என் மலர்
நீங்கள் தேடியது "குஷ்பு"
- காசியும் தமிழும் மிகவும் பிரபலமானவை.
- இந்தியர்கள் என்று சொல்வதற்கு மிகுந்த பெருமையாக இருக்கிறது.
வாரணாசி:
காசியில் நடந்துவரும் தமிழ் சங்கமம் நிகழ்வில் நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளில் நடிகை குஷ்பு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். உத்தரபிரதேச மாநில மந்திரி சஞ்சீவ் கோண்ட் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்குப்பின்னர் குஷ்பு நிருபர்களிடம் கூறியதாவது:-
'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்பது பிரதமர் நரேந்திர மோடியின் தாரக மந்திரமாக உள்ளது. காசியும் தமிழும் மிகவும் பிரபலமானவை. பிரதமர் எங்கு சென்றாலும் திருக்குறளின் பெருமையைப் பேசுகிறார். பாரதியார் கவிதைகளை மேற்கோள்காட்டி பேசுகிறார். தமிழ்மொழி மீது மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார்.
இந்தியர்கள் என்று சொல்வதற்கு மிகுந்த பெருமையாக இருக்கிறது. இந்த உணர்வில் எப்போதும் ஒரு துளியும் குறைய கூடாது. இதுவே நமது வாழ்க்கையை பெருமைப்படுத்தும் என்பதை அடுத்த தலைமுறைக்கும் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நடிகை குஷ்பு தற்போது ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
- இவரது மூத்த சகோதரர் அபுபக்கர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கதாநாயகியாக நடித்தவர் குஷ்பு. 80 மற்றும் 90-களின் முக்கிய நடிகையாக வலம் வந்த இவர் ரஜினி, கமல், சரத்குமார் என பல முக்கிய கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார்.

குஷ்பு
சமீபத்தில் குஷ்பு தயாரிப்பில் வெளியான 'காபி வித் காதல்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இவர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை குஷ்புவின் மூத்த சகோதரர் அபுபக்கர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு நுரையீரலில் பிரச்சினை இருப்பதாககூறிய மருத்துவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

குஷ்பு
இதற்காக குஷ்பு தனது சமூக வலைதளப் பக்கத்தில், "எனது மூத்த சகோதரர் அபுபக்கர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். கடந்த 4 நாட்களாக வெண்டிலேட்டரிலிருந்து வருகிறார். நேற்றுதான் அவரது உடல் நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டது. அவருக்காக எல்லோரும் பிரார்த்தனை செய்யுங்கள்" என்று கேட்டுக்கொண்டிருக்கிறார். இதனால் திரை உலகினர் குஷ்புவிற்கு ஆறுதல் கூறி பிரார்த்தனை செய்து பதிவிட்டு வருகிறார்கள்.
- நடிகை குஷ்புவின் அண்ணன் உடல் நிலை சரியில்லாத நிலையில் இன்று காலமானார்.
- இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் கதாநாயகியாக நடித்தவர் குஷ்பு. 80 மற்றும் 90-களின் முக்கிய நடிகையாக வலம் வந்த இவர் ரஜினி, கமல், சரத்குமார் என பல முக்கிய கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார்.

குஷ்பு
இவர் சமீபத்தில், எனது மூத்த சகோதரர் அபுபக்கர் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறார். கடந்த 4 நாட்களாக வெண்டிலேட்டரிலிருந்து வருகிறார். நேற்றுதான் அவரது உடல் நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டது. அவருக்காக எல்லோரும் பிரார்த்தனை செய்யுங்கள்" என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

குஷ்புவின் அண்ணன்
இந்நிலையில், இன்று குஷ்புவின் அண்ணன் அபுபக்கர் காலமானார். இதனை தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ள குஷ்பு, "உங்கள் அன்புக்குரியவர்கள் எப்போதும் உங்களுடன் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் அளவுக்கு, விடைபெறும் நேரமும் வரும். என் சகோதரனின் பயணம் இன்றுடன் முடிந்தது. அவருடைய அன்பும் வழிகாட்டுதலும் எப்போதும் எங்களோடு இருக்கும். அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் சொல்வது போல், வாழ்க்கையின் பயணம் கடவுளால் தீர்மானிக்கப்படுகிறது" என்று வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.
