search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுப்படுகறது"

    • திருப்பூர் மாவட்டத்துக்கு தேவையான 3.23 லட்சம் முதல் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
    • பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வகுப்பாசிரியர் மூலம் புத்தகம் வழங்கப்பட உள்ளது.

    திருப்பூர்,

    வருகிற 13-ந் தேதி ஒன்று முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. புதிய கல்வியாண்டை வரவேற்கும் விதமாக பள்ளிகளில் பராமரிப்பு மற்றும் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளி திறக்கும் நாளில் அனைத்து வகுப்புக்கும் அட்மிஷன் துவங்க கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

    தமிழ்நாடு பாடநூல் கழகம் மூலம் திருப்பூர் மாவட்டத்துக்கு தேவையான 3.23 லட்சம் முதல் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதை தாலுகா, பள்ளி வாரியாக பிரிக்கும் பணி, ரெயில் நிலையம் அடுத்த தேவாங்கபுரம் மாநகராட்சி பள்ளியில் தொடங்கியது.

    1 முதல் 5-ம்வகுப்புகள் வரையிலான பாடப்புத்தகங்கள் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும், 6 முதல் 10-ம் வகுப்புகள் வரையிலான பாடப்புத்தகங்கள் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களிடமும் வழங்கப்பட்டது. ஆட்டோக்கள் மூலம் புத்தகங்களை பள்ளிக்கு அவர்கள் எடுத்துச்சென்றனர். இன்று மாலைக்குள் மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளுக்கும், புத்தகங்கள் சென்று சேர தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    தமிழ், ஆங்கிலம், முக்கிய பாடங்களுக்கான பாடப்புத்தகங்கள் அனைத்தும் தருவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வகுப்பாசிரியர் மூலம் புத்தகம் வழங்கப்பட உள்ளது. அதற்காக ஒவ்வொரு பள்ளி வகுப்பறையில் ஏற்கனவே உள்ள மாணவர் எண்ணிக்கை புதிதாக பள்ளியில் சேரும் மாணவர் தோரய எண்ணிக்கை கணக்கிடப்பட்டு புத்தகங்கள் தலைமை ஆசிரியர் வசம் வழங்கப்பட்டுள்ளது.

    ×