணை இயக்குநா; ரவிச்சந்திரன், வேளாண்மைத்துறை இணை இயக்குநர் தனபாலன், துணைப்பதிவாளர்கள் வெங்கட்லட்சுமி, சரவணன், கூட்டுறவு கடன் சங்க சார்பதிவாளர் மூகாம்பிகை உட்பட சங்கச் செயலாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இடத்திற்கு நிரந்தர பட்டா பல்வேறு காரணங்களால் 20 வருடமாக வழங்காமல் இருந்துள்ளது.
    • தற்போது முதற்கட்டமாக கீழமூவர்கரை கிராமத்தில் அனைவருக்கும் நிரந்தர பட்டா வழங்கப்பட்டுள்ளது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே கீழ மூவர்கரை மீனவ கிராமத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு நிரந்தர பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் லலிதா தலைமை வகித்தார். பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ, மயிலாடுதுறை டி.ஆர்.ஒ. முருகதாஸ், சீர்காழி ஆர்.டி.ஓ அர்ச்சனா, சீர்காழி ஒன்றிய குழு தலைவர் கமல்ஜோதி தேவேந்திரன் முன்னிலை வகித்தனர். சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் வரவேற்று பேசினார்.

    கலெக்டர் லலிதா மீனவ குடும்பங்களுக்கு 122 பட்டாக்களை வழங்கி பேசுகையில், சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இடத்திற்கு நிரந்தர பட்டா பல்வேறு காரணங்களால் 20 வருடமாக வழங்காமல் இருந்துள்ளது.தற்போது முதற்கட்டமாக கீழமூவர்கரை கிராமத்திற்கு அனைவருக்கும் நிரந்தர பட்டா வழங்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களில் வசிக்கும் மீனவர்களுக்கு இன்னும் இரண்டு மாதத்திற்குள் சிறப்பு முகாம்கள் நடத்தி பட்டா விரைவில் முழுமையாக வழங்கப்படும் என்றார்.

    விழாவில் சீர்காழி வட்ட வழங்கல் தனி தாசில்தார் சபிதா தேவி, தனிமண்டல துணை தாசில்தார் ரவிச்சந்திரன், வருவாய் ஆய்வாளர் சசிகலா, ஊராட்சித் தலைவர் சரளா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஊர் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

    • முகாமில் பயனாளிகளுக்கு இலவச பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.வழங்கினார்.
    • வேளாண் துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியை பார்வையிட்டு மக்களின் குறைகளை எம்.எல்.ஏ. கேட்டறிந்தார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம் சூரங்குடி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பயனாளிகளுக்கு இலவச பட்டா, பட்டா மாறுதல், குடும்ப அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    மேலும் வேளாண் துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சியில் பயிறு, சிறு தானியங்கள், சிகப்பு கடல் பாசி, உரம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டு மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    நிகழ்ச்சியில் ஆர்.டி.ஓ. மகாலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார், தாசில்தார் சசிகுமார், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, சூரங்குடி ஊராட்சி மன்ற தலைவர் வேலுத்தாய் ராமசுப்பிரமணியன், பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன்ராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், ஒன்றிய கவுன்சிலர்கள் செந்தூர்பாண்டியன், மருதகனி சுப்பிரமணியன், வேம்பார் ஊராட்சி மன்ற தலைவர் ஆரோக்கியராஜ், சூரங்குடி கூட்டுறவு சங்க தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் ராமச்சந்திரன், தங்கம்மாள்புரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாரதிதாசன், தி.மு.க. சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்பட துறைசார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டும் 502 பயனாளிகளில் 382 பயனாளிகளுக்கு கண்காணிப்பு அட்டை வழங்கினார்.
    • வீடு மற்றும் கழிப்பறையை முறையாக பராமரித்து ஆரோக்கியமான வாழ்வை வாழ அறிவுறுத்தினார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் ஒன்றிய த்தில் பாரத பிரதமர் ஊரக குடியிருப்பு திட்ட த்தின் கீழ் வீடு கட்டும் பயனாளிகளுக்குநாகை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில் கள ஆய்வு அட்டை வழங்கள் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் வேதார ண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமலிங்கம், பாஸ்கர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) கருணாநிதிஆகியோர் கலந்துகொண்டு கத்ததிரி புலம், ஆதனூர், கருப்பம்புலம் ,குரவப்புலம், உள்ளிட்ட 36 ஊராட்சிகளில் 21- 22 ம் ஆண்டு பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டும் 502 பயனளிகளில் 382 பயணாளிகளுக்கு கண்காணிப்பு அட்டை வழங்கினர். வீடு மற்றும் கழிப்பறையை முறையாக பராமரித்து ஆரோக்கியமாக வாழ்வை பெற எனவும், திட்டத்தில் குறைபாடுகள் ஏதும் இருந்தால் ஊரக வளர்ச்சி இயக்கம் குறைய தீர்ப்பு மைய தொடர்பு எண்கள் 8925422215, 8925422216 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (திட்டம்) கருணாநிதி தெரிவித்துள்ளார்.