இவரது மறைவிற்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.
As much as you want your loved ones to be with you forever,time comes to say goodbye. My brother's journey has ended today. His love & guidance will always be us. I thank everyone who have prayed for him. As they say,the journey of life is decided by God. Rest in peace #Bhaijaan. pic.twitter.com/Ryh0AsaZRC
— KhushbuSundar (@khushsundar) December 17, 2022
- தமிழகத்தில் பா.ஜனதா வளர்ந்து இருப்பதாக தி.மு.க.வே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது.
- தமிழ் நாட்டில் காங்கிரசுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது. எதிர்பாராத படுதோல்வியே கிடைக்கும்.
சென்னை:
ராகுல்காந்தியின் நடைபயணம் பற்றி பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சி இந்திய மக்களிடம் இருந்து விடை பெற்றுவிட்டது. இல்லாத ஊருக்கு வழி தேடுவதை போல் இல்லாத கட்சிக்காக ஊர் ஊராக ராகுல் நடைபயணம் செல்கிறார். இந்த நடைபயணம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. கடைசியில் மிஞ்ச போவது ஏமாற்றமே.
கன்னியாகுமரியில் தொடங்கி 9 மாநிலங்களை கடந்து விட்டதாக சொல்கிறார். அவர் சென்றதும் மக்களும் அவரை மறந்து விட்டார்கள்.
அவர் நடைபயணம் சென்று கொண்டிருக்கும்போது தான் குஜராத்தில் தோல்வி, டெல்லியில் படுதோல்வி என்ற தகவலும் அவருக்கு சென்றது. அந்த நடைபயணத்தில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு இருந்தால் வாக்களித்து வெற்றி பெற செய்து இருப்பார்கள்.
புதிதாக தலைவராக பொறுப்பேற்ற கார்கே அடித்த 'டைமிங்' காமெடி தான். காங்கிரஸ் தலைவர்களின் உண்மையான முகத்தை காட்டியது. உலகமே மீண்டும் கொரோனா வருகிறதே என்ற பீதியில் இருக்கிறது. அதற்காக மத்திய அரசு எடுத்துள்ள கட்டுப்பாட்டு நடவடிக்கை டெல்லியில் ராகுல் நடைபயணத்தை முடக்க செய்யும் சதி வேலை என்கிறார்.
இப்படித்தான் ஒவ்வொருவரும் ராகுலிடம் நல்ல பெயர் வாங்க அவரை சுற்றி இருந்து ஜால்ரா தட்டுவார்கள். கொரோனா கட்டுப்பாட்டையே அரசியலாக்கும் இவர்களுக்கு மக்கள் மீது எந்த அக்கறையும் கிடையாது. பாராளுமன்றத்துக்குள் செல்லவே முக கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதே? அதை ஏன் விமர்சிக்கவில்லை.
மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. நமக்கு அரசியல் செய்ய வேண்டும் என்ற குறுகிய எண்ணம்தான். இதுதான் காங்கிரஸ் வீழ்ச்சிக்கு காரணம்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்திலும மிகப்பெரிய மாற்றம் வரும். தமிழகத்தில் பா.ஜனதா வளர்ந்து இருப்பதாக தி.மு.க.வே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது. எனவே தமிழ் நாட்டிலும் இனி காங்கிரசுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது. எதிர்பாராத படுதோல்வியே கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசிடம் தி.மு.க. இளைஞர் அணியை சேர்ந்த 2 பேர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர்.
- பெண்களை இழிவுபடுத்தும் ஆண்களை ஆதரிக்கும் கட்சியிடம் இருந்து என்ன எதிர்பார்க்க முடியும்?
சென்னை:
சென்னை விருகம்பாக்கத்தில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 22 வயது பெண் போலீசிடம் தி.மு.க. இளைஞர் அணியை சேர்ந்த 2 பேர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
நடிகை குஷ்புவும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "பெண்களை இழிவுபடுத்தும் ஆண்களை ஆதரிக்கும் கட்சியிடம் இருந்து என்ன எதிர்பார்க்க முடியும்? இதுபோன்ற நிகழ்வுகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணை மூடிக்கொண்டிருப்பது துரதிர்ஷ்டமானது" என்று கூறியுள்ளார்.
