search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெற்பயிர்கள்"

    • பல கிராமங்களில் முன்பட்ட குறுவை நெற்பயிற்கதிர் வந்து விளைந்து இன்னும் ஓரிரு நாட்களில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.
    • விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்ய கணினி வழியாக பதிவு செய்ய வேண்டும்.

    பூதலூர்:

    பூதலூர் வட்டாரத்தில் முன்பட்ட குறுவை சாகுபடி கல்லணை தொடங்கி ஆழ்துளை கிணறு வசதி உள்ள கிராமங்களில் நடைபெற்றது. பூதலூர் வேளாண்மை வட்டாரத்தில் மட்டும் ஏறக்குறைய 5000 ஏக்கர் பரப்பில் முன்பட்ட குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடி செய்யப்பட்டுள்ள முன்பட்ட குறுவை பயிர் சில கிராமங்களில் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. பல கிராமங்களில் முன் பட்ட குறுவை நெற்பயிற் கதிர் வந்து விளைந்து இன்னும் ஓரிரு நாட்களில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.

    அறுவடை தொடங்கி யுள்ள சில கிராமங்களிலும், தொடங்க உள்ள கிராமங்களிலும் அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்வதற்கு எந்த ஏற்பாடுகளையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செய்யவில்லை. அறுவடை தொடங்கியுள்ள கிராம விவசாயிகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை அணுகிய போது உடனடியாக திறக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக விவசாயிகள் குறை கூறுகின்றனர்.

    விவசாயிகளிடம் நெல்லை கொள்முதல் செய்ய கணினி வழியில் வழியாக பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிப்பு வந்து அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அறுவடை நடைபெறுவதற்கு முன்னதாகவே அதிகாரிகள் கள ஆய்வு செய்து கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் இந்த பகுதியில் நேரடியாக கள ஆய்வு செய்து கொள்முதல் நிலையங்கள் திறக்க ஆவனசெய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    • அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
    • பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன.

    புதுக்கோட்டை

    அன்னவாசல் சுற்றுவட்டார பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. அதன் பின்னர் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்தது. இந்தநிலையில் இரண்டாவது நாளாக நேற்று மாலை அன்னவாசல், இலுப்பூர், சித்தன்னவாசல், குடுமியான்மலை, முக்கண்ணாமலைப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் 1 மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்று, இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    பலத்த காற்று வீசியதால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்தன. இந்த தொடர் மழையால் சாலையில் ஆங்காங்கே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி பள்ளங்களில் மழை நீர் தேங்கியது. இதனால் அன்னவாசல் சுற்றுவட்டாரத்தில் பல்வேறு பகுதியில் மின்தடை ஏற்பட்டது. குளிர்ந்த காற்றுடன் மழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இந்த தொடர் மழையால் அன்னவாசல் அருகே உள்ள பரம்பவயல் பெரிய கண்மாய் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர், நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி முழுவதும் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

    மேலும் நீரில் மூழ்கிய நெற்பயிர்களை அதிகாரிகள் பார்வையிட்டு சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், அப்பகுதியில் உள்ள வாய்க்கால், குளங்கள், வாரிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

    • நெற்பயிர்களை சேதப்படுத்தும்பன்றிகளால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    • தற்போது அறுவடை பணிகள் நடைெபற்று வருகிறது.

    வத்திராயிருப்பு,

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகா விற்கு உட்பட்ட மகாராஜபுரம் பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அப்பகுதியில் நெற்பயிர்கள் விளைந்து அறுவடை பணிகள் மும்முர மாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில்அய்யா சாமி என்பவரது விவசாய நிலத்தை பூபதி என்பவர் குத்தகைக்கு எடுத்து நெல் சாகுபடி செய்திருந்தார். அப்பகுதியில் வளர்க்க ப்படும் வளர்ப்பு பன்றி கள் அடிக்கடி விவ சாய நிலத்திற்குள் புகுந்து நெற்கதிர்களை சேதப்ப டுத்துவதாக விவசாயிகள் கவலைபடுகின்றனர்.

    இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    வத்திராயிருப்பு பகுதியில் எண்ணற்ற விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளோம். தற்போது அறுவடை பணிகள் நடைெபற்று வருகிறது.

    இந்த நிலையில் வயலுக்குள் பன்றிகள் புகுந்து நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. பன்றிகளால் பயிர்கள் பாதிக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது. இதனால் எங்களுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்படுகிறது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பன்றி களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×