    • 5 ஆடுகள் வழங்கப்பட்ட நிலையில் அனைத்து ஆடுகளும் இறந்துள்ளன.
    • ஆடுகள் வாங்கும்போது விழிப்புணர்வுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும்.

    திருப்பூர்:

    கால்நடை பராமரிப்புத்துறை சார்பில்விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு ஆடு வளர்க்கும் திட்டத்தின் கீழ் அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. ஒவ்வொரு பயனாளிக்கும் தலா 5 ஆடுகள் வாங்க ஒரு ஆட்டுக்கு ரூ. 3,500 வீதம் 17 ஆயிரத்து 300 ரூபாய் அரசின் சார்பில் வழங்கப்படுகிறது. அந்த வகையில், ஒவ்வொரு வட்டாரத்திலும் 100 பயனாளிகளுக்கு ஆடு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதில் அவிநாசி வடுகபாளையம், சின்னேரிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பயனாளிகளுக்கு சமீபத்தில் ஆடுகள் வழங்கப்பட்டன. வழங்கப்பட்ட ஆடுகள் தரமற்று இருப்பதாகவும், ஒரு ஆட்டின் விலை 1,000 முதல் 1,500 ரூபாய் வரை தான் தேறும் எனவும் பயனாளிகள் கூறினர்.

    இது குறித்து கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறுகையில், ஒவ்வொரு வட்டார அளவிலும் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் மொத்த வியாபாரிகள் மூலம் ஆடுகள் வினியோகிக்கப்படுகிறது. மொத்த வியாபாரிகளால் கொண்டு வரப்படும் ஆடுகள், பயனாளிகளுக்கு திருப்தியாக இல்லாவிட்டால், வேறு ஆடுகளை எடுத்து வரச்சொல்லி வாங்கிக் கொள்ளலாம். ஆடுகளை தேர்வு செய்வது பயனாளிகள் தான். பயனாளிகள் விருப்பப்பட்டால் சந்தைக்கு சென்றும் கூட ஆடுகளை வாங்கிக்கொள்ளலாம் என்றனர்.

    இது குறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறியதாவது:-

    அரசின் ஆடு வழங்கும் திட்டத்தில் முந்தைய ஆட்சியின் போது, ஒவ்வொரு வட்டார அளவில் உள்ள கால்நடை மருத்துவர் கணக்கிலும், அதற்கான தொகை வரவு வைக்கப்பட்டு விடும். பயனாளிகள் தங்களுக்கு விருப்பப்பட்ட சந்தைக்கு சென்று, விரும்பிய ஆடுகளை வாங்கி கொள்ளலாம். அதற்கான தொகையை கால்நடை மருத்துவர்கள் விடுவித்து விடுவர்.தற்போது இந்த நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டு பொதுவாக ஒரு மொத்த வியாபாரி மூலம் ஆடுகள் வினியோகிக்கப்படுகிறது.