- தமிழக அரசு பொங்கல் பரிசாக மக்களுக்கு ரூ.1000 மட்டுமே கொடுப்பது வெட்கக்கேடானது.
- தமிழ் கலாசாரத்தை பாதுகாப்பதாக கூறி வரும் தி.மு.க அரசு இவ்வளவு கேவலமாக நடந்து கொள்ளக்கூடாது.
கோவை:
கோவை மாவட்ட பா.ஜ.க சார்பில் நம்ம ஊர் பொங்கல் திருவிழா இன்று வெள்ளலூரில் நடைபெற்றது.
இதில் பா.ஜ.க தேசியக்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கலந்து கொண்டார். அவர் அங்கு பெண்களுடன் சேர்ந்து பொங்கல் வைத்தார்.
பொங்கல் திருவிழாவையொட்டி அங்கு நாட்டுபுற கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது. பெண்கள், ஆண்கள் ஒன்றிணைந்து பாடல் பாடி கும்மி அடித்து மகிழ்ந்தனர். அவர்களுடன் நடிகை குஷ்புவும் இணைந்து கும்மியடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து அவர் ரேக்ளா பந்தயத்தை தொடங்கி வைத்தார். சிறிது தூரம் ரேக்ளா வண்டியிலும் பயணித்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொங்கல் பண்டிகை நம்முடைய பாரம்பரிய பண்டிகையாகும். இது வீட்டிலும், குடும்பத்திலும் சந்தோஷம் கொடுக்க கூடிய பண்டிகையாகும். இந்த பண்டிகையை இங்கு நான் மக்களுடன் சேர்ந்து உற்சாகமாக கொண்டாடி உள்ளேன். இது மகிழ்ச்சியாக உள்ளது.
தமிழக அரசு பொங்கல் பரிசாக மக்களுக்கு ரூ.1000 மட்டுமே கொடுப்பது வெட்கக்கேடானது. தமிழ் கலாசாரத்தை பாதுகாப்பதாக கூறி வரும் தி.மு.க அரசு இவ்வளவு கேவலமாக நடந்து கொள்ளக்கூடாது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கொள்ளும் பாதயாத்திரையில் கமல்ஹாசன் கலந்து கொண்டது அவரது கட்சியின் தனிப்பட்ட உரிமையாகும். அதில் கருத்து சொல்ல முடியாது.
பா.ஜ.க.வில் எல்லா பெண்களும் கட்சியை விட்டு போகவில்லை. ஒரு சிலர் போவதால் பாதுகாப்பு இல்லை என்று கூறமுடியாது. பா.ஜ.க.வில் இருக்கும் அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பு இருக்கிறது. நானும் கட்சியில் தானே இருக்கிறேன்.
தற்போதைய தலைவர் அண்ணாமலை துணிச்சலான தலைவர். துணிச்சலாக பல முடிவுகளை எடுத்து வருகிறார். அவரை பாராட்டுகிறேன்.
தமிழகம், தமிழ்நாடு என்று சொல்வதால் எந்த தவறும் இல்லை. நான் மும்பையில் பிறந்தாலும் தமிழச்சி தான். 36 ஆண்டுகளாக தமிழகத்தில் தான் உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் நிருபர்கள் அவரிடம் பொங்கலுக்கு துணிவு பார்ப்பீர்களா? வாரிசு பார்ப்பீர்களா என கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் நான் பொங்கலுக்கு எங்கும் போகவில்லை. வீட்டில் தான் இருக்க போறேன். எந்த படத்திற்கு போவார்கள் என்பதை நீங்கள் ரசிகர்களிடம் தான் கேட்க வேண்டும் என்றார்.
ஏற்கனவே நடிகை காயத்ரி ரகுராம் பா.ஜ.க.வில் இருந்து விலகிய நிலையில் நேற்று நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணனும் அந்த கட்சியில் இருந்து வெளியேறினார்.
இந்தநிலையில் அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் நடிகை குஷ்பு இன்று கோவையில் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது.
- சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான்.
