என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "#மாணவி"

    • மாணவி நிரஞ்சானாவின் நிலை கண்டு சக மாணவிகள் கண்கலங்கினர்.
    • சக மாணவிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம், தா.பேட்டை அருகே கோணப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முரளி (51). உரக்கடை நடத்தி வந்தார். இவரது மகள் நிரஞ்சனா தா.பேட்டையில் செயல்படும் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று இரவு நிரஞ்சனாவின் தந்தை முரளி மாரடைப்பு காரணமாக இறந்து போனார். இந்நிலையில் இன்று பத்தாம் வகுப்பு அரசு தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவி நிரஞ்சனா தனது தந்தையின் இழப்பை மனதளவில் ஏற்று கொண்டு தா.பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திற்கு வந்தார்.

    சமூகஅறிவியல் தேர்வு எழுதுவதற்காக மாணவி தனது உறவினருடன் விழி நிறைய கண்ணீருடன் மனதில் சோகத்தை சுமந்து கொண்டு வந்த மாணவி நிரஞ்சானாவின் நிலை கண்டு சக மாணவிகள் கண்கலங்கினர்.

    மாணவி நிரஞ்சனாவிற்கு பள்ளி ஆசிரியர்களும், தேர்வு மைய மேற்பார்வையாளர் சிவானந்தம் ஆகியோரும் ஆறுதல் கூறி தேர்வை நல்ல முறையில் எழுதுமாறு ஆலோசனை வழங்கினர்.

    தந்தையின் உடலுக்கு உறவினர்கள் வீட்டில் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் மாணவி தந்தையை இழந்த துயரத்துடன் தேர்வு எழுதியது ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. 

    • குழந்தையை அரசிடம் ஒப்படைத்து விட்டதாக கூறப்படுகிறது.
    • பழனிசாமியை தேடி பிடித்து கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஏத்தாப்பூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி அரசு பள்ளியில் படித்து வந்தார். இம்மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி 60 வயதான கூலித் தொழிலாளி பழனிசாமி என்பவர் கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்தார்.

    இதில் கர்ப்பமான மாணவிக்கு வயிற்றுவலி ஏற்பட்டதால் இவரது பெற்றோர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மாணவிக்கு கடந்த மார்ச் மாதம் 3-ந்தேதி ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை அரசிடம் ஒப்படைத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து மாணவிக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், சேலம் மாவட்ட போலீசார் மற்றும் குழந்தைகள் நலத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாணவியிடம் விசாரணை நடத்திய வாழப்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சம்பூரணம் தலைமையிலான போலீசார், மாணவியை கர்ப்பமாக்கி குழந்தை பெற காரணமான கூலி தொழிலாளி பழனிசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

    மும்பை, சென்னை உட்பட பல இடங்களில் தேடிய போலீசார் ஒரு வழியாக முதியவர் பழனிசாமியை தேடி பிடித்து கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். 

    • பள்ளி நிர்வாகத்தின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
    • பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    கோவை கிணத்துக்கடவில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 5-ந்தேதி பூப்படைந்துள்ளார். முழுஆண்டு தேர்வு எழுதிய மாணவியை மாதவிலக்கை காரணம் காட்டி, வகுப்பறையை பூட்டி வெளியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில், பள்ளி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து, சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தனியார் பள்ளி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    குழந்தைகள் மீதான ஒடுக்குமுறை எவ்வகையாயினும் பொறுத்துக்கொள்ள முடியாது. அன்பு மாணவி தனியாக அமரவில்லை! நாங்கள் இருக்கிறோம். இருப்போம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
    • பொள்ளாச்சி காவல் உதவி கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங், பள்ளி முதல்வர் ஆனந்தி, பள்ளி கண்காணிப்பாளர் சிவகாமி இருவரிடம் விசாரணை நடத்தினார்.

    கோவை கிணத்துக்கடவில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 5-ந்தேதி பூப்படைந்துள்ளார். முழு ஆண்டு தேர்வு எழுதிய மாணவியை மாதவிலக்கை காரணம் காட்டி, வகுப்பறையை பூட்டி வெளியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    மாணவி வெளியில் அமர வைத்து தேர்வெழுத வைக்கப்பட்டுள்ளதால் அவரது தாய் நேரில் சென்று பள்ளி நிர்வாகத்திடம் இது தொடர்பாக கேட்டுள்ளார்.

    இதற்கு பள்ளி நிர்வாகம், எங்களது பள்ளியில் இப்படிதான் நடக்கும். முடியாது எனில் வேறு பள்ளியில் சேர்த்து கொள்ளுங்கள் என கூறி உள்ளது.