    அவ்வாறு கொண்டு வரப்படும் ஆடுகள், பயனாளிகளுக்கு திருப்தியளிப்பதாக இல்லை என்ற புகாரும் வருகிறது.விவசாயிகளே நேரடியாக சந்தைக்கு சென்று ஆடுகளை கொள்முதல் செய்து கொள்ளலாம் என கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறினாலும் அதற்கான தொகையை விடுவிப்பதில், துறை ரீதியாக நடைமுறை சிக்கல் உள்ளது.எனவே, பழைய நடைமுறைப்படி, அந்தந்த வட்டார கால்நடை மருத்துவர்கள் மூலம் விவசாயிகளே நேரடியாக ஆடுகளை கொள்முதல் செய்து கொள்ளும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    கால்நடை வளர்ப்போர் சிலர் கூறியதாவது:-

    அரசால் வழங்கப்பட்ட கால்நடைகளின் உண்மையான சந்தை மதிப்பை கால்நடை பராமரிப்பு துறையினரிடம் இருந்து பெற்று வரும்படி, இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் கூறுகின்றனர்.ஆனால் எங்கிருந்தோ ஒரு வியாபாரியிடமிருந்து வாங்கப்படும் கால்நடைகளுக்கு, சந்தை மதிப்பை நிர்ணயித்து கொடுக்க கால்நடை பராமரிப்புத்துறையினர் தயாராக இல்லை. இதனால், அவை இறந்தால் இன்சூரன்ஸ் தொகையும் கிடைப்பதில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்தநிலையில் சேவூர் ஊராட்சிக்குட்பட்ட வாளியூர் பகுதியில் வசிக்கும் பயனாளிக்கு வழங்கப்பட்ட 5 ஆடுகளில் 2 ஆடுகள் இறந்தன. மற்ற 3 ஆடுகள் உணவு உட்கொள்ளாமல் ஆபத்தான நிலையில் உள்ளதாக பயனாளிகள் தெரிவித்தனர்.

    ஈசக்கண்ணன்புதூர் பகுதியில் ஒரு பயனாளிக்கு 5 ஆடுகள் வழங்கப்பட்ட நிலையில் அனைத்து ஆடுகளும் இறந்துள்ளன. இதனால் பயனாளிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

    எனவே ஆடுகள் வாங்கும்போது கவனத்துடன் இருக்க வேண்டும் என்கின்றனர்விவசாயிகள்.ஆடு நோஞ்சானாக காணப்பட்டால் விலை குறைவாக போகும். இதனை தவிர்க்க சில வியாபாரிகள் ஆடுகளை சந்தைக்கு கொண்டு செல்வதற்கு முன் லிட்டர் கணக்கில் வாயில் தண்ணீரை ஊற்றுகின்றனர். இதனால் ஆடுகள் வயிறு பெருத்து எடை அதிகமாக காணப்படும்.

    ஆடு வாங்குபவர் ஆடுகள் நல்ல எடையுடன் திடகாத்திரமாக இருப்பதாக நம்பி அவற்றை அதிக விலை கொடுத்து வாங்கிச் சென்று விடுவர். கசாப்பு கடைக்காரர்கள் வாங்கியவுடன் ஆடுகளை உடனடியாக அறுத்து விடுகின்றனர்.தற்போது, அரசின் இலவச திட்டத்தில் ஆடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இவற்றை வாங்குவதற்கு, அலுவலர்கள் சந்தைக்கு சென்று ஆடுகளை வாங்கி அவற்றை பயனாளிகளுக்கு வழங்குகின்றனர்.

    இது குறித்து பொங்கலூர் வட்டார விவசாயிகள் சிலர் கூறியதாவது:சில வியாபாரிகள் ஆடுகளை கொண்டு வரும் முன் பல லிட்டர் தண்ணீரை வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றுகின்றனர். அவை குடிக்க முடியாமல் முரண்டு பிடிக்கும். இருந்தாலும் நாக்கை இழுத்து பிடித்து தண்ணீரை ஊற்றுவர். தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததாக இருக்குமா என்பதும் கேள்விக்குறியே.

    வரும் வழியில் ரோட்டோரங்களில் சாக்கடையில் கிடைக்கும் நீரைக்கூட சிலர் ஊற்றி விடுவதுண்டு. இந்த ஆடுகளுக்கு சில நாட்கள் வயிற்றில் போகும். சரியாக தீவனம் எடுக்க முடியாது.உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால் ஆடுகள் இறந்து விட நேரிடுகிறது. ஆடுகள் இறக்க இதுவும் முக்கிய காரணம். ஆடுகள் வாங்கும்போது விழிப்புணர்வுடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும் என்றனர்.

    திருப்பூர் கோட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் பரிமள ராஜ்குமார் கூறுகையில், ஆடுகளுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. இறக்கும் ஆடுகளுக்குரிய இழப்பீடு தொகை பயனாளிகளுக்கு பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • சாத்தூர், பாலவநத்தத்தில் 100 பயனாளிகளுக்கு மானியத்தில் ஆடுகளை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வழங்கினார்.
    • 100 பயனாளிகளுக்கு ஒட்டு மொத்தச் செலவினமாக தலா ரூ.19 லட்சத்து 4 ஆயிரத்து 75 வீதம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ.2.09 கோடி மதிப்பில் தமிழக அரசு மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம், சாத்தூர் மற்றும் பாலவநத்தத்தில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் ஊரக ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் செம்மறியாடுகள், வெள்ளாடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    கலெக்டர் மேக நாதரெட்டி தலைமை தாங்கினார். விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் சீனிவாசன், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் முன்னிலை வகித்தனர்.

    இதில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு 100 பயனாளிகளுக்கு ஆடுகளை வழங்கினார்.பின்னர் அவர் பேசியதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் 11 ஊராட்சி ஒன்றியங்களில் 1100 பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒரு பயனாளிக்கு 4 பெட்டை ஆடுகள் மற்றும் 1 கிடா என மொத்தம் 5 ஆடுகள் என்ற விகித்தில் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகளுக்கு 500 ஆடுகள் வழங்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 1100 பயனாளிகளுக்கு மொத்தம் 5500 ஆடுகள் வழங்கப்பட்டு வருகிறது.

    சாத்தூர் ஒன்றியத்தில் 100 பயனாளிகளும், அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் 100 பயனாளிகளும் தேர்வு செய்யப்பட்டு, ஒரு பயனாளிக்கு ஆடு ஒன்றுக்கு ரூ.3500/- வீதம் 5 வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் (1 கிடா மற்றும் 4 பெட்டை ஆடுகள்) தலா ரூ.17 ஆயிரத்து 500 என்ற விகிதத்தில் மொத்தம் 200 பயனாளிகளுக்கு இன்று வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், ஆரம்ப கட்டச் செலவினமாக பயனாளிக்கு ஆடு 1க்கு ரூ.200 வீதம் 5 ஆடுகளுக்கு மொத்த தொகை ரூ.1000 பயனாளிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. ஒரு பயனாளிக்கு அரசால் வழங்கப்படும் 5 ஆடுகளுக்கு காது வில்லைகள் பொருத்தப்பட்டு, அரசு செலவில் 2 ஆண்டுகளுக்கு காப்பீட்டுத் தொகை ரூ.540.75 வீதம் காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்தப்படுகிறது.

    ஒரு ஒன்றியத்திற்கு இந்த திட்டத்திற்காக 100 பயனாளிகளுக்கு ஒட்டு மொத்தச் செலவினமாக தலா ரூ.19 லட்சத்து 4 ஆயிரத்து 75 வீதம் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றியங்களுக்கு ரூ.2.09 கோடி மதிப்பில் தமிழக அரசு மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், சாத்தூர் கோட்டாட்சியர் அனிதா, சாத்தூர் நகர்மன்ற தலைவர் குருசாமி, சாத்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் நிர்மலா கடற்கரைராஜ், விருதுநகர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சுமதி ராஜசேகர், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ரவிச்சந்திரன், துணை இயக்குநர் கோவில்ராஜா, சாத்தூர் வட்டாட்சியர் வெங்கடேஷ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×