தூத்துக்குடி :
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, பா.ஜ.க. தேசிய குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. பத்திரிகைகளில் தினமும் வரும் செய்திகளே இதற்கு சாட்சி. தமிழகத்தில் தினமும் ஏதாவது ஒரு இடத்தில் பெண்களுக்கு பிரச்சினை நடந்து கொண்டுதான் இருக்கிறது.
ஆனால், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்களை மூடிக்கொண்டு எதுவுமே நடக்கவில்லை என நினைத்துக் கொண்டிருக்கிறார். அவரது செயலும் அப்படித்தான் இருக்கிறது. சட்டம் அனைவருக்கும் ஒன்றுதான். எனவே, பெண்களுக்கு எதிரான குற்றம் எங்கே நடந்தாலும் முறையாக விசாரணை நடத்த வேண்டும்.
நாங்கள் எழுதி கொடுத்ததைத்தான் கவர்னர் படிக்க வேண்டும் என கூறுவது சரியல்ல. சட்டசபையில் இருந்து கவர்னர் வெளியே செல்லும்போது அமைச்சர் பொன்முடி இழிவாக பேசி உள்ளார். இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?. இதற்கு முன்பு இதே பொன்முடி அரசு பஸ்சில் பெண்களுக்கான இலவச பயணம் குறித்தும் இழிவாக பேசி உள்ளார்.
அப்போதும் அவர் மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மற்றவர்களை தரக்குறைவாக இழிவாக பேசுவது, அவமரியாதை செய்வது தான் திராவிட மாடலா?.
இவ்வாறு அவர் கூறினார்.
- காதல் வரும்போது மட்டும் மனதில் இருந்து யோசிக்க வேண்டும் என்பது இல்லை.
- அனைத்து நேரத்திலும் மனதில் இருந்து யோசித்தால் வாழ்க்கையில் வெற்றி ஏற்படும்.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் நடந்த சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் விழாவில் பா.ஜனதா தேசிய குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கலந்து கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பல நேரங்களில் உங்களுக்கு முடிவெடுக்க வேண்டிய நிலை வரும் போது கொஞ்சம் குழம்பி போவீர்கள். அவ்வாறு குழப்பம் வரும்போது மனம் மற்றும் புத்தி இதில் எது சொல்வதை கேட்க வேண்டும் என தெளிவாக விவேகானந்தர் சொல்லியுள்ளார்.
காதல் வரும்போது மனதில் இருந்து யோசிப்பீர்கள். ஏனென்றால் மனதுதான் சரியான முடிவை எடுக்கும். மனதில் இருந்து யோசி அப்போதுதான் முடிவு சரியாக இருக்கும். வீட்டில் அம்மாவிடம் கேட்டுப்பாருங்கள். நீங்கள் புத்தியில் இருந்து யோசிப்பீர்களா அல்லது மனதில் இருந்து யோசிப்பீகளா என்று. அதற்கு மனதில் இருந்துதான் யோசிப்பதாக சொல்வார்கள். அதனால் தான் சுவாமி விவேகானந்தர் சொன்னார் வாழ்க்கையில் குழப்பம் வரும்போது மனதில் இருந்து முடிவு எடுங்கள் என்று.
காதல் வரும்போது மட்டும் மனதில் இருந்து யோசிக்க வேண்டும் என்பது இல்லை. அனைத்து நேரத்திலும் மனதில் இருந்து யோசித்தால் வாழ்க்கையில் வெற்றி ஏற்படும். புத்தியை முன்னேற்றத்துக்கு பயன்படுத்துங்கள். நாளை நீ என்ன சாதிக்க வேண்டும், என்னவாக மாற வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள். ஆண், பெண் வித்தியாசம் பார்க்காமல் இருக்கிறோம். பெண்களிடம் சில விஷயங்களை சொல்லி வளர்க்கிறோம். ஆனால், ஆண்களிடம் அதைச்சொல்லி வளர்ப்பது இல்லை. இதை எல்லாம் சுவாமி விவேகானந்தர் சொல்லிக் கொடுத்திருக்கிறார். உண்மையை பேசும்படி சுவாமி விவேகானந்தர் சொல்லியிருக்கிறார்.