    பள்ளி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    இதையடுத்து பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தனியார் பள்ளியில் பொள்ளாச்சி காவல் உதவி கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங், பள்ளி முதல்வர் ஆனந்தி, பள்ளி கண்காணிப்பாளர் சிவகாமி இருவரிடம் விசாரணை நடத்தினார்.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. பள்ளியிலும், மாணவியிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். தவறு உறுதியானால் விசாரணையின் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.

    இந்த நிலையில் கோவை கிணத்துக்கடவு தனியார் பள்ளியில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். கோவை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை உதவி இயக்குநர் வடிவேல் விசாரணை நடத்தினார்.

    மாணவியிடமும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    • பள்ளி நிர்வாகம் அலட்சியமாக பதில் அளித்துள்ளது.
    • தனியார் பள்ளியில் பொள்ளாச்சி காவல் உதவி கண்காணிப்பாளர் நேரில் விசாரணை செய்தார்.

    கோவை கிணத்துக்கடவில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 5-ந்தேதி பூப்படைந்துள்ளார். முழு ஆண்டு தேர்வு எழுதிய மாணவியை மாதவிலக்கை காரணம் காட்டி, வகுப்பறையை பூட்டி வெளியில் அமர வைத்து தேர்வு எழுத வைத்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    மாணவி வெளியில் அமர வைத்து தேர்வெழுத வைக்கப்பட்டுள்ளதால் அவரது தாய் நேரில் சென்று பள்ளி நிர்வாகத்திடம் இது தொடர்பாக கேட்டுள்ளார்.

    இதற்கு பள்ளி நிர்வாகம் அலட்சியமாக பதில் அளித்துள்ளது. எங்களது பள்ளியில் இப்படிதான் நடக்கும். முடியாது எனில் வேறு பள்ளியில் சேர்த்து கொள்ளுங்கள் என கூறி உள்ளது.

    மாணவி வகுப்பறைக்கு வெளியில் அமர்ந்து தேர்வு எழுதும் வீடியோ வெளியான நிலையில், பள்ளி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    இதையடுத்து பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக தனியார் பள்ளியில் பொள்ளாச்சி காவல் உதவி கண்காணிப்பாளர் நேரில் விசாரணை செய்தார்.

    காவல் உதவி கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங், பள்ளி முதல்வர் ஆனந்தி, பள்ளி கண்காணிப்பாளர் சிவகாமி இருவரிடம் விசாரணை நடத்தினார்.

    இந்த நிலையில், மாணவிக்கு நடந்த கொடுமை தொடர்பாக கல்வித்துறை சார்பில் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

    பள்ளியிலும், மாணவியிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக முதன்மை கல்வி அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார். தவறு உறுதியானால் விசாரணையின் முடிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.

    • பள்ளி நிர்வாகம் அலட்சியமாக பதில் கூறியுள்ளது.
    • காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    கோவை கிணத்துக்கடவு அருகே மாதவிலக்கை காரணம் காட்டி மாணவியை வகுப்பறையில் அனுமதிக்காமல் வாசலில் அமர வைரத்து தேர்வு எழுத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    8-ம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த 5-ந்தேதி பூப்படைந்துள்ளார். மாணவி ஆண்டு தேர்வு எழுதுவதற்காக 7-ந்தேதி பள்ளிக்கு வந்தபோது வகுப்பறை கதவை பூட்டி வெளியே அமர வைத்து தேர்வு எழுத வைத்ததாகவும் இதனை தொடர்ந்து நேற்று தேர்வெழுத சென்றபோதும் வெளியில் அமர வைத்து தேர்வெழுத வைக்கப்பட்டுள்ளதால் மாணவியின் தாய் நேரில் சென்று கேட்டுள்ளார். அதற்கு பள்ளி நிர்வாகம் அலட்சியமாக பதில் கூறியுள்ளது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    இதனிடையே, இச்சம்பவம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி, காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதில் யாராவது தவறு செய்திருந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

    • வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசுபொருளாகி உள்ளது.
    • தலைமை ஆசிரியை மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    கிணத்துக்கடவு:

    கோவை கிணத்துக்கடவு அருகே மாதவிலக்கை காரணம் காட்டி மாணவியை வகுப்பறையில் அனுமதிக்காமல் வாசலில் அமர வைரத்து தேர்வு எழுத சொல்லியதாக தனியார் பள்ளி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மாணவியின் தாய், செல்போனில் பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசுபொருளாகி உள்ளது.