வெளியில் இருந்து இந்துத்துவத்தை தவறான சாயம் பூசுகிறார்கள். எல்லோரையும் சமமாக மதி. ஆண், பெண்ணை சமமாக பார் என்பது தான் இந்துத்துவா. பிரதமர் மோடியின் பேச்சிலும் விவேகானந்தர் தான் இருக்கிறார். உலகம் கொரோனாவால் தத்தளித்துக் கொண்டிருந்த போது நம் நாட்டுக்கு மட்டுமில்லாமல் உலகத்துக்கே தடுப்பூசி அனுப்பியிருக்கிறார்.
கன்னியாகுமரி பாறையில் தான் 3 நாள் தியானம் இருந்தார். இந்த மண் சுவாமி விவேகானந்தரின் புனித மண். இரவு தூங்குவதற்கு முன் கண்மூடி ஒரு நிமிடம் இருந்தால் சுவாமி விவேகானந்தர் வருவார். அவர் வந்தபிறகு உங்கள் வாழ்க்கையில் நிம்மதி வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-
சுவாமி விவேகானந்தரை பின்பற்றவில்லை என்று கூறினாலும் ஏதோ ஒரு விஷயத்தில் அவரை பின்பற்றிக் கொண்டு தான் இருக்கிறோம். விவேகானந்தர் என்ன சொல்லிக்கொடுத்தாரோ அந்த விஷயங்கள் மட்டும் தான் இப்போதும் பார்த்து பேசி கொண்டு இருக்கிறோம்.
இந்துத்துவாவை எதிர்கட்சிகள் தவறாக புரிந்து கொண்டார்கள். தேர்தல் நேரத்தில் மட்டும் தான் எதிர்கட்சியினருக்கு பூநூல், கோவில் நினைவுக்கு வரும். அப்போது தான் தலைக்கு டர்பன் கட்டுவார்கள். சாதியை வெளிப்படுத்துவார்கள்.
இந்துத்துவத்துக்கும், மதத்துக்கு எதிராக பேசுபவர்களுக்கு தேர்தல் நேரத்தில் மதம் நினைவுக்கு வரும். யாருமே கோவிலுக்கு போகக்கூடாது என்றவர்கள் கோவில் கோவிலாக போகிறார்கள். கையில் காப்பு கட்டுகிறார்கள். பூஜை செய்வார்கள். மதத்தை ஓட்டு வங்கியாக மாற்ற அந்த நேரத்தில் மக்களை முட்டாளாக்குகிறார்கள். மக்களின் ஓட்டு வேண்டும் என்பதற்காக மதத்தை அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
கவர்னர் விஷயத்தில் எல்லாமே தவறாகத்தான் இருக்கிறது. நீங்கள் அரசாங்கம் நடத்துகிறீர்கள் என்றால் அதற்கு மேல் கவர்னர் இருக்கிறார். அரசாங்கத்தை மேற்பார்வை செய்யவும், தவறு நடந்தால் தட்டி கேட்பவராகவும் கவர்னர் இருக்கிறார். சட்டசபையில் இருந்து கவர்னர் போகும்போது பொன்முடி அவரை சைகைகாட்டினார். அது எவ்வளவு பெரிய தவறு. இதற்கு முன்பு பெண்கள் பஸ்சில் ஓசியில் போவதாக பொன்முடி சொன்னார். அப்போது முதல்-அமைச்சர் பேசவில்லை. அப்படி எனில் கவர்னருக்கு என்ன மரியாதை கொடுக்கிறீர்கள்?
தமிழகம், தமிழ்நாடு இரண்டுக்குமே வித்தியாசம் இல்லை என காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி சொன்னபோது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன் கோஷம் போடவில்லை. கவர்னருக்கு எதிராக கோஷம் போடும்போது மக்கள் பார்ப்பார்கள் என்பதற்காக அப்படி செய்கிறார்கள். காங்கிரஸ் ஒரு காமெடி பீஸ், அதை யாரும் மதிக்க மாட்டார்கள் என்பதால் அதுபற்றி பேசுவது இல்லை.
சேதுசமுத்திர திட்டம் கொண்டு வர தனி தீர்மானத்தை முதல்-அமைச்சர் கொண்டு வருகிறார். அதுதொடர்பாக நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கூறியதை நாங்கள் ஆதரிக்கிறோம். துணிவு படத்தில் சர்ச்சைக்குரிய வசனம் வருவதாக கூறுகிறீர்கள். ஆனால் நான் இன்னும் படம் பார்க்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட குஷ்புவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க தன்னால் முடிந்ததை செய்வேன் என்றார் குஷ்பு.
தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நடிகையும், பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளருமான குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட குஷ்புவுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நியமனம் குறித்து குஷ்பு கூறியதாவது, ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது. மிகப்பெரிய பொறுப்பு கிடைத்துள்ளது. பிரதமர் மோடிக்கு நன்றி. பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க என்னால் முடிந்ததை செய்வேன் என்றார்.
- பாதிக்கப்படும் பெண்கள் தைரியமாக புகார் அளிக்கலாம்.
- வெளியே தெரியாமல் பல விஷயங்கள் நடக்கின்றன.
புதுடெல்லி :
பா.ஜனதா செய்தி தொடர்பாளராக இருந்த நடிகை குஷ்புக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.
இதனைத்தொடர்ந்து நேற்று அவர் டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணைய அலுவலகத்துக்கு சென்று பதவி ஏற்றுக்கொண்டார்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இதை புது தொடக்கமாக உணர்கிறேன். பெண்களுக்காக போராடி, குரல் கொடுத்து பேசி வரும் எனக்கு அங்கீகாரம் வழங்கியது போல் உள்ளது.
பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. பெண்களுக்காக செய்ய விரும்புவதை செய்யவும், அவர்களுக்காக பேச, அவர்களுக்கு தைரியம் கொடுக்க மிகப்பெரிய தளம் கிடைத்ததில் மகிழ்ச்சி.
பெண்களுக்கு எதிரான கொடுமைகள் எங்கிருந்து தொடங்குகிறது? என்பதை பார்க்க வேண்டும். இது டெல்லியில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கிறது. ஆனால் இந்தியாவில் அதிகமாக இருக்கிறது. ஏன் இப்படி பிரச்சினைகள் வந்து கொண்டிருக்கிறது, அதற்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது, எப்படி தடுப்பது? என்பதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
நான் இப்போதுதான் பதவி ஏற்று இருக்கிறேன். இங்கு பல புகார்கள் ஏற்கனவே இருக்கிறது. அந்த ஆவணங்களை படித்துப் பார்த்துவிட்டு நடவடிக்கை எடுக்கப்படும். ஊடகங்கள் வாயிலாக வெளியே வரும் வன்கொடுமைகள் மட்டுமே வெளி உலகத்துக்கு தெரிகிறது. வெளியே தெரியாமல் பல விஷயங்கள் நடக்கின்றன. பாதிக்கப்படும் பெண்கள் போலீசுக்கு செல்லவோ, கோர்ட்டுக்கு செல்லவோ பயப்படுகிறார்கள்.
அவர்களுக்கு நான் சொல்லுவது, 'நாங்கள் இருக்கிறோம். எங்களிடம் வாருங்கள்' என்பதுதான். தேசிய மகளிர் ஆணையம் வலுவான அமைப்பு. பாதிக்கப்படும் பெண்கள் தைரியமாக புகார் அளிக்கலாம். அவர்களுக்கு நிச்சயமாக நியாயம் கிடைக்கும்.
தமிழகத்தில் இருந்து என்னை தேர்ந்தெடுத்து உள்ளனர். அதனால் கண்டிப்பாக தமிழக பெண்களுக்கு எதிரான பிரச்சினைகளை அதிகம் பேசுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- என்னுடைய அம்மா ஒரு மோசமான நபரைத் திருமணம் செய்து கொண்டார்.
- பாலியல் ரீதியாக ஒரு குழந்தை துன்புறுத்தப்படும்போது அது அந்தக் குழந்தையின் வாழ்நாள் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும்.
சென்னை:
நடிகை குஷ்பு திரைப்பட வாழ்க்கையில் வெற்றிகரமாக இயங்கி வந்த நிலையில் அடுத்த கட்டமாக அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
அவ்வப்போது பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களுக்கு எதிராகவும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் அவர் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து டெல்லி சென்று ஆணையத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
டெல்லியில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த குஷ்பு சுந்தர் அதிர்ச்சிகரமான தகவலைப் பகிர்ந்திருக்கிறார். அவர் கூறியதாவது:-
"பாலியல் ரீதியாக ஒரு குழந்தை துன்புறுத்தப்படும்போது அது அந்தக் குழந்தையின் வாழ்நாள் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும். அந்த கொடூரம் ஆறாத வடுவாக மாறிவிடும் என்று நான் நினைக்கிறேன்.
என்னுடைய அம்மா ஒரு மோசமான நபரைத் திருமணம் செய்து கொண்டார். என் அப்பா என் அம்மாவை அடிப்பதையும், தன் ஒரே மகளான என்னையும் பாலியல் ரீதியாகத் துஷ்பிரயோகம் செய்வதையும் தனது பிறப்புரிமையாக நினைத்தார்.
என்னை பாலியல் ரீதியாக அவர் துன்புறுத்தியபோது எனக்கு 8 வயதுதான் ஆகியிருந்தது. 15 வயது வரை அது தொடர்ந்தது. 16 வயதில்தான் நான் அப்பாவிற்கு எதிராகப் பேசத் தொடங்கினேன்.
இதைச்சொன்னால் என் அம்மா என்னை நம்ப மாட்டார் என்ற பயம் எனக்கு இருந்தது. காரணம் தனக்கு என்ன துன்பம் கொடுத்தாலும் என் அப்பாவை தன்னுடைய கடவுளாகவே நினைத்தார் அம்மா.
நான் 16 வயது தொடக்கத்தில் அப்பாவுக்கு எதிராகப் போராடினேன்.
இவ்வாறு குஷ்பு கூறியிருக்கிறார்.
தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகப் பொறுப்பேற்றபின் குஷ்பு தன்னை குறித்துப் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் குஷ்பு.
- இவர் தற்போது தனக்கு சிறு வயதில் ஏற்பட்ட பாலியல் சீண்டல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
தமிழ் திரையுலகிற்கு 1988ம் ஆண்டு வெளியான தர்மத்தின் தலைவன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் குஷ்பு. அதன்பின் வருஷம் 16, வெற்றி விழா, மை டியர் மார்த்தாண்டம், சின்ன தமிபி, மன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலம்டைந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த குஷ்பு சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

குஷ்பு
இந்நிலையில் நடிகை குஷ்பு சிறு வயதில் தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல் குறித்து சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, "ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்படும்போது, அது குழந்தையின் வாழ்நாள் முழுவதும் வடுவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அது ஒரு பெண் அல்லது பையனை என்பது அல்ல. என் அம்மா மிகவும் மோசமான திருமணத்தை அனுபவித்துள்ளார். தன் மனைவியை அடிப்பதும், குழந்தைகளை அடிப்பதும், தன் ஒரே மகளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்வதும் தன் பிறப்புரிமை என நினைத்துக் கொண்டிருந்த ஒரு மனிதன். எனக்கு பாலியல் தொல்லை தொடங்கியபோது எனக்கு 8 வயதுதான். 15 வயதில் அவருக்கு எதிராகப் பேசும் தைரியம் எனக்கு இருந்தது.

குஷ்பு
தான் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய நிலை வந்தது. ஆனால் குடும்பத்தினர் என்ன சொல்வார்களோ என்ற பயம் இருந்ததால், பல ஆண்டுகளாக வாயை மூடிக்கொண்டு இருந்தேன். என் அம்மா என்னை நம்பவில்லை. ஆனால் 15 வயதில் அது போதும் என்று நினைத்து அவருக்கு எதிராக பேச ஆரம்பித்தேன். எனக்கு அப்போது 16 வயது கூட ஆகவில்லை. எங்களை நிர்கதியாக விட்டு சென்றார். அடுத்த உணவு எங்கிருந்து வரும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. இதுபோன்ற பல சம்பவங்கள் என்னை சிறுவயதிலேயே மன உறுதியை படைத்தவளாக மாற்றியது" என்று கூறினார். நடிகை குஷ்புவின் இந்த பேச்சு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.