    இதனை தொடர்ந்து வகுப்பறையில் தனியாக அமர வைத்து தேர்வு எழுத வைப்பதாக கூறிவிட்டு, வகுப்பறைக்கு வெளியில் அமர வைக்கப்பட்டதாக தலைமை ஆசிரியை மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

    • வருத்தத்துடன் வீடு திரும்பிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    • நான் வயலில் வேலை செய்து கொண்டிருந்தேன்.

    உத்தரப் பிரதேசத்தில் கட்டணம் செலுத்தாததால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட விரக்தியில் 9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள கமலா ஷரன் யாதவ் இன்டர் பள்ளியில் பயின்று வந்த 9 ஆம் வகுப்பு மாணவி ரியா பிரஜாபதி (17 வயது) நேற்று தேர்வு எழுத சென்றுள்ளார்.

    பள்ளிக் கட்டணத்தில் ரூ.800 நிலுவைத் தொகையை செலுத்தாததால் அவரை தேர்வு எழுத அனுமதிக்காமல் பள்ளி நிர்வாகத்தினர், கட்டணம் செலுத்தாததற்காக அவரை அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வருத்தத்துடன் வீடு திரும்பிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    தற்கொலை செய்த சிறுமியின் தாய் பேசுகையில், "பள்ளி மேலாளர் சந்தோஷ் குமார் யாதவ், அதிகாரி தீபக் சரோஜ் மற்றும் முதல்வர் ராஜ்குமார் யாதவ் மற்றும் பலர் அவளை எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்தியுள்ளனர். அவளை தேர்வு எழுத விடவில்லை.

    அவர்களின் நடத்தையால் வருத்தமடைந்த என் மகள் வீட்டிற்கு திரும்பி வந்து தன் அறைக்குச் சென்றாள். நான் வயலில் வேலை செய்து கொண்டிருந்தேன்.

    நான் வீடு திரும்பியபோது, என் மகள் தூக்கில் தொங்குவதை கண்டேன்" என்று தெரிந்தார். பள்ளி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்தினர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    [தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]

    • மாணவியின் ஏழ்மை நிலைமை அறிந்த முரசொலி எம்.பி., மாணவி நித்தியஸ்ரீயின் வீட்டிற்கு நேரில் சென்று விபரங்களை கேட்டறிந்தார்.
    • மாணவியின் உயர்கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தருவதாக அவர் உறுதி அளித்தார்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சித்துக்காடு கிராமத்தை சேர்ந்தவர் நித்தியஸ்ரீ. இவர் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9- ம் வகுப்பு படித்து வருகிறார்.

    அவர் தாயார் இறந்த நிலையில், யானைக்கால் நோயால் பாதிப்படைந்த தந்தை ரெங்கசாமி 100 நாள் வேலைக்கு சென்று கிடைக்கும் வருவாயை கொண்டு ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருவதாகவும், தந்தை இரவில் சமைத்து தரும் உணவை உண்டும், மறுநாள் மதியம் தானும், தனது தம்பியும் பள்ளியில் மதிய உணவு சாப்பிடுவோம் எனவும், சிறு குடிசையில் மண்ணெண்ணெய் விளக்கு வெளிச்சத்தில் படிப்பதாகவும் தனது துயரத்தை சமீபத்தில் சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்.

    இதையடுத்து மாணவியின் ஏழ்மை நிலைமை அறிந்த முரசொலி எம்.பி. சித்துக்காட்டில் உள்ள மாணவி நித்தியஸ்ரீயின் வீட்டிற்கு நேரில் சென்று விபரங்களை கேட்டறிந்து மாணவியின் குடும்பத்தினருக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களையும் நிதியுதவி வழங்கினார்.

    மேலும் அவரது வீட்டிற்கு மின் இணைப்பு கிடைத்திடவும், மாணவியின் உயர்கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தருவதாகவும் உறுதி அளித்தார்.

    சமூக வலைதளத்தின் மூலம் தகவல் அறிந்து வீட்டிற்கே நேரில் உதவி செய்த முரசொலி எம்.பி.க்கு மாணவி நித்யஸ்ரீ நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.

    • மதுரை மாணவிக்கு அமைச்சர் மூர்த்தி நிதி உதவி வழங்கினார்.
    • இவர் கிக் பாக்சிங் போட்டியில் தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகர் வண்டியூர் பகுதி 40-வது வார்டு பாரதி புரத்தை சேர்ந்த பட்டதாரி மாணவி அனிதா. இவர் கிக் பாக்சிங் போட்டியில் தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளார். அவர் டெல்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.

    இது பற்றி அறிந்த அமைச்சர் பி.மூர்த்தி மாணவி அனிதாவை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் ரூ.50 ஆயிரம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட ஊராட்சி தலைவர் சூரியகலா கலாநிதி, மாநகராட்சி கவுன்சிலர்கள் துரைப்பாண்டியன், கதிரவன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்தியாவின் அனைத்து மாநிலங்களுடைய பெயர்களையும், யூனியன் பிரதேசங்களின் பெயர்களையும், அதனுடைய தலைநகரங்களையும் வரிசையாக 47 செகண்ட்டில் கூறி சாதனை படைத் துள்ளார்.
    • உலக நாடுகளில் உள்ள 60 நாடுகளின் பெயர் களையும், கொடிகளையும், தலைவர்களுடைய பெயர்களையும், இந்திய சுதந்திர போராட்டத்தின் வீரர்களின் பெயர்களையும் சரளமாக கூறும் திறமை பெற்றுள்ளார்.

    கன்னியாகுமரி:

    கூட்டாலுமூடு அருகே சென்னிநின்றவிளையை சேர்ந்தவர்கள் பிரேம் குமார்-ராணி தம்பதியினர். இவரது மகள் ஸ்ருதி (வயது 4).

    இவர் கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் எல்.கே.ஜி. பயின்று வருகிறார். இவர் பிரிகேஜி பயிலும் போது பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டியில் முதல் பரிசு வென்றுள்ளார்.

    மேலும் இந்தியாவின் அனைத்து மாநிலங்க ளுடைய பெயர்களையும், யூனியன் பிரதேசங்களின் பெயர்களையும், அதனுடைய தலைநகரங்களையும் வரிசையாக 47 செகண்ட் டில் கூறி சாதனை படைத் துள்ளார்.

    தொடர்ந்து ஆங்கிலே எழுத்துக்களை இசட்டில் இருந்து திருப்பி ஏ வரை யிலும், உலக நாடுகளில் உள்ள 60 நாடுகளின் பெயர் களையும், அந்த நாட்டி னுடைய கொடிகளையும், தலைவர்களுடைய பெயர்களையும், இந்திய சுதந்திர போராட்டத்தின் வீரர்களின் பெயர்களையும் சரளமாக கூறும் திறமை பெற்றுள்ளார்.

    இவருடைய திறமையை பாராட்டி அப்துல் கலாம் வேர்ல்ட் ரெக்கார்டு என்ற அமைப்பு விருது வழங்கி உள்ளது. விருது பெற்ற மாணவி ஸ்ருதியை கூட்டாலுமூடுமெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைவர் குமார், செய லாளர் துளசிதாஸ் (பொறுப்பு), பொருளாளர் சவுந்தரராஜன், துணை தலைவர் முருகன், முதல்வர் நாராயணன், துணை முதல்வர் சந்தோஷ் உட்பட ஆசிரிய-ஆசிரியைகள் பாராட்டினர்.

    • சத்தியம்மா சிங்கம் பட்டியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படித்து வருகிறார்.
    • மாணவி கழிப்பறைக்கு செல்லும் போது அங்கிருந்த கொடிய விஷமுள்ள கட்டு விரியன் பாம்பு சத்தியம்மாவை கடித்தது.

    கரூர்

    குளித்தலை அடுத்த, பாலவிடுதி சிங்கம்பட்டியை சேர்ந்தவர் கதிர்வேல் இவரது மனைவி போதும்பொன்னு. இவர்களுக்கு, சத்தியம்மா (வயது 10) என்ற மகள் உள்ளார். இவர் சிங்கம் பட்டியில் உள்ள அரசு தொடக்க ப்பள்ளியில் படித்து வந்தார். காலை வழக்கம்போல் சக்தியம்மா பள்ளிக்கு சென்றார்.

    பின் மாணவி கழிப்பறைக்கு செல்லும் போது அங்கிருந்த கொடிய விஷமுள்ள கட்டு விரியன் பாம்பு சத்தியம்மாவை கடித்தது. இதனால் வலி தாங்கமுடியாமல், சத்தியம்மா வகுப்பறைக்கு ஓடி வந்தார்.

    இதையறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் பெலிக்ஸ் மோகன்ராஜ், மாணவியின் பெற்றோ ருக்கு தகவலளித்தார். பின் சந்தியம்மாவை மீட்டு மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு மாணவி சந்தியம்மாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ×